ஏமாற இந்தக் காரணம் போதும்ரண்டு நாட்களாய் எங்கள்
வீட்டு தொலைக்காட்சிகளின்
முக்கியச் செய்திகளில் உங்கள்
பெயர்கள் மின்னியாயிற்று...

கொளுத்தும் வெயில் அறியா
குளிர்காரில் வந்திறங்கி
கசங்காத உடையோடு
கட்சிக்காரர்கள் புடைசூழ...

கேமாரக்களின் ஒளியில் நனைந்து
சம்பிரதாயமாக உதடுகளைப்
பிரித்து ஓரிரு வார்த்தைகளை
உதிர்த்து விட்டு...

த்துப் பேர் கொண்ட படை
பந்தாவாகப் புறப்பட்டுவிட்டது
ஈழத்துக்கு உண்மையாய் குரல் கொடுத்தவன்
எவன் ஒருவனும் இல்லாமல்...

ரவேற்க கொஞ்சம் கசங்கிய
வண்ணக் கம்பளத்தோடு
காத்திருப்பான் காடையன்
காயாத இரத்தக் கறையோடு

பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...

வாடி வதங்கிப்போய் வாழ்விழந்த
மனிதக் கூடுகளோடு கட்டாயம்
புகைப்படம் பிடித்து வாருங்கள்
பயணக்கட்டுரை எழுத வேண்டும்...

ரும்போதாவது கண்டிப்பாக
முகத்தைக் கொஞ்சம் வாட்டமாக
வைத்திருங்கள்... இன்னும் ஒருமுறை
ஏமாற இந்தக் காரணம் போதும்

40 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

:-(((((((((

பிரபாகர் said...

//
காத்திருப்பான் காடையன்
காயாத இரத்தக் கறையோடு
//

ஒட்டு அரசியலுக்காக நடத்தும் நாடகங்கள்....

மனம் வலிக்கிறது நண்பரே...

பிரபாகர்.

கலகலப்ரியா said...

:-)

மௌனி said...

//பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...
//

பிரியாணிக்கு ஆசைப்பட்டு தமிழ் இனத்துக்கே இழுக்கை வாங்கி கொடுத்தவர்கள்தானே நாம்
:(((

மாதவராஜ் said...

உண்மைதான்..

அத்திரி said...

//வரும்போதாவது கண்டிப்பாக
முகத்தைக் கொஞ்சம் வாட்டமாக
வைத்திருங்கள்... இன்னும் ஒருமுறை
ஏமாற இந்தக் காரணம் போதும்//


நெத்தியடி குள்ளநரி கூட்டங்களுக்கு

பழமைபேசி said...

அற்புதம்!

க.பாலாஜி said...

//இரண்டு நாட்களாய் எங்கள்
வீட்டு தொலைக்காட்சிகளின்
முக்கியச் செய்திகளில் உங்கள்
பெயர்கள் மின்னியாயிற்று...//

பசுந்தோல் போர்த்திய புலியாக...

//கொளுத்தும் வெயில் அறியா
குளிர்காரில் வந்திறங்கி
கசங்காத உடையோடு
கட்சிக்காரர்கள் புடைசூழ...//

கிடைக்கும் உணவுக்கு கூட்டம் சேர்க்கும் காக்கைகள்போல...

//கேமாரக்களின் ஒளியில் நனைந்து
சம்பிரதாயமாக உதடுகளைப்
பிரித்து ஓரிரு வார்த்தைகளை
உதிர்த்து விட்டு...//

ஒப்பனை காட்டும நடிகனாக...

//பத்துப் பேர் கொண்ட படை
பந்தாவாகப் புறப்பட்டுவிட்டது
ஈழத்துக்கு உண்மையாய் குரல் கொடுத்தவன்
எவன் ஒருவனும் இல்லாமல்...//

உண்மையை உதரிவிட்டு பொய்மையை உடுத்தி...

//வரவேற்க கொஞ்சம் கசங்கிய
வண்ணக் கம்பளத்தோடு
காத்திருப்பான் காடையன்
காயாத இரத்தக் கறையோடு//

தமிழச்சியின் மானம் பறித்த உடலைக்கொண்டு....

//வாடி வதங்கிப்போய் வாழ்விழந்த
மனிதக் கூடுகளோடு கட்டாயம்
புகைப்படம் பிடித்து வாருங்கள்
பயணக்கட்டுரை எழுத வேண்டும்...//

முடிவில்லா அழிவென்று....

//வரும்போதாவது கண்டிப்பாக
முகத்தைக் கொஞ்சம் வாட்டமாக
வைத்திருங்கள்... இன்னும் ஒருமுறை
ஏமாற இந்தக் காரணம் போதும்//

நானும் வருந்துகிறேன் என்பதைப்போல்....

வலியோடியைந்த வரிகள்...

வானம்பாடிகள் said...

ஓவென்றலறி ஊர் வசவெல்லாம் வைது ஒரு மண்ணும் உறைக்காமல் போகும். தாழ்ந்த குரலில் அதிராமல் சொல்லும் ஓரிரு வார்த்தை முதுகுத்தண்டை சில்லிட வைக்கும். இரண்டாவது ரகம் இது. எப்படிப் பாராட்ட. வலி பகிர்ந்தமைக்கு நன்றி மாத்திரம்.

D.R.Ashok said...

மிக சரியான பார்வை.

யாழினி said...

//பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...//

என்னை அசத்திய வரிகள்!

உண்மை தான் சொல்வதற்கில்லை, ஏனெனில் ஈழத்தமிழர்கள் நாம் இன்று பலி ஆடுகள் தானே! :(

ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா,,,,,,துணைக்கு ஒரு ஆள் கிடைச்சாச்சு.......

கதிர் ஆட்டோ அல்லது சுமோ வந்தால் போன் செய்யுங்க.......இங்க வந்தா நான் போன்ல கூப்பிடுகிறேன்....


ஹி.....ஹி....


அருமை கதிர்...

வாழ்த்துக்கள்

ச.செந்தில்வேலன்(09021262991581433028) said...

//வரும்போதாவது கண்டிப்பாக
முகத்தைக் கொஞ்சம் வாட்டமாக
வைத்திருங்கள்... இன்னும் ஒருமுறை
ஏமாற இந்தக் காரணம் போதும்//

:((

T.V.Radhakrishnan said...

அருமை கதிர்...

வாழ்த்துக்கள்

ஜீவன் said...

///பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...///

புறப்பட்டு சென்ற அந்த பத்துபேரின் கண்களில் இந்த வரி தென்படவேண்டுமே ....!!;;(

ஆ.ஞானசேகரன் said...

//பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...//
சரியா சொல்லி புட்டீங்க‌

பிரியமுடன்...வசந்த் said...

//பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்//

ம்ஹும்...

மானிட ஜந்துக்கள் (ஐந்தறிவு மட்டும் ஐந்தும் சுயநல அறிவு மட்டுமே) கேடுகெட்ட ஜென்மங்கள்...


வாழ்த்துக்கள் கதிர்

கதிர் - ஈரோடு said...

@ கார்த்திகைப் பாண்டியன்
@ பிரபாகர்
@ கலகலப்ரியா
@ மௌனி
@ மாதவராஜ்
@ அத்திரி
@ பழமைபேசி
@ க.பாலாஜி
@ வானம்பாடிகள்
@ D.R.Ashok
@ யாழினி
@ ஆரூரன்
@ செந்தில்
@ T.V.Radhakrishnan
@ ஜீவன்
@ ஞானசேகரன்
@ வசந்த்

தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

Anonymous said...

Excellent...manam valikiranthu en iyalaamayyai enni...tirupur arukil ulla kramamaana Vavipalayathil kooda than kaivarisiyay kaati ullathu arasu...Enru vidiyum tamilanin eenaph pozhudu...methaph paditha maanbumigu prathamare methanathodu nadandu kolkiraar...ini ver yaarai solla...

ஜோதிஜி. தேவியர் இல்லம். said...

நாகா கதிரையும் பார்க்க வேண்டும் என்ற சொன்ன போதே புரிந்து கொண்டேன் எதையோ நாம் இழந்து கொண்டுருக்கிறோம் என்று. உள்ளே பல தலைப்புகள் படித்துக் கொண்டு வந்த போதிலும் இன்று கலங்கடித்துவிட்டீர்கள். மூலத்தில் இருந்து முள்கம்பிகளுக்கு பின்னால் வரைக்கும் என்று தொடரப்போகும் தலைப்பு உருவாகி கொண்டுருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் என்னுடன் இணைந்தது சற்று பெருமையாக கருதுகிறேன். பெரியார் மண் என்பதால் இயல்பாகவே பிறக்கும் போதே இந்த ஆளுமை வந்துவிடுமோ?

தண்டோரா ...... said...

பாலும்,கனியும் வளமாய் மொழி பேசி வரப்போகிறார்கள்..பத்திரிக்கைகளுக்கு இன்னும் ஒரு செய்தி..அம்புட்டுதான்

காமராஜ் said...

//தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...//

கட்டாயம் பிரியாணிச்சாப்பாடு இருக்கும்.
இந்தக்கவிதை அதைச்சுற்றி வீசும் ரத்தவாடையோடு.
வலிக்கிறது கதிர்.

ஜெரி ஈசானந்தா. said...

உசுரை உலுப்பும் வரிகளில் உப்பு கரிக்கிறது கதிர்.[கண்ணீரின் உப்பு.]
ஆயிரம் செருப்படிகளுக்கு சமம்,உங்கள் கவிதை.

Maheswaran Nallasamy said...

Arumai Nanbare!!!!!1

Anonymous said...

உள்ளக் கொதிப்பை உரைத்து விட்டீர்...

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ rsakthi
நன்றி @@ ஜோதிஜி. தேவியர் இல்லம்
நன்றி @@ தண்டோரா
நன்றி @@காமராஜ்
நன்றி @@ ஜெரி
நன்றி @@ Maheswaran Nallasamy
நன்றி @@ தமிழ்

தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

VISA said...

அசத்தல்.!!!! உங்க பிளாக சும்மா எட்டி பாத்தேன். ஒரு நிமிஷம் சம்பிக்க வச்சுட்டீங்க.

வாத்துக்கோழி said...

மற்றுமொரு கண்துடைப்பு. நாடகம். இப்படி எதனை நாள்தான் ஏமாற்றுவார்கள்

துபாய் ராஜா said...

இலங்கையில்
செல்லாத
இடம் சென்று
சொல்லாத கதைகள்
பல கண்டு
சொர்க்கம் சென்ற
செந்தமிழர் பலருண்டு...

சிந்தையில் சீற்றம்
பொங்கி வருதே
சுற்றுலா போல்
சிற்றுலா செல்லும்
சின்னமதி கொண்டோர்
நிலை கண்டு....

அஹோரி said...

//பிரியாணி பரிமாறப்பட்டால்
நன்றாக துழாவிப் பாருங்கள்
தமிழனின் எலும்புத் துண்டு தட்டுப்படும்
தவறாமல் அதைத் தள்ளி வைத்திடுங்கள்...//

கழட்டி அடிச்ச மாதிரி இருக்கு.

கதிர் - ஈரோடு said...

நன்றி @@ VISA
நன்றி @@ வாத்துக்கோழி
நன்றி @@ துபாய் ராஜா
நன்றி @@ அஹோரி

தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி

இளந்(இழந்த)தமிழன் said...

:-(

http://ilanthamizhan.blogspot.com/2009/09/blog-post_30.html

கடல் அலைகள்... said...

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி ஏமாந்து கொண்டிருக்க போகிறோம்......

பின்னோக்கி said...

நீங்கள் சொல்வதில் இந்த கவிதையில் எனக்கு உடன்பாடு இல்லை.

அங்கு போர் தொடங்கியவுடன், நாங்கள், டெல்லிக்கு தந்தி, தபால் அனுப்பி, உண்ணாவிரதம் இருந்து, மத்திய அரசு, இலங்கையை கண்டித்து, போர் நிறுத்தம் செய்து, தமிழ் மக்கள் அங்கு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள், நம் மந்திரிகளை பாராட்டுவதற்காக இலங்கைக்கு அழைத்திருக்கிறார்கள்.

நீங்கள் பொய்யான செய்தியை பரப்பி வருகிறீர்கள். எதற்கும் கலைஞர் தொலைக்காட்சி பார்த்து உண்மை நிலையை அறிந்து கொண்டு இந்த மாதிரி கவிதை எழுதவும்.

சி. கருணாகரசு said...

உணர்வோடு எழுதப்பட்ட கவிதை. வலிகளின் வரிகளுக்கு... வார்த்தைகளில் இல்லை பாராட்டு.

நாஞ்சில் பிரதாப் said...

நெத்தியடி...கவிதை.... வாழ்த்துக்கள் சார்

S.A. நவாஸுதீன் said...

இந்தக்கவிதையை இப்பதான் பார்க்கிறேன் கதிர். அருமை என்று சொல்ல தடை விதிக்கிறது அதில் உள்ள வலி

Mona said...

makkal suyanala arasiyalvathikalin unmai mukathai arinthu avrkalai kalai edukavendum...

if v r true tamilan..........

Amudha Murugesan said...

வலியும் வெறுப்பும் தான் மிஞ்சுகிறது, வார்த்தைகளில் உள்ள நிதர்சனத்தை உணரும்போது!
:-(

lakshmi indiran said...

ஒன்றும் சொல்வதற்கில்லை,மனித உயிர்கள் அரசியலாக்கப்பட்ட பின்பு...
ஆனாலும் கடைசிவரி...என்னவோ செய்கிறது மனதை