வினை




சொகுசுக் காரின்

பளபளக்கும்
பக்கவாட்டுக்
கண்ணாடியில்

அழகு பார்க்கும்

அழுக்குப் பிள்ளையை

விரட்டுகையில்



முகப்பு விளக்கருகே

கால்தூக்கி

மூத்திரம் பாய்ச்சுகிறது

தெருநாயொன்று!


-()-


ஈட்டிய களிப்பில்
மாலைகள் சுமக்கும்  

ஓங்கி நிற்கும்
கட்
-அவுட்நோக்கி
காறி உமிழ்கிறான்
தான் புழங்கிய இடத்தின்
ஆக்கிரமிப்பைச் சகிக்காத
மனம் பிறழ்ந்தவன்!
 

10 comments:

பழமைபேசி said...

மறுபக்கம் ஆய்ந்து பார்த்தால் இப்படியான பல உண்மைகள் வெளிவரும். அகம்பாவம் அடங்கிப் போகும். ஒரு தெளிவு பிறக்கும்.

Shanmugam Rajamanickam said...

வாவ் சிந்திக்க வைக்கின்றன உங்கள் வரிகள்..

Kayathri said...

நல்ல வரிகள் தோழரே..சிந்திக்க வேண்டியவைதான்..

'பரிவை' சே.குமார் said...

அருமை... இரண்டும் எதார்த்தம் நிறைந்த அருமையான கவிதை... வாழ்த்துக்கள்.

சே.குமார்
மனசு

vasu balaji said...

வினையும் எதிர்வினையும் அபாரம்

settaikkaran said...

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் - தூள்!

ஹேமா said...

கதிர்...முகத்திலறைகிறது இரண்டு எண்ணங்களும் !

நாடோடி இலக்கியன் said...

அருமை..அருமை..அருமை..

Unknown said...

சொல்லாடல் நன்று கதிரே .. !

Unknown said...

அண்ணா அருமைங்க !