தற்காலிகமாகவறி விழுந்தது தார்க்குச்சி
இனி
எவ்வளவு மெதுவாய் இழுத்தாலும்
அடியில்லை
, குத்தில்லை
மகிழ்ந்து
நடைபோட்டது மாடு

-0-

வ்வொரு பல்லாய் உதிர்கிறது
முதுகுமேல்
தவ்வி கழுத்தில் கடிக்கும்
செல்ல
மகளின் முன் வரிசைப்பல்
முளைக்கும்
வரை வலியில்லை

 

-0-

றண்டு போன சிந்தனைக் காம்புகளை
வருத்திக்
கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி
சிரிக்கும்
மழலையின் பொக்கைவாயில்
சிதறி
விழுகிறது சிலவரிகள் அழகாக!

-0-

37 comments:

தமிழ் நாடன் said...

//ஒவ்வொன்றாய் விழுந்தது இன்று
முதுகுமேல் தவ்வி செல்லமாய் கழுத்தில்
கடிக்கும் செல்ல மகளின் முன் வரிசைப்பல்
முளைக்கும் வரை வலியில்லை//
அனுபவிச்சி எழுதியிருக்கீங்க!
இந்த மூன்றையும் இணைக்கும் புள்ளி எது?

பிரபாகர் said...

//தவறி விழுந்தது தார்க்குச்சி
இன்றைக்கு எவ்வளவு மெதுவாய்
இழுத்தாலும் அடியில்லை, குத்தில்லை
மகிழ்ந்து நடைபோடும் மாடு//

ம்... அற்ப சந்தொஷம்ங்கறது இதுதானா கதிர்...?

அருமையாய் உங்களிடமிருந்து இன்னொன்று...

பிரபாகர்.

KALYANARAMAN RAGHAVAN said...

அருமை கதிர். நல்லதொரு கவிதையை வாசித்த திருப்தி.

ரேகா ராகவன்.

வானம்பாடிகள் said...

/ஒவ்வொன்றாய் விழுந்தது இன்று
முதுகுமேல் தவ்வி செல்லமாய் கழுத்தில்
கடிக்கும் செல்ல மகளின் முன் வரிசைப்பல்
முளைக்கும் வரை வலியில்லை/

நனவு மீட்டும் வரிகள்.

/இன்றைக்கு எவ்வளவு மெதுவாய்
இழுத்தாலும் அடியில்லை, குத்தில்லை
மகிழ்ந்து நடைபோடும் மாடு/

ஆஹா.

/வறண்டு போன சிந்தனைக் காம்புகளை
வருத்திக் கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி
சிரிக்கும் மழலையின் பொக்கைவாயில்
சிதறி விழுகிறது சிலவரிகள் அழகாக!/

இது ரொம்பப் பிடித்தது. பாராட்ட ’வறண்டு போன சிந்தனைக் காம்புகளை
வருத்திக் கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி’ஆனாலும் வார்த்தையில்லை.

T.V.Radhakrishnan said...

அருமை

சி. கருணாகரசு said...

கவிதை, வடிவா...நிறைவா இருக்குங்க பாராட்டுக்கள்.

பின்னோக்கி said...

அழகான கவிதைகள்.
2ஆம் கவிதைக்கு காரணம் 3ஆம் கவிதை என நினைக்கிறேன்.

வால்பையன் said...

முதல் கவிதையில் மாடாகவே உணர்ந்தேன்!

க.பாலாசி said...

//தவறி விழுந்தது தார்க்குச்சி
இன்றைக்கு எவ்வளவு மெதுவாய்
இழுத்தாலும் அடியில்லை, குத்தில்லை
மகிழ்ந்து நடைபோடும் மாடு//

வலியுணர்த்தும் வரிகள்...வரிகளின் ஆழமே உணர்த்துகிறது அதன் வலிகளை...

//கடிக்கும் செல்ல மகளின் முன் வரிசைப்பல் முளைக்கும் வரை வலியில்லை//

இரண்டு பல் முளைத்தாலும் வலிக்காதே....

//சிரிக்கும் மழலையின் பொக்கைவாயில்
சிதறி விழுகிறது சிலவரிகள் அழகாக!//

ம்ம்ம்.......அழகான வரிகள்...

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ தமிழ் நாடன்
(விநாடி நேரம் துளிர்க்கும் சந்தோசம் தான்)

நன்றி @@ பிரபாகர்
(ஒரு சின்ன விடுதலை)

நன்றி @@ RAGHAVAN

நன்றி @@ வானம்பாடிகள்
//’வறண்டு போன சிந்தனைக் காம்புகளை
வருத்திக் கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி’ஆனாலும் வார்த்தையில்லை.//

(இது!!!! பாலா)

நன்றி @@ T.V.Radhakrishnan

நன்றி @@ கருணாகரசு

நன்றி @@ பின்னோக்கி
(2ஆம் கவிதைக்கு அனுபவம், 3ஆம் கவிதை புனைவு)

நன்றி @@ வால்பையன்
(அடப்பாவமே!!! ஏன் தல)

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ பாலாசி
(கடிப்பது முன் பற்கள்தானே)

பழமைபேசி said...

ஆகா, மருமகப் பிள்ளை பேச ஆரம்பிச்சுட்டாளா? நல்லது, நல்லது... மகிழ்ச்சி!

தமிழரசி said...

கறந்த வார்த்தைகள் கார் மேகத்தின் குளிர்வாய்... நிறைவாய் இருக்கு கவிதை...

கார்த்திகைப் பாண்டியன் said...

பொருத்தமான் தலைப்பு.. அழகான வரிகள் நண்பா

ஸ்ரீ said...

வால் பையன்
//முதல் கவிதையில் மாடாகவே உணர்ந்தேன்!//
ரொம்ப லேட்டுப்பா நீ. எங்களுக்கெல்லாம் ஏற்கெனவே தெரியும்.

குரு said...

எவ்வளவு தடவை நல்லாயிருக்கு, சூப்பராயிருக்குன்னு எழுதறது தலைவரே!! :)

வாழ்த்துக்கள்...

ஹேமா said...

கதிர் மூன்று பந்திகளும் முத்துப்போல வலியில்லாமல்.
வாழ்வும் வேணும் வலியில்லாமல்.

ஷண்முகப்ரியன் said...

ஒவ்வொன்றாய் விழுந்தது இன்று
முதுகுமேல் தவ்வி செல்லமாய் கழுத்தில்
கடிக்கும் செல்ல மகளின் முன் வரிசைப்பல்
முளைக்கும் வரை வலியில்லை//

இதுவரை எந்தத் தகப்பனுமே வாசித்தறியாத கவிதை,கதிர்.

உங்களைப் போல நல்ல கவியுள்ளம் இருந்தால் போதும்,வாழ்க்கை அழகிய கணங்களைப் புதிது,புதிதாய வழங்கிக் கொண்டே இருக்கும் போலிருக்கிறது,உங்கள் மூலமாக எங்களுக்கும்.
பெருமிதமான மகிழ்ச்சி,கதிர்.

நர்சிம் said...

ரசித்து வாசித்தேன்.

ஜெனோவா said...

கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கதிர் !

வாழ்த்துக்களும் நன்றியும்

கலகலப்ரியா said...

அருமை...! அருமை.. ! அருமை..!

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ பழமைபேசி
(பள்ளிகூடம் போகுதுங்கோ)


நன்றி @@ தமிழரசி
(இது தமிழ் டச்!!!)

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ ஸ்ரீ
(இஃகிஃகி)


நன்றி @@ குரு

நன்றி @@ ஹேமா
(வாழ்வும் அமையும் வலியில்லாமல்)

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ ஷண்முகப்ரியன்
(அனுபவித்திருக்கிறீகள் பெண் பிள்ளையின் அப்பாவாய்...
நன்றி அண்ணா வாழ்த்துகளுக்கு)


நன்றி @@ நர்சிம்
(உங்களால் மிகப்பெரிய அங்கீகாரம்)

நன்றி @@ ஜெனோவா

நன்றி @@ கலகலப்ரியா

அன்புடன் அருணா said...

பூங்கொத்து!

புலவன் புலிகேசி said...

//ஒவ்வொன்றாய் விழுந்தது இன்று
முதுகுமேல் தவ்வி செல்லமாய் கழுத்தில்
கடிக்கும் செல்ல மகளின் முன் வரிசைப்பல்
முளைக்கும் வரை வலியில்லை//

எனக்குப் பிடித்த அழகான வரிகள்...அருமையான கவிதை நண்பரே...

கதிர் - ஈரோடு said...

நன்றி @@அன்புடன் அருணா

நன்றி @@ புலவன் புலிகேசி

பிரியமுடன்...வசந்த் said...

// பொக்கைவாயில்
சிதறி விழுகிறது சிலவரிகள் அழகாக!//

ஹ ஹ ஹா

கதிர் கைகளிலும் சிதறி விழுகிறது அழகாக

இன்னும் கொஞ்சம் உங்களுக்கு வயசாயிடுச்சுன்னா இந்த கவிதை வரிகள் உங்களுக்கே பொருத்தம் ஹ ஹ ஹா

நேசமித்ரன் said...

கதிர்
அருமையான உணர்வுகளை மொழிக்குள் சிக்க வைத்திருக்கிறீர்கள்

நல்லதொரு கவிதை

சின்ன அம்மிணி said...

அழகான ரசனையுள்ள வரிகள்

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு கதிர்.

ஆ.ஞானசேகரன் said...

//ஒவ்வொன்றாய் விழுந்தது இன்று
முதுகுமேல் தவ்வி செல்லமாய் கழுத்தில்
கடிக்கும் செல்ல மகளின் முன் வரிசைப்பல்
முளைக்கும் வரை வலியில்லை//

நல்ல வரிகள் வாழ்த்துகள் தோழரே

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

அருமை கதிர். அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.

ஊடகன் said...

கலக்குங்க தல.......
நல்ல பதிவு.............

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ வசந்த்
(வசந்த்... அது குழந்தையோட பொக்கவாய்ங்க)

நன்றி @@ நேசமித்ரன்

நன்றி @@ சின்ன அம்மிணி

நன்றி @@ ராஜாராம்

நன்றி @@ ஞானசேகரன்

நன்றி @@ செந்தில்

நன்றி @@ ஊடகன்

அகநாழிகை said...

கவிதை அருமை நண்பரே.

- பொன்.வாசுதேவன்

RAMYA said...

//
வறண்டு போன சிந்தனைக் காம்புகளை
வருத்திக் கறந்தாயிற்று வார்த்தைகள் தேடி சிரிக்கும் மழலையின் பொக்கைவாயில் சிதறி விழுகிறது சிலவரிகள் அழகாக!
//


அருமையான வார்த்தைகள் அடங்கிய அழகிய கவிதை கதிர்!

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ பொன்.வாசுதேவன்

நன்றி @@ RAMYA