கனவாகவே




பொறந்த ஏழாம் நாள் மூனுநாள் கூலிக்கு வாங்கினது
கருவாச்சி கருப்புன்னா கருப்பு  தொட்டா ஒட்டிக்கிற மாதிரி
பாட்டில் பாலும், பச்சப்புல்லும், நெறையப் பாசமும்
கொழுகொழுன்னு ஊர் கண்ணு ஒன்னாப் பட

மொத ஈத்து மூனு குட்டி புண்ணியத்துல
மூத்தவ குத்தவச்சதுக்கு மூனுவேள சோறு குண்டுமணியளவு தோடு
ரெண்டான் ஈத்து நாலு குட்டியில மிஞ்சுன மூனுல
சின்னவனுக்கு பழைய சைக்கிளு, படலுக்கு பதிலா தகரக் கதவு
மூனாம் ஈத்துல போட்ட நாலுகுட்டி
இருமியே செத்த புருசனுக்கு வாங்குன வைத்திய கடனுக்கும் வட்டிக்கும்


பெருத்த வவுறும், பெருந்தீனியும்
எப்படியும் இந்த ஈத்துல எனக்கு எதுனாச்சும் செய்வானு
மெதப்பா இருந்த நெனப்புல பொசக்கெட்ட மானம்
பொளிச்சுனு அடிச்ச மின்னலுல எறங்கி வந்த இடியில
கருகிப்போனது கருவாச்சி மட்டுமில்ல
இந்த பாழாப்போனவளோட கனாவும்தான்

___________________________________

44 comments:

*இயற்கை ராஜி* said...

நிதர்சனம்

Romeoboy said...

அருமையான வட்டார வழக்கு தலைவரே .. கலக்கல் ..

அகல்விளக்கு said...

அருமை அண்ணா...

நிதர்சனம்...

பழமைபேசி said...

//கொளுகொளுன்னு//

கொழுகொழுன்னு....

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

வட்டார வழக்கினிலே ஒரு அருமையான கவிதை - சிந்தனை நன்று

நல்வாழ்த்துகள் கதிர்
நட்புடன் சீனா

Unknown said...

////கொளுகொளுன்னு//

கொழுகொழுன்னு..//

கொளு கொளுன்னு எழுதுனதுல தப்பில்லைன்னு தோணுது. வட்டார வழக்குல அப்பிடித்தான சொல்லுவாய்ங்க?

sakthi said...

vattara valakil kavithai gud one!!!

க ரா said...

நல்லா இருக்குண்ணே.

ராமலக்ஷ்மி said...

கவிதைக்குள் இருக்கும் கதை நிதர்சனம்.

வட்டார சொல் நடை அழகு.

Unknown said...

ஏழைகள் இப்படிதான் வாழ்வில் கருகிப் போய்விடுகின்றனர்...

கவிதை வலி...

vasu balaji said...

//கருகிப்போனது கருவாச்சி மட்டுமில்ல
இந்த பாழாப்போனவளோட கனாவும்தான்//

ம்ம். இவளுக்கு ஆடு. இன்னொருத்தருக்கு ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. இப்படி கனவு கருகிய வாழ்க்கைதான் பெரும்பாலும். பேச்சாம் போக்குல புலம்புறது மாதிரியே இருக்கு. நடத்துங்க ராசா:)

dheva said...

கதிர்............


நெஞ்சில் அறையும் ஒரு உண்மை இது...! மனிதர்களின் பங்களிப்பை விட இந்த கால் நடைகளின் பங்களிப்பும் இருப்பும் இன்னும் கிராம வாழ்க்கையில் இன்றியமையாததாகத் தான் இருக்கிறது. மனிதன் இயற்கையை விட்டு விலக விலக.....உயிர்ப்பில்லாத ஒட்டுதல் விலகி....தனித்துப் போய் விடுகிறது...!

கடைசியில் வரிகளில் மனம் கனத்தது....கனத்ததாகவே இருக்கிறது.!

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு கதிர்!

விக்னேஷ்வரி said...

ஹேய், சூப்பர் கதிர்.

பிரேமா மகள் said...

அட.. ஊர் பாஷையில் ஒரு குறுஞ்கதை..

பின்னோக்கி said...

மனிதர்களின் வாழ்க்கைக்கு, பல நேரங்களில் விலங்குகளை ஆதாரமாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. இயற்கையும் அவருக்கு வில்லனாய் போயிற்று :(

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமையான கவிதை கதிர்.. எங்கோ கேள்விப்பட்ட வார்த்தைகள்... வறுமையின் வலி, கருப்பாச்சி என்று உரிமையோட அழைக்கும் அன்பு என்று சிறப்பான படைப்பு..

Paleo God said...

அடுத்த வீட்டுல் ஒரு மூதாட்டி. பெற்ற பிள்ளை காட்டாத பாசத்தை அவர் வளர்க்கும் ஆடுகள் காட்டுவதைப் பார்த்து வியந்து போகிறேன்..!

அருகிலிருந்து பார்த்த பின்பு உங்களுடையது படிக்கும்போது ம்ம்ம்..!

மதுரை சரவணன் said...

//பொளிச்சுனு அடிச்ச மின்னலுல எறங்கி வந்த இடியில
கருகிப்போனது கருவாச்சி மட்டுமில்ல
இந்த பாழாப்போனவளோட கனாவும்தான்//

அருமை. கவிதை வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

வட்டார வழக்கினிலே ஒரு அருமையான கவிதை - சிந்தனை நன்று.

கடைசியில் வரிகளில் கனத்தது மனம்.

சிநேகிதன் அக்பர் said...

யதார்த்தம் சார்!

பழமைபேசி said...

//வானம்பாடிகள் said...
//ம்ம். இவளுக்கு ஆடு. இன்னொருத்தருக்கு ஏதோ ஒரு எதிர்பார்ப்பு//

ஏன்? ஏன்??

அந்த இன்னொருத்தர் யாரு?? அவருக்கென்ன எதிர்பார்ர்பு.... அதையும் சொல்லிட்டு போகலாமே பாலாண்ணே??

சீமான்கனி said...

கவிப்பேரரசின் கருவாச்சி காவியம்...நினைவுகள்...நன்றி கதிர் அண்ணா...இன்று பிறந்தநாள் காணும் கவிப்பேரரசுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்...

பிரபாகர் said...

வறுமையில வாடுகிற
வக்கத்த எல்லாரும்
வருகின்ற கனவிலதான்
வசதியா இருந்திடலாம்...

கருவாச்சி கனவாக
காத்திருந்த அவ கதி
எரிகின்ற ஏழ்மையிலே
எண்ணையாய் விதித்துளிகள்...


பிரபாகர்...

அம்பிகா said...

//பொளிச்சுனு அடிச்ச மின்னலுல எறங்கி வந்த இடியில
கருகிப்போனது கருவாச்சி மட்டுமில்ல
இந்த பாழாப்போனவளோட கனாவும்தான்//

அருமை

Mahi_Granny said...

முதல் பத்து வரியில் அளவு கடந்த திருப்தி. கடைசி இரண்டு வரிகள் மின்னலோடு போனதில் மனசு கனத்து போகிறது

r.v.saravanan said...

கவிதைக்குள் உள்ள கதை மனதை வதை செய்கிறது கதிர்

vasan said...

உயிர்க‌ளில் க‌ல‌ந்த‌ உற‌வும்
மின்ன‌லில் கருகும் க‌ன‌வுக‌ளும்.
ம‌ன‌ம் க‌ல‌க்கும் கவிதையாய்.

http://rkguru.blogspot.com/ said...

ஏழ்மையை விளிக்கும் கவிகள் அருமை

பெசொவி said...

ஆடுகளும்
மாடுகளும்
கோழிகளும்
குறும் பறவைகளும்
வளர்ப்பது
அவை
வாழ்வதற்காக
அல்ல,
அவற்றை வைத்து
வாழ்வதற்காக!

என்ன ஒரு அற்புதக் கவிதை!
வாழ்த்துகள் கதிர்!

செல்வா said...

ஐயோ அப்படியே சிலிர்க்க வச்சுட்டேங்க அண்ணா ..
எங்க வீட்டுலயும் ஆடு இருக்கு .. !!

ஈரோடு கதிர் said...

@@ *இயற்கை ராஜி*
@@ ♥ RomeO ♥
@@ அகல்விளக்கு
@@ பழமைபேசி
@@ cheena (சீனா)
@@ முகிலன்
@@ sakthi
@@ இராமசாமி கண்ணண்
@@ ராமலக்ஷ்மி
@@ கே.ஆர்.பி.செந்தில்
@@ வானம்பாடிகள்
@@ dheva
@@ பா.ராஜாராம்
@@ விக்னேஷ்வரி
@@ பிரேமா மகள்
@@ பின்னோக்கி
@@ ச.செந்தில்வேலன்
@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
@@ மதுரை சரவணன்
@@ சே.குமார்
@@ அக்பர்
@@ seemangani
@@ பிரபாகர்
@@ அம்பிகா
@@ Mahi_Granny
@@ r.v.saravanan
@@ vasan
@@ rk guru
@@ பெயர் சொல்ல விருப்பமில்லை
@@ ப.செல்வக்குமார்

திரட்டிகளில் வாக்களித்த / பின்னூட்டத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகள்


இது அனுபவமா என்றும் கூட சிலர் கேட்டனர். எனக்கு நேரிடையான அனுபவம் இல்லை, அதேசமயம் கிராமத்தில் அவ்வப்போது உணரும் ஒரு சம்பவமே. இரண்டு நாட்களுக்கு முன் காரில் கிராமத்துக்கு போகும் வழியில் மிகக் கடுமையான இடிமழையில் ஒரு வீட்டு சுவரோரம் ஒட்டி நின்ற ஒத்தை ஆட்டை மனதில் தோன்றிய எண்ணத்தின் பகிர்வே இது

அன்புடன் நான் said...

கவிதை கனக்கிறது. (இது உண்மையில்லாது போக)

vasu balaji said...

//திரட்டிகளில் வாக்களித்த / பின்னூட்டத்தில் தங்கள் கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் மிகுந்த நன்றிகள் //

ங்கொய்யால. ஆடு கெடக்கு. இது என்னா கழுத தேஞ்சி கட்டெறும்பானா மாதிரி பேரு போட்டு நன்றி நன்றின்னு சொல்றதும் சுருக்கி, கடோசில ஒத்த வரி. அடுத்தது டிஸ்கிலயே போட்டு விட்டுறலாம்னா?:)). இதுல யூத்து யூத்துன்னு அலட்டலு வேற. நம்மள பாருடி! சளைக்க மாட்டம்ல:))

ரோஸ்விக் said...

நச்சுன்னு இருக்கு...

கார்த்திகைப் பாண்டியன் said...

அந்த முடிவு... கனம்..:-(((

க.பாலாசி said...

கிராமத்து மனிதர்களின் நிதர்சன வாழ்க்கையிது. ஆடு,மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள பிணைப்பு அளவிடமுடியாதது. அதுபோல் அதுகளிடமிருந்து கிடைக்கும் இப்படியான உதவிகளும்தான். கடைசியில் உடையச் செய்யும் இதுபோன்ற கனவும் அதுகள் தருவதே..

அருமையான கவிதை...

Thamira said...

கிராமியமும் கவிதையும் கலப்பது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சி. கருணாகரசு

நன்றி @@ வானம்பாடிகள்

நன்றி @@ ரோஸ்விக்

நன்றி @@ க.பாலாசி

நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்

பத்மா said...

attakaasam sir

Thenammai Lakshmanan said...

வலிக்கச் செய்த வரிகள் கதிர்

கிருத்திகாதரன் said...

செம வரிகள்.

Unknown said...

என்ன ஒரு அற்புதக் கவிதை...!!!
வாழ்த்துகள்...கதிர்!!!

Unknown said...

என்ன ஒரு அற்புதக் கவிதை...!!!
வாழ்த்துகள்...கதிர்!!!