காணாமல் காணும் ஓவியம்


















எதிர்திசையில் அமர்ந்து
ஏதோ ஓவியம் வரையத்
துவங்கினாள் அந்தச் சிறுமி
என்பார்வையில் படாதபடி

என் பார்வைப் பசிக்கு
அவள் கண்களின் அசைவு
மட்டுமே தீனியாகிக்கொண்டிருந்தது

சிறுபூவின் கருவிழிகள்…
எதிர் திசைகளில் நகரும் போது
குறுக்கு நெடுக்குக் கோடுகளையும்…

வளைந்து சுழலும் போது
வட்டத்தையும் வளைகோடுகளையும்

இடவலமாய்த் தாவும் போது
வேண்டாததை அழிப்பதையும்

மினுமினுக்கும் போது
பட்டாம் பூச்சிகளையும்…

பூவாய்ச் சிரிக்கும் போது
குழந்தையின் புன்னகையும்

களைத்துச் சோர்வுறும் போது
ஏதோ ஏக்க வயிற்றையும்

வண்ணங்களைக் கசியவிடும்போது
வானவில்லையும்
......எனக்குள் வரைந்து முடித்திருந்தது.

”வரைஞ்சு முடிச்சாச்சு
வந்து பாருங்க” என அழைத்தாள்

”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு
ஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்
அடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.

-0-

25 comments:

அகல்விளக்கு said...

அட்டகாசம்...

அழகு...

:)

கோமாளி செல்வா said...

உண்மைலேயே நீங்க சொன்னது அந்தப் பொண்ண என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடுச்சு அண்ணா ..!!

வானம்பாடிகள் said...

கண்களின் நாட்டியம் வரைந்த ஓவியம்:) சூப்பர்ப்

பழமைபேசி said...

எழில் விருந்து படம்!

சொல் அழகு உங்க எழுத்து!!

ராமலக்ஷ்மி said...

அழகு...

கண்கள்

வரிகள்

புகைப்படம்

எல்லாமே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

Excellent

இராமசாமி said...

அருமை... அட்டகாசம் !

VELU.G said...

அழகான கவிதை

Sethu said...

அழகான சித்திரமும், உரை(கவிதை)ச் சித்திரமும்.

இந்நேரம் எதிர் கவுஜைக்கு எத்தனை கை குடையிதோ!

sakthi said...

குழந்தைக்கு கவிதை பேசும் கண்கள்

அன்புடன் அருணா said...

அட!

தேனம்மை லெக்ஷ்மணன் said...

அருமை..

கே. பி. ஜனா... said...

எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. கவிதை அதன் உலகத்தை கண் முன் நிறுத்திற்று!
('புன்னகையையும்' என்பதில் 'யை' விட்டுப் போயிற்று என நினைக்கிறேன்.)

லவ்டேல் மேடி said...

ஆஹா... ஆஹா... அற்புதமான வர்னிப்புக் கவிதை...! அய்யா.. இது உங்களின் எத்தனாவது படைப்பு....???

ரேகா ராகவன் said...

கவிதை எழுதிய உங்கள் கையை இப்படி கொடுங்கள் குலுக்கிக் கொள்கிறேன்.

Chitra said...

”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு
ஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்
அடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.

....Lovely!

ஹேமா said...

குழந்தை வரைந்த ஓவியமா
கதிர் வரைந்த கவிதையான்னு கேக்கிறீங்க !

கலாநேசன் said...

கவிதையும் கண்களும் அழகு.

பத்மா said...

ஆஹா
கண்களால் பெரும் ஓவியம்
செய்து காட்டிடும் இந்த காவியம்

ஆ.ஞானசேகரன் said...

அருமை ரசித்தேன்

சத்ரியன் said...

கதிர்,

கண்களால் அழகியக் கவிதை.

க.பாலாசி said...

மையப்புபுள்ளியும் அதை வைச்சி வரைந்த வட்டமும் நல்ல கவிதையாக.. படமும் க்யூட்...

Anonymous said...

கவிதையின் வாயிலாய் வரையப்பட்டிருக்கு உங்கள் இரசனை கதிர்..கண் முன்னே கற்பனையாய் கொண்டு சென்றே ரசித்தேன் கவிதையை..

lakshmi indiran said...

என் பார்வை பசிக்கு கண்ணசைவு தீனியாய் இருந்தது...இதை விட அழகா வேறு எப்படி சொல்ல? செம

lakshmi indiran said...

சுட்டும் விழி சுடர்