தீப்பற்றும் பொழுதுகள்



உறவுகள் கூடி குதூகலிக்கும்
ஊர்ப் பண்டிகைப் பொழுதுகளில்
ஒருவரையொருவர் கடக்க
பட்டும்படாத உரசல் மின்னல்கள்...

மொட்டைமாடி கைப்பிடிச் சுவரோரம்
மொத்த சொந்தமும் ஊர்க்கதை பேச
எதேச்சைபோல் நளினமான நகர்த்தலில்
விரல்களுக்கிடையே வெட்டும் மின்னல்கள்...

இதற்குமேல் இடமில்லையென
பாதிப் பந்தியில் பசியார்ந்து போக
’இன்னும் கொஞ்சம்’ என என் இயலாமைப்
பார்வையை தின்னும் விழியசைப்புகள்...

நெருங்கிய கடற்கரை நடைகளில்
தீண்டிப் பின் மணல் திருடும் அலையில்
பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற
பட்டென இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்...

-------------------------

37 comments:

vasu balaji said...

கதிர்ல கண்ணன் வந்துட்டாரோ. லீலைகள் அழகு:)

cheena (சீனா) said...
This comment has been removed by the author.
cheena (சீனா) said...

அன்பின் கதிர்

கண்ணன் பிறந்த நாளில் லீலைகள் புரிகிறானா - வானம்பாடியினை வழி மொழிகிறேன்- குறும்பான கவிதை கதிர் - அழகு சொட்டுகிறது - மின்னும் உரசல் - வெட்டும் மின்னல் - தின்னும் விழி - மணல் திருடும் அலை - தோள் பற்றும் கரங்கள்

பலே பலே - நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

இராகவன் நைஜிரியா said...

கவிதை ரொம்ப அழகா இருக்கு. அதனால் நோ கும்மி ஃபார் திஸ் கவிதை.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கதிரண்ணே.

ராமலக்ஷ்மி said...

என்ன அழகாய் பற்றுகிறது:)?

//மணல் திருடும் அலையில்பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற//

அருமை.

Paleo God said...

நல்லா இருக்குங்க கதிர். :)

அகல்விளக்கு said...

ஆஹா... கோகுடாஷ்டமி ஸ்பெசலா அண்ணா.....

சூப்பர்..

Kumky said...

ஓ...

'பரிவை' சே.குமார் said...

கவிதை அழகு..!

அருமை அண்ணா..!

க.பாலாசி said...

ரசனைக்கு பஞ்சம் வைக்காத கவிதை.. படிக்கப்படிக்க உள்ளார்ந்து இழுக்கும் வார்த்தைகள்...அதுவும் கடைசி பத்தி அருமை...

//எதேச்சைபோல் நளினமான நகர்த்தலில்
விரல்களுக்கிடையே வெட்டும் மின்னல்கள்//

அடடா...

*இயற்கை ராஜி* said...

இவர கேள்வி கேக்க ஆளே இல்லையா? ..

கவிதை நல்லா வேற இருக்கே... என்ன பண்றது:‍(

priyamudanprabu said...

கவிதை அழகா இருக்கு(எதிர் கவீதைஇ வாரும்மொ)

க.பாலாசி said...

//இயற்கை ராஜி* said...
இவர கேள்வி கேக்க ஆளே இல்லையா? ..
கவிதை நல்லா வேற இருக்கே... என்ன பண்றது:‍(//

அதனாலதானுங்க நானும் விட்டுட்டேன்... போனாப்போவுது விடுங்க...

க ரா said...

என்னென்னமோ வந்து எட்டிப் பாக்குது மனசுல.. இன்னிக்கு ஆபிஸ்ல அடிக்கடி சிரிச்சுகிட்டே இருக்க போறேன்... அவனவன் என்னயே லூஸுன்னு கன்பர்ம் பன்ன போறங்க.. இம்ம்ம்.. பின்றீங்க.... அடுத்த வருசத்துல இருந்து இந்த நாள கதிராஷ்டமின்னு மாத்திர வேண்டியதுதான்..

*இயற்கை ராஜி* said...

கவிதை நல்லா இருக்குகிறதுக்காக கடமை தவறா மாட்டேன்.. ம்ம்யூஜிக் ஸ்டார்ட்டட்...


ஏதோ பக்தில திருவிழாவுக்கு போற மாதிரி போயிட்டு அங்க போயி பண்ற வேலையப் பாரு

*இயற்கை ராஜி* said...

இதற்குமேல் இடமில்லை//


வயிறு என்னை வுட்டுடு ப்ளீஸ்ன்னு அழுவற வரைக்கும் விருந்துல ஃபுல் கட்டு கட்டிட்டு இங்க வந்து ஏதோ ஒரு அப்பாவிப் புள்ள தலைல போடறீங்களே..இது நியாயமா மேயர் அவர்களே

sakthi said...

ரசித்தேன்

நிஜமா நல்லவன் said...

சூப்பரேய்ய்ய்ய்ய்ய்...எதிர் கவுஜை இன்னுமா வரலை:))

*இயற்கை ராஜி* said...

சுவரோரம்மொத்த சொந்தமும் ஊர்க்கதை பேச//

அந்த சொந்தம் பேசறது எல்லாம் உங்க கதைதான்ன்னு தெரியாம தனியா ஒரு சினிமாவே நடத்திருக்கீங்களே.. நீங்க அவ்ளோ அப்பாவியா?

நிஜமா நல்லவன் said...

/
வானம்பாடிகள் said...

கதிர்ல கண்ணன் வந்துட்டாரோ. லீலைகள் அழகு:)/

சீக்கிரம் ஒரு எதிர் கவிதை போட்டு ஆட்டத்தை ஆரம்பிச்சி வைங்க...:)

*இயற்கை ராஜி* said...

பேசஎதேச்சைபோல் நளினமான நகர்த்தலில்விரல்களுக்கிடையே வெட்டும் மின்னல்கள்//

அவங்க கையில இருந்த மோதிரத்தை அடிக்க பிளான் போட்ட மாதிரியே எனக்கு தோணுதே..அப்பிடியா அண்ணா?

பா.ராஜாராம் said...

கதிர், ரொம்ப பிடிச்சிருக்கு. :-)

இன்னியாரத்துக்கு பேனா மூடிய கழட்டி இருப்பார், பாலாண்ணா. :-)

ஆ.ஞானசேகரன் said...

//பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற
பட்டென இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்
//

மிக அழகு

Unknown said...

இன்னும் கொஞ்சம் ,,, இன்னும் கொஞ்சம் ....

Anonymous said...

//’இன்னும் கொஞ்சம்’ என என் இயலாமைப்
பார்வையை தின்னும் விழியசைப்புகள்//

காதல் பேசிய வரிகள்

Anonymous said...

//பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற
பட்டென இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்//

எதார்த்தத்திலும் காதல் சொல்லும் வரிகள்

மதுரை சரவணன் said...

//கொஞ்சம் நெருங்கிய கடற்கரை நடைகளில்
தீண்டிப் பின் மணல் திருடும் அலையில்
பாதத்தின் கீழ் வந்த பள்ளத்தில் தடுமாற
பட்டென இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்
//

கவிதை அருமை. வாழ்த்துக்கள்

dheva said...

கதிர்....


கத்தி மாதிரி போட்டு இருக்கீக்க... எப்போ பற்றிக் கொள்ளும்மென்று..... பாதிருச்சுங்கண்ணாவ்,,,,,!

கலகலப்ரியா said...

உணர்வு மிக்கவை... நிதர்சனம் ஆதலால் பிடிச்சிருக்கு... (நானும் இலக்கியவாதி ஆயிட்டேன்..)

Chitra said...

ஆஹா... அழகு......... சூப்பர்!

VELU.G said...

கவிதை நல்லாயிருக்குங்க

இன்னும் நீங்க யூத்தாத்தான் இருக்கீங்க

vasan said...

//பட்டும்படாத உரசல்கள்..
விரல்களுக்கிடையே வெட்டும்...
பார்வையை தின்னும் விழியசைப்புகள்..
இறுக்கமாய் தோள்பற்றும் கைகள்.//
க‌விதையில் 'அது' ப‌டிப்ப‌டியாய், கொடிபோல் மெல்ல‌ வ‌ளர்ந்து,ப‌ட‌ர்ந்து இறுதியில் ப‌ற்றுகிற‌து இருக்க‌மாய்.

பழமைபேசி said...

எதிர் கவிதை இல்லாததற்கு கண்ணன் காரணமா??

சத்ரியன் said...

கதிர்,

வெய்ட் எ மினிட். என் போன்ல அண்ணியோட நெம்பர் இருக்குதான்னு பாத்துக்கறேன்.

அடப்பாவி மக்கா. அதிஷ்ட காத்து உம்பக்கமா அடிச்சிருச்சே. நெம்பரு காணமே அப்பு.

// காதல் கவிதை // மேட்டர நீங்க கையில எடுத்துக்கிட்டா , யூத்துங்க நாங்க எங்க போறது?

கவிதை சூப்பர்ணே!

காமராஜ் said...

பிடிச்சு கனகனவென்று எரிகிறது கதிர்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

அட நம்ம ஊரு! நன்றாக எழதுகிறீர்கள்..வாழ்த்துக்கள்..

மேலும படியுங்கள் நம்ம தலைவரைப பற்றி:

http://tamilkadu.blogspot.com

Unknown said...

மெளனமாக ஆமோதிப்பதை தவிர வேறு என்ன சொல்வது...