அவனும் அவளும்

அவன் 
சிணுங்கும் அலைபேசியை
செல்லமாய் எடுத்தணைக்க
யாரோ ஏதோ எதற்கோ பேச
தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக
அதிசயமாய் மிளிர்கிறது
அவள் பெயர்

அமிர்தச் சுவை தேடி அள்ளி
காது மடல் கவ்வ
கசப்பாய் விழுகிறது வார்த்தை

”அடடே, உனக்கு வந்திடுச்சா
மாத்தி பண்ணிட்டேனா”
துடிதுடிக்கத் துண்டிக்கிறான் இணைப்பை
கூடவே நம்பிக்கை நரம்பையும்
 
 

அவள் 
சிணுங்கும் இதயத்தை
செல்லமாய் தட்டி அமைதிப்படுத்தி
நின்று, நிதானமிழந்து அவன் எண் ஒத்தி
ஏதோ இணைப்பில் இருக்கும்
அவனைத் தொடமுடியாமல் துவண்டு
இன்னொரு முயற்சியில்
இணையும் இணைப்பில்

ஏங்கித்தவிக்கும் காது மடலோடு
இனிக்கும் அவன் குரல்தேட
பதட்டத்தில் உதடு உதறி பொய் உதிர்கிறது

”அடடே, உனக்கு வந்திடுச்சா,
மாத்தி பண்ணிட்டேனா”
துவண்டு துண்டிக்கிறாள் இணைப்பை
தோல்வி வலையில் இறுகப் பிணைந்தபடி




45 comments:

சத்ரியன் said...

அண்ணே,

அனுபவக்கவிதையோ..?

அம்சமா இருக்கு.

Chitra said...

அட, அட....அடடா.... ஹலோவில் ஒரு ஆஹா!

ஆரூரன் விசுவநாதன் said...

அய்ய்யய்யோ.......

காலங்கார்த்தாலேயே இப்படி ஓவரா..........தே.......

'பரிவை' சே.குமார் said...

அது சரி...

அனுபவமோ அண்ணா...

கவிதையில் காதல் வழிகிறது...?

நடக்கட்டும்... நடக்கட்டும்...

dheva said...

கவிதை அருமை கதிர்...

என்ன ஒண்ணு ....இன்னும் கொஞ்ச நேரத்தில வானம்பாடிகள் பாலா அண்ணண் எதிரு வரும்...அதுதான் பாத்துட்டு இருக்கேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

vasu balaji said...

ஏன் கதிரு! அந்த இன்கமிங்னு ஒருத்தன் இருக்கானே. அவந்தான் பிரச்சன பண்றானோ? அவன எறக்கிவிட்டாச் சரியாப்போயிரும். :)).

vasu balaji said...

நுணுக்கமான நுண் திரிவு நயமான கவிதை. (மாப்பூ! எப்பூடீ. நாமளும் தமிழ் கத்துக்குவோம்ல)

Kumar said...

Romba nalla irukku.. Aaana ithuku oru 10 ethir kavithai yavathu vanthirukanume!

க.பாலாசி said...

//வகை கவிதை, காதல்//

யூத்த்த்த்தாம்ம்ம்மா......

க.பாலாசி said...

//ஆரூரன் விசுவநாதன் said...
அய்ய்யய்யோ.......
காலங்கார்த்தாலேயே இப்படி ஓவரா..........தே.......//

அய்யா இப்ப மதியானம்....

க.பாலாசி said...

//சிணுங்கும் அலைபேசியை
செல்லமாய் எடுத்தணைக்க//

அதெல்லாம்மா அணைப்பீங்க...

க.பாலாசி said...

//தாமரை இலை தழுவும் நீராய்
ஒட்டாமல் பேசி ஓய்ந்து போக
அதிசயமாய் மிளிர்கிறது உன் பெயர்
அமிர்தச் சுவை தேடி அள்ளி
காது மடல் கவ்வ//

ப்ப்ப்ப்பியூட்டிஃபுல் லைன்ஸ்....

க.பாலாசி said...

//துடிதுடிக்கத் துண்டிக்கிறாய் இணைப்பை
கூடவே நம்பிக்கை நரம்பையும்//

கடக்கு கழுத வச்சிட்டேன்னு சந்தோஷமா செல்லத் தூக்கி தூரப்போடுறத விட்டுட்டு, நரம்பு கட்டாவுதாம்ல...

Anonymous said...

அப்படின்னா இப்படி , இப்படின்னா அப்படி. நல்லா இருக்கு

க.பாலாசி said...

//சிணுங்கும் இதயத்தைசெல்லமாய் தட்டி அமைதிப்படுத்து
நின்று,//

என்னாது ச்ச்ச்ச்சிணுங்கும்மா.... இதெல்லாம் நெம்ப ஓவரு... ஆமா....

//ஏதோ இணைப்பில் இருக்கும்
உன்னை தொடமுடியாமல் துவண்டு//

யாரு இந்த பொம்பளைங்களா...அடப்போங்க.. நல்லவேள மிஸ்டு கால் போயிருக்கும், கூப்பிடுவான்ட்டு கம்முன்னு இருக்கிற கூட்டமுங்க...

க.பாலாசி said...

//துவண்டு துண்டிக்கிறேன் இணைப்பை
தோல்வி வலையில் இறுக பிணைந்தபடி//

ம்ம்ம்ம்.... .என்னமோ போங்க...

நுணுக்கமான நுண் திரிவு நயமான கவிதை. (நாங்களும் சொல்லுவோம்ல...)

Unknown said...

நல்லாருக்கு..

பிரபாகர் said...

ஐ ஏம் வெரி சாரி... இதுக்கெல்லாம் பின்னூட்டம் போட முடியாது. எல்லாரும் சொல்ல வேண்டியத எல்லாம் மொத்தமா முன்னாலயே சொல்லிட்டாங்க! அதால இப்பாலிக்கு ஜூட்!

பிரபாகர்...

அன்புடன் அருணா said...

புதுப் பார்வை!

எல் கே said...

ennatha solla, nalla irukku

செல்வா said...

ஹய்யோ .. அருமை அண்ணா..!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

!!!!ஆஹா!!!

பா.ராஜாராம் said...

ஹலோ, கதிரு?..

பாலாண்ணாவா?

சாரி. பாலாண்ணாவான்னு நெனைச்சு கூப்பிட்டுட்டேன் கதிர் அண்ணா,

சாரி, பாலா.

சாரி, சாரி ..

கபாலாண்ணா!

VELU.G said...

நல்லாயிருக்குங்க

அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிச்சாச்சா

தேவன் மாயம் said...

கவிதை எதார்த்தம்!

அன்புடன் நான் said...

நல்லாயிருக்குங்க .... கதிரண்ணா.

க ரா said...

:)

Kumky said...

வழக்குறைஞர்கள்...வழக்கறிஞர்கள் ஆனதைப்போல.....கவிஞ்ஞர் ஆகீட்டீங்களே...கோப்.?

sakthi said...

”அடடே, உனக்கு வந்திடுச்சா
மாத்தி பண்ணிட்டேனா”
துடிதுடிக்கத் துண்டிக்கிறாய் இணைப்பை
கூடவே நம்பிக்கை நரம்பையும்


வித்தியாசமான கோணத்தில் கவிதை வரிகள்

ஹேமா said...

வித்தியாசமான பார்வையில் ஒரு கவிதை.நல்லாயிருக்கு கதிர்.

அகல்விளக்கு said...

ஏன் இப்படி....

100க்கு பண்ணிட்டீங்களோ....

மதுரை சரவணன் said...

கவிதை காதலிக்க வைக்கிறது...ஹாலோ...வாழ்த்துக்கள்

நசரேயன் said...

//நுணுக்கமான நுண் திரிவு நயமான
கவிதை.//

இதுவே கவிதை மாதிரி இருக்கு

நசரேயன் said...

எதிர் கவுஜ ஒண்ணையுமே காணும் !!!!

கலகலப்ரியா said...

||ஆரூரன் விசுவநாதன் said...
அய்ய்யய்யோ.......

காலங்கார்த்தாலேயே இப்படி ஓவரா..........தே.......||

அவ்வ்வ்... இந்தக் கொடுமையக் கேக்க நீங்களாவது இருக்கீங்களே...

பழமைபேசி said...

//தாமரை இலை தழுவும் நீராய்//

கலிகாலம் எல்லாம்.... குழவி இருக்கக் கல்லு ஆடுது? நிலையிருக்கப் படி ஏறுது?! வெளில ஒக்கார்றான்... உள்ள கக்கா போறான்... அந்த மாதர, நீர் இருக்கத் தாமரை இலை போயித் தழுவுதோ??

Jerry Eshananda said...

very innovative and sounds well.

Jerry Eshananda said...

kathir, you have made such a master piece,and multi dimentional too.

Unknown said...

என்னமோ நடக்குது உலகத்திலே..!!

Anonymous said...

கதிர் என்ன இது எல்லாம்....கணக்கு பண்ண இப்படி எல்லாம் வழியுண்டா? காதல் வழியும் காதல் கவிதை....ம்ம்ம்ம்ம்ம் அனுபவமா?
good technic go ahead ya.....

Thenammai Lakshmanan said...

அட்டகாசம்..

வால்பையன் said...

எனக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி பிரச்ச்னையெல்லாம் வர்றதேயில்ல!

பவள சங்கரி said...

நெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள்.

காமராஜ் said...

கதிர் .கவிதை நிகழ் கதை பேசுகிறது. சுடச்சுட.கூடவே மரபார்ந்த காதலையும் இணைத்துக்கொண்டு கொளுத்துங்க.

ரேவதி மணி said...

அழகான காதல் கவிதை.எல்லோரும் கேட்பது போல் தான் எனக்கும் கேட்க தோன்று கிறது.அனுபவகவிதையோ! அனுபவித்து எழுதி இருக்கிரீர்கள்.