பச்சிளம்
குழந்தைகள் கொடும்
நோயில் வதைபடுகையில்
புரிகிறது கற்பிதமான
கடவுள் எத்தனை
கருணையற்றவன் என்பது.
-
24 hrs கரண்ட்
வெச்சுக்கிட்டு, ”எப்ப
போகுமோ, எப்ப
வருமோனு” ஒரு
த்ரில் இல்லாம
எப்படித்தான் சென்னை
மக்கள் வாழுறாங்களோ!
-
நெடுஞ்சாலைகளில்
ட்ரைவர் கண்டக்டர்
ஓசியில் தின்பதற்காக
நிறுத்தப்படும் உணவங்களுக்கென்றே
”ஸ்பெஷல்
கேவலமான” அரிசி,
பருப்பு எங்கோ
விளையுதுபோல!
-
சுத்துதே
சுத்துதே பூமி....
அதைவிட வேகமா
சுத்துதே IRCTC.... இது
போதுமடா போதுமடா
சாமி....
-
பிள்ளைகளை
“சம்மர் கோச்சிங்
கிளாஸ்”க்கு
அனுப்பும் பெற்றோர்களுக்கு
பிற்காலத்தில் நரகத்தில்
”சம்மர் கோச்சிங்
கிளாஸ்” நடந்தாலும்
நடக்கலாம்!
-
”சம்மர்
கோச்சிங் கிளாஸை”
கண்டுபிடித்தவர்கள்
சூனியக்கார கிழவிகளின்
நவீன வார்ப்புகள்!
-
IRCTCயை,
அணு விஞ்ஞானியைத்
திட்டினவங்களுக்கு
ரயில்ல ஸ்லீப்பர்ல
1-8 (or) 65-72க்குள்
பர்த் ஒதுக்கி
பாடம் கத்துக்கொடுக்கிறாங்க
#அவஸ்தைதானிப்பு
-
திருக்குறளைப்
பின்பற்றாத, தமிழைப்
படிக்க விரும்பாத
நமக்கு என்ன
வெங்காயத்துக்கு திருவள்ளுவர்
சிலையும், தமிழன்னை
சிலையும்!
-
வயசுக்கு
வந்த பொண்ணுக
படிக்கிற பள்ளிக்கூடத்துல
கழிவறை கட்டிக்கொடுக்கிறத
விட்டுட்டு அவுக
திருவள்ளுவருக்கு சிலைனா
இவுக தமிழன்னைக்கு
சிலை
-
ஏசி
குளிரில் தூங்கிய
வீடுகளிலெல்லாம் EB மீட்டர்
கணக்கெடுக்கும் தினமன்று
சேர்த்து வைத்துக்
கொதிக்கிறது!
-
இலைகளுக்குள்
மறைந்து கூவும்
குயிலுக்குத் தெரியாது,
அதன் குரல்
என் உயிரை
வருடிக் கொண்டிருப்பது.
-
நாம்
மற்றவர்களிடம் கோபித்துக்கொள்வதை
அன்பென்றும், நம்மிடம்
மற்றவர்கள் கோபித்துக்
கொள்வதை வம்பென்றும்
நினைக்கும் வியாதிக்குப்
பெயரென்ன?
-
தவழ்ந்து
நகர்ந்து கடந்து
விழுந்து முயன்று
எழுந்தவனிடம்தான் சொல்கிறார்கள்
”ஓடு”!
-
உலகத்தில்
அதிகப்படியானவர்களின்
நிறைவேறிடாத கனவு
”பிற்காலத்தில் பஸ்
ட்ரைவர்” ஆக
முடியாமல் போனதுதான்!
:)
-
சொந்த
செலவில் சூனியம்
வைத்துக்கொள்பவர்களாலும்
சூழ்ந்தது இவ்வுலகு
-
வறுத்த
கடலை பொரிக்கு
நிகரான காம்பினேசன்
இன்னும் கண்டுபிடிக்கப்படல.
-
பெரும்பாலான
தீர்ப்புகள் மனதால்
எழுதப்படுகின்றன.
-
எந்த
வரலாறுகளையும் அறியாத
ஒரு அவசர
மலட்டுச் சமூகத்தை
எதை நோக்கி
வளர்த்தெடுக்கிறோமென்று
தெரியவில்லை!
-
’பார்த்தவுடன்
எழுந்து நிற்பதை’
மரியாதைனு மொதமொத
கண்டுபிடிச்ச விஞ்ஞானி
யாரா இருப்பாங்க!
-
எவனொருவன்
தன்னை ’எளியவன்’
என உரத்துச்
சொல்கிறானோ, அவன்
எளியவனாக இருக்க
விரும்பியிருக்கவில்லையென்று
அர்த்தம்!
-
தயக்கங்களை
உடைக்கத் தயங்குவதிலேயே
வாழ்க்கை தயங்கித்தயங்கி
நடக்கிறது!
-
சிரிக்கிறதுக்கு
எதுக்கு லாஜிக்.
#நீ
சிரிடா மாப்ள!
-
இன்றைக்கு
வந்த மழைக்கு
நன்றி சொல்ல
மறந்துவிட்டேன். அதனாலென்ன
பயபுள்ளைக்கு நன்றி
அவசியம் வேணும்னா
நாளைக்கு வந்து
வாங்கிக்கட்டுமே!
-
வேரைத்
தேடவேண்டிய அவசியம்
நீருக்கு இல்லை.
நீரைத் தேடும்
அவசியம் வேருக்கு
உண்டு.
-
நதிகளுக்கும்,
கடல்களுக்கும் நாம்
வெவ்வேறு பெயர்
சூட்டியிருந்தாலும்,
நதிகளுக்குத் தெரியும்
ஆகாயமும் கடலும்
ஒவ்வொன்றுதான் என!
-
கோபத்தில்
கத்தி, எழுபத்திசொச்ச
வார்த்தைகளைச் செலவு
செய்வதைவிட ”இது
சரியில்ல, நான்
கோபமாயிருக்கேன்” எனச்
சிக்கனமாய் சொல்வது
சிரமம்தான்
-
கடந்த
2 முறை ஆளும்
கட்சியைத் தீர்மானிப்பதில்
குழம்பிய கர்நாடகா
வாக்காளர்கள், இந்த
முறை எதிர்க்கட்சியைத்
தீர்மானிப்பதில் குழம்பிட்டாங்க!
-
எல்லாத்தையும்
தள்ளி வெச்சுட்டு
'ம்ம்ம்....இப்போ
எதுக்காக இதெல்லாம்'
என யோசிக்கும்
தன்மை வரம்.
-
சொல்லிவிடக்கூடிய
பொய்களைச் சுமப்பதைவிட,
சொல்ல முடியாத
உண்மைகளைச் சுமப்பதும்
கொடிது!
-
மணல்
அள்ளப்பட்டதைக் கண்டும்
காணாமலும் இருந்ததன்
பலன்களையும், பாவங்களையும்
இந்த வறட்சியில்தான்
அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம்
#வறட்சி நல்லது!
-
ஜெயித்தவனிடம்
கேளுங்கள், மறவாமல்
தோற்றவனிடமும் கேளுங்கள்.
ஜெயிப்பது எவ்வளவு
கடினம் என்பதைக்
கட்டாயம் சொல்வான்.
-
”மச்சி பிசியா”னு SMS அனுப்பிச்சான் ஒரு நல்லவன்
எதோ அவசரத்துக்கு கேட்கிறான்னு. ”இல்லடா சொல்லு”னு அனுப்பினேன்.
“இல்ல நான் பிசியா இருக்கேன். நீ வெட்டியா இருக்கியானு பார்த்தேன்”கிறான்...
நம்ம மாண்புமிகு அமைச்சர் நாசா-வை விட்டு அவனை 15 நாள் கடிக்க வைக்கலாம்னு இருக்கேன்!
எதோ அவசரத்துக்கு கேட்கிறான்னு. ”இல்லடா சொல்லு”னு அனுப்பினேன்.
“இல்ல நான் பிசியா இருக்கேன். நீ வெட்டியா இருக்கியானு பார்த்தேன்”கிறான்...
நம்ம மாண்புமிகு அமைச்சர் நாசா-வை விட்டு அவனை 15 நாள் கடிக்க வைக்கலாம்னு இருக்கேன்!
-
எழுதுவதற்கு
காகிதமும் பேனாவுமோ,
கணினி மென்பொருளும்
விசைப்பலகையுமோ போதாது.
இசைவான மனதும்,
சூழலும் தேவையோ
தேவை!
-
ஒன்பது
கிரகங்களின் உச்சம்
பெற்ற ஓருவனுக்கு
மட்டுமே உச்சியைப்
பிளக்கும் வெயிலில்
ஊரில் உள்ள
எல்லா சிக்னல்களிலும்
சிவப்பு எரியும்.
-
பகல்
பயணத்தில் ஓடும்
பேருந்தில், அதிர்ந்துகொண்டே
விழித்து விழித்து
உறங்குவதும் ஒரு
சுகமே!
-
முதுமையில்
பணம் என்பதைவிட
சட்டெனத் தழுவும்
மரணம் முக்கியம்!
.^.
5 comments:
arumai
அனைததும் ரசனைக்குரியதே....
மீண்டும் ஒருமுறை மொத்தமாக வாசித்தாயிற்று...
அடுத்தவருக்கு அவசர படாமல் சிந்திக்கும் மனது தனக்கு என்றும் வரும்போது குழப்புமே ஒரு குழப்பு, வெறும் மெறுமை மட்டுமே மிஞ்சும் அந்த நேரங்களில்.....
இரசித்தேன், வாழ்த்துகள்
என்னேரமும் யோசனை தானா
கதிர்
Nice to ready all-together, and especially this: பெரும்பாலான தீர்ப்புகள் மனதால் எழுதப்படுகின்றன.a very true sayings...
Do cont.,
Post a Comment