அந்த நேரம்

என்னிடம் 
கொஞ்சம் மிச்சமிருக்கிறது
சிந்தனைகள் ஏதுமற்ற நேரம்…

வேறு எண்ணில் நண்பனை  அழைத்து
கட்டைக் குரலில் கலாய்க்கலாமா?

கிடப்பிலிருக்கும் மின்மடலுக்கு
நீண்ட பதில் எழுதலாமா?

திருத்தம் வேண்டி நிற்கும்
கட்டுரையைச் செப்பனிடலாமா?

நயமாய்ப் பேசி நண்பனை
ஏமாற்றிப் பார்க்கலாமா?

வாங்கிய கடனுக்கு
வட்டி கணக்கிடலாமா?

வெளியூர் கல்யாணத்துக்கு
நண்பர்களைத் திரட்டலாமா?

சகோதர உறவுகளை
நலம் விசாரிக்கலாமா?

இலக்கியச்சண்டை எதையேனும்
வேடிக்கை பார்க்கலாமா?

தோழியர் எவரிடமாவது
சற்று கடலை போடலாமா?

நேற்றுப் பேசிய கூட்டத்தின்
நிழற்படம் அனுப்ப நினைவூட்டலாமா?

சிக்னலில் இடித்து முறைத்தவனைத்
தேடிப்பிடித்து திட்டலாமா?

ஊரில் இருக்கும் மகளைக்
கூப்பிட்டுப் பேசலாமா?

குடியில் செத்த குமார் குறித்த
கட்டுரை ஒன்று எழுதலாமா?

முதல் முத்தம் நினைவுகளை
சற்றே மீட்டிப் பார்க்கலாமா?

என்னிடம்
கொஞ்சம் மிச்சமிருந்தது…
சிந்தனைகள் ஏதுமற்ற நேரம். 


-

8 comments:

மணிவானதி said...

நல்ல கவிதை மிச்சம் என்பதில் எதுவுமே மிச்சம் இல்லை.

அன்புடன்
முனைவர் துரை. மணிகண்டன்
919486265886

வானம்பாடிகள் said...

nice one:)

வரலாற்று சுவடுகள் said...

நல்ல கவிதை நண்பரே.!

KSGOA said...

நல்லா இருக்குங்க!!!!

சே. குமார் said...

அருமை... சிந்தனைக்கு ஓய்வில்லை...

குரங்குபெடல் said...

இறுதியாய் இப்படி ஒரு

பதிவை போடலாமா . .


என்னிடம் கொஞ்சம் மிச்சமிருக்கிறது சிந்தனைகள் ஏதுமற்ற நேரம்…

வீரா said...

புன்னகை பூக்கிறது நண்பா.....

வீரா said...

புன்னகை பூக்கிறது நண்பா.....