தீபாவளியும் தீய்ந்த முறுக்கும்




வெய்யத்தாழ விறகடுப்புக்கூட்டி
விறகோடு விறகா 
விரல்களும் எரிய

இனிப்போ காரமோ
எண்ணைச் சட்டியில் விழும்
வியர்வைத்துளி ருசியோடு..
அத்தையைத் துணைக்கு வச்சு
அம்மாவும் பாட்டியும்
 

வெந்தும் வேகாமலும்
தீய்ந்தும் கருகியும்
சுட்டுச் சுட்டுப்போடும்
முறுக்கு, ஜிலேபி, லட்டுகளை

சுடச்சுடத் தின்று,
ஆறமர ஆறவைத்துத் தின்று
அக்கம்பக்கம் கொடுத்து
பாதிக்குமேல் பத்திரப்படுத்தி
பலநாள் தின்பதில்
ருசித்துக் கழியும்
தீபாவளி நோம்பி….

அடையாரோ
கிருஷ்ணாவோ
ஹால்திராம்ஸோ

வடிவாய் நறுக்கி 
வழவழ காகிதம் போர்த்தி
வண்ணப் பெட்டி
காற்றுப்புகா பையென
எடைபோட்டு வாங்கிவரும்
இனிப்பு காரங்களில்
தீய்ந்து போய்க்கிடக்கிறது
தீபாவளி ருசி!


_________________

22 comments:

vasu balaji said...
This comment has been removed by the author.
vasu balaji said...

பட்டாசுப் புகை நடுவில ஊதுவத்தி:)

பாட்டி பதில் கவுஜ எழுதினா இப்படி இருக்குமோ?

அதிகாலையில் எழுப்பிவிட்டு
அரையில் கோவணம் கட்டி
அறக்கி அறக்கி எண்ணெய் தேய்த்து
ஆவி பறக்க வெந்நீர் ஊற்றி
அடிவயிறோடு சேர்த்தணைத்து
அன்பாய்த் துடைத்த தலை
பாலையாய்க் கிடக்கிறது
பாழாப்போன ஷாம்பூ குளியலில்:))

தீஞ்ச முறுக்கையும்
திருடித் தின்னுப்புட்டு
இம்புட்டு வருஷமாயும்
எகத்தாளத்தப் பாரு எம்பேரனுக்கு:))

ஊடகன் said...

வணக்கம் மீனகம் வலைத்தள தரவரிசையில் உங்கள் வலைப்பூவினையும் பதிவு செய்யவும்.

http://meenakam.com/topsites/

பிரபாகர் said...

இனிமையாய் இருக்கு...

மத்தாப்பு கொளுத்தி
பட்டாசு வெடித்து
நண்பர்களை அழைத்து
நல்லகதை பேசி
இனிமையாய் கழித்தோம் அன்று...

இணையத்தில் மேய்ந்து
சேனலை மாற்றி
சோர்வினை சேர்த்து
சிறைபடுத்தி நம்மை
சுகத்தை இழக்கின்றோம் இன்று...

பிரபாகர்...

க ரா said...

ஏப்பி தீபாவளி :)

நிலாமதி said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

Unknown said...

நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

புது சொக்கா போட்டுகினு
புஸ்வானம் விட்டுகினு
புள்ளையோட விளையாடும்
புத்தான திருவிழா
வாழ்த்துகள்.

Unknown said...

என்னமோ போங்க தீய்ந்துதான் கிடக்கிறது இப்பத்திய தீவாளி..

வானம்பாடிகள் ஐயாவுக்கு ஒரு சபாஷ்..

பழமைபேசி said...

http://www.erodekathir.com/

வாழ்த்துகள்!

Muruganandan M.K. said...

"...வாங்கிவரும்
அழகான இனிப்பு காரங்களில் தீய்ந்து போய்க் கிடக்கிறது .."
நன்று.
தீபாவளி வாழ்த்துக்கள்

அன்பரசன் said...

//அம்மாவும் பாட்டியும் அத்தையைத் துணைக்கு வச்சுஒன்னு ரெண்டு தீய்ந்து, ருசி கூடக்குறையவெனசுட்டுப்போடும் முறுக்கு//

பின்னிட்டீங்க போங்க.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

தீய்ந்து போகாத நினைவுகள்..


பாட்டியோட எதிர்பாட்டு சூப்பர்!:))

ராமலக்ஷ்மி said...

சரியாச் சொன்னீங்க:)!

vasan said...

'வானம்பாடிகள், பிரபாகர்,Sethu'
மூவ‌ரும், கதிரின் க‌ள‌த்தில் தீபாவ‌ளிக் க‌விதை விதைத்து விட்டார்க‌ள்.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு...

'பரிவை' சே.குமார் said...

இனிமையாய் இருக்கு...

பழமைபேசி said...

ஈரைந்து ஆண்டுகள்
கழிந்து பிறந்து
இருந்தீரானால்
ஒப்புமையும் இல்லை;
ருசியும் இல்லை;
தீபாவளியும் இல்லை;
பட்சணப் பொட்டியும்
படப் பொட்டியுமே
தீபாவளி!!

க.பாலாசி said...

அதென்னமோ நெசந்தேன்...தீய்ஞ்சி போயிடுச்சோ என்னமோ தெரியல.. ஆனாலும் இனிப்பாயில்ல..


//வானம்பாடிகள் said...
பாலையாய்க் கிடக்கிறது
பாழாப்போன ஷாம்பூ குளியலில்:))//

க்கும்.. நமக்கு மட்டும் என்னவாம்..

க.பாலாசி said...

‘.com’க்கு வாழ்த்துக்கள்..

சத்ரியன் said...

//ஆவி பறக்க வெந்நீர் ஊற்றி
அடிவயிறோடு சேர்த்தணைத்து
அன்பாய்த் துடைத்த தலை
பாலையாய்க் கிடக்கிறது
பாழாப்போன ஷாம்பூ குளியலில்:))//

இது கவித...!

Thamira said...

பொருள் பழசானாலும், சொல்லிய விதம் நச்சென்று இருந்தது. ப்யூட்டிஃபுல் கவிதை.!

kavitha said...

அழகான இனிப்பு காரங்களில்தீய்ந்து போய்க் கிடக்கிறது தீபாவளி ருசி!//

அருமை