Nov 14, 2011

தழும்புகள்




 


பிறரின்
காதல் குறித்து
கதை கேட்கும் ஆர்வத்தில்
மீண்டெழுந்து வருகிறது
தொலைந்த காதலின்
எஞ்சிய வாசனை!



~0~

வாழ்ந்து தீர்ப்பதைவிட
வசதியாகவும் சுகமாகவும்
இருக்கின்றது...
நினைவுச் சிறகில்
அப்பிக்கிடக்கும் காதலை
இதமாய் கோதிப்பார்க்க!

 


~0~
-

5 comments:

KSGOA said...

\\நினைவுச் சிறகில் அப்பிக்கிடக்கும்
காதலை இதமாய் கோதிப்பார்க்க//
நல்லா இருக்குங்க.

Anonymous said...

பிறரிடம் கதை கேட்கும் ஆர்வமே நினைவுகளை இதமாய் மீட்டிப் பார்க்கத்தானோ

நாடோடி இலக்கியன் said...

எஞ்சிய வாசனையை ர‌சித்தேன்..

க.பாலாசி said...

எஞ்சிய வாசனைதான் இம்சை...

நல்ல கவிதை...

Unknown said...

செம.....மலரும் நினைவுகளால் அழகான கோர்க்கப்பட்ட கவிதைகள்...

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...