சங்கமம் 2010 – தயாராகுங்கள் !

இப்பொழுதுதான் கைகள் பற்றி ஆசையாய் அன்பாய் குலுக்கி விடைபெற்றது போல் இருக்கிறது. இன்னும் உள்ளங்கைகளுக்குள் ஊடுருவிய வெப்பம் தணிந்ததாகத் தெரியவில்லை, ஆனால் ஆண்டுதான் ஒன்று உருண்டோடியிருக்கிறது.
சென்ற ஆண்டு சங்கமத்தில் குலுக்கிய கைகளோடு இன்னும் கரங்களை எதிர்நோக்கி மீண்டும் ஒரு முயற்சியை பெரியளவில் முன்னெடுக்க விரும்புகிறோம்.


வருகின்ற டிசம்பர் 26ம் தேதி காலை 11.00 மணிக்கு உங்கள் அனைவரையும் ஈரோட்டில் சந்திக்க மிகுந்த ஆவலாய் இருக்கின்றோம். ஆம், தமிழ்ப் பதிவர்களுக்கான ஒட்டு மொத்த கூடுதலில் பதிவர்கள், வாசகர்கள் என அனைவரையும் ஒட்டு மொத்தமாய் சந்திக்க கரங்கள் நீட்டி தயாராக இருக்கிறோம்.

இடம்:
டைஸ் & கெமிக்கல் மஹால்
URC நகர், பெருந்துறை சாலை, ஈரோடு
உங்கள் வருகையை உடனடியாக உறுதிப்படுத்துங்கள்
நிகழ்ச்சியில்…
நீங்கள் எதிர்பார்க்கும் சில நிகழ்வுகளும்
எதிர்பாராத பல நிகழ்வுகளும் நிச்சயம் இருக்கும்
காலை 11 மணிக்கு தேநீரோடு ஆரம்பித்து, மதிய உணவு, மாலை தேநீர் என விடை கொடுக்க திட்டமிடுகிறோம்.
உங்கள் வருகையே எங்களின் வெற்றி!
இந்த சங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.

அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்

எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
 
விபரங்களுக்கு….
கதிர்                                      99653-90054
பாலாசி                               90037-05598      
கார்த்திக்              97881-33555
ஆரூரன்                             98947-17185      
வால்பையன்                  99945-00540 
ராஜாஜெய்சிங்               95785-88925       
சங்கமேஸ்            98429-10707
ஜாபர்                  98658-39393
நண்டு நொரண்டு    94861-35426
erodetamizh@gmail.com


நன்றி

______________________ 

47 comments:

கலாநேசன் said...

மாபெரும் சங்கமத்திற்கு வாழ்த்துக்கள்.

KVR said...

வாழ்த்துகள்

கலகலப்ரியா said...

சந்தோஷம்... :)

shammi's blog said...

valthukkal.....

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்:)

ரோகிணிசிவா said...

missing it ,
any way all the best :))

*இயற்கை ராஜி* said...

சந்தோஷம்:-)

shortfilmindia.com said...

வந்திருவோம்ம்..

நிகழ்காலத்தில்... said...

வாழ்த்துகள் மாப்பு,

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - சங்கமம் 2010 சிறப்புடன் வெற்றிகரமாக நடை பெற நல்வாழ்த்துகள் - எங்களுக்கும் இரண்டு இருக்கைகள் முன் பதிவு செய்ய வேண்டுகிறோம். நட்புடன் சீனா - செல்வி ஷங்கர்

அரவிந்தன் said...
This comment has been removed by the author.
அரவிந்தன் said...

வாழ்த்துக்கள்!!!

வருகை உறுதி.

அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்

DECEMBER 5, 20

☀நான் ஆதவன்☀ said...

சென்ற வருடம் போல் இந்த வருடமும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் :)

dheva said...

சங்கமம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கதிர்...!

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் நண்பர்களே.. கலக்கிருவோம்..;-)))

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

வாழ்த்துக்கள். கலக்கிடலாம்.......

ராமலக்ஷ்மி said...

சிறப்பாக நடந்தேற வாழ்த்துக்கள்!

தருமி said...

வர முடியாத நிலை; மன்னிக்கணும்.சங்கமம் 2010 சிறக்க வாழ்த்துகள்.

பழமைபேசி said...

கோலாகலமாய்ச் சிறப்பெய்த வாழ்த்துகள்!

நசரேயன் said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

மணிஜீ...... said...

வாழ்த்துக்கள் ஈரோட்டு சி(த)ங்கங்களுக்கு..அன்று நமது நண்பர்களின் புத்தகங்கள் உயிர்மையில் வெளியிடுகிறார்கள்...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

வாழ்த்துகள் நண்பர்களே :))

அமர பாரதி said...

சங்கமம் பெரு வெற்றியடைய வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

மனமார்ந்த வாழ்த்துகள் கதிர் அண்ணா. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் சங்கமம் பெரும் வெற்றியடையட்டும்.

பாவிகளா... பொறாமையா இருக்கு. ஒரு மாசத்துக்கு முன்னால நடத்தியிருக்கக்கூடாதா?

ஜெரி ஈசானந்தன். said...

வாழ்த்துகள்.

Sethu said...

Congrats. Have fun.

அன்பரசன் said...

சங்கமத்திற்கு வாழ்த்துக்கள்.

விக்னேஷ்வரி said...

போன வருடம் போலவே இவ்வருடமும் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள் கதிர்.

கும்க்கி said...

வழக்கமான நிகழ்வாக அமையாமல் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள் மேயர்..

butterfly Surya said...

வாழ்த்துகள் கதிர்.

சென்னை உலக திரைப்பட விழா இருக்கும் என்று நினைக்கிறேன். வர முயற்சிக்கிறேன்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

விழா சிறப்புற நடைபெற வாழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

கை கோர்க்க கையை கொடுங்க.

காமராஜ் said...

சங்கமம் வெற்றி பெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

VELU.G said...

சங்கமம் வெற்றிபெற இனிய வாழ்த்துக்கள்

சே.குமார் said...

மாபெரும் சங்கமத்திற்கு வாழ்த்துக்கள்.

Chitra said...

வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கலாநேசன்

நன்றி @@ KVR

நன்றி @@ கலகலப்ரியா

நன்றி @@ shammi's

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ ரோகிணிசிவா

நன்றி @@ *இயற்கை ராஜி*

நன்றி @@ shortfilmindia.com
மிக்க மகிழ்ச்சிங்க கேபிள்

நன்றி @@ நிகழ்காலத்தில்

நன்றி @@ cheena (சீனா)
மிக்க மகிழ்ச்சி அய்யா!

நன்றி @@ அரவிந்தன்
மிக்க மகிழ்ச்சி அரவிந்தன்

நன்றி @@ ☀நான் ஆதவன்☀

நன்றி @@ dheva

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
கண்டிப்பா கா.பா

நன்றி @@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நேத்து வரமா போயிட்டீங்க

நன்றி @@ ராமலக்ஷ்மி

நன்றி @@ தருமி
அடடா, என்னாச்சுங்க

நன்றி @@ பழமைபேசி

நன்றி @@ நசரேயன்

நன்றி @@ மணிஜீ......
முன்னமே தெரியாம போச்சே!

நன்றி @@ 【♫ஷங்கர்..】™

நன்றி @@ அமர பாரதி
உங்கள் ஒத்துழைப்போடு நிச்சயமாக நல்லபடியாக அமையும்

நன்றி @@ செ.சரவணக்குமார்
அடுத்த முறை டிசம்பர்ல வர்ற மாதிரி திட்டமிடுங்க

நன்றி @@ ஜெரி

நன்றி @@ Sethu

நன்றி @@ அன்பரசன்

நன்றி @@ விக்னேஷ்வரி

நன்றி @@ கும்க்கி
வெள்ளிக்கிழமையே வந்து இத சொல்லுங்க

நன்றி @@ butterfly Surya
கண்டிப்பா முயற்சி செய்ங்க

நன்றி @@ வழிப்போக்கன் - யோகேஷ்


நன்றி @@ தாராபுரத்தான்
உங்க கைய பிடிச்சிட்டுத்தானே நிக்கிறோம்

நன்றி @@ காமராஜ்

நன்றி @@ VELU.G

நன்றி @@ சே.குமார்

நன்றி @@ Chitra

RAMYA said...
This comment has been removed by the author.
RAMYA said...

அதுக்குள்ளே ஒரு வருடம் ஆகி விட்டதா கதிர்? நாட்கள்தான் எவ்வளவு விரைவில் உருண்டோடுகின்றன..

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் சங்கமம் விழா சிறக்க வாழ்த்துகிறேன்....

சத்ரியன் said...

கதிர்,

வரமுடியாத தொலைவில் தொலைந்திருக்கிறோம்.

நிகழ்வு சிறப்புற வாழ்த்துகள்.

ரோஸ்விக் said...

அட இந்த வருஷமும் நம்ம மிஸ்ஸிங்கா...

வாழ்த்துகள் தோழர்களே.

அமர பாரதி said...

சும்மா அதிரனும்ல...

karthikkumar said...

ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி சார்

ஆதிமூலகிருஷ்ணன் said...

கலக்குங்க கதிர் அண்ட் டீம்.. வாழ்த்துகள்.!

r.v.saravanan said...

சங்கமம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் கதிர்

ஷர்புதீன் said...

vallthukkal!

ரவிஉதயன் said...

அன்பு கதிர் அவர்களுக்கு சங்கமத்தில் சந்திப்போம்