விபத்துகள்:
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் நடக்கும் சாலை விபத்துகளில் பெரும்பாலும் நான்கு ஐந்து நபர்கள் என்ற எண்ணிக்கையில் இறந்துபோவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஒட்டுமொத்தக் குடும்பம் ஒரே வாகனத்தில் பயணித்து பெரியவர்கள் இறந்து குழந்தைகள் மட்டும் பிழைத்திருக்கும் செய்திகள், அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையொட்டி மிகப் பெரிய கலக்கத்தை உருவாக்குகின்றன. வேகம் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ளச் சொல்கிறது.
பார்வதி அம்மாளுக்கு அஞ்சலிகள்:
முதுமையில் உடன் இணையும் பிணி என்பது மரணத்தை நோக்கிய பயணம் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. சில காலமாக அது எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வுதான். எனினும், மருத்துவ தஞ்சம் கேட்டு வந்த அவரை அலைக்கழித்த இந்திய அரசியல் பாவம் மனதில் கனமாய்க் கிடக்கிறது. அந்தப் பாவக்கறையை அவ்வளவு எளிதில் அழித்திட முடியாது. நல்ல தொரு பிள்ளையப் பெற்றெடுத்த மனநிறைவோடு அவரின் ஆத்மா அமைதி கொள்ளப் பிரார்த்திப்போம்.
விசாரணை:
இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விசாரணை உண்மையிலேயே வெகு சிரத்தையோடுதான் நடைபெற்று வருவதாக உணரமுடிகிறது. சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஈரோட்டில் ஒரு அரிமா மாநாட்டிற்கு ஜெகத்காஸ்பரை பேச்சாளராக அழைத்தையொட்டி, அவர் அலுவலகத்தில் சோதனை நடந்த தருணத்தில், அந்த மாநாட்டின் பொறுப்பாளராக இருந்த அரிமாசங்கத்தைச் சார்ந்த ஒரு தலைவரை அழைத்து மத்தியப் புலனாய்வுத் துறை “எந்த அடிப்படையில் ஜெகத்காஸ்பரை அழைத்தீர்கள், உங்களுக்கும் அவரோடு என்ன தொடர்பு” என்பது வரை விசாரித்திருக்கிறார்கள்.
சஞ்சய் திருமணம் – பதிவர்கள் கூடல்:
தர்மபுரி அருகே மொரப்பூரில் பதிவர் சஞ்சய்காந்தியின் திருமணம் சிறப்பாக நடந்தது. மணமக்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைப் பதிவு செய்துகொள்கிறேன்.
ஈரோட்டிலிருந்து நான், ஆரூரன், கார்த்திக், ஜாபர் சென்றிருந்தோம். திருமணம் மிகச்சிறப்பானதொரு பதிவர்களின் கூடலாகவும் இருந்தது.
வாசு, ஆரூரன், மணிஜீ, ஜாக்கிசேகர் |
வானம்பாடி, எறும்பு, கதிர்,கேபிள் |
லக்கி, ஜாக்கி, கார்த்தி, மணிஜீ, வாசு, அதிஷா |
சஞ்சய், வெண்பூ, ஜோசப், கார்த்திக், நந்து, ஜீவ்ஸ், ஜாபர், ஆரூரன் |
திருமணத்தில் நந்து, வானம்பாடிகள் பாலா, எறும்பு ராஜகோபால், தமிழ்மணம் காசி, லதானந், தமிழ்பயணி சிவா, மரு.புருனோ, ஆதி, கார்க்கி, விஜி, தாரணிப்பிரியா, சக்தி செல்வி, வடகரைவேலன், ரம்யா, லக்கி, அதிஷா, கேபிள்சங்கர், அகநாழிகை வாசு, தண்டோரா மணிஜீ, மயில்ராவணன், ஜாக்கிசேகர், வெங்கி, உண்மைத்தமிழன், வெயிலான், பரிசல், நிகழ்காலத்தில் சிவா, சாமிநாதன், செந்தில், முரளிகுமார், கும்க்கி, ஜோசப்பால்ராஜ், சென், வெண்பூ, ரங்க்ஸ், ஜீவ்ஸ், ரோகிணிசிவா என பதிவர்கள் பட்டாளத்தைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. தாமதமாய் போனதில் சில பதிவர்களைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது.
மின்சாரம்:
தினந்தோறும் இரண்டு மணி நேர மின்நிறுத்தம் என்ற கேவலத்தைச் தொடர்ந்து தொடர்ந்து சகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் இந்தக் கேவலம் தமிழகம் போல் ஆண்டு முழுதும் அரங்கேறுகிறதா என்பது சந்தேகம்தான். பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் என பணிவிடை செய்யும் தமிழக அரசு, மாநிலம் முழுதும் தினமும் இரண்டு மணி நேர மின் நிறுத்தம் குறித்து சிறிதும் வெட்கம் கொள்ளவில்லை. அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்போது மூன்று மணி நேரமாக நீட்டிக்கப்பட்ட பெருமை வேறு.
தர்மசங்கடம்:
ரசிக்கத் தெரியாதவர்கள் முன் எந்தவொரு அற்புதக் கலையும் உயிர்பெறுவதில்லை. முன்னாள் குடியரசுத் தலைவரோடு சேர்ந்து கிட்டத்தட்ட அனைவரும் ஆழ்ந்து ரசிக்கும் நேரத்தில் அவருக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் பாதுகாப்பு அதிகாரி படும்பாடு பாவமாய் இருக்கிறது. முகத்தைத் தடவி, கைகளைக் கட்டி, அக்கம்பக்கம் பார்த்து, நிமிர்ந்து அமர்ந்து, ஒரு வழியாய் கொட்டாவியை வாய்க்குள்ளே காற்றுக் குமிழ்களாகச் சேமித்து என ரொம்ப தர்மச்சங்கடப் படுகிறார் பாவம்.
-0-
23 comments:
எவன் என்னை போட்டோ எடுத்தது?
விபத்தில் இருந்து தர்மசங்கடம் வரை - எல்லாவற்றையும் நல்லா பகிர்ந்தாச்சு!
வீடியோவுக்கு நன்றிங்க.. நல்ல இசை.
நல்ல பகிர்வு கதிர்
/“எந்த அடிப்படையில் ஜெகத்காஸ்பரை அழைத்தீர்கள், உங்களுக்கும் அவரோடு என்ன தொடர்பு” என்பது வரை விசாரித்திருக்கிறார்கள்./
அய்யய்யோ. அந்தாளு போட்ட புக்கை காசு குடுத்து நீரும் நானும் வாங்கினமே. நம்மளையும் விசாரிப்பாங்களோ?
சஞ்சய் திருமணவிழா புகைப்படத்தில் கல்லு மேல ஏறி நின்னு நீங்க உசரம்னு காட்டிக்கிட்டா தப்பில்ல. நான் குள்ளம்னு காட்றதுக்காகவே ஏறி நின்னதை *நான் வன்மையாகக் கண்ணடிக்கிறேன்*.
ங்கொய்யால! 3 மணி நேரம் கட் பண்ணாலும் அடங்காம பஸ்ஸூ, டீவிட்ட்ரு, பதிவுன்னு கிழிக்கிறான்யா இந்தாளு. கதிருக்கு கரண்ட்கட் பார்ஸேஏஏஏல்னு ஆற்காட்டார் சவுண்ட் விட்டதா பட்சி சொல்லுது.
*அதர்ம சங்கடம்*
ஒரு நல்ல பாட்டை ரசிக்காம, தாடியத் தடவுனது, கொட்டாவி விட்டதெல்லாம் பராக் பார்த்துட்டு அதை இடுகையாவும் போட்ட உங்களை எங்க வெச்சி கிழிக்கிறது:))
@ மணிஜீ
அண்ணே, ஏன் இந்தக் கொலவெறி. போட்டோல சூப்பரா இருக்கீங்க. நேத்து போன் பண்ணியபோது வாசு அண்ணன் பேசினார். களைப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தீர்களாம். இன்று அழைக்கிறேன்.
பார்வதி அம்மாவிற்கு மருத்துவ அனுமதி மறுக்கப்பட்டது இந்த நாட்டின் தீராத வரலாற்றுக் கறை.
நண்பர் சஞ்சய் காந்தி அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிவர்கூடல் சங்கமத்தையே மிஞ்சிடும்போல இருக்கே. வாழ்த்துகள் அண்ணா.
நல்ல பகிர்வு.
இருந்தாலும் சாரு'வோட நன..நன..நா... நன..நா எவ்வளவோ நல்லாருந்துது....
நல்ல பகிர்வு கதிர்.
ஆ..ஊன்னா.. பதிவர் சந்திப்புன்னு கூடிடறீங்க. உங்க வீட்ல எப்படி விடறாங்கன்னு தெரியலியே (எல்லாம் வவுத்தெரிச்சல் தான்.. )
சஞ்சய்காந்திக்கு வாழ்த்துகள்.
பார்வதி அம்மாள் ஆன்மா சாந்தியடையட்டும்.
நல்ல பகிர்வுங்க கதிர்.
இன்னும் விடுபட்ட படங்கள் போட்டு இருக்கலாம்.... ஆமா, அண்ணன் காணொலிகள் வலையேத்துறது என்னாச்சுங்க?
காணொலி அருமை...
சஞ்சய்க்கு திருமண நல்வாழ்த்துகள். இத்தனை பதிவர்களை இழுத்து அனைத்திருப்பது உங்கள் எல்லோருடைய அன்புள்ளங்களை வெளிக் கொணர்ந்துள்ளது. நடத்துங்க ராசா.
பிரின்ஸ் ராம வர்மாவின் 'சாரச நேத்ரா' பாடலும் கேட்டுப் பாருங்க கதிர். ரொம்ப நல்லா இருக்கும்.
போட்டோ வில இடமிருந்து வலம் யாருன்னு சொல்லக் கூடாதா?
பெயரும் முகமும் உடன் அறிய உதவிய உங்களுக்கு நன்றி.
பார்வதி அம்மாவிற்கு அஞ்சலிகள்.
அட!சஞ்செய் கல்யாணத்திற்கு இத்தனை பதிவர்களா?ம்ம் கலக்குங்க!
நல்ல பகிர்வு
ரொம்ப சந்தோசம் உங்கயெல்லாரயும் சந்திச்சது.படங்கள் பகிர்வுக்கு நன்றி.
தகவல்: இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்சாலைகளை கொண்டுள்ள குஜராத் மாநிலத்தில் மின்சார தடை இல்லை.
சஞ்சய் காந்திக்கு வாழ்த்துக்கள்... அனைத்தும் கல்யாண வீட்டு சமையல் மாதிரி அளவோடு கொடுத்துள்ளீர்கள்.. அனைத்து சுவையுடன்.. வேகம் தவிர்த்து விவேகம் வேண்டும் என்ற எச்சரிக்கையுடன்.. பகிர்வுக்கு நன்றி.
வாழ்த்துகள் சஞ்சய்!
என்ன மணிஜி காவி? மாலையா? அங்ஙங்க..:-)
பகிர்விற்கு நன்றி கதிர்!
அய்யய்யோ கதிர், தெரியாம பாஸிடிவ் ஓட்டுக்கு பதிலா மைனஸ் குத்திட்டேன் போல இருக்கே.
பதிவை விட பதிவுக்கு வருகிற பின்னோட்டங்களை படிக்க இரண்டு நாளைக்கு வரணும் போல இருக்குதுங்கோ,
Post a Comment