கீச்சுகள் – 3



எதிரி என்று சொல்லி உதவாதவன் எதிரி. நான் இருக்கேன் என்று சொல்லி முதுகில் குத்துபவன் துரோகி!

-0-
விபத்துகளும் கொலைகளும் காலம் காலமாய் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. பெரிய தலைகள் பலியாகும் போது மட்டும் அவற்றுக்கு நிறைய வர்ணம் பூசப்படுகிறது

-0-

பரபரப்பான செய்திகள் எல்லாமே முதல் முறைதான் பரபரப்பாக இருக்கின்றன

-0-

வாசலாய் இருக்கும் மொட்டைமாடியில் விழுந்து துள்ளி விழும் மழைத்துளிஎல்லாவற்றையும் விட அழகாய் இருக்கு

-0-

கடைக்காரருக்கு விற்பனை பெருகுகிறது. நம்பி வாங்குபவருக்கு சுமைஏறுகிறது # அட்சய திருதியை

-0-

இந்த ஆண்டும்வழக்கம்போல் மாணவிகள்அதிக தேர்ச்சி - வழக்கமானசெய்தி # தியாகிகளை கௌரவிக்காத உலகம்யா இது!

-0-

டாஸ்மாக் சந்து சண்டைகள் மண்டை உடையும் போதோ, மட்டையாகும்போதோ முடிந்துவிடுகிறது # வேடிக்கை

-0-

கேள்விக்கு உட்படுத்தாமல், புனிதப்படுத்தும் எல்லாமே மூடத்தனமாகிறது

-0-

கேள்விக்கு, எதிர் கேள்வியை பதிலாக்குவது புத்திசாலித்தனமா!?

-0-

ஒரிஜினல்களை அருகில் வைத்துக்கொண்டு டுப்ளிகேட்களை வடிவமைக்கும்போது ஒரிஜினல்களை விட நேர்த்தியாக, தெளிவாக அமைந்துவிடுகிறது பலநேரங்களில்!!!

-0-

ஒரு விடியலில் உலகின் அத்தனை கைபேசிகளும் உயிர் விட்டுவிடக்கூடாதா!!!? # பேராசை!

-0-

ஹீரோ () ஹீரோவின் தம்பி இண்டர்வியூக்கள் போகும்போது ஒரு போன்வரும். திறமையிருந்தும்(!) வேலை வேறு ஒருத்தருக்குப்போகும் # 1980’s cinemas

-0-

ஆண் நுளம்பு (கொசு) நம்மைக் கடிக்காது. கடிப்பது எல்லாமே பெண்தான் – (நன்றி பழமைபேசி)
# கல்யாணம் ஆனவங்க அத்தனை பேரும் இத ஒத்துக்குறீங்க தானே!? :)))

-0-

தங்களை அறிவாளிகளென அறிவாளிகள் காட்டிக்கொள்ளாத போதும்கூட, அவர்களை அறிவாளிகள் என அடையாளம் காண்பதும் கூடஅறிவாளித்தனம்தானே # முடியலத்துவம்!

-0-

அடி அடின்னு செமத்தியா அடிச்சு வெச்சுட்டு ஆணியப் புடுங்குன்னு சொன்னா ராம்ஜெத்மலானி மட்டும் எப்படி புடுங்குவாரு?

-0-

துரோகிகளுக்கு எப்போதும் பகைவனிடம் மாலை மரியாதை கிடைக்கும் தற்காலிகமாக -

-0-

காலச்சக்கரம் தட்டாமாலை சுற்றியதில் தவறவிட்ட சில நட்புகளைஇணையம் மீட்டுக் கொடுத்துக் கொண்டேயிருக்கிறது.

-0-

புத்தாண்டு நள்ளிரவில் வாழ்த்துச் சொன்ன உற்சாகத்தில், எத்தனை சதவிகிதம் ஆண்டின் மையத்துக்கு அருகாமை நாட்களில் மிச்சமிருக்கிறது!?

-0-

வெள்ளவேட்டி தோள்ல பை - கைரேகை பார்க்கலாமா சார்னு தெனம் ஒரு ஆள் எட்டிப்பார்க்குறான். அதுல யாரோ ஒருத்தனுக்கு நேரம் சரியில்லனு நினைக்கிறேன்!

-0-

பூட்டிய கதவை உடைத்துக் கொள்ளை - செய்தி
# வெண்ண, பூட்டாத கதவை யாராச்சும் உடைப்பாங்களாய்யா!?

-0-

காலை 9 மணிக்கு எந்த வீதியில் பார்த்தாலும் வாசலில் இரண்டுபெண்களாவது பாதிமுகம் நுரைபடிய, பரபரவென பல் தேய்த்துக்கொண்டுநிற்கிறார்கள்!

-0-

ஊழல் பெருகிய அளவிற்கு ஊழல் குறித்த விழிப்புணர்வு பெருகாவிடினும், முனகல், புலம்பல், குமுறல் பெருகிவிட்டது # எங்கே செல்லும் இந்தப்பாதை!?

-0-

சில நேரங்களில் அதீத விருப்பு, பல நேரங்களில் அதீத விரக்தி # வாழ்க்கை!

-0-

4 வருடம் காதலித்து நேற்றுதான் காதலைச் சொன்னாராம், அந்தப்பொண்ணு இன்னும் 5 வருசம் வெயிட் பண்ணச் சொல்லுச்சாம் #சன்மியூசிக் காதல் அற்புதங்கள்

-0-

எதற்கும் எதிர்ப்பே வரக்கூடாது என நினைப்பதுதான் கதாநாயகத்தனமோ!?


-0-

சில அழைப்புகளை எடுக்கும் போது, ஏதோ சிலவற்றை அவர்கள்கேட்டுவிடக்கூடாதே என்று நினைத்துக்கொண்டே எடுக்கிறோம்

-0-


பொறுப்பி: அவ்வப்போது ட்விட்டரில்கிறுக்கியகீச்சுகள்’. அங்கேயே படித்து நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும் வழக்கம்போல் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)

-0-

6 comments:

Anonymous said...

எல்லாமே அனுபவங்களாய் அனுபவித்தகைகளாய்...

குடந்தை அன்புமணி said...

அங்கேயும் சிலவற்றை படிச்சிருக்கேன்... இன்னும் படிச்சுத் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு வாழ்க்கையை.....

vasu balaji said...

/காலை 9 மணிக்கு எந்த வீதியில் பார்த்தாலும் வாசலில் இரண்டுபெண்களாவது பாதிமுகம் நுரைபடிய, பரபரவென பல் தேய்த்துக்கொண்டுநிற்கிறார்கள்!/

அய்யடா! இவரு வராருன்னு மொகம் கழுவி பகுடர் அடிச்சிட்டு பளிச்சின்னு நிக்கணும் போல:))

மாதேவி said...

"கீச்சுகள்" அறிய,சிந்திக்க, சிரிக்க...

ஓலை said...

Ore thaththuva mazhai. Perum pulavanaar (thaththuvanaar) vaazhga.

ஹேமா said...

எல்லாமே ரசிச்சாலும் நுளம்புக்கு சிரிப்பு !