யாருமே சந்திக்காத வலியையோ, யாருமே பார்த்திராத அவமானத்தையோ... இன்னும் நாமெல்லாம் சந்தித்துவிடவில்லை.. #போடா போடா சூனாபானா
***
சில நம்பிக்கைகளை அழிக்க முடிவதில்லை!
***
சுயநலம் தொலைந்து போனால் பைத்தியம் பிடித்துவிடும்.
***
உடன்பாடில்லையெனின் எளிதாய் ஒதுங்கிக்கொள்ளும், துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதையறிந்தும் அடித்துக்கொ’ல்’கிறோம் இணைய(வெட்டி)வாதங்களில்
***
Send-ல் எந்த T வரும் எனப் போராடும் தமிழன் ”வழி” என்பதை ’வலி’ (அ) ’வளி’ என்று எழுதுவதில் கிஞ்சித்தும் வெட்கப்படுவதில்லை!
***
விரல்தொட்டு அழிப்பதன் மூலம் மட்டுமே சிலந்தி வலைகளின் உருவாக்கத்தை நிறுத்திவிட முடியாது
***
காந்தி பிறந்ததற்கு வெள்ளைக்காரன் கவலைப்பட்டானானு தெரியல, ஆனால் இந்தியக் குடிமகன்கள் இப்போது பெருங்கவலையில் #oct 2
***
தினசரி 200 SMS மட்டுமேனு லிமிட் பண்ணினமாதிரி, இனிமே ஒரு நாளைக்கு இவ்ளோதான் லஞ்சம்/இவ்ளோதான் சரக்கு/இவ்ளோதான் ஊழல்னு லிமிட் பண்ணுவாங்களோ
***
அதீத பசியிலும், அடங்கிய பசியிலும் ருசி பிரதானப்படுவதில்லை.
***
பிரியம் வழியும் மனிதர்களைச் சந்திக்கும்போதும், அவர்கள் குறித்த நினைவுகளை மீட்டும்போது, பிடித்த ஒரு மலரின் சுகந்தத்தை உணரமுடிகிறது***
தப்புத்தப்பாக தமிழில் எழுதுறதுக்கு எதுக்கு, அழகுத்தமிழில் புனைப்பெயர், பேசாம அதை பூனைப்பெயர்னு வெச்சுக்கலாமே #பூனையார் மன்னிப்பாராக!
***
ஒன்னு தெளிவாப்புரியுது, உலகத்துல பாதிப்பேர் சந்தோசமா இல்ல, மீதிப்பேர் வருத்தமா இருக்காங்க! :)
***
உமிழவேண்டியது என தீர்மானிக்கும்போதே பந்தம் அறுந்துபோகிறது எச்சிலோடு, அது உள்ளுக்குள்ளேயே இருந்தாலும்.
***
நட்பின் தேவைகளில் அதிமுக்கியமாய் இருப்பது ”நம்பிக்கை” மட்டுமே!
***
அப்பா(ம்மா) ஆவதில் இளமை(!) தொலைவதில்லை. இளைய சகோதர உறவுகளுக்கு குழந்தை பிறந்து பெரியப்பா(ம்மா) ஆகும் போது இளமை புட்டுக்கிட்டுப் போய்டுது
***
சிம்கார்டுபோல் அவ்வப்போது மனதை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பிருந்தால் எப்படியிருக்கும் #பாதி நேரம் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்குமோ!?
***
திட்டமிட்டு உருவாக்கும் தனிமையில் ஒருவித மயான அமைதி வேண்டுமானால் கிடைக்கலாம், தனிமை அதற்கான தனித்துவத்துடன் கிடைப்பதில்லை.
***
வானவில் போல் வர்ணங்களை போர்த்தியிருக்கின்றன வாரநாட்கள், அதில் ஞாயிற்றுகிழமை கொஞ்சம் கூடுதல் அழகாய்!
***
பிரியமானவர்களிடமிருந்து வரும் கடிதங்களின் உறைகளைப் பிரிக்கும் அவசரம் அழகியலைத் தொலைத்துவிடுகிறது!
***
கற்றுக்கொள்வதின் சுகம் சிலநேரங்களில் அதீதமானது!
***
ஒருவனுக்கு மகிழ்ச்சியெனில் ”ஏன் மகிழ்ச்சி?” துக்கமெனில் ”ஏன் துக்கம்?” என கேள்விகளால் துளைக்கும் உலகத்தின் தேவை காரணங்கள்தான், உணர்வுகளல்ல
***
உலகின் சூனியம் மிகு பெருமிருகம் மனிதனே. #என்ன ஒன்னு…. பயபுள்ள அதமட்டும் ஒத்துக்கிறதில்ல :)
***
உற்சாக விடியலில் சந்திக்கும் எல்லாருக்கும், அலைபேசி இணைய பட்டியலில் பரிச்சயம் மிகுந்தோருக்கும் “காலை வணக்கம்” பகிரத் தோன்றுகிறது #மாய மனசு
***
மற்றவர்களுக்குச் சொல்லும் அறிவுரை, நம்மிடம் பகிரப்படும் காதல்போல் தித்திப்பானது :)
8 comments:
அன்பின் கதிர் -அருமை அருமை - அத்தனையும் அருமை உண்மையும் கூட - சிந்தனை நன்று.
உடன்பாடில்லையெனின் எளிதாய் ஒதுங்கிக்கொள்ளும், துண்டித்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதையறிந்தும் அடித்துக்கொ’ல்’கிறோம் இணைய(வெட்டி)வாதங்களில்
Send-ல் எந்த T வரும் எனப் போராடும் தமிழன் ”வழி” என்பதை ’வலி’ (அ) ’வளி’ என்று எழுதுவதில் கிஞ்சித்தும் வெட்கப்படுவதில்லை!
நட்பின் தேவைகளில் அதிமுக்கியமாய் இருப்பது ”நம்பிக்கை” மட்டுமே!
அப்பா(ம்மா) ஆவதில் இளமை(!) தொலைவதில்லை. இளைய சகோதர உறவுகளுக்கு குழந்தை பிறந்து பெரியப்பா(ம்மா) ஆகும் போது இளமை புட்டுக்கிட்டுப் போய்டுது
இதெல்லாம் எனக்குப் பிடித்தது - இளைய இணைய சகோதரர்களுக்கு குழந்தை பிறந்தால் நனெல்லாம் பெரியப்பா தானே - இளமையான பெரியப்பா தானே !
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அத்தனையும் அருமை...
அண்ணா!!! தெய்வமே!! காலக் காட்டுங்கண்ணா!!! எந்த மரத்தடி கீழ இருந்து தோணுனதுங்ணா:))))
/கற்றுக்கொள்வதின் சுகம் சிலநேரங்களில் அதீதமானது!/
எனக்குப் பிடிச்சது!
அப்றம் எல்லாமே நீங்க எழுதுனதா??இல்லே மண்டபத்துலே எழுதி வாங்கினதா???:)
//காலக் காட்டுங்கண்ணா!!! எந்த மரத்தடி கீழ இருந்து தோணுனதுங்ணா:))))//
அத்தானுங்ணா... நானும் ஒரு தபா தொட்டு கும்பிட்டுகிறனுங் சாமீ..
அனைத்தும் நன்று:)!
அனுபவிச்சவங்க மட்டுமே தத்துவம் பொழிய முடியும். ரொம்ப வலிக்குதோ மேயரே! :-))
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்த வரிகள் தான் என் மேசையில் வைத்துள்ளேன். நன்றி நன்றி நன்றி
Post a Comment