கறைபடம்: இணையத்திலிருந்துஉடற்போர்வையை
அடித்துத் துவைத்த பின்னும்
அகலவில்லை காமக்கறை

கையறு நிலையில்
உற்றுப்பார்க்க தெரிந்தது
அது கறையல்ல…

காமமே சாயமாக
ஏற்றப்பட்ட நூலில்
நெய்த மனமென!
 

19 comments:

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அருமையான சிந்தனை - கருத்து நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

உடல்ப்போர்வை என்பது உடல் போர்வை என்றோ அல்லது உடற்போர்வை என்றோ இருக்கவேண்டும். பழமைபேசியினைக் கலந்தாலோசித்து மாற்றவும்

சத்ரியன் said...

கதிர்,

ஒளி வீசும் வரிகள்.

வானம்பாடிகள் said...

:)). நல்லாருக்கு

கார்த்திக் said...

// உடற்போர்வையை
அடித்துத் துவைத்த பின்னும்
அகலவில்லை காமக்கறை //

கற நல்லதுன்னு சர்ப் எக்ஸ்ஸெல் விளம்பரத்துலையே சொல்லுராங்களே!!!!!!!

Kannan said...

மிகவும் அருமையான கவிதை....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

பழமைபேசி said...

நன்று!

எனக்கு வேலையில்லாமற்ச் செய்த சீனா அய்யா அவர்கட்கு நன்றி!!

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி - என்ன இது சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜ் இப்படி எழுதலமா?

//வேலையில்லாமற்ச் செய்த//

ச் இங்கு வருமா - வரக் கூடாதே !

வேலை இல்லாமல் செய்த அல்லது
வேலையில்லாமற் செய்த என்று தானே வரவேண்டும்

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

பழமைபேசி said...

பிழைதானுங்க அய்யா. இல்லாமற் செய்த என்றிருத்தலே சரி!!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சிந்திக்க வேண்டிய நல்லதொரு கருத்து. வாழ்த்துகள் கதிர்.

சே.குமார் said...

மிகவும் அருமையான கவிதை.

ஓலை said...

Nice.

Pazhamaikkum adi sarukkum.

jalli said...

kaamaththai eaan saar,
adiththu thuvaikkireerkal
athu karai alla, nirai.


irunthaalum.kavithai arputham.

jalli said...

anpin pazhamai peasi vanakkam.

''orutharu kamaththai adiththu
thuvaikkiraar. innoruththar ''ich''
veandankiraar.(sorry..seena sir)

''enna kodumai sir ithu!"

cheena (சீனா) said...

அன்பின் ஜல்லி - "ச்" வேண்டிய இடங்களில் இருக்க வேண்டும் - எல்லா இடங்களீலும் இருக்கக் கூடாது - இடமறிந்து "ச்" இட வேண்டும். சரியா ஜல்லி - நல்வாழ்த்துகள் ஜல்லி - நட்புடன் சீனா

V.N.Thangamani said...

இனப்பெருக்கத்திர்க்காக இறைவன்
கட்டிய சாயம் அது. இப்போ தாறுமாறா
கட்சி கொடுக்குது.

jalli said...

pal"ich'..pal'ich'..pathil 'ch'olliirukkeenga 'ch'ina sir.

"idamarinthu 'ich' idaveandum"

nalla varikal...thanks.

மாலதி said...

அவலத்தை இதைவிட சிறப்பாக சொல்லிவிட முடியாது நல்ல ஆக்கம் பாராட்டுகள் ...

நம்பிக்கைபாண்டியன் said...

அளவான வார்த்தைகளில்,அருமையான சிந்தனையை, அழகாக வடித்துள்ளீர்கள்