கீச்சுகள் - 19
நித்தியானந்தா கதாநாயகனாக நடித்தால்ஆன்மீக ஸ்டார் நித்தினு ரசிகர் மன்றம் ஆரம்பிக்க ஒரு கூட்டம் இருக்கும் போல!
#கலை தாகமாம்!

*

கணினிக்குள் மாபெரும் மாய உலகம் கண்டதிலிருந்து, கணினியை அணைத்துவிட்டு, சாலையில் இறங்கினால் வேறொரு உலகம் இருப்பதை மறந்துபோகிறோம்.

*

'பயங்கரவாதிகள் கொடூரமாக இருக்கின்றனர்' - பிரதமர்
# சார், உங்க இனிய நண்பர் ராஜபக்சேவை விடவா சார்!?

*

பொருளைப் பயன்படுத்தாத பிர(ரா)பலங்களே பெரிதும் அந்தப் பொருட்களுக்கு விளம்பரம் செய்கின்றனர்.

*

இலங்கை தமிழர்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை - நாராயணசாமி #இன்ன்னோரு மொற சொல்லுங்ங்ங்ங்க!

*

ஆணவப் பூச்சு உதிரும் தருணம் உன்னதமானது!

*

தி.மு : எதைக்கேட்டாலும் மௌனத்தையே பதிலாகத் தந்தாய்!
தி.பி : மௌனத்தை கேட்டால் வார்த்தைகளையே பதிலாகத் தருகிறாய்!
# தி-திருமணம் :)

*

கல்யாண் ஜுவல்லர்ஸ் விளம்பரத்தில் நடிக்க ஐஸ்வர்யா ராய்க்கு ரூ. 20 கோடி #அய்யய்யோ, பிரபுவின்புரட்சி போராட்டம்தோத்துப் போயிடுச்சா!?

*

என்ன மாயமோ, மந்திரமோ தெரியல, நேற்று நான் சந்தித்த நபர்கள் அனைவருமே அன்பானவர்களாகவே தெரிந்தார்கள். மாற்றம் அவர்களிடமா? என்னிடமா?

*

விஜய் டிவிநீங்களும் வெல்லலாம் ஒரு கோடிநிகழ்ச்சியில் கலைஞர், ஜெ., கேப்டன் இவங்கெல்லாம் எப்ப பங்கெடுப்பாங்கன்னு ஆவலோடு இருக்கிறேன்!

*

360+ நாளும் கண்டுக்காம பொங்கல், புத்தாண்டு, தீபாவளிக்கு வாழ்த்துகளா வாரி வழங்குறவங்க அன்பை நினைச்சு மனசு கனக்குதே
#செரிங்க சேம் டூ யூ! :)

*

உங்களுக்கு தலைக்கனம் இருக்கிறதா இல்லையா என்பதை தயவுசெய்து நீங்கள் தீர்மானியுங்கள். மற்றவர்கள் தீர்மானிப்பதைப் பெரிதாக எடுக்க வேண்டியதில்லை!

*

மனசுக்கு விருப்பமானவர்களைச் சந்திப்பது, மிகவும் பிடித்த மலரின் வாசனையைச் சுவாசிப்பதற்கு நிகரானது!

*

மளிகைக்கடை முதல் உணவுவிடுதி வரைபில்கொடுத்தால், அதை எத்தனை பேர், பில்லை சரிபார்க்கிறோம்? சரிபார்க்காமல் விடுவது எத்தகைய மனோபாவம்?

*

இன்னும் கிடைக்காததை விட, அடைந்தது கை விட்டுப் போவதுதான் பெரும் துக்கம்.

*

நிலநடுக்கம் நிலத்தை மட்டும் அசைத்துப் பார்ப்பதில்லை. மனிதர்களின் கர்வத்தையும் நம்பிக்கையும் கூட அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது. :(

*

பாகிஸ்தானிடம் 90 -110 அணு குண்டுகள்.. இந்தியாவிடம் 80 மட்டுமே.
# மன்மோகன் : அண்ணே நாங்க எட்டாவது பாஸ், நீங்க பத்தாவது ஃபெயில்ண்ணே!

*

எதிர்பாராமல் அமைவது எதிர்பார்த்தால் அமைவதில்லை

*

அரசியல் கரை(றை) வேட்டியோடு வரும் ஒட்டு உறவுகள் கூட, ஒட்டு உறவாகத் தெரியாமல், ”அவங்க எதோ வேற சனம்ப்பாஎன்பதுபோல் தோன்றுகின்றனர்.

*

மனதில் தோன்றுவதில் சில, நிறைவேறாமல் இருப்பதே ஒருவித சுகம்!

*

Twitterல் Follower, Retweet, Favorite குறித்து சிந்திக்க, பேச ஆரம்பித்துவிட்டோமெனில் Twitterக்கு அடிமையாகி விட்டோமென்று அர்த்தம் #FB too

*

ஆணவத்துடன் கூடிய அதிகாரம் மிகுந்தவர்களுக்கு ஓய்வுபெறுதல் தான் மிகப்பெரிய தண்டனை.

*

வாங்க நல்லாருக்கீங்ளாஎன பலர் கேட்பது நம் நலம் அறிய மட்டுமல்ல. சம்பிரதாயங்களைத் தாண்டி நாம் நலமாய் இருக்கவேண்டும் எனும் நினைப்பிலும்தான்!

*

இருக்கும் நிலவை, இல்லாது போகும் மின்சாரமே வெளிச்சமிடுகிறது

*

கோபத்தோடு ஒருவரை சந்திக்கச் சென்றேன். ”ஒரு சின்ன உதவி, ஏழைப்பசங்க இருந்தா சொல்லுங்க, படிக்க வைக்கலாம்என்றார். அமைதியாய் திரும்பினேன்

*

பாகிஸ்தான் செல்கிறார் ராகுல் # பீகார், தமிழ்நாடு, உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் புகழ்பெற்ற ராகுல் பல்பொடி இனி பாகிஸ்தானிலும் கிடைக்கும்

*

இந்திய அணுமின் நிலையங்கள் குறித்து இலங்கை அச்சம் # பொறுங்கப்பா பொறுங்கப்பா எங்க ஊரு அணு விஞ்ஞானி நாராயணசாமியை அனுப்பி வைக்கிறோம்

*

மீண்டும் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது என்னை நானே!

*

'சரக்கு' விற்பனைக்கு டாஸ்மாக் கடைகளில் இலக்கு நிர்ணயிக்கவில்லை- தமிழக அரசு
# குடிமகன்கள் இருக்க பயமேன்னு விட்டுட்டீங்க போல!

*

.பி.எல் போட்டிகள் சூதாட்டத்தில் 75,000 கோடி # டேய்ய்ய்ய்ய்ய்ய்... நல்லாருங்கடா!

*

யார் யாரையோ  மன்னிக்கிறோம். என்னை நீயும்,  உன்னை நானும்  மன்னிக்க மாட்டோமா?

*

நில அபகரிப்பு வழக்கு சலிச்சுடுச்சாம், நரசிம்மாலட்ரான்ஸ்பார்மரைவெடிச்ச கேப்டன் மேலமின் மோசடிவழக்கு போடலாமனு யோசிக்கிறாங்களாம்!

*

நண்பர்களோடு இருக்கும் நிழற்படங்களில், நம்மை மட்டுமே தேடித்தேடி ரசிப்பதற்கு(!) பெயர் என்ன?

*

இருப்பதை வைத்து மகிழ்ச்சி கொள்ளவேண்டும்என்பவர், ஒன்று குறைவாகவே வைத்திருப்பவராக இருக்கிறார் அல்லது நன்றாக சமாதானம் சொல்றவரா இருக்கிறார்

*

எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆபாச SMS அனுப்பிய ஆசிரியர் கைது # எட்டாங்கிளாஸ் புள்ளைக்கு எதுக்குடா செல்போனு. உங்க விஞ்ஞான ஆசைக்கு அளவேஇல்லையா?

*

வர்ணப்பூச்சுகளோடு கற்பனை சுவாரசியமாக இருக்கின்றது. நிஜம்நிஜம் போலவேஎளிமையாக இருக்கின்றது


*

முட்டாளிடம் விவாதிக்கும் போது, ”நான்தான் முட்டாள்என ஏற்றுக்கொள்வதே புத்திசாலித்தனம்!

*

ராமதாஸ் 10 சீட் வாங்கட்டும்.. நான் கட்சியையே கலைத்து விடுகிறேன் - வேல்முருகன்
# சண்ட போடாதீங்க ஏட்டய்யா! ? :)))

*

சசிகலா வெளியே போனதுக்கு அத்தன பேர் பட்டாசு வெடிச்சாங்களே? உள்ளே வந்ததுக்கு ஒரு பயலாச்சும் பட்டாசு வெடிச்சாங்களா? # கொளுத்திப்போடே!

*

ஈரோட்ல இருக்கிற மூனேமுக்கா ரோடுல மட்டமத்தியானத்துல, வெயில் மண்டையைபிளக்க இத்தனபேர் போறாங்ளே, வெயில வேடிக்கை பார்க்கப்போறாங்ளோ? #Traffic

*

முதல்ல 2 இத்தாலி வீரர்கள் கேரளாவில் கைது, அடுத்து ஒடிசாவில் 2 இத்தாலியர் கடத்தல்
#நாமும் இத்தாலியர்களும் ஒன்னுக்குள்ளே ஒன்னாயிட்டோம்டா :)

*

அளிப்பவர்களுக்குத் தெரியாது அன்பின் அடர்த்தியும் அளவும், உள்வாங்கி அனுபவிப்போருக்குத்தான் தெரியும்.

*

மன்மோகன்சிங்கை குடியரசுத் தலைவராக்கத் திட்டம்!? # இந்தப் பதவிக்கு 10 வருசம் முன் அனுபவம் பெற்ற ஒரே ஒருவர் இவர்தான் :)

*

சோகத்தில் இருக்கும்போது சோகப்படுத்துனவங்களை விட, சோகப் பாட்டு போட்டு கொல்லுறவங்க மேலதான் கொலவெறி வருது!

*

ஈரோடு டாஸ்மாக் - புரட்சி திட்டம் - ஹோம் டெலிவரி
# அதெல்லாம் சரிய்யா.... டெலிவரி சரக்கா? மட்டையாகுற ஆளா?

*

கரகாட்டம் ஆடும் பெண்ணின் ரவிக்கையில், பணம் குத்துற ஈனத்தனமா நுட்பத்தை இன்னும்கூட கடைப் பிடிக்கிறாங்கப்பா #வல்லரசாயிடுவோம்யா :(

*

"உங்க கவிதை புரியவே மாட்டேங்குது" என்றார் வருத்தமாக. "ஆமாங்க அந்தக் கருமம் எனக்கும்தான் புரியறதில்லை" என்றேன். சந்தோசமாகப் போனார் :)

*

ஏப்ரல் 1 - நம்மை ஏமாற்றும் குழந்தைகள் ஏமாறாமலிருக்க ஏமாந்தது போல் நடித்து ஏமாற்றுகிறோம் # இருவருக்கும் வெற்றி :)

*


3 comments:

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in

குரங்குபெடல் said...

நன்றாக இருந்தன . .

பகிர்வுக்கு நன்றி

arul said...

nice post