கடவுளை முன்னிறுத்தி...
விதை விதைத்தான்
அறுவடை செய்தான்
அருள்வாக்கு சொன்னான்
ஆன்மீகத்தை விற்றான்
கம்பெனி ஆரம்பித்தான்
காதுகுத்திக் கெடாவெட்டினான்
பூசாரியாய் குறி சொன்னான்
சாதியாய் பிரிந்து நின்றான்
எதிரிக்கு சாபம் கொடுத்தான்
திருடனை மிரட்டினான்
குடம் குடமாய் பால் ஊற்றினான்
குடும்பமாய் மொட்டை போட்டான்
வேண்டுதல்கள் வைத்தான்
உண்டியலில் கொட்டினான்
கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்
_____________________________
51 comments:
ஹ ஹ ஹா
அருமை!
:-)
நல்லாருக்கு அண்ணா......
:-))
நல்ல சிந்தனை.
என்னைய மாதிரி ஆளுங்க போனா அதுலயும் துப்புவோமே!
அருமை..
ஓடியாங்க .. ஓடியாங்க கதிர் கவிதை போட்டு இருக்காரு.. எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க
கவிதை ரொம்ப அருமை.
கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்
..... நச்.
//எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க//
மன்னிக்கணும்....
அசத்தல் கவிதை
//குடும்பமாய் மொட்டை போட்டான்//
சும்மாப் பொய் சொல்லப்படாது.... வூட்ல இருக்குற பொம்பளை ஆட்களுமா?? இல்லை, அவங்களை குடும்பத்துல ஒருத்தரா நினைக்கலையா??
உங்களைப் படுத்துறதுன்னு முடிவு செய்தாச்சு... பதில் சொல்லுங்க மாப்பு, ப்தில் சொல்லுங்க.....
//////கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்////
சிரிப்பதா !
சிந்திப்பதா !
//படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
சாமியக் கொண்டாந்து அங்க வெக்கிற வரைக்கும் அங்கதான் துப்பிகிட்டு இருந்திருக்கிறீங்க... அடக் கடவுளே!
தாராவரத்து பழனிச்சாமி அண்ணன், பாலா அண்ணன் அல்லாரும் வாங்க, வந்து என்னன்னு கேட்டுப் போங்க சித்த!!
நல்லா இருக்குங்க...
லொள்ளப்பாரு:)
கதிர் ,உங்க கவிதை நாளளுக்கு நாள் நால்லாயிடே வருது.
என்னோட spoiler...
டைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்..
ஆனாலும் நான் துப்பினேன்....
திருவண்ணாமலை கோயிலுக்குள் நான் இந்த்தகய காரணங்கலுக்காக போவதே இல்லை.துப்பல் மட்டுமில்லை மற்ற எல்லாமுமே....
கதிர்...கடவுள் காப்பாத்துவார்...தெரியாதோ !
வற்புறுத்தலுக்கு இணங்கி, தாவல் இங்க இருக்கு!
ஆஹா கதிர் அண்ணே....ஓஹோ கதிர் அண்ணே...
இப்படி ஒரு கவிதையும் எழுதினான் :))
அடடா அங்க அபடியா. இங்க முட்டுச்சந்துல.
அண்ணன் அல்லாரும் வாங்க, வந்து என்னன்னு கேட்டுப் போங்க சித்த!!
// என்னுங்க?..
wav... Super.....
மிக அருமையான கவிதை. கடவுளை யாரவது காபற்றுங்களேன் ?
//கடைசியாக//ச் சொன்ன காட்சியை எங்கோ காண நேர்ந்ததில் பிறந்த கவிதை என்பது என் அனுமானம். சரிதானா?
:-D
Very nice!
ஹ ஹ ஹ ஹா
SUPER
நசரேயன் said...
ஓடியாங்க .. ஓடியாங்க கதிர் கவிதை போட்டு இருக்காரு.. எதிர் கவிதை போட சீக்கிரம் வாங்க
//
:))
எல்லாம் அவன் செயல்.
நல்ல இருக்கு நண்பா
//கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
அய்யோ பாவம்... நல்ல கவிதை...
கதிர்,
கடவுள் கவிதையின் முடிவு மட்டும் "நச்"
மற்றெல்லாம் 'நறுக். நறுக்..நறுக்'தான்.
வலி தாங்க முடியல்ல...
//கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
நச்.. ஆனாலும் பிரயோஜனமில்லை. கொஞ்சம் தள்ளி துப்பிட்டு போறாங்களே :-(((
நல்லாருக்கு கதிர்... (ஆனா காவலுக்கு காவல் வைக்கல போலயே... எடுத்துக்கிட்டு தாவிட்டாங்க போலயே)
கவிதை கலக்கல்.ஒவ்வொரு வரியும் அருமை.
//கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்//
அப்டியா....? இப்படி எல்லாமா நடக்குது..?
நல்லா இருக்கு ...!!!
http://palaapattarai.blogspot.com/2010/06/blog-post_24.html
ஹி ஹி..!
ம்.
ஹா ஹஹஹா.. நல்ல இருக்கு.. :-)
கொடுமைதான்... எங்க போய் முட்டிக்க?
சூப்பர்...
புரிந்தும் புரியாமல் .... அருமை
//குடம் குடமாய் பால் ஊற்றினான்//
எதிர் கவுஜைகளில்
குடம் குடமாய்
குவாட்டர்கள்..
மனதில் குப்பைகளை வைத்துக்கொண்டு... கடவுளை எங்கு வைத்தால் என்ன...
ஹா ஹா கவிதை நன்று கதிர்
பிடிக்காதவர் படத்தை மாட்டி “இங்கே துப்பவும்” என்று போடாமல் விட்டார்களே...நல்ல வேளை.
கடவுளைக் காவலுக்கு வைத்தால் அவனைக் கடவுள் பார்த்துகொள்வார்.
நாம் யார் கடவுளைக் காப்பாற்ற...?
வெகு நாட்களுக்கு முன் ஒரு நாளிதழில் படித்தது
மேலை நாடுகளில் நமது கடவுளின் உருவம் பொதித்த நவின கழிவரை சாதனங்கள் உருவாக்கப்படுகின்றன என்பது அந்த செய்திதாளில் நான் வாசித்தது
கவிஞர் அன்ரே சொன்னார் மனிதராய் பார்த்து திருந்தாவிட்டால்...ம்ம்கும்ம்ம்..
Post a Comment