கீச்சுகள்

ஒருவரின் நெருடல், மற்றொருவருக்குச் சாதகமானது. மற்றொருவருக்குச் சாதகமானது இன்னொருவருக்கு நெருடல். # மனுசனாப் பொறந்திருக்கக் கூடாதோ!?

-0-

வார்த்தைகளுக்குள் அடங்குவதா காதல்? # கொசு@பிப்14.காம்

-0-
 
எந்த அரிப்பும் ஒற்றைச் சொறிதலில் அடங்கிவிடுவதில்லை. சொறியச்சொறிய இன்னும் கொஞ்சம் எனக் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது

-0-

ஆறுகளைச் சாக்கடைகளாக மாற்றிவிட்டு அதையே வடிகட்டி, சுத்திகரித்துக்(!) குடிக்கும் மேம்பட்ட தலைமுறை நாம்!

-0-

வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.

-0-

சிக்னலில் நிற்கும்போது மட்டும் எல்லோருக்கும் ஒரே மாதிரி அவசரம் இருப்பது எப்படி

-0-
ஆயிரம், பத்தாயிரம், ஐம்பதாயிரம் ரூபாய் என்பதெல்லாம் நிலைமைகளைப் பொறுத்து பெரிய தொகை என்று தெரிகிறது. ஆனால் 300 கோடி, 2000 கோடி, 40000 கோடி என்பதெல்லாம் சர்வசாதாரணாமா சொல்ல வருது... # என்னாச்சு எனக்கு? எனக்கு மட்டும்தான் இப்படியா?

-0-

எல்லாவற்றிலும் புதுசு வேணும்னு நினைச்சாலும், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவ மட்டும் ஏன் 10 வருசமா மாற்றாமல் வெச்சிருக்கிறோம். # யூ டூ!?

-0-
 
தொலைத்த இடத்தில் தேடுவதைவிட, கிடைக்காத இடத்தில் தேடுவது பல நேரங்களில் காரணம் சொல்லித் தப்பிக்க உதவுகிறது # ஆமா நான் ஏன் இப்படி ஆயிட்டேன்?

-0-
 
உள்ளடங்கிய ஒரு கிராம விவசாய நிலம் ஏக்கர் 40 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரின் கருப்புப்பணம் வெளுக்கப்படுகிறது.

-0-

ஒரே ஒரு நாளைக்காவது எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு நிம்மதியா தூங்கப்போகனும் # கனவு

-0-

இணையத்தில் எழுதுவதாலேயே கூடுதல் சமூகப் பொறுப்பு வந்திடுச்சா!? இணையத்தில் எழுத வராமலிருந்தால் அறச்சீற்றத்தை எங்கே கரைத்திருப்போம்?

-0-

மக்களைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமல் கூட்டணிக்காக மட்டுமே மானங்கெடும் இந்த அரசியல் தலைகள்தான் நாளையும் இந்த நாட்டை ஆளவேண்டுமா?

-0-
 
மனிதர்களைப் புரிந்து கொள்ளச் சிரமப்படும்போது நாம் மனிதர்கள் அல்லவோ என்ற சந்தேகம் வந்துவிடுகிறது.

-0-

எல்லா மக்களையும் சமமாக நடத்தி, சுறுசுறுப்பாக மக்களுக்காகவே இயங்கும் ஒரே அரசுத் துறை(!) டாஸ்மாக்

-0-

எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஒரே ஒற்றுமை வெள்ளைச் சட்டை, மற்றும் மாசுபட்ட மனசு

-0-

ங்கொய்யாலே..... எம்.ஜி.ஆரு ஒரு ஆளு மட்டும்தான் முழுக்கைச் சட்டை, தழையக் கட்டிய வெள்ளை வேட்டியோடு ஏர் ஓட்டமுடியும் போல # உரிமைக்குரல்
-0-
 
அரசியல் சார்பு எடுத்ததின் விளைவாக மட்டுமே அடிப்படை மனிதநேயம், மாண்பு, மனிதத்தன்மை செத்தொழிவது ஏன்? எல்லாமே காசுதானா?

-0-

பொறுப்பி: அவ்வப்போது ’ட்விட்டரில்’ கிறுக்கிய ’கீச்சுகள்’. அங்கேயே படித்து நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)

-0-

27 comments:

வானம்பாடிகள் said...

ட்விட்டர்ல ட்வீட்டினத
பஸ்ஸுல ஓட்டினத
லைக்கி பின்னூட்டம் போட்டவுக
இங்கையும் போடணுமா?:))

ஈரோடு கதிர் said...

ஆசானே, பின்ன
வரலாறு முக்கிமில்லையா?

அப்புறம் நீங்களா போடலைன்னா, உங்க ஐடி பாஸ்வேர்டு திருடி நாங்களே போட்டுக்குவோம்

ஓலை(Sethu) said...

சார்,

இது எங்களுக்குன்னு நினைக்கிறன் (பொழைச்சி போன்னு).

ஓலை(Sethu) said...

இந்த ஆட்சியே எல்லாம் 'கோடி'யில சுட்டுட்டான்களே. அடுத்து வரவங்களுக்கு இன்னொரு புது வார்த்தை கண்டுபிடிக்கணுமே?

*இயற்கை ராஜி* said...

# மனுசனாப் பொறந்திருக்கக் கூடாதோ!?//


நீங்க மனுசர்ன்னு யாரு சொன்னா? தெய்வப் பிறவிண்ணா நீங்க‌

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

எல்லாமே நல்லாயிருக்கு..

ராமலக்ஷ்மி said...

தொகுப்பு அருமை.

//(இத மட்டும் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)//

ரைட்டு:)!

காமராஜ் said...

அப்பப்ப படிச்சது மொத்தமாகவும் பிடிச்சது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//வானம்பாடிகள் said...
ட்விட்டர்ல ட்வீட்டினத
பஸ்ஸுல ஓட்டினத
லைக்கி பின்னூட்டம் போட்டவுக
இங்கையும் போடணுமா?:))//

:)

Kalidoss said...

Teasers ..thought provoking..kudos

# கவிதை வீதி # சௌந்தர் said...

படித்து பார்த்தேன் அருமை..

கோமாளி செல்வா said...

//
ஆறுகளைச் சாக்கடைகளாக மாற்றிவிட்டு அதையே வடிகட்டி, சுத்திகரித்துக்(!) குடிக்கும்மேம்பட்ட தலைமுறை நாம்! //

அசுத்தப் படுத்தி சுத்தப் படுத்துறது .. ஹி ஹி இத்

கோமாளி செல்வா said...

/ஒரே ஒரு நாளைக்காவது எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுநிம்மதியா தூங்கப்போகனும் # கனவு
//

அது கனவுல மட்டும்தான் நடக்குதோ ?

சே.குமார் said...

தொகுப்பு அருமை.
.

கோமாளி செல்வா said...

//பொறுப்பி: அவ்வப்போது ’ட்விட்டரில்’ கிறுக்கிய ’கீச்சுகள்’. அங்கேயே படித்து நொந்தவர்கள் பொறுத்தருள்க (இத மட்டும் சின்ன எழுத்துல போட்டுடுவோம்)
//

ஆமா அண்ணா conditions apply அப்படின்னு சின்ன எழுத்துல தான் போடுவாங்க ..

raja said...

:-))

shammi's blog said...

ஒருவரின் நெருடல், மற்றொருவருக்குச் சாதகமானது. மற்றொருவருக்குச் சாதகமானது இன்னொருவருக்கு நெருடல். # மனுசனாப் பொறந்திருக்கக் கூடாதோ!?
..unmai.....

பழமைபேசி said...

ஏதோ அதகளம் நடந்திட்டு இருக்கு...

cheena (சீனா) said...

என்ன பாலாவும் கதிரும் இப்படி எல்லாம் பதிவு போடறாங்க - ட்வீடினத - டிவீட்ட உட்டுப் போனத எல்லாம் நெனவு படுத்தி போடறாங்கப்பா ...... சரி சரி எல்லாத்துக்கும் மறுமொழியும் போடுவோம்.

கே.ஆர்.பி.செந்தில் said...

கீச்சும்.. கீச்சு கீச்சும் சூப்பர்...

ராஜ நடராஜன் said...

நீங்கதான் கீச்சுறவரா?இன்னொருத்தரு கீசிட்டிருந்தாரு:)

ஹேமா said...

எல்லாக் கீச்சும் பொன்மொழியாக் கிடக்கு !

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அருமை.!!

குடந்தை அன்புமணி said...
This comment has been removed by the author.
குடந்தை அன்புமணி said...

இந்த காலை வேளையில இதைப் படிச்சி, ஸ்.... அப்பா... என்ற என்னை அலுவலகத்தில் உள்ளவர்கள் பார்த்த பார்வை இருக்கே....

r.v.saravanan said...

நல்லாயிருக்கு

இராஜராஜேஸ்வரி said...

வெறும் தகவல்களைத் தாங்கும் எழுத்தை விட உணர்வுகளைத் தாங்கும் எழுத்தின் ஆயுள் நீளமானது.//
உண்மை! உண்மை!!