காடுகளை அழித்து ஆறுகளைக் கொன்று நிலங்களை மலடாக்கி நீரைக்கெடுத்து காற்றைக்கெடுத்து, மனித இனம் இன்று எட்டியிருக்கும் சாதனை தன்னை 700 கோடியாக உயர்த்திக்கொண்டது மட்டுமே!
***
சிலைக்கு மாலையிடுவதற்கு சிலையாய் நிற்பவரின்மேல் இருக்கும் மரியாதை மட்டும் காரணமில்லை, தானும் இருக்கிறேனென்று அடையாளப்படுத்தலும்தான்.
***
சிலரால் மட்டும் எப்படி இத்தனை அன்பாகவும், அக்கரையாகவும் இருக்க முடிகிறது. ஆச்சரியமாகவும், பொறாமையாகவும் இருக்கின்றது.
***
இருள் நிரந்தரம், அவ்வப்போது.... ஒளி வந்துபோகிறது!
***
நச்சை வாயிலே கொணர்ந்து நண்பரூட்டு போதினும் அச்சமில்லை அச்சமில்லை - பாரதி
# பாரதி வாழ்ந்தபோதே இந்தியாவுக்கு Pepsi & Coke வந்துடுச்சுபோல!
# பாரதி வாழ்ந்தபோதே இந்தியாவுக்கு Pepsi & Coke வந்துடுச்சுபோல!
***
ஒன்றிற்கு அடிமையானபின், அடிமையாய் இருப்பதில் உணரும் சுகமே(!), அந்த அடிமைத்தனத்தை நீட்டித்து வைத்திருக்கிறது.
***
ஓரிரு மாத உணவுக் கட்டுப்பாடு, ஓரிரு நாட்களில் சிதைந்து போகிறது #விதி வலியது
***
மழைக்கால நாட்கள் குளுமையை, இனிமையை மட்டும் கொண்டுவருவதில்லை, ”இங்க செம மழை, கொஞ்சம் லேட்டாகும்“ எனும் பொய்க்கான வாய்ப்பையும் தருகிறது :)
***
இரண்டு முறை வாசிக்கப் பிடிப்பதில்லை என்பது போலவே, இரண்டு முறை எழுதவும் பிடிப்பதில்லை, மனதிற்குள் எழுதி மீண்டும் எழுதிட! ஆனாலும் எழுதுகிறேன் # இதுதான் வாழ்க்கை :)
***
உணவு பணவீக்கம் 10.6% இருக்கும் நாட்டில்தான் ரூ.32 சம்பாதிக்கிறவன் வறுமைக்கோட்டைத் தாண்டி நகரத்தில் வளமாய் வாழ்கிறான் #இந்தியா :(
***
மியூஸிக் சானல்களில் யார் போன் பண்ணினாலும் கெக்கபிக்கனு சிரிக்கிற மாதிரியே எல்லோரும் சிரிச்சுப் பேசினா எப்படிய்ய்ய்யிருக்கும்!?
***
எப்படியோ போகட்டும் எனக்கென்ன என, கடந்துபோக முடியாத ஆட்கள் பலருக்கு கோமாளிகளாவும், உண்மையில் மாற்றத்தின் முதற்புள்ளியாகவும் இருக்கின்றனர்
***
எல்லாத் திருப்பங்களும் இடதுபக்கம் மட்டுமே இருப்பின் விபத்துகள் குறைந்து போயிருக்குமோ!?
***
ஆரவாரமாய்த் தேர்ந்தெடுக்கும் அருமைக்குரிய ஆட்சியாளர்களிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடாது என்பதுதான் அதிகம் இருக்கிறது
***
”ஏய்... நேரமாச்சு எழுந்திரு!” என குழந்தைகளை எழுப்புவதில் தொடங்குகின்றன அன்றைய பொய்கள்! :)
***
இங்கே கிறுக்குபவை முழுக்க முழுக்க என்னுடையது, எனக்கானது மட்டுமே அல்ல, அதே சமயம் உங்களுக்கானது மட்டுமே அல்ல # புரியலையா!? அட... எனக்கும்தான்!!! டோண்ட் வொரி, ப்பீ ஹேப்பி! :)
***
கொசு மருந்தைக் கண்டுபிடிச்சது, யாரா வேணா இருக்கலாமுங்க, ஆனா வீதியில மருந்தடிச்சு வீட்டுக்குள்ளே கொசுவை அனுப்புற தில்லாலங்கடி வித்தையைக் கண்டுபிடிச்சது நம்ம ஊரு முனிசிபாலிட்டி விஞ்ஞானிங்கதான்
***
எதன்மேல் கள்ளத்தனமான ஆர்வம், பாசம் வருகிறதோ, அது உரிமையற்றதாகவே இருக்கின்றது.
***
தோல்வி திணிக்கும் விரக்தியின் விளிம்பில் தள்ளாடும்போது, யார் எது பேசினாலும் அது அடங்க மறுக்கும் கோபத்தையே திணிக்கிறது!
***
இணையக்கடலில் நீச்சல் அடிக்கலாம்னுதான் போறோம்... ஆனால், கொடுமை என்னன்னா.... மூழ்கிப்போய்டுறோம் #உன்னைப்போல் ஒருவன்! :)
***
எட்ட முடியாததின் மேல் ஏக்கம் கூடுவதுதான் வாழ்க்கையின் விந்தை!
***
நண்பர்களின் மனைவிகள் நட்பாவதைவிட தோழிகளின் கணவர்கள் நட்பாவதில் ஏதோ மனத் தடங்கல் இருக்கிறது
***
நண்பர்களோடு வாக்கு வாதம் செய்யும்போது அந்த கணத்தில் நட்பு தொலைந்து, ஏதோ ஒரு இனம் புரியா பகை நிரம்பிக் கொ’ல்’கிறது!
***
9 comments:
நன்று. தொடருங்கள்.
எல்லாமே நல்லாருக்கு..
க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))
//இணையக்கடலில் நீச்சல் அடிக்கலாம்னுதான் போறோம்... ஆனால், கொடுமை என்னன்னா.... மூழ்கிப்போய்டுறோம் //
அட்டகாசம். இது நம்ம எல்லாருக்குமே பொருந்தும் :)
அன்பின் கதிர் - அனைத்தும் அருமை. நன்று நன்று -
//நண்பர்களோடு வாக்கு வாதம் செய்யும்போது அந்த கணத்தில் நட்பு தொலைந்து, ஏதோ ஒரு இனம் புரியா பகை நிரம்பிக் கொ’ல்’கிறது!//
சூப்பர் கதிர் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
1964 லிலேயே வீட்டுக்கு வந்தவங்கள காபி குடிக்கக்கிரிகளா இல்லா பெண்ட குடிக்கக்கிரிகளா அப்படின்னு கேப்பாங்க அப்படினா அப்போவே பெப்சி கொக்க கோலா, பெண்ட இருந்துதில்ல
அதென்ன மகா மொக்கை. மழை நாளின் பொய், காலை நேர பொய், தன்னை முன்னிலைப் படுத்த சிலைக்கு மரியாதை , சிதைந்து போகும் உணவுக் கட்டுப்பாடு போன்று எல்லாமே நல்லாவே இருக்கு.
வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
எல்லாமே நல்லாருக்கு..
Post a Comment