கீச்சுகள் - 26


ஒன்றை ரசிக்க அதில் பொதிந்திருக்கும் அழகு மட்டுமே காரணமல்ல, இசைந்துருகும் மனதும்தான் காரணம்!

-

டீசல் ரூ.5 விலை உயர்வு - உடனடியாக தேநீர் விலை மற்றும் பேருந்து நிலைய சிறுநீர்க் கழிப்பிடக் கட்டணம் அதிரடி உயர்வு! #இந்தியாடா!

-

12% டீசல் விலை ஏறினா எனக்கென்னனு நினைக்கிறீங்களா.... பள்ளிக்கூடவேன்க்கு இனிமே 20% கூடுதலா வெச்சுக்குங்க! :(


-

கரையான் புற்றுக்குள் பாம்பு குடி புகுவதுபோலே, காதல் மனதில் ஊடுருவுகிறது காமம்!

-

அன்பாய் இருப்போரை உண்மையாய் ரசிக்கையில் உயிர் சிலிர்க்கும்!

-எதிர்ப்படும் எல்லா மனிதர்களும் புன்னகைத்துக் கொள்வதில்லை. மனவளர்ச்சி குன்றியதாகச் சொல்லப்படுபவர்கள் எவரைப் பார்த்தும் புன்னகைக்கின்றனர்.


-

எதிர்க்கருத்து கொண்டிருப்போரை முட்டாளாகப் பாவிக்கும் மனோபாவமும் ஒரு போதை!

-பாரதி இருந்திருந்தாஅணுத் துகளொன்று கண்டேன் -அதை அங்கொரு நாட்டிலோர் உலையிடை வைத்தேன் பொசுங்கித் தணிந்தது நாடுஎனப் பாடியிருப்பாரோ?

-

எப்படி யோசித்தாலும் என் பெற்றோரைக் குறை சொல்ல ஒன்றுமில்லை என்னிடம், ”ஒரே சிக்கல்என் பிள்ளையும் நாளை இதையே சொல்லுமா என்பதுதான்!

-

நினைவுகளைக் கொல்லத் தெரியவில்லை, நிலையில்லா வாழ்வில்!

-

பெண்களின் கண்களை மட்டும் பார்த்துப்பேசுவது பெரும் "வேள்வி"# ஆண்பாவம்

-

கூடங்குளத்தில் என்ன நிகழ்ந்தால் எனக்கென்ன, எப்படியாச்சும் எனக்கு கரண்ட் கிடைக்கனும் எனும் பொதுபுத்திதான் சமகாலத்தின் மிகப்பெரிய சுயநலம்!

-

40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகள் கண்டுபிடிக்கப்படுவர் - இங்கிலாந்து விஞ்ஞானி # நாங்க ரொம்ப நாளாவே தமிழ் பேசுறவங்களை அப்படித்தானே பாக்குறோம்!

-

மழை பெய்யலைனா காயும், மழை பேஞ்சா தண்ணி தேங்கும்! இதுதான் 'நரகம்'.... சாரி.... இந்திய 'நகரம்'!

-
சும்மா இருந்தவன்கிட்ட, ஒரு Holiday Resort அம்மணி போன் பண்ணிஃபோர் வீலர் இருந்தா ஒரு Tour offer தர்றோம். என்ன வண்டி சார் வெச்சிருக்கீங்க"னு கேட்டுச்சு. என்கிட்ட Tractor தான் இருக்குனு சொன்னேன். போனை கட் பண்ணிடுச்சு!
# விவசாயம் பண்றது தப்புங்ளா ஆபீசர்ஸ்!

-

அவசியமானதை விடுத்து அவசியமற்றதைப் பேச, நிகழ்த்த விரும்போதுதான் சிக்கல்கள் துளிர்க்கின்றன.

-

அன்பு எனும் ஒற்றை வார்த்தையில் நிகழும் மகிழ்வும், நிலவும் மாயத்தனமும்அடேங்கப்பா!


-

அப்போவெல்லாம் பேங்க்ல பணம் கட்றதுக்கு, எடுக்குறதுக்குத்தான்க்யூநிக்கும், இப்போவெல்லாம் டோக்கன் போடுறதுக்கே பெரியக்யூநிக்குதே!

-

ஒவ்வொரு மாதமும் தவிர்க்க முடியாதது பௌர்ணமி, அமாவாசை ........................................ அப்புறம்கிரடிட் கார்ட் பில்

-

ஆண் சூரியன் போலவும் பெண் நிலவு போலவும் காதலை வெளிப்படுத்துகின்றனர்!

-

நாம் தொலைத்தவைகளின் பட்டியலில்சிரிப்பும்இடம் பிடித்திருப்பதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொள்வோம்! :)

-

சில மரணங்கள் குறித்து பேசித் தீர்க்கவும் முடியவில்லை. பேசாமல் சேமிக்கவும் முடியவில்லை! :(

-

வெயில் காலத்தில் மழையை, மழைக் காலத்தில் குளிரை, குளிர் காலத்தில் வெயிலைத் தாங்கிக்கொள்ளலாம் என நினைக்கிறது எதையும் தாங்கமுடியா மனித சமூகம்

-

ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் பிடிக்கின்றது. கணவனுக்கு மனைவியையும், மனைவிக்கு கணவனையும்தான் பிடிப்பதில்லை பாவம்! :)))

-


வென்றதைவிட தோற்றதுதான் அதிகம்!

-

ஃபேஸ்புக்ல பிறந்த நாளை மறைச்சு வெச்சாலும் வயசாகத்தான் செய்யும்.
#தத்துபித்து!

-


எது குறித்தும் முதலில் ஒரு "எதிர்ப்புக் குரலை" பதிவு செய்துவிடுவோம். எப்படியும் எதிர்காலத்தில் அது தேவைப்படாமலா போய்விடும்.

-

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வித்தியாசமான சிந்தனைகள்... சிலது உண்மைகள்... சிலது நல்ல தத்துவங்கள்...

நன்றி...

cheena (சீனா) said...

எல்லாமே நல்லாருக்கு கதிர் - மனதுருக வில்லை எனில் இரசிக்க இயலாது - அதுதான் முக்கிய காரணம். காதல் மனதில் ஊடுருவது இயற்கைதானே - பாம்பிற்கு கரையான் புற்று தொடர்பில்லாத்தௌ - ஆனால் காதலெனில் காமம் அதனுடைய நீட்சிதான். டோக்கனுக்கே கியூ என்றால் பணம் எடுக்க நெரெய பேர் வராங்கன்னு பொருள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இராஜராஜேஸ்வரி said...

அன்பு எனும் ஒற்றை வார்த்தையில் நிகழும் மகிழ்வும், நிலவும் மாயத்தனமும்… அடேங்கப்பா!


அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

velu vengatesh said...


எப்படி யோசித்தாலும் என் பெற்றோரைக் குறை சொல்ல ஒன்றுமில்லை என்னிடம், ”ஒரே சிக்கல்” என் பிள்ளையும் நாளை இதையே சொல்லுமா என்பதுதான்!