விரிந்துபரந்து நீண்டு கிடக்கும் தமிழக கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதி அது. ஆசனூரிலிருந்து கொள்ளேகால் செல்லும் வழியில் இருக்கிறது உடையார்பாளையா! இந்திய வரலாற்றில் குறிப்பிடும்படியானதொரு இடம், ஆனால் அவ்வளவாக இந்தியர்களுக்கு அடையாளம் தெரியாத இடம் அது.
தமிழகத்தின் கேர்மாளாம் வனச்சோதனைச் சாவடி தாண்டியதிலிருந்து மிக மோசமான சாலை கடும் சவாலைக் கொடுத்தது. குத்தும் கூரான கற்களை ஒரு வழியாய் சமாளித்து உடையார்பாளையாவை (கர்நாடகா மாநிலம்) எட்டும்போது அந்தப் பகுதியில் சாலை புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
திபெத் அகதிகளுக்கென இந்திய அரசாங்கம் அளித்திருக்கும் (இராஜ) வாழ்க்கை குறித்த அளவெடுக்கும் கண்களோடு அந்த இடத்தை அடைந்த போது ஆச்சரியத்தில் மனம் தடுமாறியது. திபெத்திலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த திபெத்திய அகதிகளுக்கு, அந்தப் பகுதியில் 23 கிராமங்களில் எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்து மத்திய அரசாங்கம் பாதுகாத்து வருகிறது என்பதுதான் ஆச்சரியம்.
முதன்மையாய் இருக்கும் ஒரு உயர்ந்த கிராமத்தை நோக்கி எங்கள் வாகனம் மெதுவாய் ஊர்ந்து கொண்டிருக்கும்போது, இரண்டு சக்கர வாகனங்களில் எதிர்திசையிலிருந்து பறக்கும் திபெத்திய இளைஞர்களைப் பார்க்கும்போது இது இந்தியா தானா!? என்ற கேள்வி மூளைக்குள் குடைந்தெடுக்கிறது. ஈழத்து மக்களுக்காக இந்த தேசம் அமைத்துக் கொடுத்திருக்கும் முகாம்கள் குறித்த கோபம் கொதிக்கிறது.
ஒருவழியாய் அந்த கிராமத்தின் மையத்திற்கு வர, எதோ அவர்களுக்கான முப்பது நாள் வழிபாடு விழா நடப்பதை அறிய முடிகிறது. எங்கு நோக்கினும் திபெத்தியக் கொடிகள், அவர்கள் தேர்தலுக்கான சுவரொட்டிகள், தகுதி நிறைந்த கல்விக்கூடங்கள், வசதி நிறைந்த மருத்துவமனை, பெரிய வழிபாட்டுக்கூடம், கூடி மகிழ சமுதாயக்கூடம், விளையாட அழகிய மைதானம் என எல்லாமே திபெத்தில் இருக்கும் சூழல் நம்மை ஆட்கொ’ல்’கிறது.
திபெத்திலிருந்து அகதிகளாக வந்த அவர்களுக்கு நல்ல சூழலில் மலைப்பிரதேசம் போன்று இடம் வழங்கி, அவர்களுக்கு நிலம் வழங்கி மிகக் கௌரவமான அளவில் குடியமர்த்திருக்கின்றது. வேதனை நிறைந்த வேடிக்கை என்னவெனில், திபெத்தியர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் இந்திய தேசத்தின் மதிப்புமிகு வாக்காளன், குடிமகனான தமிழக, கர்நாடக மக்கள் கூலிகளாக வேலைசெய்து பிழைக்கிறார்கள் என்பதுதான்.
காலம்காலமாக இந்திய மண்ணில் வாழ்ந்து வருபவனுக்குக்கூட சொந்த நிலமின்றி, அகதியாக இங்கே வந்தவர்களிடம் கூலிக்கு வேலைக்கு செல்வதின் முரண் எனக்குப் புரிபடவேயில்லை. ஒரு கண்ணில் வெண்ணை மறு கண்ணில் சுண்ணாம்பு என இருக்கும் இந்த தேசம் குறித்த வெகுண்ட மனதோடு அங்கே கொஞ்சம் சுற்றிப்பார்க்க ஆரம்பித்தோம்.
திபெத்தியப் பெண்கள் ஆங்காங்கே கடை விரித்திருக்கின்றனர். நம்மை மிக சிநேகமாக எதிர்கொள்கின்றனர். தங்கள் சமூக பண்டிகையை ஒட்டி கையில் ஒரு கையில் மாலையை ஏந்தி எந்நேரமும் பிரார்த்தனையில் இருக்கின்றனர்.
கன்னடம் பேசும் ஒரு பெண்மணி காய்கறிக்கடை வைத்திருக்கிறார். பேச்சுக்கொடுக்கும் போது, கீழே ஊர்ப்பக்கம் இருந்து காலையில் வந்து விற்றுவிட்டு மாலை திரும்புவதாகச் சொன்னார். கன்னடமும், திபெத்தியர்களுக்காக இந்தியும் மிக இயல்பாகப் பேசுகிறார்.
இதுவரை ஒரு முறைகூட வந்திராதா தலாய்லாமாவிற்காக, எப்போதாவது வந்தால் தங்குவதற்கென அற்புதமான ஒரு குடியிருப்பு கட்டி வைத்துள்ளனர். எப்போதாவது வருவாரா அல்லது எப்போதுமே அந்த குடியிருப்பு அப்படியேதான் கிடக்குமா எனும் சந்தேகத்தைத் தவிர்க்க முடியவில்லை.
துறவு நிலை மேற்கொண்ட சிறுவர்கள் மஞ்சள் அடர்சிவப்பு ஆடையில் ஆங்காங்கே புழங்கிக்கொண்டிருக்கின்றனர். அங்கிங்கென சுற்றிவிட்டு ஓரிடத்தில் அமர்கையில், அழகாய் தமிழ்ப் பேசும் திபெத்திய பெண்மணி கிடைத்தார். நீண்ட நாட்கள் புதுவையில் இருந்ததால் மிக இயல்பாக தமிழில் உரையாடுகிறார்.
மேலும் சிறிது நேரத்தைக் கடத்திவிட்டு, திபெத்திலிருந்து இந்தியாவிற்குள் திரும்ப ஆரம்பித்தோம். அன்று முதல் இன்றுவரை மனதைச் சமாதானப்படுத்திக்கொள்ள எந்தவொரு பொருத்தமான வார்த்தைகளும் கிடைக்கவில்லை.
~/\~
24.11.2008-ல் பதிவுலகத்திற்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து நான்காம் ஆண்டில் நகரும் இந்த நாளில், இதுவரை இணைய எழுத்துமூலம் ஈட்டிய அனைத்து நட்புள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
~/\~
29 comments:
மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.
மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்..
Ramesh
Erode
மூன்றாண்டு நிறைவிற்கு வாழ்த்துகள் கதிர் ஸார்.
எங்கிருந்தோ வந்த திபெத் அகதிகளுக்கு காட்டிய சலுகையில் 1சதவிகிதம் ஈழ அகதிகள் முகாமுக்கு காட்டலாம். தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, திபெத்தியருக்கு டெல்லியில் கடை வைக்கவும், உயர்கல்வி பயிலவும் ஏராளமான உதவிகளை மத்திய அரசு செய்துவருகிறது.
மூன்றாண்டு நிறைவுக்கும் நான்காம் ஆண்டில் மேலும் சிறப்பாகச் செயலாற்றவும் வாழ்த்துக்கள்.
இந்தத் திபெத்தியக் குடியிருப்புக்குச் சென்றிருக்கிறேன். எடுத்த சிலபடங்களும் பதிவில் குறிப்புகளுடன் பகிர்ந்துள்ளேன். ஆனால் இத்தனை விவரமாக இப்போதுதான் அறிகிறேன். நல்ல பகிர்வு. ஈழமக்களுக்கு இதைச் செய்ய முடியாதது வேதனையே.
புதிய தகவல்
மூன்றாண்டு நிறைவிற்கு வாழ்த்துகள்
மூன்றாம் ஆண்டிக்கு வாழ்த்துக்கள்.
இனியும் கவிதைகள் தொடருமா என்கிற பயத்துடன் நான்காம் ஆண்டில் தொடருகிறோம்...பார்த்து செய்ங்க எஜமான்.
இந்த பதிவு மிகவும் ஆபாசமாக உள்ளது.
ஈழத்தில் ஏது மனிதர்கள்..?
எதற்கு அவைகளுக்கு உலக வல்லரசு பொந்தியா உதவ வேண்டும்?
வாழ்த்துக்கள் அண்ணா!!!தமிழகதமிழர்களே இந்தியாவிற்க்கு மாற்றாந்தாரத்து பிள்ளைத்தானே அதில் ஈழத்து தமிழர்கள் மூன்றாம் தாரத்து? பிள்ளையை கவனிக்காததில் ஆச்சரியமில்லை !!!
மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.
நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துகள்.ஆசனூர் வழியாகத்தான் 15 ஆண்டுகளாக போய் வந்து இருக்கிறோம்.
இப்படி ஒரு ஊர் இருப்பதே தெரியாது.
ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்பது இதுதானோ?
நம்ம கலர் அப்படி தல :-((((
வாழ்த்துக்கள் கதிர்..
இந்த கட்டுரைக்கு அப்புறம் தொலைக்காட்சி சேனல்கள் இந்த பகுதிக்கு படம்பிடிக்க போகும்..
all the credit goes to kathir..
திபெத்தியன் இந்தி பேசுவான். ஈழத்தமிழன் பேசுவானா சார்??
நல்ல பகிர்வு.. படிக்கும்போதே பொங்கி பொங்கி வருகிறது ஆற்றாமையும் பாரபட்சம் காட்டும் அரசின் மீதான வெறுப்பும்..
மூன்றாமாண்டிற்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்..
வாழ்த்துக்கள் கதிர்.
வாழ்த்துக்கள்!!!
இந்த மூன்றாமாண்டில் உங்களை வாழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி...
திபெந்திந்தியா.... படிக்கும் போதே ஈழத்தமிழ் அகதிகள் முகாம் நினைவுக்கு வந்து வேதனைப்படுத்துகிறது...
வாழ்த்துக்கள் அண்ணா...
காலம் செல்வது தெரியவேயில்லை...
இன்னும் பல ஆண்டுகள் எழுத்துலகில் நீடிக்க வாழ்த்துக்கள்
நன்றி @ பாலாண்ணே
நன்றி @ Ramesh
நன்றி @ கும்மாச்சி
@ கழுதையின் கேள்விகள்
இந்திய மக்களுக்கே கூட இல்லை!
நன்றி @ ராமலக்ஷ்மி
நீங்கள் சென்றது குஷால்நகர் தானே!?
நன்றி @ நீச்சல்காரன்
நன்றி @ கும்க்கி
விதிவலியது
நன்றி @ இனியவன் என்றும்.
ஆமாங்க! :(
நன்றி @ Venkat
நன்றி @ KSGOA
உடையார்பாளையாவிலேயே நிறைய திபெத்தியர் சுத்துகின்றனரே!
@ கார்த்திக்
அதுவும் செரிதான் :)
நன்றி @ காவேரிகணேஷ்
ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள். ஒரு சுற்றுலாத்தளம் போல் வேண்டுமானால் காட்டலாம் :(
@ முகிலன்
ஆமாம் முகிலன் :(
நன்றி @ க.பாலாசி
அரசின் மீதான வெறுப்ப்புக்கு இதுபோல் எத்தனையோ :(
நன்றி @ Mahi_Granny
நன்றி @ ஈஸ்வரி
நன்றி @ gowri
நன்றி @ அகல்விளக்கு
நன்றி @ ஷர்புதீன்
இனிய வாழ்த்துகள்.
கட்டுரைக்கும்.
Nice & congrats.
நன்றி @ manjoorraja
நன்றி # ஓலை
நன்றி @ Prabu Krishna
வலைச்சரம் வாசித்தேன். மிக்க நன்றி!
கதிர்,
அண்டை நாடானா இந்தியா யாருக்கு என்ன செய்தால் நமக்கென்ன?
நாமெல்லாம் தமிழ் நாட்டுக்காரய்ங்க தானே!
//பிரிட்டிஷார் இந்தியாவை விட்டுச் செல்லும்போது கூட இந்தியாவை தனித்தனி தேசங்களாகவே விட்டுச் சென்றார்கள்.இந்தியாவின் எந்த தேசத்துக்கும் தனி நாடாகப் போகும் உரிமை உண்டு என்ற நிபந்தனையை வைத்தே அதிகாரத்தைக் கொடுத்தார்கள்.//
இப்படி தனி தேசமாகவே இருந்திருக்காலாமோ?
மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள்.
இந்தியன்னா உலகத்தில் மரியாதை இல்லை.....தமிழன்னா இந்தியாவில மரியாதை இல்லை -----உண்மை தான் போல
மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் தல
மூன்றாண்டு நிறைவுக்கு வாழ்த்துகள் சார்.
இந்த தகவலை படித்தேன் மிகவும் வேதனையாக உள்ளதுசார்.தமிழனின் தலைவிதியை தமிழனே தீர்மானிக்கும் காலம் வந்தால்தான் இந்த நிலை மாரும்.
It is true. As a people we Tamils are not focused as a unique group. We fight among us and loss focus .. we have to sensitize ourselves .. should have arrangements to repair our internal problems.. and project outwardly as a one group..let us hope for the best!
Post a Comment