பகிர்தல் (22.11.2010)


சேமிக்காத மழை: 

எனக்குத் தெரிந்து இந்த ஆண்டுதான் தொடர்ந்து பல நாட்களாக நம் பகுதியில் இவ்வளவு மழை பெய்கிறதென்று நினைக்கிறேன். ஓரேயடியாய் பேய் மழையாய் இல்லாமல் அவகாசம் விட்டு அவ்வப்போது ஆர்பாட்டாம் இல்லாமல் பெய்துவருகிறது. சில பழைய சுற்றுச்சுவர் கட்டிடங்களில் கேரளா போல் பாசி பிடித்திருப்பதைக் காண முடிகிறது.

நகர்புறத்தின் நடுவே இருக்கும் சாக்கடைப் பள்ளங்களில் மழைநீர் கரை புரண்டோடி அக்கம் பக்கம் இருக்கும் குடிசைகளை இழுத்துச் செல்வதை என்றைக்கும் தடுக்க முடியாதது. காரணம், எல்லாக் குப்பைகளையும் சாக்கடைகளில் கொட்டி ஏதோ ஒரு இடத்தில் தேங்க வைப்பதுவும், மழை நீர் சேமிப்பு என்றால் அது எந்தச் சேனலில் வருகிறது என்பது போன்ற அக்கரையின்மையின் வெளிப்பாடே!. காங்கிரீட் காடுகளுக்குள் பெய்யும் மழையை துரத்தியடிப்பதில் இருக்கும் வேட்கை, நிலத்துக்குள் புகுத்தி சேமிக்கும் வள்ளமையை எந்த கண் துடைப்புச் சட்டத்தால் திணித்திட முடியும்!


மூச்சு முட்டும் பேச்சு :

ஒவ்வொரு முறையும் சாலைகளில் செல்லும் போது, கவனிக்கத் தவறாதது, இன்றைக்கு எத்தனை பேர் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். சராசரியாக 1 கி.மீ தூரம் செல்லும் சாலைகளில் எதிரில் வருபவர்கள், பக்கவாட்டில் இருப்பவர்கள், நடமாடுபவர்கள் எனக் கவனிப்பதில் குறைந்தது 30% பேர் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. பத்து வருடங்களுக்கு முன் பேசியதை விட போன் மூலமாக குறைந்தது பத்து மடங்காவது சராசரியாக பேசுகிறோம் என நினைக்கிறேன். அப்படிப் பேசிப்பேசி என்ன சாதித்தோம் என்பதுதான் தெரியவில்லை. சினுங்கும் போனைப் பார்த்தாலே அயர்ச்சி கூடுகிறது.

இதையும் கொஞ்சம் பாருங்களேன்…

 


நல்ல கேள்வி

எந்த அரசாங்கமும் இதுவரை வாங்காத அளவுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்திடம் குட்டு வாங்கிக் கொண்டிருக்கிறது. ம்ம்ம் குட்டு மட்டுமா!?

இன்றைய லேட்டஸ்ட் குட்டு….
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் (கேரளாக்காரர்!!!!) நியமன வழக்கில் நியமனம் குறித்த சீல் வைத்த கவரில் கோப்புகளை அளித்த அட்டர்னி ஜெனரலிடம் கவரைப் பிரிக்காமலே உச்ச நீதிமன்றம் கேட்கிறது ஊழலில் கைதாகி ஜாமின்ல வந்தவரை எப்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையரா போடுறீங்க

இலவச விளம்பரம்:

எங்கள் அரிமா சங்க இதழ் சுவடுகளின் இந்த வருட ஆசிரியர் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. இதுவரை இரண்டு இதழ்கள் வெளிவந்திருக்கிறது. இன்னும் மூன்று இதழ்கள் இருக்கின்றன. சொட்டும் கவிதைகள் பக்கத்தில் பதிவர்களின் கவிதைகளைப் பயன்படுத்தி வருகிறேன். குறுங்கவிதைகள் அனுப்ப விரும்பும் பதிவர்கள் எனக்கு மடலிடவும். ஏற்கனவே வலைப்பூவில் வெளியான கவிதையாக இருந்தாலும் சரி.

சுவடுகள் இதழ்களை வாசிப்பதற்கான சுட்டி சுவடுகள் - ஈரோடு சுப்ரீம் அரிமா சங்கம்

உயிர்களின் விலை :

ஈரோடு நகரத்தின் நான்கு முக்கியச் சாலைகளிலும் அகலமாக தடுப்புச் சுவர் கட்டிவிட்டார்கள். அந்தத் தடுப்புச் சுவர் எதிரெதிராய் வாகனங்கள் வரும், இடது வலது சாலையை பிரிப்பதற்கு என்பதைத் தாண்டி. விளம்பரப் பலகைகளி நடுவதற்கே என்பது போல் அவ்வளவு அகலம். அதுவும் மிக நெருக்கமாக நடப்பட்டிருக்கும் பலகைகளால் எதிர் சாலையில் வரும் வாகனங்கள் தெரியாமல், இடது பக்கச் சாலையிலிருந்து வலது பக்கம் திரும்பும் இரண்டு சக்கர வாகன ஓட்டுனர்கள் அவ்வப்போது அடிபட்டு வருவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. விளம்பரப் பலகை மூலம் வரும் காசு பணத்திற்கு முன் உயிரா முக்கியம் ((:

கொஞ்சம் ’கிறிச்’சுகள் (அட...... ட்விட்ஸ்ங்க)

தோல்விகள் துன்பங்கள் என வலிக்க வலிக்க சுயசரிதையில் எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது!

000000

நான்காவது ரவுண்டில் சேர்ந்த நண்பன் ராவா ஒரு புல் அடிப்பேன் எனச்சொல்ல, பாதி மப்பு காலி, ஒரு கிங்பிஷர்பீர் என ஆர்டர் செய்தபோது புல் மப்பும் காலி

000000


அரிசி, கோதுமை, பால் எதிலும் நினைச்ச இலக்கை அடைய முடியறதில்ல, தீபாவளிக்கு டாஸ்மாக் சேல்ஸ் 200+ கோடி டார்கெட் சொல்லி அடிக்கிறாங்க # பெருமை


000000


ஊழல் செய்பவர்கள், ஊழலில் அமைதிகாப்பதில்லை. அது குறித்து பேசும் போது ஒட்டுமொத்தமாய் அமைதி காக்கிறார்கள் # வாழ்க பணநாயகம்


000000


பீரையும், ஒயினையும் சேர்த்தா, முறைப்பெண்+மல்லிகைபூ மாதிரி செம காம்பினேசன் போல # பில்டப்பு


000000


இரண்டு திருமணமானவரோடு மாணவிஓட்டம்போலீஸ்வலைவீச்சு’- இன்னும் எத்தனை நாளைக்குத்தான்ஓட்டம்’ ‘வலைவீச்சுனே ஒப்பேத்துவீங்க  #வார்த்தைப் பஞ்சமோ


000000


குதூகலமாய், உற்சாகமாய் பேசவாவது செய்யும் பிரதமர் எப்போதான் கிடைப்பாங்க இந்தியாவுக்கு # பேராசை


000000


இந்தியாவில் உச்ச நீதி மன்றம் என்று ஒன்று இல்லாமல் போயிருக்கக் கூடாதா? # மன்மோகன்சிங்


000000சின்னக் குழந்தைகள் வீதிகளில் தீபங்களோடு. டிவிக்களிலிருந்து பிய்த்தெடுப்பதற்காக வேணும் இத்தருணங்கள் தொடரட்டும். # கார்த்திகை தீபம்


000000


RADIA னு பேர் வச்சதுக்குப் பதில் RADIO னு பேர் வச்சிருக்கலாம் # Niira Radia Tapes


00000029 comments:

சத்ரியன் said...

//குதூகலமாய், உற்சாகமாய் பேசவாவது செய்யும் பிரதமர் எப்போதான் கிடைப்பாங்க இந்தியாவுக்கு # பேராசை//

கதிர் ,

உங்க ஆசை நியாயமானது தான். நிறைவேறினா, எங்க ஊரு மாரியாத்தாவுக்கு பொங்கல் வெக்கிறேன்.

பழமைபேசி said...

வடை #1

சத்ரியன் said...

பிரபா,

இன்னிக்கும் மொத வடை !

பழமைபேசி said...

அதுக்குள்ள பொங்கல்!!!

சத்ரியன் said...

பழமையண்ணே,

ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டீங்களே!

சத்ரியன் said...

//அதுக்குள்ள பொங்கல்!!!//

நடுவில ஒரு மாசந்தானே அண்ணே இருக்கு!

அகல்விளக்கு said...

எல்லா மேட்டருமே தூள்....

thamizhan said...

இளமையாய்,சுறுசுறுப்பாய்,புத்திசாலித்தனமாய்,பேச்சில் நிதானமாய் ஒருத்தர் இருந்தார்,இருக்கிறார் ஸ்ரீபெரும்புதூரில் அடக்கமாக.

பிரபாகர் said...

//சத்ரியன் said...
பிரபா,

இன்னிக்கும் மொத வடை !
//

சந்தோஷம் சத்ரியன்... வெளியல வாக்கிங் போன சமயத்துல இடுகையிட்டு சத்ரியனுக்கு சாதகம் செய்த எங்கள் மேயர் கதிர்......
........
.......
.......
வாழ்க வாழ்க!...

பிரபாகர்...

ராமலக்ஷ்மி said...

நல்ல தொகுப்பு.

விளம்பரப் பலகைகள் அகற்றப்பட வேண்டியவை.

சொட்டும் கவிதைகளில் ஒருமுறை என் குறுங்கவிதையும். # நன்றி

#பேராசைக்கு ஏற்கனவே நான் தந்த பதில்:
“ஒபாமா டான்ஸ் ஆடினாலும் தப்பு. நம்ம ஆட்கள் சீரியஸா இருந்தாலும் தப்பு”:)!

//சின்னக் குழந்தைகள் வீதிகளில் தீபங்களோடு. டிவிக்களிலிருந்து பிய்த்தெடுப்பதற்காக வேணும் இத்தருணங்கள் தொடரட்டும். # கார்த்திகை தீபம்//

இது வெளியான அதே நேரம் கூகுள் ஸ்டேட்டஸ் ‘விஜய் டிவியில் பாலகுமாரன்’ # டிவி நேரம்

VELU.G said...

எதைச்சொல்றது எதை விடறதுன்னு தெரியல. எல்லா மேட்டருமே நல்லாயிருக்குங்க

கே.ஆர்.பி.செந்தில் said...

//“ஊழலில் கைதாகி ஜாமின்லவந்தவரை எப்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையரா போடுறீங்க”//
ஏற்கனவே ஊழல் செஞ்சவங்களே அமைச்ராகும்போது, ஒரு அதிகாரி வரக்கூடாதா என்ன ? நம்ம ஜனநாயகம் உயிரோடு இருக்கிறவரைக்கும் இதுக்கு மேலும் கூத்து நடக்கும்..

கிரிச்சுகள் அனைத்தும் நல்ல இருக்கு...

Sethu said...

கதிரின் சிறுகதிர் தொகுப்பு நன்றாக இருக்கு.

பணத்துக்காக வாழ்க்கையை தொலைத்தவன்:)) :(( said...

அடுச்சு தூள் கேலப்புறீங்க! அனைத்தும் அருமை....ஆமா நீங்க ஈரோட்ல எந்த ஊருன்னு தெருஞ்சுக்கலாமா கதிர்?

காமராஜ் said...

அலைபேசி குறித்த விமர்சனம் கவனிக்கப்படவேண்டியது கதிர்.
குடிக்கவும், அரட்டையடிக்கவுந்தான் சரியாப்போகுது நேர்மையன வருமானம்.
வீட்டுச்செலவுக்கு.....படிப்புக்கு..இருக்கவே இருக்கு தேசிய அவமானம்.

வானம்பாடிகள் said...

அட போங்கப்பா. இந்த மழைக்கு வீணானதை சானல் பண்ணியிருந்தாலே 2 வருசத்துக்கு காணும். ..அந்த குறும்படம்...ஹி ஹி. ரோட்ல சிந்தி கிடக்கற மோட்டார் ஆயில்ல சறுக்கியே எவ்ளோ பேரு போறாய்ங்க. அதுக்காக ஆயில் இல்லாம மோட்டர் ஓட்ட முடியுமா#கோணைக் கழுத்தோடு கொஞ்சிகிட்டே வண்டியோட்டுவோர் சங்கம்.
3. டிவிட்டருக்கெல்லாம் எப்புடிண்ணே டைம் கிடைக்குது.

4. அந்த பிரவு இங்க குறும்படம் பார்த்துட்டு மத்த இடுகையில குறும்படம் அருமை கதிர்னு போடுதே. நம்மூட்டு கலியாணத்துல சாப்புட்டு பக்கத்தூட்டுகாரனுக்க்கு மொய் எழுதுனா மாதிரி இல்லை. :)))

Mahi_Granny said...

நல்ல பகிர்வு கதிர்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

எல்லா மேட்டருமே நல்லாயிருக்கு

சத்ரியன் said...

// அந்த பிரவு இங்க குறும்படம் பார்த்துட்டு மத்த இடுகையில குறும்படம் அருமை கதிர்னு போடுதே. நம்மூட்டு கலியாணத்துல சாப்புட்டு பக்கத்தூட்டுகாரனுக்க்கு மொய் எழுதுனா மாதிரி இல்லை. //

இந்த கூத்தெல்லாம் நடக்குதா இங்க.?

வழிப்போக்கன் - யோகேஷ் said...

மழை நீர் சேகரிப்பு மிக அவசியமான ஒரு விசயம்,..........

லவ்டேல் மேடி said...

// சில பழைய சுற்றுச்சுவர் கட்டிடங்களில் கேரளா போல் பாசி பிடித்திருப்பதைக் காண முடிகிறது //
கேரளா அடிக்கடி போவீங்க போல.....


//“ஊழலில் கைதாகி ஜாமின்ல வந்தவரை எப்படி, ஊழல் கண்காணிப்பு ஆணையரா போடுறீங்க” //
இந்த ஜனநாயக நாட்டுல திருந்தறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கூட குடுக்ககூடாதா.....???


// எங்கள் அரிமா சங்க இதழ் சுவடுகளின் இந்த வருட ஆசிரியர் வாய்ப்பு எனக்கு கிட்டியுள்ளது. //
வாழ்த்துக்கள்... வாழ்க வளமுடன்...!! அப்போ கொஞ்சநாள் மேடைப் பேச்சுக்கு வழியில்லைன்னு நினைக்குறேன்..!


//விளம்பரப் பலகை மூலம் வரும் காசு பணத்திற்கு முன் உயிரா முக்கியம் ((: //
விளம்பர பலகைய நல்லா பாத்தீங்களா.... மக்கள் தொகை குறிப்பா பத்தின விளம்பரமா இருக்கும்...!


//தோல்விகள் துன்பங்கள் என வலிக்க வலிக்க சுயசரிதையில் எழுதும் வாய்ப்பு வெற்றி பெற்றவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது! //
சொம்பு ரொம்ப அடி வாங்கீருக்குதே......


// டாஸ்மாக் சேல்ஸ் 200+ கோடி டார்கெட் சொல்லி அடிக்கிறாங்க //
இதுல சேர் இஸ்யூ பண்ணுனா ரொம்ப சவுரியமா இருக்கும்.....


// அது குறித்து பேசும் போது ஒட்டுமொத்தமாய் அமைதி காக்கிறார்கள் //
எவ்ளோ அடுச்சாலும் தாங்குராங்கைய்யா ...... ரெம்போ நல்லவிங்க.....


//பீரையும், ஒயினையும் சேர்த்தா, முறைப்பெண்+மல்லிகைபூ மாதிரி செம காம்பினேசன் போல //
மப்பு எரங்குனதுக்கப்புரம் பெரும் தலைவலிதான் வரும்....


//குதூகலமாய், உற்சாகமாய் பேசவாவது செய்யும் பிரதமர் எப்போதான் கிடைப்பாங்க இந்தியாவுக்கு //
வருங்கால முதல்வர் ஈரோடு கதிர் ........ வாழ்க வாழ்க...... ( உங்கள விட குதூகலமான ஆளா யாரு கிடைப்பா... )//இந்தியாவில் உச்ச நீதி மன்றம் என்று ஒன்று இல்லாமல் போயிருக்கக் கூடாதா? # மன்மோகன்சிங்//
மண்ட கட்டு கட்டுனாலும் உச்சியில உக்காந்துகிட்டு ஆப்பா அடிக்குரானுங்கய்யா....

ஈரோடு கதிர் said...

@@ சத்திரியன்
பொங்களப்போ கெடாவும் வெட்டுங்க

@@ பழமை

யூ டூ ஃபார் வடை... அவ்வ்வ்வ்!

@@ அகல்
நன்றி ராஜா!

@@ தமிழன்
இஃகி!

@@ பிரபா
வாக்கிங்!!! ம்ம்ம் கலக்குங்க

@@ ராமலஷ்மி
நீங்க கார்த்திகை தீபம் வைக்கிறத விட்டுட்டு.. என்னோட ஜிடாக் ஸ்டேட்டஸ் பார்க்கறது தப்பில்லையாக்கும்..

எப்ப்ப்ப்பூடி!

@@ வேலு
நன்றிங்க

@@கே.ஆர்.பி.செந்தில்
நம்ம ஜனநாயகம் சூப்பருங்க

@@ சேது
நன்றிங்க

@@ ப.வ.தொ
பவானி பக்கம் ஒரு கிராமம்ங்க

@@ காமராஜ்
சரியாச் சொன்னீங்க

ஈரோடு கதிர் said...

@@ வானம்பாடிகள்
க்க்கும்
கோணக் கழுத்தோட கொஞ்சிக்கிட்டே ஆட்டோவுல போவோர் சங்கம்னு சொல்லுங்க

நீங்க பஸ்ல போற நேரத்துல நாம கொஞ்சம் கீச்கீச்னு கத்திக்கிறதுதானுங்க

@@ Mahi_Granny
நன்றிங்க. நல்லாயிருக்கீங்களா

@@ T.V.ராதாகிருஷ்ணன்
அய்யா... நன்றிங்க

@@ வழிப்போக்கன் - யோகேஷ்
அவசியமானதைத்தானே நாம செய்யறதில்லீங்க

@@ லவ்டேல் மேடி
ஆஹா, மேடி ரவுசு தாங்க முடியலையே!
மண்டக்கட்டு சூப்பர் மேட்டருங்க!

மோகன் குமார் said...

அருமை. டுவீடுகளும் ரசித்தேன்.

கவிதை அனுப்புறேன்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

super Kathir. Tamil font problem, thastsy...........

சே.குமார் said...

நல்ல பகிர்வு.
எனக்கும் குறுங்கவிதைகள் அனுப்ப ஆசை.... உங்க மெயில் ஐடி என்னண்ணா.

க.பாலாசி said...

உண்மையில் மழைநீர் சேகரிப்பு என்பது அவசியம். சமீபத்தில் மேலைநாடுகளில் எப்படியெல்லாம் மழைநீர் சேமிக்கிறார்கள், அவர்களின் தேவைகளை அதன்மூலம் எப்படி நிவர்த்திசெய்துகொள்கிறார்கள் என்று ஒரு கட்டுரை படித்தேன். இந்த விழிப்புணர்ச்சி இந்தியர்களுக்கும் வரவேண்டும். குறிப்பாக நகரவாசிகள்.

தாராபுரத்தான் said...

பகிர்தலுக்கு நன்றிங்க

நிலாமதி said...

மேலும்பல்லாயிரம்பதிவுகள் தர வாழ்த்துக்கள். கொழும்பு பயண நேர்முக அஞ்சல் மிக்வும் நன்று.