கீச்சுகள் - 36




உலர்ந்தும் உலரா கூந்தலில் மல்லிகைச்சரம் புரள காலை பரபரப்பில் சாலை கடக்கும் பூவையர் உலகிற்கு ஏதோ ஒரு கவிதையை உதிர்த்துவிட்டுப் போகிறார்கள்

-

தேவையானதை செயல்படுத்துவதை விட, தேவையற்றதைத் தடுக்கத்தான் கூடுதல் மன வலிமை தேவைப்படுகிறது!

-

எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும் இப்ப....... ”இந்த திருவள்ளுவர் எழுத்தாளரா?”

-

திருவள்ளுவர் மரபணு வழி வந்த யாரோ ஒருத்தன்தான் ட்விட்டரை உருவாக்கிட்விட்ருவள்ளுவர்களை உருவாக்கியிட்டேருக்கனும்!.

-

காடு காய்றவிளுக்கு மழ வந்தா பரவால்லியே, களத்துல கல்லக்கா, எள்ளுக்கா காயப்போட்டவிளுக்கு சித்த வராமயிருந்தா பரவால்லியே! #பல்வகைப்படும் உலகு

-

எதை முடியாது, இயலாது என செய்யத் தயங்குகிறோமோ, தவிர்க்க நினைக்கிறோமோ, அதைச்செய்ய ஒரு சூழல் அமைவதுதான் வாழ்க்கையின் ஆகச்சிறந்த விசித்திரம்

-

எழுத்தாளனாக இருப்பது கூட எளிது, மனிதனாக இருப்பதுதான் சிரமம்!

-



சன்னல் வழியே உலகைப் பார்ப்பதாக நினைத்திருக்கிறேன்! அதே சன்னல் வழியே உலகம் பார்ப்பதையறியாமலே!

-


நன்றி சொல்கையில், நட்பின் அதிபிரியத்தில்நன்றி எதுக்குனு மறுப்பவர்களிடம் நன்றியை எப்படிச்சொல்ல? #ஹெல்ப் மீ திருவள்ளுவரே!


-

குறைவான தூக்கம், அதிகமான துக்கம் - சமூகத்தின் பொது நோயாகப் பரவிக்கொண்டிருக்கிறது!

-

மரம் வளர்ப்போம் எனும் விளம்பரப் பலகையை மரத்தில் ஆணியடித்து மாட்டும் முரண்களுக்குள்தான் வாழ்கிறோம்!

-

ரகசியங்களற்றாலும் தனிமை தவழும்!

-

குழந்தைகளுக்கென்று ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து செய்ய நினைக்கும் நமக்கு, ஒருபோதும் குழந்தைகளின் உலகத்திற்குள் செல்ல மனமிருப்பதில்லை

-

கரெண்ட் போயிடுமேங்கிற பயம் குறைத்து, மக்களை ஆறஅமர வேலை செய்யவைத்து சிறிதுசிறிதாக சோம்பேறியாக்கும் EBக்கு கண்டனங்கள்
#
திடீர்னு மாற சொன்னா?

-

சூதாடிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.
ஏமாளிகளிடமிருந்து மட்டும் காப்பாற்றுங்கள்.

-

காற்றின் துணைகொண்டு மண் என்னை அழுக்காக்கியது மேகத்தின் துணைகொண்டு காற்று என்னைக் கழுவிப்போனது # வேற யாரு, என் பைக் தான்

-

கடந்துவிட்ட பிறகு மனம் ஒப்புக்கொள்கிறதுஇது கடந்துவிடக் கூடியதாகத்தான் இருந்திருக்கிறதென

-

இப்போது செய்துகொண்டிருப்பதை விடவும், செய்ததும், செய்ய வேண்டியதும் நிறைய இருக்கின்றன.

-

கடலை வெறித்தவாறு காற்று வாங்கும் பொழுதெல்லாம் சுறா படத்தில் விஜய் பறந்து வந்த காட்சி மனதைக் கொத்துகிறது.

-

மனுசன்ல ரெண்டே சாதிதான், ஒன்னு திருப்தியில்லைனு சொல்றது, இன்னொன்னு திருப்தியாயிட்டேனு சொல்றது!

-

இங்கிட்டு ஒரு நிகழ்கால மருமகளும், எதிர்கால மருமகளும் பேசிக்கிறாங்கதமிழ் சீரியலைவிட, இந்தி சீரியல்ல வர்ற மாமியாருங்க பரவாயில்லையாம்

-

சந்தோசமாக மட்டுமே இருக்கிற எவரும் அவ்வளவாக தத்துவம் கேட்கிறதுமில்லை, தத்துவம் பேசுறதுமில்லை.

-

நானெல்லாம் எங்கே, எப்படியிருந்திருக்கனும் தெரியுமாஎனப் பெருமை பேச முற்படும்போதுஇஃகிஃகினு ஒன்னு சிரிக்கும் பாருங்க, அதுதான் மனசாட்சி!

-

ஒரு பெரும்கூட்டத்தில் சப்தமாகஅண்ணானு கூப்பிடுறதைவிடடேய்னு கூப்பிட்டா நிறையப்பேர் திரும்பிப் பார்க்கிறாங்க!

-

ரோஜாவை கையிலேந்திக்கொண்டு கற்பனையில் மல்லிகை வாசத்தை நுகர முயற்சிப்பதற்கு(ம்) பெயர்தான்தேவையில்லாத ஆணி புடுங்குறது

-

இணையப் பல்கலைக் கழகத்தில் குறைந்த விலைக்கு சிறப்பாகபட்டம்வழங்கப்படுகிறது # டம்ளர், வாக்கர், நடுசென்டர், உளுத்தம்பருப்பு, அணில் etc

-

அதற்கு காரணம் எதுவும் இல்லை" என்கிறேன். ஆனால், காரணம் இல்லாமல் இருந்திருக்காது!

-


நான் நீங்களாகவும், நீங்கள் நானாகவும் மாறும் பக்குவம் வரும் வரைக்கும், நான் நானாகவுமே, நீங்கள் நீங்களாகவுமே இருப்பதுதான் நல்லது!

-

எதுவா இருந்தாலும் நமக்கு வந்துடனும்... பெத்தவங்களுக்கோ பிள்ளைகளுக்கோ வந்துடக்கூடாதுஎன நினைப்பதும் அன்பின் வலி(மை)



உங்களை யாரோ இடைவிடாது உற்றுக் கவனிக்கிறார்கள் அந்த யாரோவில் நீங்களும் இருக்கலாம்!

-

நாயைவிடக் கேவலமாக மனிதனை நடத்துகின்றனர் பலர். மனிதனைவிட மேலாக நாயை நடந்துகின்றனர் சிலர். # சிலரின் உலகு அன்பானது!

-

தவிர்க்கமுடியா கடினமான சூழலை, புன்னகையோடு கடந்துபோவோரின் புன்னகையை உற்றுப்பாருங்கள், கொஞ்சம் கண்ணீரும் ரத்தமும் தேங்கியிருக்கும்!

-

கடந்துவரும் பாதையை நாசப்படுத்திக் கொண்டே கடப்பவனுக்கு திரும்பிவர என்ன யோக்கிதை இருந்து விடப்போகிறது!?


-

பிடிக்காமல் போவது பிடிந்திருந்ததற்கும்,  பிடித்திருந்தது பிடிக்காமல் போவதற்கும்....
பிடித்தமாதிரி நடந்துகொண்டதும், பிடித்தமாதிரி நடந்துகொள்ள முடியாது போனதும் அல்லது பிடித்ததாய் நினைத்ததும் பிடிக்காமல் போனதாய் நினைப்பதும் காரணமாய் இருக்கலாம்.

-

4 comments:

Yaathoramani.blogspot.com said...

தலைப்பும் அதற்கு விளக்கமாய்
ஆழ்மான சிந்தனையுடன் அமைந்த பதிவும்
மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

ஆர்வ கோளாறு (இதுக்கு 'க்' போடணுமா?) said...

Ada!

ஆர்வ கோளாறு (இதுக்கு 'க்' போடணுமா?) said...

Ada!

ராமலக்ஷ்மி said...

அருமை.