கீச்சுகள் - 20


காலம் மிகப்பெரிய கரைப்பான்!

*

நன்றி வேறு, அன்பு வேறு!

*

குழந்தைகளால் மிக எளிதாக நம் உலகத்தை அவர்கள் உலகமாக மாற்றிட இயலுகிறது.

*

குட்டிக் குறும்புகளாலும் மழலைக் கீதங்களாலும் குழந்தைகளே உலகை புதுமைப்படுத்துகின்றன!

*

ஈமூகோழிக்கு ஒரு லட்சம் கட்டினால் மாதம் 10 ஆயிரம் தருவதாக ஒருகுரூப்புகிளம்பியிருக்கு. அதிலும் ஒருகுரூப்புபணம் கட்டுது! :(

*



சுயசரிதை எழுதுகிறார் பிரதீபா பாட்டீல் # வெளிநாடு சுற்றுலாக் கையேடா இருக்கும்!


*

கணவரை போனில் அழைக்கும்போது மட்டும் இந்த பெண்கள் எப்படித்தான் முகத்தைடெர்ரராகவைத்துக் கொள்கிறார்களோ! #பயிற்சியெடுங்கப்பா கணவர்களே :)

*

தமிழ் இனம் தலை நிமிர்ந்து வாழ உடல், பொருள், ஆவி அனைத்தையும் தர தயங்கமாட்டேன் - கருணாநிதி #இவருக்கு நிஜமாவே இப்ப என்னதான் பிரச்சனை?

*

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடிஎன்பதைபுதிய மதுரை ஆதீனம்’ விநாயகன் மாதிரி, குறுக்கு வழியில அடைஞ்சிட்டாரு போல. #நித்தி ஒரு கோடி நிதியளிப்பு

*

டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்த்துவது அவசியம் - மன்மோகன் சிங் # மறக்காமபாலிடால்விலையை குறைச்சிடுங்க! :(

*

இந்தியன் அதிலும் தமிழன் நேரத்தின் அருமையை உணர்வதே சந்திப்புகளில் பச்சை விளக்குக்கு காத்திருக்கும் சொற்ப நொடிகளில்தான் #மவராசனா இருங்கப்பா

*

கோபமா இல்லாதபோது கோபமா இருக்கியானு கேட்டாலும், சந்தோசமாக இல்லாதபோது சந்தோசமா இருக்கியானு கேட்டாலும் கோபமே வருது #என்னங்டா இது! :)))

*

அடைய முடியாததை அடைவதற்கும் பிடிபட்டதிலிருந்து விடுபடுவதற்கும் அவசியத் தேவையாக இருப்பதுமறுபரிசீலனை

*

ஒரு சாமானியனை அயர்ச்சிக்குள்ளாக்கி, அடித்து வீழ்த்துவதில்... நித்தியானந்தா போன்றவர்களுக்கு கிடைக்கும் அதீத மரியாதைக்கும் பங்குண்டு! :(

*

ஆய்வு செய்யவும், தெளிவடையவும் இந்த வாழ்நாள் போதாது போல!

*

கோடை கால சிறப்பு(!) வகுப்புகளில் கொதித்துப் பொசுங்கும் குழந்தைகள் பாவம்! #விளையாடாப் பொழுது வெறும் பொழுது

*

எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்எத்தனை முறை உணர்ந்தாலும், உறைப்பதில்லை.

*

அதீத அன்பிலும், அதீத கோபத்திலும் வரும் வார்த்தைகளுக்கு ஆயுள் குறைவு!

*

சைக்கிள், பைக், கார், வேன், லாரி, பஸ் - எதை ஓட்டுறவங்களும், ஒரு கைல செல்போன் பேசிட்டே ஓட்டுறாங்களே இந்தியா அந்த அளவுக்கா வளர்ந்துடுச்சு!

*

சட்டசபை இடை நீக்கம் - விஜயகாந்த் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி # ’சட்டம் ஒரு இருட்டறைபடத்தை ரீமேக் பண்ணிடலாமா கேப்டன்!

*

இனி எந்த இடைத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம்: ராமதாஸ் #ச்ச்ச்சே எப்படி உத்து உத்து படிச்சாலும்எந்தத் தேர்தலிலும்னே என் கண்ணில் படுது!

*

தமிழ் ஈழம் கிடைக்க காந்தி வழியில் போராடுவேன் - கருணாநிதி #முதல்ல உங்க பிள்ளைங்க பஞ்சாயத்த தீர்க்க எதாச்சும்ஹசாரே வழிஇருக்கானு பாருங்க!

*

பாகிஸ்தான் பிரதமர் கிலானி குற்றவாளி - உச்சநீதிமன்றம் #ங்கொய்யாலே நம்மூர்லகசாப்க்கு தண்டனை நிறைவேத்த வக்கில்ல. அவன் அவன்தான்யா! :(

*

2 மணிக்கு சாப்பிட வேண்டிய சாப்பாட்டை, 12 மணிக்கேஎன்ன சோறா இருக்கும்?”னு நினைச்சா, அது ஆசீர்வதிக்கப்பட்ட பொழுது. பாதி சாப்பாட்டின்போது கூடஎன்ன சோறுஎனும் உணர்வற்று சாப்பிட்டால் அது சபிக்கப்பட்ட பொழுது! #சோத்துத்துவம்

*

ஒரு வாகனம் பதிவு செய்யப்படும்போது, ஒரு மரக் கன்று நடவேண்டும் என சட்டம் இருந்தால் நாடு எப்படியிருந்திருக்கும் #சின்னச்சின்ன ஆசை

*

ஊடல் தின்னும் ஒற்றை முத்தமாய்... வெயில் குழம்பு தின்று பசியாறுகிறது ஒற்றைப் பெருமழை

*

கோபித்துக் கொள்வதற்கும், கோபமற்று கடந்து செல்வதற்கும் இடையே இருக்கும் இடைவெளி மிகமிக மெல்லியதுதான்!

*

உலகத்தில்மோசடிகளில் ஏமாறுகின்றவர்களின்எண்ணிக்கை, உலக மக்கள் தொகையைவிட அதிகம் ஆயிடும் போல இருக்கே! :))))

 
தேர்வு எழுதும்போதுபிட்வழங்கப்படும் என சில தனியார் பள்ளிகள் இனி விளம்பரம் செய்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!

*
 
அடிமைகளைப் பிடிக்கிறது. அடிமைகள் தங்களுக்கு அடிமைகளைத் தயாரிக்கும் போது பிடிப்பதில்லை!

*

பேருந்துகளில்கோயமுத்தூரு ஒன்னு குடுங்என்போர் படிக்காதவர்களாகவும், “ஒன் கோயம்ப்ட்ட்டூர்என்போர் படித்தவர்களாகவும் அறியப்படுகின்றனர்

*

மௌனத்தின் குளிர்ச்சியும், மௌனத்தின் வெப்பமும் மௌனத்தை அனுபவிப்பவர்களுக்கே தெரியும்!

*

எவர் கண்ணீரில்தான் நீங்கள் இனிப்பைக் கண்டுவிட முடியும்!

*

இறந்த நண்பரின் அலைபேசி எண்ணை அழிக்கும்போது, இன்னொருமுறை மரிக்கச் செய்தேன். :(

*

கோப நெருப்பில் மிஞ்சுவது ஆற்ற வேண்டிய காரியங்களின் சாம்பல் மட்டுமே!

*

நெருங்கவும், வருடவும் முடிகிறது நினைவில் எவரையும்!

*

வருடாவருடம் வெயில் அதிகம் என்று புலம்பினாலும். இந்த ஆண்டு வெயில் மிகக்கொடியது. மரங்களற்ற மாநகர் எனும் ஈனப்பெருமை ஈரோடுக்கும் பொருந்தும்.

*

வர வேண்டிய நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் நிச்சயம் வருவார்” - பண்ருட்டியார் #வர வர சட்டசபையிலேயும்பன்ச்டயலாக் பேச ஆரம்பிச்சிட்டீங்ளா!?

*

"ஈழத்து எம்.ஜி.ஆர் டக்ளஸ் தேவானந்தா" - சுதர்சன நாச்சியப்பன் # ஏன் பாஸ் ஈழத்துலராஜீவ்காந்தி, ராகுல்காந்தியெல்லாம் யாருமே தென்படலையா?



ஒவ்வொருவர் மனதும் ஒரு தனி உலகம்.

*

பூசூடுபவருக்கு ஏற்ப தன் தன்மையை, வாசத்தை மாற்றுவதில்லை

*

தமிழகத்தில் இந்த ஆண்டு 84 மாணவ / மாணவியர் படிக்க முடியவில்லை, காதல் தோல்வி என தற்கொலை செய்துள்ளனர் #இது பெரிய பயங்கரவாதமா இருக்கே!?

*

"கட்டுப்பாடா இருக்க வேண்டும்" என முடிவு செய்ததில், கட்டுப்பாடாக இருக்கிற கொடுமை வேறெதிலும் இல்லை!

*

ஏன் ரொம்ப டல்லா இருக்கே?”னு உண்மையா கேக்குறவங்களைவிட, ”என்ன செம ஃப்ரெஷ்ஷா இருக்கே?”னு பொய்யாய் கேட்கிறவங்களைப் பிடிக்குது #மன மாயை

*

எல்லாரும் ஒரே மாதிரியே இருந்துட்டா உலகம் அலுத்துப் போய்விடாதா?

*
எதை நோக்கி நகரக்கூடாது என விரும்புகிறோமோ, அதை நோக்கி நகர்வதுதான் வாழ்க்கையின் விந்தை!

*

குரு என்பவர் உடனிருப்பவராக இருக்க வேண்டியதில்லை, கற்பவன் மனதில் குருவாக இருந்தாலே போதும்.

*

சில நேரங்களில் சிலரிடம் நாம் சின்னக் குழந்தைதான்

-

2 comments:

R.DEVARAJAN said...

சுவையான கருத்துகள்;
ரசித்துப் படித்தேன்.
நன்றி


தேவ்

'பரிவை' சே.குமார் said...

எல்லாம் அருமை...