போகிறபோக்கில்... சில விநாடிகள்தேர்தல் மற்றும் திருவிழா நெருங்கும் நேரத்துப் பரபரப்பு சாலைகளில். எட்டு மணிக்கு மேல் இருக்கும். பெரும்பாலான நபர்கள் நான்கு சாலைப் பிரிவில் பரபரப்பாய் போக்குவரத்தை சீர்படுத்திக்கொண்டிருக்கிறார் அந்த காவல் ஆய்வாளர். வர்ணம் மாறும் சமிஞ்சை விளக்குகளுக்கு ஏற்ப வாகனங்களை நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அவர் உடையைப் பார்த்தபோது, அவர் போக்குவரத்துக் காவல்துறை ஆய்வாளராக இருப்பார் எனத் தோன்றவில்லை. அந்த எல்லைக்குள் வரும் காவல் நிலைய ஆய்வாளராக இருக்கலாம். சாலையின் திருப்பங்களில் மற்ற காவலர்கள் நின்று கொண்டிருந்தனர்.

pic : girithar sathyanarayanan

கொஞ்சம் போக்குவரத்து சீரடைந்த நிலையில் சாலையில் மையத்திலிருந்து நகர்ந்து, ஓரத்திற்கு கடக்க முற்பட்டார். அந்தச் சாலையில் பச்சை விளக்கு எரிந்துகொண்டிருந்ததால் வாகனங்கள் சீறிக் கொண்டிருந்தன. என்ன அவசரமோ தெரியவில்லை. வாகனங்களுக்கு இடையில் புகுந்து ஓரத்திற்கு நகர முற்பட்டார். நேர்த்தியாய் கடக்கமுயன்றவரை அருகில் வந்தபோதுதான் அந்த இருசக்கர வாகன ஓட்டி கவனித்திருக்க வேண்டும். அந்த ஆய்வாளர் மிக லாகவாமாக முதுகு தலையை பின்னால் வளைத்து, இடுப்பு, மற்றும் கால்களை முன்பக்கம் வளைத்து இடிபடுவதிலிருந்து தப்பிக்க முனைந்தார். வேகத்தைக் கட்டுப்படுத்தியும், கொஞ்சம் ஒதுங்கியும் கூட தவிர்க்க முடியாமல் அவரின் பின்பக்கம் உரசிக் கடந்தது. அந்த இருசக்கர வாகனம். அதைக் கவனித்த அந்தச் சாலையின் முகப்பில் இருந்த காவலர் அந்த இரு சக்கர ஓட்டியை மடக்க முற்பட்டார்.

சட்டென நேராக நிமிர்ந்த ஆய்வாளார், அவரைப் பார்த்துக் கொண்டிருந்த வாகனஓட்டிகளைப் பார்த்து பெரிதாக புன்னகைத்துவிட்டு ஓரத்திற்கு நகர்ந்த அதேநேரம், தன்னை உரசிக் கடந்த இருசக்கர வாகனத்தை மடக்க முற்பட்ட காவலரைப் கவனித்தவர், “ஏ.....ஏ... விடப்பா….! நாந்தானே குறுக்க வந்துட்டேன்… நீங்க போங்க சார்” என்றார் சத்தமாக!. எல்லாம் சில விநாடிகளில்...

---- ***** ----

பாதாளச் சாக்கடைக்கு தோண்டி மூடியதில் குத்துயிரும் குலையுயிருமாகக் கிடக்கிறது அந்த வீதி. தொலைந்து போன மின்சாரம் அந்தப்பகுதி முழுதும் இருட்டை நிரப்பி வைத்திருந்தது. மின்சாரம் தொலைந்தால் மட்டுமே வீட்டு வாசற்படிகளில் அமர இயலும் மனித சமூகம் விதவிதமான வடிவங்களில் வீட்டு வாசற்படிகளிலும், வீதியோரத்திலும் தெரிந்தன. அதிசயமாய் குழந்தைகள் அந்த இருட்டிலும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஒரு வீட்டின் வாசற்படி நிலவுகால்மேல் ஒரு காலை மடக்கி அமர்ந்தவாறு ஒரு காகிதத்தை பரப்பி, கைபேசி முகப்பு விளக்கு வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தார் சேலையணிந்திருந்த ஒரு பெண். அருகில் கடக்கும்போது தெரிந்தது அது ஒரு கட்சி வேட்பாளரின் தேர்தல் வாக்குறுதி விளம்பரத்தாள் என்று. அந்தக் கட்சியின் அபிமானியா இருப்பாரோ என நினைத்துக்கொண்டேன். ஒருவேளை இதுபோல் வாசிக்க, அந்த வீட்டுத் தொலைக்காட்சி அல்லது வீட்டு வேலைகள்(மனிதர்கள்) இதுபோன்ற சூழலில்தான் அனுமதிக்குமோ எனவும் தோன்றியது

ஆனாலும்… அந்த சில விநாடிகளில்....
அந்த இருளும், நெலவுகால்மேல் ஒரு கால் மடக்கியவாறு அமர்ந்து, குனிந்தவாறு குவிந்த வெளிச்சத்தில் படித்துக்கொண்டிருந்த காட்சி, ஒரு ஓவியன் கண்ணில் பட்டிருக்குமேயானால் மிக அழகிய காட்சிப்படுத்தலாக அமைந்திருந்திருக்கும். நீண்ட நேரம் இருளில் மிதந்த அந்தக் காட்சி, மனதிற்குள்ளும் நெடுநேரம் மிதந்துகொண்டேயிருந்தது.

---- ***** ---- 

15 comments:

வானம்பாடிகள் said...

ரோட்ல போனா போனமா வந்தமான்னு இருக்கணும். அதென்ன பராக்கு பாக்கறது:))

க.பாலாசி said...

அவ்ளோதானா... நாங்கூட நறையா இருக்கும்னு பாத்தேன்...

பரவால்ல நல்ல போலீஸ்...

குத்தவைச்சிருந்த மனுஷனுக்குதான தெரியும் அந்த நேரத்து எரிச்சல்...

பழமைபேசி said...

//கருத்துக்கள்//

கருத்துகள்!

இங்க கருவும் இல்லை, மருவும் இல்லை. மறுமொழி அல்லது பின்னூட்டம்தான் இருக்கு!!

jalli said...

sari, antha oviyam aana,penna?

Anonymous said...

அந்த சூழ்நிலையை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்..
//மின்சாரம் தொலைந்தால் மட்டுமே வீட்டு வாசற்படிகளில் அமர இயலும் மனித சமூகம் விதவிதமான வடிவங்களில் வீட்டு வாசற்படிகளிலும், வீதியோரத்திலும் தெரிந்தன. அதிசயமாய் குழந்தைகள் அந்த இருட்டிலும் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.//

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - பராக்குப் பார்த்த போது க்ண்ணில பட்ட சில நிமிட நிக்ழ்வுகளை வைத்து ஒரு இடுகை தேத்தியாச்சு - பலே பலே - சரி வர 19,தேதி புதன்கிழமை சந்திப்போம் - நல்வாழ்த்துகள் கதிர் - நட்புடன் சீனா

ஓலை said...

"ஒரு இடுகை தேத்தியாச்சு" மேயர sir தாக்குற மாதிரி இருக்கு. :-))

அப்புறம் டன் டன்னா சரக்க விடுவாரு. :-))

தெய்வசுகந்தி said...

நாங்களும் கூடவே வந்து பராக்கு பாத்த மாதிரி இருக்குதுங்க!!!

KSGOA said...

நல்லா இருக்குங்க.பூங்கொத்து.

ஸ்ரீராம். said...

இருட்டில் தேர்தல் அறிவிப்புப் படிக்கும் பெண் பற்றிய வர்ணனைகளைப் படிக்கும்போதே மனதில் ஓவியமாய் வந்தது....நீங்களும் பின்னால் அதையே குறிப்பிட்டிருந்தீர்கள்.

ராமலக்ஷ்மி said...

//ஒருவேளை இதுபோல் வாசிக்க, அந்த வீட்டுத் தொலைக்காட்சி அல்லது வீட்டு வேலைகள்(மனிதர்கள்) இதுபோன்ற சூழலில்தான் அனுமதிக்குமோ எனவும் தோன்றியது//

இதுதான் சரி. அபிமானியாக இருந்திருக்க மாட்டார்:)!

// ஒரு ஓவியன் கண்ணில் பட்டிருக்குமேயானால் //

உங்கள் கண்ணில் பட்டதிலும்தான் அழகான சொற்சித்திரமாகி விட்டது.

jalli said...

SORRY, KATHIR..RENDU MOONU THADAVAI
PADITHTHUM SEALAI ANINTHIRUNTHA PEN
ENDRA VARIKAL EN KANNIL PADAVILLAI.
MR.SRIRAM COMMENTS PADITHTHAPIRAKUTHAAN
MARUPADIYUM PADITHTHEAN.

SARIYAAKA PADIKKAVILLAI.MEENDUM SORRY KATHIR.

ஈரோடு கதிர் said...

@பழனிச்சாமி அண்ணா,

முதலில் எழுதியபோது ”சேலையணிந்திருந்த ஒரு பெண்” என்பதை எழுத மறந்துவிட்டேன். நீங்கள் குறிப்பிட்டபிறகுதான் எழுதினேன். குழப்பத்திற்கு மன்னிக்க :(

jalli said...

ada, atharkul periya periya vaarthai solliputtean.
naan oru "masai kunnudaiyan(ponnar_shankar appa)endru em pndatti "eswari" sonnathu sariyaa
poachunga kathir.

Lingesh said...

இருட்டில் தேர்தல் அறிவிப்புப் படிக்கும் பெண் பற்றிய வர்ணனைகளைப் படிக்கும்போதே நீங்களே ஒரு கவிதையுடன் முடிப்பீர்கள் என்று நினைத்தேன்.