விண்மீன்கள் பூத்த நிலவு


கைகளில் ஏந்தும் முகத்தில்
நிலவின் பொலிவு

கூர்ந்து நோக்கும் விழிகளில்
நட்சத்திரங்களின் மினுமினுப்பு

சிறகடிக்கும் இமைகளில்
படபடக்கும் உள்ளம்

மூச்சுக்காற்றின் கதகதப்பில்
குளிர்காயும் உயிர்


ஊஞ்சலாடும் காதணிகளில்
தூளியாடும் மனது

புன்னகைக்கும் இதழ்களில்
வழிந்தோடும் கவிதை


நீ இல்லா பொழுதுகள்
நிலவில்லா இரவுகளாய்...

நெருங்கியருகில் வருகையில்
விண்மீன்கள் பூத்த நிலவாய்
கூடவே குளிராய், குதூகலமாய்!

படம் : இணையம்
~

14 comments:

Rekha raghavan said...

அருமை.

சத்யா said...

நிலவில் பூத்த நட்சத்திரங்களைப் போல உங்களின் கவிதை வரிகள் மனதிற்குள் பூக்களாய் பூக்கிறது.

vasu balaji said...

பாஸ் கவிதை பாஸ்:))

ராமலக்ஷ்மி said...

மிக அழகான கவிதை.

jalli said...

oonchal aadum kaathanikalil
thooliyaadum manathu....

-kavithai varikal ..nalla karpanai.

"oonchalaadum manasu" -endru irunthaal,innum uyirottamaaka irunthirukkum.
by..jallipatty palanisamy.

ஸ்ரீராம். said...

உலர்மனத்தில் குளிர்கவிதை!

SATYA LAKSHMI said...

Hats off to you Kathir. After reading I was speechless.

naanjil said...

அருமையான கவிதை.
நட்சத்திரங்கள் "விண்மீன்கள்" என்றிருந்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்.
நாஞ்சில் இ. பீற்றர்
www.fetna.org

ஈரோடு கதிர் said...

@ jalli
//"oonchalaadum manasu" -endru//

தூளி என காரணமாகத்தான் இட்டேன்

@பீற்றர்
நன்றிங்க அய்யா!
விண்மீன்கள் என மாற்றிவிடுகிறேன்.

க.பாலாசி said...

நல்ல கவிதை.. குளிர்ச்சியாய்...

ஓலை said...

Vaare wow!

பழமைபேசி said...

//ஈரோடு கதிர் said...
@ jalli
//"oonchalaadum manasu" -endru//

தூளி என காரணமாகத்தான் இட்டேன்//

ஓ, இதான் இடி மின்னலுக்குக் காரணமா? தூளியாட உடாம, ஒரு நிலையிலயே நிக்க வையுங்க மாப்பு அப்ப!!

'பரிவை' சே.குமார் said...

மனதிற்குள் பூக்களாய் கவிதை வரிகள்...

அருமை.

Unknown said...

அண்ணா ,
//நிலவில்லா இரவுகளாய் // வார்த்தைகள் விளையாடுது அருமைங்க !