வேறென்ன?


விடிய விடிய சேகரித்துப்
பாதுகாத்த கனவுப் பெட்டகம்
விடிந்ததும் காலியாக

*****

வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே

*****

எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு

*****

மலை உச்சியைப்
புணர்ந்து பிரியும்  மேகம்
விட்டுச் செல்கிறது குளிரை

*****

62 comments:

கலகலப்ரியா said...

nice... நல்லாருக்கு..

கலகலப்ரியா said...

||வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே||

எதிர்பாராததையும்...

கலகலப்ரியா said...

||எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு||

புது வடிவங்கள் பிடித்ததாலும் இருக்கலாம்ல.. ஹிஹி..

க ரா said...

நல்லா இருக்குங்க.

கலகலப்ரியா said...

||மலை உச்சியைப்
புணர்ந்து பிரியும் மேகம்
விட்டுச் செல்கிறது குளிரை||

இதுக்கு ரொம்ப அர்த்தம் தெரியுது.. (ஆனா உங்களுக்கு அந்த அர்த்தம் தெரிஞ்சிச்சா... :)))

Romeoboy said...

Super thala

AkashSankar said...

பிரிச்சு எடுத்துடீங்க வார்த்தைகளை...

பழமைபேசி said...

விழுந்து விழுந்து வாசித்த
இவரது இன்றைய இடுகை
புலப்படவே இல்லை பிழை!


இப்படிச் சொல்லலாம்தான்... எதுவும் கிடைக்கலைன்னா இருக்கவே இருக்கு ஒற்று!

//மணலை கலைத்து//

மணலைக் கலைத்து

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

மிக அருமை

பனித்துளி சங்கர் said...

/விடிய விடிய சேகரித்துப்பாதுகாத்த கனவுப் பெட்டகம்விடிந்ததும் காலியாக///


உண்மைதான்

vasu balaji said...

எல்லாம் அருமை! அந்த லாஸ்டு ஊட்டி அனுபவமாங்ணா? குளிர் விட்டுப் போச்சா:))

VELU.G said...

நான்கு கவிதைகளுமே அருமையான அர்த்தங்களுடன் சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது


//
வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே
//

ஒரு சின்ன கருத்து

வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது கால இறகு
எதிர்பாராததையே

இப்படி இருந்தால் புரிதல் இன்னும் சுலபமாக இருக்குமோ என்று தோன்றுகிறது

நன்றி

நசரேயன் said...

பால அண்ணே எதிர் கவிதை இல்லையா ?

பிரேமா மகள் said...

அட அட அட அட அட!

ஹேமா said...

கதிர்...புரட்டிப் பார்த்தால் ஒவ்வொன்றுக்குள் ஆயிரம் அர்த்தங்கள்.

க.பாலாசி said...

//விடிய விடிய சேகரித்துப்பாதுகாத்த கனவுப் பெட்டகம்விடிந்ததும் காலியாக//

இன்னும் கொஞ்சம் தூங்கியிருக்கலாம்..

//வாழ்க்கைப் பக்கங்களில்வரைந்து வைக்கிறது கால இறகு எதிர்பாராததையே//

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்.......

//எந்த வடிவமும் பிடிப்பதில்லை பாலை மணலை கலைத்துவிளையாடும் காற்றுக்கு//

காற்றுடன் விளையாடும் மணலுக்கும்..

//மலை உச்சியைப் புணர்ந்து பிரியும் மேகம் விட்டுச் செல்கிறது குளிரை//

பனிக்கருவினை புற்களுக்கு கொடுத்தபடியே...

sathishsangkavi.blogspot.com said...

//மலை உச்சியைப்
புணர்ந்து பிரியும் மேகம்
விட்டுச் செல்கிறது குளிரை//

இதற்கு பேர்தான் குளிர் விட்டுப்போச்சுன்னு சொல்றாங்களோ?

பா.ராஜாராம் said...

எல்லாமே நல்லாருக்கு கதிர்.

//எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு//

அற்புதம் இது!

vasu balaji said...

நசரேயன் said...

பால அண்ணே எதிர் கவிதை இல்லையா ?//

போட்டுட்டமில்ல:)). அதும் உங்களுக்கு கிருகிறுத்துப் போகுமே:))

கமலேஷ் said...

//
வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே //

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு நண்பரே...

வாழ்த்துக்கள்...

தொடருங்கள்...

அகல்விளக்கு said...

தனித்துச் சொல்ல முடியவில்லை...

அத்தனையும் அருமை...

RAMYA said...

கதிர் எல்லாமே நல்லா இருக்கு:)

ம்ம்ம்... ஒரே போட்டியா இருக்கே :)

RAMYA said...

//
வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே
//


ஆமாம்! கதிர் சரியா சொன்னீங்க :)
கால இறகு வார்த்தை அற்புதம் !!

RAMYA said...

//
பழமைபேசி said...
விழுந்து விழுந்து வாசித்த
இவரது இன்றைய இடுகை
புலப்படவே இல்லை பிழை!


இப்படிச் சொல்லலாம்தான்... எதுவும் கிடைக்கலைன்னா இருக்கவே இருக்கு ஒற்று!

//மணலை கலைத்து//

மணலைக் கலைத்து
//

கண்ணுலே விளக்கண்ணை ஊத்தி தேடுறது இதுதானா கதிர் :)

Chitra said...

எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு

.... அழகு.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Last two are my favorites :)

Very nice Kathir!

-priyamudan
seral

அன்புடன் அருணா said...

முடிவில்லாத வார்த்தை வேறென்ன?...அதையே பிரதிபலிக்கிறது கவிதை.

ராமலக்ஷ்மி said...

நல்ல கவிதைகள். எல்லாம் அருமை என்றாலும் இது அழகு:
//எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு//

யுக கோபிகா said...

காலம் மற்றும் இயற்கையை ஒட்டிய அருமையான் கவிதைகள் ..

பழமைபேசி said...

வேறென்ன?
பிறகென்ன??
கதிருக்கு எதிரு!!

நிலாமதி said...

கவி வரிகள் அருமை அத்தனையும் முத்துக்கள் போல. பாராடுக்கள்.

ILA (a) இளா said...

வேறென்ன?
பிறகென்ன??
கதிருக்கு எதிரு!!//

வேறென்ன?
பிறகென்ன??
அதுக்கென்ன?

க்திருக்கு எதிருக்கு எதிரு.

நாடோடி இலக்கியன் said...

//எந்த வடிவமும் பிடிப்பதில்லைபாலை மணலை கலைத்துவிளையாடும் காற்றுக்கு//

romba nallaayirukku.

priyamudanprabu said...

நல்லாருக்கு..

நேசமித்ரன் said...

//எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு//

நல்லாருக்குங்க கதிர் சார்

dheva said...

//விடிய விடிய சேகரித்துப்
பாதுகாத்த கனவுப் பெட்டகம்
விடிந்ததும் காலியாக
//

என்னோட சாய்ஸ் இது கதிர் சார்! நிறைய கனவுகள் ஏன் கலையுதுன்னு தோணுது....!

Jerry Eshananda said...

கடைசி இரண்டு செம கிளாஸ் கதிர்.

ஈரோடு கதிர் said...

@@ கலகலப்ரியா
நன்றி பிரியா
//புது வடிவங்கள் பிடித்ததாலும் இருக்கலாம்ல.. //

இருக்கலாம்

//இதுக்கு ரொம்ப அர்த்தம் தெரியுது.. (ஆனா உங்களுக்கு அந்த அர்த்தம் தெரிஞ்சிச்சா... :)))//

அடப்பாவிகளா


@@ இராமசாமி கண்ணண்
நன்றி கண்ணன்

@@~~Romeo~~
நன்றி ரோமியோ


@@ ராசராசசோழன்
நன்றி சோழன்


@@ பழமைபேசி
மாப்பு இன்னிக்கு நல்லாத் தூக்கம் வரும்ங்க

நன்றிங்க அன்புக்கு

@@ உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம்
நன்றி உலவு


@@ வானம்பாடிகள்
ஊட்டி... அவ்வ்வ்வ்
நன்றிங்கண்ணா

@@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர்
நன்றி சங்கர்

@@ VELU.G
நீங்கள் சொல்வதும் நன்றாக உள்ளது

நன்றி வேலு


@@ நசரேயன்
போட்டுட்டாருங்க நசரேயன்

@@ பிரேமா மகள்
நன்றி சுபி


@@ ஹேமா
நன்றி ஹேமா

@@ க.பாலாசி
கவிதையாய் பின்னூட்டம்
நன்றி பாலாசி


@@ இயற்கை ராஜி
வட போச்சா!!!


@@ Sangkavi
அப்படியும் இருக்கலாம் சங்கமேஸ்

@@ பா.ராஜாராம்
நன்றி பா.ரா


@@ கமலேஷ்
நன்றி கமலேஷ்

@@ அகல்விளக்கு
நன்றி ராஜா

@@ RAMYA
ஆமாங்க ரம்யா...

மாப்பு பூதக்கண்ணாடி வச்சி தேடினாரோ

நன்றி ரம்யா

@@ Chitra
நன்றி சித்ரா


@@ சேரல்
நன்றி சேரல்


@@ அன்புடன் அருணா

நன்றி அருணா


@@ ராமலக்ஷ்மி
நன்றி ராமலஷ்மி

@@ யுக கோபிகா
நன்றி கோபிகா

@@ நிலாமதி
நன்றி நிலா


@@ ILA(@)இளா
நடத்த்த்த்துங்க இளா
நன்றி

@@ நாடோடி இலக்கியன்
நன்றி பாரி

@@ பிரியமுடன் பிரபு
நன்றி பிரபு

@@ நேசமித்ரன்
நன்றி நேசன்

ஈரோடு கதிர் said...

@@ dheva
ஆமாங்க...
கரையும் கனவு ஒரு வலியே

நன்றி தேவா

@@ ஜெரி ஈசானந்தன்
நன்றி ஜெர்ரி

ராஜ நடராஜன் said...

இதைச் சுற்றித்தானா வானம்பாடி,பழமை வண்டுகள் சுற்றுகின்றனள:)

Paleo God said...

கலக்கல் கவிதைகள்! :))

Thenammai Lakshmanan said...

எந்த வடிவமும் பிடிப்பதில்லைபாலை மணலை கலைத்துவிளையாடும் காற்றுக்கு//

இதுதான் ரொம்ப அருமை..

Anonymous said...

நல்லா இருக்கு. இதை விட பழமை அண்ணனின் எதிர் பதிவு இன்னும் அருமை

தாராபுரத்தான் said...

எல்லோரும் ஒரு முடிவு பண்ணி கலக்கறீங்களே..

Thamira said...

ஒரிஜினல் இங்க இருக்குதா? அதானே பார்த்தேன்.

அழகழகான கவிதைகள் கதிர்.!

பின்னோக்கி said...

படிக்கும் சில நொடிகளில், யோசிக்க, ரசிக்க வைத்திருப்பது அழகு

Anonymous said...

சான்சே இல்ல :-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மலை உச்சியைப்
புணர்ந்து பிரியும் மேகம்
விட்டுச் செல்கிறது குளிரை
//
அருமை!

இந்தக் கவிதை எவ்வளவு பின் விளைவுகள ஏற்படுத்தி இருக்கு தெரியுமா?
:)

r.v.saravanan said...

நல்லா இருக்குங்க கதிர்

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ரொம்ப அருமையா இருக்குங்க.. ரெண்டு மூணு வாட்டி படிச்சுப் பாத்துட்டேன்.. எது ரொம்பப் பிடிச்சுதுன்னு பாக்க.. :)) முதலாமானது...

காமராஜ் said...

கதிர் உண்மையிலேயே
நிறைவாவும் சந்தோசமாகவும் இருக்கு. செம்மொழி மாநாட்டு நிகழ்வில் நீங்கள் இடம் பெறுவது.
வலை நண்பர்களுக்கு பெருமிதம்.

செந்தில்குமார் said...

வேறென்ன? சொல்ல
எதிர்பாராமல்
வாழ்க்கை பக்கங்களை
நிரைய புரட்டி
பார்த்திருப்பிங்க போலிருக்கே...

புலவன் புலிகேசி said...

யதார்த்தம்...

அம்பிகா said...

2 ம், 3ம் பிடிச்சிருக்கு.
||வாழ்க்கைப் பக்கங்களில்
வரைந்து வைக்கிறது
கால இறகு எதிர்பாராததையே||

இது ரொம்பவும்...

ஈரோடு கதிர் said...

@@ ராஜ நடராஜன்

மொத்தம் 7 வண்டுங்க

@@ 【♫ஷங்கர்..】
நன்றி ஷங்கர்

@@ thenammailakshmanan

நன்றிங்க


@@ சின்ன அம்மிணி


@@ தாராபுரத்தான்
நன்றிங்கண்ணா

@@ ஆதிமூலகிருஷ்ணன்
ஒரிஜினலவிட எதிர்கள் அழகாவும் இருக்குங்க ஆதி

@@ பின்னோக்கி
நன்றி பின்னோக்கி

புனிதா||Punitha
நன்றி புனிதா

@@ அத்திவெட்டி ஜோதிபாரதி
நன்றி ஜோ.பா

@@ r.v.saravanan
நன்றி சரவணன்

@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்..
மிக்க நன்றி

@@ காமராஜ்
மிக்க நன்றி தோழரே

@@ செந்தில்குமார்
ஆகா

@@ புலவன் புலிகேசி
நன்றி முருகவேல்

@@ அம்பிகா
நன்றிங்க

goma said...

எந்த வடிவமும் பிடிப்பதில்லை
பாலை மணலை கலைத்து
விளையாடும் காற்றுக்கு

யார் என்ரு பார்க்காமல் வீசும் காற்றுக்குக் கூட, பிடிக்கும் பிடிக்காது என்ற நிலை உண்டு போலிருக்கிறதே

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - அனைத்துக் குறுங்கவிதைகளூம் அருமை. மிக மிக இரசித்த்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - கனவுப் பெட்டகத்தில் இருந்த சேமிப்பு அத்தனையும் மனப் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கிறதே - எப்பொழுது வேண்டுமானாலும் பார்க்கலாம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - வாழ்க்கைப் பங்கங்களீல் அனைத்தையும் வரையாதா கால இறகுகள் ? கலகலப்ரியாவின் மறுமொழ்ப்படி எதிர்பாராததையும் என்றிருக்கலாமெ - அனைத்தையும் வரையும் என்று தான் நினைக்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - பாலாசி கூறியபடி காற்றுக்கு மட்டுமல்ல மணலுக்கும் பிடிக்காமல் இருக்கலாம் அல்லவா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

cheena (சீனா) said...

அன்பின் கதிர் - மலை உச்சி - புணர்தல் - மேகம் - விளைவு குளிர் மட்டும் தானா - மழை வெள்ளம் பனி இவைகள் எல்லாம் என்ன வாயிற்று ? இக்குறுங்கவிதையை எழுதும் போது மனதில் இருந்த சிந்தனை என்ன ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Unknown said...

ரசித்தேன் அருமை...