அத்தனையும் உணர்கிறேனடி




மோக வெப்பத்தில் களைத்து
காதல் நிழலில் மடி சாய
பொட்டென விழும் தேன் துளியாய்
உதட்டில் படியும் உன் உதட்டுச் சுவை..

உயிரின் அறைகளை உயிர்ப்பித்து
உறங்கும் சோம்பலைச் சுழற்றி வீச
தடு நீவும் உன் விரல்களில் உதிரும்
தொட்டெடுத்துதொடுத்த மல்லிகை வாசம்...

பட்டென விரியும் பச்சை மார்பில்
நுனி நாவால் கவிதை எழுதி
எச்சில் கொண்டு எழுத்துப்பிழை
களையும் இலக்கியச் சுவை...

கலந்து களைத்து நிதானித்து நிறைந்து
வியர்வைத் துளி பூத்து நிற்கும்
காது மடலோரம் ஒட்டாத எழுத்துகளில்
ஒளிந்து கிடக்கும் உன்மத்த வார்த்தை...


வேடத்தையும் வெட்கத்தையும் களைந்து
மௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்
அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி

~

38 comments:

vasu balaji said...

யப்பா! பேருக்கேத்தபடி மாப்பாத்தான் இருக்காரு. மப்பாவும் இருக்காரு போல.

/உயிரின் அறைகளை உயிர்ப்பித்து உறங்கும் சோம்பலைச் சுழற்றி வீசஉதடு நீவும் உன் விரல்களில் உதிரும்தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்.../

பலே!

பனித்துளி சங்கர் said...

/////பட்டென விரியும் பச்சை மார்பில்நுனி நாவால் கவிதை எழுதிஎழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டுசரிசெய்யும் இலக்கியச் சுவை...//////

வார்த்தைகளில் எதார்த்தம் எங்கும் நிறைந்து கவிதைக்கு அழகு சேர்த்து இருக்கிறது

க ரா said...

சூப்பர். நல்லா உரக்க விசில் அடிக்கலாம் போல்ருக்கு இந்த கவிதைய படிச்ச உடனே. அண்ணா கிளப்புங்.

நசரேயன் said...

//. மப்பாவும் இருக்காரு போல.//

அண்ணே என்ன சரக்குன்னு சொன்னா எனக்கும் உதவியா இருக்கும்

ரோகிணிசிவா said...

ம்

ஹேமா said...

மல்லிகை மணமாய் கவிதை.

சத்ரியன் said...

//கலந்து களைத்து நிதானித்து நிறைந்து
வியர்வைத் துளி பூத்து நிற்கும்
காது மடலோரம் ஒட்டாத எழுத்துகளில்
ஒளிந்து கிடக்கும் உன்மத்த வார்த்தை.//

கதிர்,

டாப்பு!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

//மப்பாவும் இருக்காரு போல.//

:)

Madumitha said...

ஒவ்வொரு வார்த்தையிலும்
காதல் சொட்டுகிறது.

சீமான்கனி said...

//உதிரும்தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்...//

//பட்டென விரியும் பச்சை மார்பில்
நுனி நாவால் கவிதை எழுதி
எழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டு
சரிசெய்யும் இலக்கியச் சுவை...//


அண்ணே...அருமையான ரசனையோடு சிறப்பா வந்திருக்கு...
அத்தனையும் உணரும் அழகிய கவிதை.....திரும்ப திரும்ப படிக்க தோணுது...

காமராஜ் said...

ஆஹா...
அவ்ளோதான்.

தூரத்திலிருந்து தான்
சொல்ல முடியும்.

அது தொத்திக்கொள்ளும்.

அன்புடன் நான் said...

யம்மாடியோ.....
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

அகல்விளக்கு said...

வாவ்...

சூப்பர்........

*இயற்கை ராஜி* said...

இப்பிடி சூப்பராவே எழுதினா எதிர் கவிதை எழுதாம என்ன பண்றது?:‍(

ஆரூரன் விசுவநாதன் said...

ம்ம்ம்ம்.....எல்லோரும் உங்களப் பாத்து ஏன் (ஊ)யூத்து ங்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது.........

குடந்தை அன்புமணி said...

புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641

தனி காட்டு ராஜா said...

//வேடத்தையும் வெட்கத்தையும் களைந்து
மௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்
அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி//

உங்கள என்னமோன்னு நெனச்சேன் .....காதல் ரசம் சொட்ட ..இல்ல இல்ல ..காதல் கடல் சொட்ட சொட்ட ஒரு கவிதை ....

dheva said...

அடிக்கடி போட்டோவை மாத்தும் போதே நினைச்சேன்... எங்கேயோ என்னவோ நடக்குதுன்னு! ஹா ஹா ஹா!


காதல் கொப்பளிக்கிறது கதிர் சார்! வாழ்த்துக்கள்!

சத்ரியன் said...

//ம்ம்ம்ம்.....எல்லோரும் உங்களப் பாத்து ஏன் (ஊ)யூத்து ங்கறாங்கன்னு இப்பத்தான் புரியுது........//

ஆ.வி,

எல்லாரும்னு சொல்றாங்கன்னு மொத்தமா சொல்லக்கூடாது. யூத்-துன்னு சொல்லிக்கிறாங்க.

சத்ரியன் said...

//காதல் கொப்பளிக்கிறது கதிர் சார்//

தேவா சார்,

//களைத்து நிதானித்து நிறைந்து
வியர்வைத் துளி பூத்து நிற்கும்//

இந்த வரிகளை கவனிக்காம சொல்லிட்டிங்க போல.

காதல் இப்பதான் களைச்சி இருக்குதாம்.

க.பாலாசி said...

//உதடு நீவும் உன் விரல்களில் உதிரும்
தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்...//

யப்பா..சாமீ ஆளவிடுங்க....

Thenammai Lakshmanan said...

காமராஞ் சொன்னதுதான்...ரிப்பீட்டு...))

வால்பையன் said...

வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?

Santhappanசாந்தப்பன் said...

நல்லாயிருக்கு!

VELU.G said...

//
வால்பையன் said...

வயசான காலத்துல இதெல்லாம் தேவையா?

//
ரிப்பீட்டு...........

பிரேமா மகள் said...

வயசாகிட்டாலே இப்படித்தான்...

விக்னேஷ்வரி said...

இஃகி இஃகி... ஈரோட்டுலேயும் வெயில் அதிகமா...

Mugilan said...

//
பட்டென விரியும் பச்சை மார்பில்
நுனி நாவால் கவிதை எழுதி
எழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டு
சரிசெய்யும் இலக்கியச் சுவை..//

அருமை அருமை!

prince said...

பட்டென விரியும் பச்சை மார்பில்
நுனி நாவால் கவிதை எழுதி
எழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டு
சரிசெய்யும் இலக்கியச் சுவை...///


இலக்கியச் சுவை???

Anonymous said...

அசத்தலா இருக்கு அண்ணா!

Riyas said...

அனைத்து வரிகளிலும் ஒருவித காதல்
ஒருவித மோகம்.... அருமை

r.v.saravanan said...

காதல் கவிதையின் வரிகள் அனைத்தும் அழகு கலக்குங்க கதிர்

ஈரோடு கதிர் said...

ரசித்த, பாராட்டிய, கருத்து(!!)ச் சொன்ன / கிண்டலித்த / திட்டிய (இஃகிஃகி... மட்டறுத்துட்டோம்ல)

அனைவருக்கும் நன்றி..

வயசான காலத்துல இது எதுக்கு / வெயில் அதிமாக / யூத்து... இப்படியெல்லாம் கிண்டல் பண்ணிவங்கதான் இந்தக் கவிதைய ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப்ப ரசிச்சாங்கன்னு........ ”உளவு சொல்லும் கினியாண்டிசாமி” சொல்லுச்சு.....

நெஜமாவா!!!!???

பழமைபேசி said...

//மட்டறுத்துட்டோம்ல//

அறுக்குறதா, உறுதுலா??

மட்டுறு(த்து)தல்===

மட்டு அப்படின்னா, நல்லது கெட்டதைப் பாக்குறது.

உறுதல் = அடைதல்...exist
உறுத்துதல்-- உறுதலை ஊக்குவித்தல்

Nathanjagk said...

அகநானூற்றுப் புலவரின் சைபர் அவதாரமா இது?
அசத்தல்!

அன்புடன் நான் said...

உயிர்க் காதலின் உணர்வு பட்டியல்...
நல்லாயிருக்கு. (மீண்டும் படித்தேன்)

ராமநாதன் said...

உதடு நீவும் உன் விரல்களில் உதிரும்தொட்டெடுத்து தொடுத்த மல்லிகை வாசம்...
பட்டென விரியும் பச்சை மார்பில்நுனி நாவால் கவிதை எழுதிஎழுத்துப்பிழைதனை எச்சில் கொண்டுசரிசெய்யும் இலக்கியச் சுவை...
வேடத்தையும் வெட்கத்தையும் களைந்துமௌனம் தொலைத்து திமிறும் அன்பில்,
தினவெடுத்த காதலில் அகலவிரித்த கைகளால்அள்ளி அணைக்க அத்தனையும் உணர்கிறேனடி

sir superb
very nice

panasai said...

கதிரண்ணே...
"உதட்டில் படியும்....
நுனி நாவால்.கவிதை எழுதி...
வேடத்தையும் வெட்கத்தையும் களைந்து.."
எப்படிண்ணே..!
அப்போ உங்களுக்கான, இப்போ என் போன்றோருக்கான கவிதை..
வியக்கும் கவிதை.. அருமை..