எதிரி என்று சொல்லி உதவாதவன் எதிரி. நான் இருக்கேன் என்று சொல்லி முதுகில் குத்துபவன் துரோகி!
-0-
விபத்துகளும் கொலைகளும் காலம் காலமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. பெரிய தலைகள் பலியாகும் போது மட்டும் அவற்றுக்கு நிறைய வர்ணம் பூசப்படுகிறது
-0-
-0-
வாசலாய் இருக்கும் மொட்டைமாடியில் விழுந்து துள்ளி விழும் மழைத்துளிஎல்லாவற்றையும் விட அழகாய் இருக்கு
-0-
கடைக்காரருக்கு விற்பனை பெருகுகிறது. நம்பி வாங்குபவருக்கு சுமைஏறுகிறது # அட்சய திருதியை
-0-
இந்த ஆண்டும் ”வழக்கம்போல் மாணவிகள்” அதிக தேர்ச்சி - வழக்கமானசெய்தி # தியாகிகளை கௌரவிக்காத உலகம்யா இது!
-0-
டாஸ்மாக் சந்து சண்டைகள் மண்டை உடையும் போதோ, மட்டையாகும்போதோ முடிந்துவிடுகிறது # வேடிக்கை
-0-
கேள்விக்கு உட்படுத்தாமல், புனிதப்படுத்தும் எல்லாமே மூடத்தனமாகிறது
-0-
கேள்விக்கு, எதிர் கேள்வியை பதிலாக்குவது புத்திசாலித்தனமா!?
-0-
ஒரிஜினல்களை அருகில் வைத்துக்கொண்டு டுப்ளிகேட்களை வடிவமைக்கும்போது ஒரிஜினல்களை விட நேர்த்தியாக, தெளிவாக அமைந்துவிடுகிறது பலநேரங்களில்!!!
-0-
ஒரு விடியலில் உலகின் அத்தனை கைபேசிகளும் உயிர் விட்டுவிடக்கூடாதா!!!? # பேராசை!
-0-
ஹீரோ (அ) ஹீரோவின் தம்பி இண்டர்வியூக்கள் போகும்போது ஒரு போன்வரும். திறமையிருந்தும்(!) வேலை வேறு ஒருத்தருக்குப்போகும் # 1980’s cinemas
-0-
ஆண் நுளம்பு (கொசு) நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான் – (நன்றி பழமைபேசி)
# கல்யாணம் ஆனவங்க அத்தனை பேரும் இத ஒத்துக்குறீங்க தானே!? :)))
# கல்யாணம் ஆனவங்க அத்தனை பேரும் இத ஒத்துக்குறீங்க தானே!? :)))
-0-
தங்களை அறிவாளிகளென அறிவாளிகள் காட்டிக்கொள்ளாத போதும்கூட, அவர்களை அறிவாளிகள் என அடையாளம் காண்பதும் கூடஅறிவாளித்தனம்தானே # முடியலத்துவம்!
-0-
அடி அடின்னு செமத்தியா அடிச்சு வெச்சுட்டு ஆணியப் புடுங்குன்னு சொன்னா ராம்ஜெத்மலானி மட்டும் எப்படி புடுங்குவாரு?
-0-
துரோகிகளுக்கு எப்போதும் பகைவனிடம் மாலை மரியாதை கிடைக்கும் தற்காலிகமாக -
-0-
காலச்சக்கரம் தட்டாமாலை சுற்றியதில் தவறவிட்ட சில நட்புகளைஇணையம் மீட்டுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.
-0-
புத்தாண்டு நள்ளிரவில் வாழ்த்துச் சொன்ன உற்சாகத்தில், எத்தனை சதவிகிதம் ஆண்டின் மையத்துக்கு அருகாமை நாட்களில் மிச்சமிருக்கிறது!?
-0-
வெள்ளவேட்டி தோள்ல பை - கைரேகை பார்க்கலாமா சார்னு தெனம் ஒரு ஆள் எட்டிப்பார்க்குறான். அதுல யாரோ ஒருத்தனுக்கு நேரம் சரியில்லனு நினைக்கிறேன்!
-0-
பூட்டிய கதவை உடைத்துக் கொள்ளை - செய்தி
# ஏ வெண்ண, பூட்டாத கதவை யாராச்சும் உடைப்பாங்களாய்யா!?
# ஏ வெண்ண, பூட்டாத கதவை யாராச்சும் உடைப்பாங்களாய்யா!?
-0-
காலை 9 மணிக்கு எந்த வீதியில் பார்த்தாலும் வாசலில் இரண்டுபெண்களாவது பாதிமுகம் நுரைபடிய, பரபரவென பல் தேய்த்துக்கொண்டுநிற்கிறார்கள்!
-0-
ஊழல் பெருகிய அளவிற்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு பெருகாவிடினும், முனகல், புலம்பல், குமுறல் பெருகிவிட்டது # எங்கே செல்லும் இந்தப்பாதை!?
-0-
சில நேரங்களில் அதீத விருப்பு, பல நேரங்களில் அதீத விரக்தி # வாழ்க்கை!
-0-
4 வருடம் காதலித்து நேற்றுதான் காதலைச் சொன்னாராம், அந்தப்பொண்ணு இன்னும் 5 வருசம் வெயிட் பண்ணச் சொல்லுச்சாம் #சன்மியூசிக் காதல் அற்புதங்கள்
-0-
எதற்கும் எதிர்ப்பே வரக்கூடாது என நினைப்பதுதான் கதாநாயகத்தனமோ!?
-0-
சில அழைப்புகளை எடுக்கும் போது, ஏதோ சிலவற்றை அவர்கள்கேட்டுவிடக்கூடாதே என்று நினைத்துக்கொண்டே எடுக்கிறோம்
-0-
பொறுப்பி: அவ்வப்போது ’ட்விட்டரில்’ கிறுக்கிய ’கீச்சுகள்’. அங்கேயே படித்து நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும் வழக்கம்போல் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)
-0-
6 comments:
எல்லாமே அனுபவங்களாய் அனுபவித்தகைகளாய்...
அங்கேயும் சிலவற்றை படிச்சிருக்கேன்... இன்னும் படிச்சுத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு வாழ்க்கையை.....
/காலை 9 மணிக்கு எந்த வீதியில் பார்த்தாலும் வாசலில் இரண்டுபெண்களாவது பாதிமுகம் நுரைபடிய, பரபரவென பல் தேய்த்துக்கொண்டுநிற்கிறார்கள்!/
அய்யடா! இவரு வராருன்னு மொகம் கழுவி பகுடர் அடிச்சிட்டு பளிச்சின்னு நிக்கணும் போல:))
"கீச்சுகள்" அறிய,சிந்திக்க, சிரிக்க...
Ore thaththuva mazhai. Perum pulavanaar (thaththuvanaar) vaazhga.
எல்லாமே ரசிச்சாலும் நுளம்புக்கு சிரிப்பு !
Post a Comment