நம்பிக்கை நகர்த்தும்….. சங்கமம்–2010

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களின் தொடர் உழைப்பில், பதிவுலக நட்புகளின் ஆலோசனைகளோடு சங்கமம் 2010 நிகழ்ச்சிகளின் திட்டமிடல் கிட்டத்தட்ட நிறைவடைந்து பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.


இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது. குறிப்பிட்ட சில பதிவர்கள் மட்டுமே வருகையை நேரிடையாக, கைபேசி, மின்மடல் மூலம் உறுதிசெய்துள்ளார்கள். சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் பதிவர்கள் ஈரோடு தமிழ்ப் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்களிடமோ அல்லது erodetamizh@gmail.com என்ற மின் மடல் முகவரிக்கோ உங்கள் விருப்ப உணவை (சைவம்/அசைவம்) தெரிவிப்பதன் மூலம், விருந்தை சிறப்பான முறையில் நடத்த உதவுவதுடன் உணவு விரயத்தைத் தடுக்கும் சமுதாயக் கடமையைச் செவ்வனே கடைப்பிடிக்க உதவுவீர்கள் என நம்புகிறோம்.





வெளியூரில் இருந்து வரும் பதிவர்கள் தங்குவதற்கு அறை எடுக்க வேண்டுமாயின் அது குறித்த உதவிகளுக்கு பதிவர்.ஜாபர் (98658-39393) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.

இடம்:
டைஸ் & கெமிக்கல்ஸ் மஹால்,
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு

நிகழ்ச்சி அரங்கு ஈரோடு பெருந்துறை சாலையில் பரிமளம் மஹால் அருகே URC நகரில் உள்ளது. பெருந்துறை வழியாக பேருந்தில் வருபவர்கள் திண்டல் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நகரப் பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் எளிதில் அரங்கை அடையலாம். பேருந்து நிலையம், இரயில் நிலையங்களில் இருந்து வருபர்கள் திண்டல் வழியாகச் செல்லும் நகரப் பேருந்து, சிற்றுந்து, ஷேர் ஆட்டோ மூலம் நிகழ்ச்சி அரங்கை அடையலாம். பதிவர்களை அழைத்து வர வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகன உதவிக்கு பதிவர். ராஜா (அகல்விளக்கு) (95785-88925) அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.




பதிவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருக்கும் வகையில் நிகழ்ச்சி நிரலை திட்டமிட்டிருக்கிறோம். மிகச் சரியாக காலை 11 மணிக்கு நிகழ்ச்சியைத் துவக்கி மாலை 5 மணிக்கு முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இடையில் ஒரு மணி நேர உணவு இடைவேளை. 11 மணிக்கு நிகழ்ச்சி துவங்க இருப்பதால், 10.30 மணிக்கு பதிவர்கள் அரங்கத்திற்கு வருகை தருவது நிகழ்ச்சியை குறித்த நேரத்தில் துவங்க உறுதுணையாக இருக்கும்.

நிகழ்ச்சி நிரல்
காலை 11 மணி கூட்டம் துவங்குதல்
*தமிழ்
வணக்கம்
*வரவேற்புரை

*பதிவர்கள்
அறிமுகம்
*கூட்ட
துவக்க உரை

முதலாம் அமர்வு: (காலை 11.15 மணி)
*சிறுகதைகளை உருவாக்குவோம் - 
எழுத்தாளர். பெருமாள் முருகன்
*உலக
மொக்கையர்களே ஒன்று படுங்கள் - 
எழுத்தாளர். பாமரன்
*குறும்படம்
எடுக்கலாம் வாங்க - 
அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்)
*நிழற்படங்களில்
நேர்த்தி - 
கருவாயன்’ - சுரேஷ்பாபு
*உலகத்திரைப்படங்கள்
ஒரு பார்வை -  
சிதம்பரன்.கி

மதியம்
01-30 – 02.30 மதிய உணவு
இரண்டாம் அமர்வு: (மதியம் 02.30 மணி)
*இன்றைய இணையமும் வலைப்பூக்களும் - 
ஓசை செல்லா
*
நிழற்படங்கள் வழியே ஆவணப்படுத்துதல் - 
லட்சுமண ராஜா (கூழாங்கற்கள்)
மூன்றாம் அமர்வு: (மாலை 03.30 மணி)
*பதிவர்கள் கலந்துரையாடல்
ஒருங்கிணைப்பு “சேர்தளம்”

நன்றியுரை

மாலை
05.00 மணி நிகழ்ச்சி நிறைவு



குழும உறுப்பினர்களின் உழைப்பும் ஈடுபாடும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்ச்சிக்கான செலவுகளை ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழும உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கின்றனர்.

சங்கமம் இலச்சினையை முகப்பில் இட்ட, இடுகை இட்ட பதிவர்களை நன்றிகளோடு வணங்குகிறோம்.

சுட்டியோடு சங்கமம் இலச்சினையை வெளியிட்டுள்ள தமிழ்மணம், தமிழ்வெளி, சங்கமம், இன்ட்லி திரட்டிகளுக்கு மிகுந்த நன்றிகள்.

நிகழ்ச்சியை நடத்துவது மட்டும்தான் நாங்கள்…. இது நமக்கானதொரு பொதுக்கூடல்… இதன் வெற்றி முழுக்கமுழுக்க உங்களின் பங்கேற்பில் மட்டுமே! உங்கள் வருகை மட்டுமே இப்போதை அவசரமான அவசியம்! இது  வரை பயண ஏற்பாடு செய்யாதவர்கள் கூட இப்போது நினைத்தாலும் திட்டமிட்டு ஈரோட்டிற்குப் பயணப்பட முடியும்..

உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

ஏமாற்றமாட்டீர்கள் என நம்புகிறோம், நம்பிக்கைதானே எல்லாவற்றையும் நடத்திச்செல்கிறது.
 -0-

18 comments:

vasu balaji said...

அசத்துங்கப்போய்..வாழ்த்துகள்.

r.v.saravanan said...

வாழ்த்துகள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நிகழ்ச்சி நிரல் நன்றாக இருக்கிறது.

வாழ்த்துகள்.

Thamira said...

நல்ல நிகழ்ச்சிகள். சுவாரசியத்துக்குப் பஞ்சமிருக்காது. தவிர்க்க இயலாத காரணங்களால் வரயியலவில்லை, வருத்தமே.. அடுத்த முறையாவது வர முயற்சிக்கிறேன். ஈரோடு குழுவுக்கு நம் வாழ்த்துகள்.

செல்வா said...

உங்களுடைய இந்த பெரிய முயற்சிக்கு தலை வணங்குகிறேன் அண்ணா ..
நானும் நிச்சயம் கலந்து கொள்கிறேன் .!!

ராமலக்ஷ்மி said...

சிறப்பாகத் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல். வாழ்த்துக்கள்.

Unknown said...

சங்கமம் சிறப்பாக நடைபெற வாழ்த்துகள். நிகழ்ச்சியை பதிவு செய்து DVD யாக வெளியிட்டால், நண்பர்கள் உரையை கேட்கக் வாய்ப்பு கிடைக்கும்.

Anonymous said...

//உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன//

கவிதையாய் இவ்வரிகள் கவர்ந்திழுக்கிறது... நிகழ்வு சிறப்பாய் நடைபெற வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

விழா சிறப்பாக நடந்திட வாழ்த்துக்கள்..

Indian said...

வாழ்த்துகள் நண்பர்களே. எங்கள் புது திரட்டியிலும் இணைப்புக் கொடுத்திருக்கிறோம். சங்கமம் வெற்றி பெற மீண்டும் வாழ்த்துகிறோம்.

அன்புடன்
Tamil.ReadandShare.in
இது ஒரு டண்டனக்கா திரட்டி.

ஈரோடு கதிர் said...

@@ வானம்பாடிகள்
அண்ணாச்சி எத்தன மணிக்கு வர்றீங்க!

@@ r.v.saravanan
நன்றிங்க r.v.s

@@ ச.செந்தில்வேலன்
செந்தில் நீங்க இந்த ஆண்டு இல்லாததுதான் குறை

@@ ஆதிமூலகிருஷ்ணன்
அடடா, உங்களை ரொம்ப எதிர்பார்த்தேன் ஆதி!

@@ கோமாளி செல்வா
தம்பி நமக்குள்ளே இதெல்லாம் வேணாம்!
நிறைய வேலை இருக்கு, சீக்கிரம் வந்து சேருப்பா!

@@ ராமலக்ஷ்மி
இதை நேரில் வந்தும் சொல்லுங்க! இன்னும் மகிழ்ச்சியடைவேன்

@@ Sethu
நன்றிக்க சேது. ஒளிப்பதிவுக்கு முயற்சி செய்கிறோம்ங்க

@@ தமிழரசி
வாழ்த்து மட்டும் போதாது. உங்கள் வருகையும் முக்கியம்

@@ நேசமித்ரன்
நன்றிங்க நேசன்!

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
நன்றிங்க சந்தனா!

@@ Indian
மிக்க நன்றி
அதென்னங்க ’டண்டனக்கா திரட்டி’. :)))

செ.சரவணக்குமார் said...

நிகழ்ச்சி நிரலையும் பதிவர்க‌ள் சங்கமத்திற்கான ஏற்பாடுகளையும் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. அக்க‌றையுடன் கூடிய நேர்த்தியான உழைப்பு கதிர் அண்ணா. நிச்சயம் அதற்கான பலன் கிடைத்தே தீரும். சங்கமம் பதிவர் கூடல் மிகப்பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.

ஒரு தாழ்மையான வேண்டுகோள்..
நிகழ்ச்சியின் முழுமையான காணொளியை எங்களோடும் பகிர்ந்துகொண்டால் பெரிதும் மகிழ்வேன்.

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்!

தேவன் மாயம் said...

பதிவுலக நட்புகளை வரவேற்கத் தயார் நிலையில் இருக்கிறோம்.

//

கதிர்! சூப்பர் விருந்தோம்பல்!

தேவன் மாயம் said...

இந்த முறை உணவகத்தில் இருந்து உணவு வரவழைக்காமல் தனியாக சமையல்காரர் வைத்து சைவம், அசைவ உணவு தயார் செய்யவும் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டது.//

பிரமாதம் !

தேவன் மாயம் said...

உங்கள் கண்களை நோக்கி எங்கள் விழிகளும், உங்கள் கரங்களின் கதகதப்பிற்கு ஏங்கி எங்கள் கைகளும் காத்திருக்கின்றன…

//

வர இயலாததற்கு வருந்துகிறேன்!

'பரிவை' சே.குமார் said...

அசத்துங்க..வாழ்த்துகள்.