தினுசு தினுசா


வீட்டுக்குச் செல்லும் வழியில் உள்ள அந்தத் திரையரங்க வாசலில், வழக்கத்திற்கு மாறாய் சாலையை அடைத்துக் கொண்டு சலசலப்பாய் மக்கள் கூட்டம், இத்தனைக்கும் அது திரைப்படம் விடும் நேரம்கூட இல்லை, அத்தனை பேரும் மிக சுவாரசியமாக திரையரங்க வாசலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சுற்றுச் சுவர் உயரம் குறைவாக கட்டப்பட்டிருந்த, திரையரங்கு வாசலில் இரு நபர்கள் கூச்சலோடு தாக்கிக் கொண்டிருப்பதுவும், அவர்களைச் சுற்றி சிலர் விலக்க முற்படுவதும் தெரிந்தது. அந்த நேரம் திரையரங்கு வாசற்படியிலிருந்து இறங்கி வந்த உயரமான, வெள்ளை சட்டை மனிதர் ஒருவர் கெட்ட வார்த்தையில் திட்டிக்கொண்டே, என்ன ஏது என்று கேட்காமலேயே, வந்த வேகத்தில் சண்டை போட்டுக் கொண்டிருந்த ஒரு ஆளை ஓங்கி உதைத்தார். சில அடி தூரம் தள்ளி விழுந்தவனை, சட்டென நெருங்கி காலால் உதைக்க ஆரம்பித்தார்.

கீழே கிடந்த ஆள், உதைப்பவரை தடுக்க முயலாமல், திரும்ப திரும்ப ஏதோ பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. பேசுவியாடா ...@#$%என தொடர்ந்து உதைத்துக் கொண்டேயிருந்தார். ஒரு கட்டத்தில் தடுமாறி அருகில் நின்ற இரண்டு சக்கர வாகனத்தைப் பிடித்து எழுந்து நின்றவனை, அந்த வெள்ளை சட்டை மனிதன் பொம்பள மேல கை வப்பையாடாஎன சப்சப்சப் என கன்னத்தில் தொடர்ந்து அறைந்து கொண்டேயிருந்தார். அடி வாங்கிய ஆள் விழுந்த அடிகளைப் பற்றி சற்றும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. முதலில் அவனை அடித்த ஆளைச் சுட்டிக் காட்டி என்னவோ சொல்லிக் கொண்டேயிருந்தான்.

டேய், கயித்த எட்றா, போலிச கூப்ட்றா என வெள்ளைச் சட்டை ஆள் கட்டளை போட, ஒரு ஆள் சைக்கிளை எடுத்துக் கொண்டு மிக அருகில் இருந்த காவல் நிலையத்திற்கு ஓடினார், அதற்குள் கயிறு வந்தது இரண்டு பேர் பிடித்து நுழைவுச்சீட்டு அறைக் கம்பியில் கட்டினர். இதற்குள் தனது இடுப்பு பெல்ட் உருவியிருந்த வெள்ளைச் சட்டை, பெல்டில் விளாசத் துவங்கியது. அடுத்த சில நிமிடங்களில் அருகில் இருந்த காவல் நிலையத்தின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் பைக்கில் வந்திறங்கி, திரையரங்கு வாசலைப் பார்த்துக் கொண்டே, செல்போனை எடுத்து ஏட்டய்யா, கணபதியையும், முருகேசையும் வரச்சொல்லுங்கஎன்று பேசிக்கொண்டே உள்ள சென்றவரிடம், வெள்ளைச் சட்டை மனிதர் பாருங்க மேடம், பொம்பளை மேல கை வக்கிறானுங்க எனச் சொல்லும் போதே, அவரிடம் இருந்த பெல்ட்டை வாங்கிய சப் இன்ஸ்பெக்டர் ஓங்கி விலாசு விலாசினார். அடுத்த அடிக்கு பெல்ட் ஓங்கும் போதோ, யார் அந்தப் பொம்பள எனக் கேட்க, அது வரை அடி வாங்கிக் கொண்டிருந்தவன் மலர்ச்சியாய் சப்தமாய்ச் சொன்னான் “அதக் கேளுங்கம்மா மொதல்ல

அவுங்க உள்ள இருக்காங்க, இவரு அவங்க வீட்டுக்காரர்என முதன் முதலில் சண்டை போட்டுக் கொண்டிருந்த ஆளை வெள்ளைச் சட்டை கைகாட்ட, அந்த ஆள் பம்மினார்... சப் இன்ஸ்பெக்டர் ஓங்கிய பெல்ட்டை அடிக்காமல் கீழே இறக்கிகொண்டே ‘என்ன நடந்துச்சுஎன்றார்.

அம்மா, அதக்கேளுங்க முதல்ல, அடுத்து அந்த ஆள் அந்தப் பொம்பளையோட புருசன்தான்னு சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்என்றான் தெனவட்டாக.

இதுவரை தடுக்கக்கூட முயலாமல் அடிவாங்கியவன், இத்தனை தெம்பாக, தெனவட்டாக பேசுகிறான், என ஆச்சரியப்படும் போதே இரண்டு போலீஸ்காரர்கள் வண்டியில் வந்திறங்கினர்

யேய், என்ன சொல்றே என சப்-இன்ஸ்பெக்டர் கேட்க

வேணாங்ம்மா, அடிச்சவன ஒழுங்கா டிக்கெட் காச திருப்பி கொடுக்கச் சொல்லுங்க, அப்புறம் அடிச்சதுக்கு ஒடம்பு வலி போக மருந்து சாப்பிட காசு கொடுக்கச் சொல்லுங்க நான் போயிடறேன், இல்லாட்டி இத நிக்கிறானே அவனுக்குத்தான் ரொம்ப பிரச்சனை ஆகும் என கெத்தாகச் சொல்ல, புருசன் எனக் கை காட்டப்பட்ட அந்தஆள் வெளியே இருக்கும் கூட்டத்தோடு கலக்க முற்பட “இங்க வாய்யா என ஒரு போலிஸ்காரர் நகர்த்தி வர, அந்த ஆள் என்னென்னவோ உளறினார், இதற்குள் யாரோ அடிவாங்கியவன் கயிற்றை அவிழ்த்துவிட

“ஏய் உன்னாலதான் இத்தனையும் மரியாதை காசு குடு என அந்த புருசனிடம் அதிகாரமாய் காசு கேட்க, அந்த ஆள் பணத்தை எடுத்து நீட்ட, சப் இன்ஸ்பெக்டர் ஒரு மாதிரி முழிக்கும் போதே, இதெல்லாம் ஒன்னுமில்லீங்கம்மா, நீங்க போகச் சொன்னா இப்படியே ஓடிருவனுங் என்றான்.

சப் இன்ஸ்பெக்டர் என்ன பண்ணலாம் என வெள்ளைச் சட்டை ஆளை ஏறிட்டுப் பார்த்துக் கேட்க, வுட்டுத் தொலைக்கலாம்ங்மா, என்ன கருமாந்திரம்னு தெரியல

செரி நீ போ, அந்த திடீர் கதாநாயகனை (!!!) அனுப்பிவிட்டு, வெள்ளைச் சட்டையை நோக்கி என்னவோ திட்டினார், “இல்லீங்மா, கவனமா பார்த்துக்கிறம்ங்க, இனிமே இப்படி நடக்காதுங்மாஎன என்னவோ பவ்யமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.

“செரி முருகேஷ் கிளம்புங்க என்று போலீஸ்காரரிடம் சொல்லிக்கொண்டே தன் வண்டியை எடுக்க, சாலையில் அடைபட்டிருந்த கூட்டம் களைய ஆரம்பித்தது.

அடி பின்னி எடுத்த வெள்ளைச் சட்டை, என்ன ஏதென்று கேட்காமல் வந்த வேகத்தில் பெல்ட்டால் விளாசிய சப் இன்ஸ்பெக்டர், பணம் கொடுத்த ஆள், அலட்டிக்காமல் அடிவாங்கியதோடு போலிஸ் முன்னாலேயே வசூல் செய்து போன ஆள் என சில நிமிடங்களுக்குள் எத்தனை வகையான மனிதர்கள், தினுசு தினுசா திரிவாங்களோ.

அடிச்ச ஆளுக்கே கை வலிக்குமே, அடிவாங்கினவன் நிலை... ம்ம்ம், நாமதான் கவலைப்படனும் போல இருக்கு என நினைக்கும் போதே,  அந்த ஆளோ எதுவும் அலட்டிக்கொள்ளாமல், இன்னொரு ஆளின் தோளிள் கை போட்டுக் கொண்டே, டேய் மாப்ள, நாமெல்லாம் யாரு, இதெல்லாம் அரசியல்ல சகஜம்டா, ம்ம்ம்... சொல்லு சரக்கு என்ன வாங்கலாம், இந்நேரத்துக்கு எங்கடா கெடைக்கும் என அவன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தான்.

கிளம்பும் போது, எதேச்சையாக அந்த திரையரங்கில் என்ன படம் என போஸ்டரை பார்த்தேன், சுறா நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது. அடித்தவன், அடிவாங்கியவன், பணம் கொடுத்த புருசன் எல்லோருமே, இது வரைக்கும் நடந்ததற்கெல்லாம் ரொம்பவும் வொர்த் தானோ என ஒரு விநாடி மனதுக்குள் பிளாஷ் அடித்தது.

________________________________

30 comments:

வானம்பாடிகள் said...

அறியப்படும் நீதிகள்:

1.சுறாவையே தாங்குறவன் அடிதாங்க மாட்டானா?

2. ஆபீசு விட்டா நேர ஊட்டுக்கு போகாம பராக்கு பார்த்தது.

3. ஒரு பதிவரா ஆணாதிக்கத்துக்கு எதிரா ஒரு அடி கூட போடாம வந்து இடுகையப் போட்டாச்சு.

இராமசாமி கண்ணண் said...

அது எப்படிங்கனா ஒங்க கன்னுல மட்டும் இதுலாம் மாட்டுது.

பழமைபேசி said...

மாப்பு...நல்லாக் கோர்வையா எழுதி இருக்கீங்க... ஆனா, கீழ இருக்குற வரியில, இதுயெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்னு உங்களைச் சொல்லலை பாருங்க.... இஃகிஃகி!!!

//அடித்தவன், அடிவாங்கியவன், பணம் கொடுத்த ”புருசன்” எல்லோருமே, //

பழமைபேசி said...

ஆகா, மேல பாலாண்ணன் சொன்னதும் கேட்டதும் சரியோ சரி!!

ராசராசசோழன் said...

என்னையும் சில நிமிடங்கள் பராக்கு பார்க்க அழைத்து போனதற்கு நன்றி...உங்கள் பதிவு வழியாக...

Chitra said...

கிளம்பும் போது, எதேச்சையாக அந்த திரையரங்கில் என்ன படம் என போஸ்டரை பார்த்தேன், ”சுறா” நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது. அடித்தவன், அடிவாங்கியவன், பணம் கொடுத்த ”புருசன்” எல்லோருமே, இது வரைக்கும் நடந்ததற்கெல்லாம் ரொம்பவும் ”வொர்த்” தானோ என ஒரு விநாடி மனதுக்குள் பிளாஷ் அடித்தது.


........ ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... அய்யோ பாவம்னு ஒரு செகண்ட் நினைச்சேன்...... அப்புறம்........... ஹா,ஹா,ஹா,ஹா....

அம்பிகா said...

\\1.சுறாவையே தாங்குறவன் அடிதாங்க மாட்டானா?\\
அதானே..!

பத்மா said...

சரி அங்க நிஜம்மா எதனால சண்டைன்னு துப்பறிய கூடாதா ? அது தெரிய ஆவலாய் இருக்கு

Madumitha said...

அப்ப.. தியேட்டருக்கு வெளியே
சுவாரஸ்யமான படம்...

ச.செந்தில்வேலன் said...

//பழமைபேசி said...
மாப்பு...நல்லாக் கோர்வையா எழுதி இருக்கீங்க... ஆனா, கீழ இருக்குற வரியில, இதுயெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள்னு உங்களைச் சொல்லலை பாருங்க.... இஃகிஃகி!!!

//அடித்தவன், அடிவாங்கியவன், பணம் கொடுத்த ”புருசன்” எல்லோருமே, //
//

:)

ச.செந்தில்வேலன் said...

// பத்மா said...
சரி அங்க நிஜம்மா எதனால சண்டைன்னு துப்பறிய கூடாதா ? அது தெரிய ஆவலாய் இருக்கு
//


இது தான் சரியான காமெடி.. .. :)

நல்லா கவனிச்சிருக்கீங்க கதிர்..

*இயற்கை ராஜி* said...

:-)

Software Engineer said...

ஜோடியாக வருகிறவர்கள் எல்லாம் கணவன் மனைவி இல்லை! என்ன கொடுமை சார் இது? அவர்கள் எல்லாரையும் நூறு முறை அதே படத்தை பார்க்க வைப்பது தான் சரி!

ராமலக்ஷ்மி said...

பொருத்தமான தலைப்பு:)!

கும்க்கி said...

சரியா உங்க கண்ணுல மட்டும்தான் இதெல்லாம் படுது...எங்க போறாத காலம்..சரி..
குற்றம்... நடந்தது என்ன..?

அகல்விளக்கு said...

//வானம்பாடிகள் said...

அறியப்படும் நீதிகள்:

1.சுறாவையே தாங்குறவன் அடிதாங்க மாட்டானா?

2. ஆபீசு விட்டா நேர ஊட்டுக்கு போகாம பராக்கு பார்த்தது.

3. ஒரு பதிவரா ஆணாதிக்கத்துக்கு எதிரா ஒரு அடி கூட போடாம வந்து இடுகையப் போட்டாச்சு.
//

செம டைமிங்சு.....

அடிச்சு ஆடுங்க.....

தமிழ் வெங்கட் said...

புருசன்னு சொல்லப்ப்ட்டவன் பம்மினால்
அவன் ..ஏதோ தப்பு செய்யிரான்..

கோவையில் என்னாச்சு..?

ராம்ஜி_யாஹூ said...

I dont understand the incident, was it a cuckhold husband story (voyeurism type)

சி. கருணாகரசு said...

”டேய் மாப்ள, நாமெல்லாம் யாரு, இதெல்லாம் அரசியல்ல சகஜம்டா,//

இதெல்லாம் வாழ்க்கையில இயல்புதான்... .

ஆ.ஞானசேகரன் said...

இது ஒரு தினுசாதான் இருக்கு

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கடைசி வரைக்கும், யாருக்கு யார் என்ன வேனும்ன்னு தெரியாமலேயே, படத்தப் பாத்து முடிச்சு, விமர்சனமும் எழுதிட்டீங்க :)

மோகன் குமார் said...

ம்ம்ம். இப்படில்லாம் கூட நடக்குதா?

க.பாலாசி said...

//அந்த ஆள் அந்தப் பொம்பளையோட புருசன்தான்னு சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம்”//

அடக்கருமமே... இதெல்லாம் மெனக்கெட்டு பார்த்தீங்க பாருங்க.... நீங்க நெம்ப நல்லவருங்க....

ஆதிமூலகிருஷ்ணன் said...

ஒரே கொளப்பமா இருக்கே.. ஹிஹி.

♥ ℛŐℳΣŐ ♥ said...

சுறாவுக்கே தாங்கின பாடி பெல்ட்க்கு தாங்கமலா போகும் ..

thenammailakshmanan said...

பாலா் சார் சொன்னது ரிப்பிட்டூ..

thenammailakshmanan said...

பாலா் சார் சொன்னது ரிப்பிட்டூ..

காமராஜ் said...

//ஆபீசு விட்டா நேர ஊட்டுக்கு போகாம பராக்கு பார்த்தது.//

பாலாண்ணா
ரொம்பக் குசும்பு.

r.v.saravanan said...

தியேட்டருக்கு வெளியே
சுவாரஸ்யமான படம்

r.v.saravanan said...

தியேட்டருக்கு வெளியே
சுவாரஸ்யமான படம்