ஆறாம் அறிவுஐந்து அறிவுகளை மட்டும்
வைத்துக்கொண்டு
மிஞ்சியிருக்கும்
வனமொன்றில்
தத்தித்தாவியோடி
பழங்கள் பூக்கள்
இலைகள் தானியங்களில்
பசியாறியவனுக்கு
ஆறாம் அறிவின்
துணைகொண்டு
மிஞ்சிப்போனதை
பெருங்கருணையோடு
பிச்சையிட்டு
பசியாறப் பழக்கிவிட்டீர்கள்

அவ்வப்போது
அரிசி மூட்டைச் சந்தில்
சுருட்டி வைக்கும்
நெகிழிப் பைகளை
என்ன செய்வதெனத்
தெரியாத நீங்களா
அவன் சுமந்தலையும்
அந்த நெகிழிச் சாபத்தை
என்ன செய்து தீர்ப்பதெனச்
சொல்லியிருக்கப் போகிறீர்கள்!

-

7 comments:

Rathnavel Natarajan said...

அருமை சார்.

Muthusamy Venkatachalam said...

Superb. ..

-'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

lakshmi indiran said...

எந்த பகுத்தறிவு பிராணிகளிடமிருந்து மனிதனை பிரித்துக்காட்டுகிறதோ,கனவுகளால்,நிராசைகளால்,அறிவால் வருத்தியும் வைக்கிறது..
நெகிழிச்சாபம் தான் புரியல..

lakshmi indiran said...

கல்வெட்டில் பெயர் பொறித்திருப்பது கூட ஆறாம் அறிவின் வேலையா இருக்குமோ?

Vijayashankar said...

Nice!

//நெகிழிச் சாபத்தை // Context?

-'பரிவை' சே.குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அண்ணா...