திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் சிக்கிஉயிருக்கு போராடிய நபரை, ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு அந்த வழியே சென்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர்திரு.சகாயம் IAS,தனது காரில் ஏற்றி காப்பாற்ற முயற்சித்த மனிதநேயத்திற்குகோடானுகோடி வணக்கங்கள். இந்த சம்பவத்தின் போது தமிழக அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் உடன் இருந்தாகவும் செய்தி.
ஆச்சர்யம்:
சென்னை அண்ணா பல்கலைக்கழக கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிடப் போயிருந்தேன். உணவு வகைகள் மிகத் தரமாக இருந்தது. சில நிமிடங்களில் உணவு வகைகள் கிடைத்தது. மிக முக்கியமானது உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல். உதாரணத்திற்கு இரண்டு பூரிகள் சேர்ந்து 7 ரூபாய், ஒரு முட்டைத் தோசை 9 ரூபாய், காபி 4.50 ரூபாய், இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது.
தற்காலிக அயர்ச்சி
தமிழ் வலையுலகத்தில் சண்டை சச்சரவு வரும் போதெல்லாம், வலையுலகத்தை விட்டு தற்காலிகமாக, நீண்ட காலமாக, குறுகிய காலமாக, ஐந்து மணி நேரத்துக்கு என சில படைப்பாளிகள், விடுப்பு எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ஒரு பிரச்சனையும், சிக்கலும் மனதிற்குள் படைப்பாக்கத்தை வீழ்த்திவிடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தமிழ் வலையுலகைப் பொருத்த வரையில், வருங்காலத் தலைமுறை வாசிக்க, நாம் மிகப் பெரியதொரு வெற்றிடத்தை இன்னும் நிரப்பாமலே காலியாக வைத்திருக்கிறோம். வலைப்பக்கத்தில் எழுதுவது வெறுமனே மனதிற்குள் இருக்கும் விசயத்தை இறக்கிவைக்கும் ஒரு இடம் என்ற மனநிலையிருந்தால் அதை சற்றே மீட்டி இன்னும் அழுத்தமாக எதையேனும் பதிந்துவிட்டுப் போவதுதான் வருங்காலத்திற்கு நாம் செய்யும் நல்ல காரியம்
இன்னும் தமிழில் எழுத நிறையப் பேரை ஊக்குவிக்க வேண்டிய நிலை இருக்கும் கட்டத்தில், நன்றாக எழுதும் சிலரே தங்கள் படைப்பாக்கத்திற்கு சிறை போடுவது சற்றே அயர்ச்சியைத் தருகிறது.
காமெடி
சென்னையின் புறநகர்களை கடக்கும் போது கவனித்தது, பெரும்பாலான சுவர்களில் பிரபல(!!!) அரசியல் தலைவர்கள் வித்தியாசமான வேடங்களில் போஸ் கொடுப்பது. விவசாயி, இராணுவத் தளபதி, கம்பெனி எக்ஸ்கியூட்டிவ், அந்தக் கால ராஜா, கிரீடத்தோடு என பல வேடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் கோணல் மாணலாய் நின்று கொண்டிருந்தார்கள். கொடுமை பழைய விசயகாந்த் படத்தில் வரும் மெசின்கன் துப்பாக்கி பொம்மையை வைத்துக்கொண்டு ஒருவர் ”சுட்டுப்புடுவேன்” என்பது போல் போஸ் கொடுத்ததைப் பார்த்து நீண்ட தூரம் சிரித்துக் கொண்டே வந்தேன்.
//திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை, ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு அந்த வழியே சென்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் IAS, தனது காரில் ஏற்றி காப்பாற்ற முயற்சித்த மனித நேயத்திற்கு கோடானுகோடி வணக்கங்கள்// மனித நேயம் என்பது இயல்பாகவே நம்முள் இருந்து கொண்டிருப்பது ....இதற்கு கோடானுகோடி வணக்கங்கள் வைக்கும் அளவுக்கு நாம் இப்போது சென்று விட்டோம் என்பது நாம் மனிதத்தை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்து விட்டோம் என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.
//சில படைப்பாளிகள், விடுப்பு விடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.//
எதைச் சொன்னாலும், அது பிரச்சினை ஆகும் போது சொல்லாமக் கம்முனு கீரதுதானே நியாயம்?? அதுக்கும் கள்ள மவுனம்னு சொல்வீக?? அடப் போங்கையா...நீங்களும் உங்க நியாயமும்!!
மிக முக்கியமானது உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல். உதாரணத்திற்கு இரண்டு பூரிகள் சேர்ந்து 7 ரூபாய், ஒரு முட்டைத் தோசை 9 ரூபாய், காபி 4.50 ரூபாய், இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது
//
கொடுத்து வச்சவங்க இன்னைக்கு காலைல நான் சாப்பிட்டது .... ஒரு பொங்கல் - 26 rs ( நாம வீட்டுல தோசைக்கு மாவு எடுப்பாங்களே அந்த அளவுல ஒரு முழு கரண்டி அப்பறம் அப்பறம் அறைக்கால் கரண்டி ) ஒரு வடை - 12 rs ஒரு காபி - 12 மனசு நிறையலை வயறு நிறையால ஆணா பாக்கெட் மட்டும் காலி :(
இது அசோக் நகர் ஹாட் சிப்ஸ் ல இதே சரவணா பவன் அப்படின பாஸ்ட் பூட் ல இன்னும் 20 rs அதிகம் ஆயிருக்கும் ரெஸ்டாரன்ட் ல 25 rs அதிகம் ஆயிருக்கும் . :( கேட்டா தரம் அப்படிங்கறாங்க குடிக்க தண்ணி கேட்டாலோ கொஞ்சம் சாம்பார் கேட்டாலே அவங்க மூஞ்சி போறதா பாக்கணுமே .வேற வழி இல்லைங்க சீக்கிரமா ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான் அப்படின்னு நினைச்சா நாங்க இப்ப தங்கிருக்க இடத்துக்கு வாடகை 12000 rs 3 பேரு பங்கு போட்டுக்கறோம் கல்யாணம் பண்ணின முழு வடக்கை வேற தரனும் அட போங்க என்ன வாழ்க்கையோ ... இப்படி சலிசுக்கற சமைதில எல்லாம் திரு சகாயம் மாரியான ஆட்கள் வாழ்க்கையை வாழ்த்து காட்டி இன்னுமு இருக்குனு சொல்லிட்டு போறாங்க ஆயாசம இருக்குங்க
(பன்னீர் செல்வம் பயந்து யாராவது 108க்கு அழைப்பாங்களான்னு வேடிக்கை பார்த்திட்டிருந்திருப்பாரு)
உணவு விலை - சகாயம்
பதிவுலகம் - கருத்தொத்து கருத்துகூற விரும்பவில்லை.
சுவர் - ஆமாம் கதிர்! என் ஆசான் வீட்டுக்கு போற வழியில ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த கண்றாவி சுவர் சித்திரங்களைப் பாத்துகிட்டுதான் போனேன். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன...?
//வலையுலகத்தை விட்டு தற்காலிகமாக, நீண்ட காலமாக, குறுகிய காலமாக, ஐந்து மணி நேரத்துக்கு என சில படைப்பாளிகள், விடுப்பு எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை//
ஆச்சர்யம்: சென்னை அண்ணா பல்கலைக்கழக கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிடப் போயிருந்தேன். உணவு வகைகள் மிகத் தரமாக இருந்தது. சில நிமிடங்களில் உணவு வகைகள் கிடைத்தது. மிக முக்கியமானது உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல். உதாரணத்திற்கு இரண்டு பூரிகள் சேர்ந்து 7 ரூபாய், ஒரு முட்டைத் தோசை 9 ரூபாய், காபி 4.50 ரூபாய், இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது// பிஸ்ஸிபெல்லாபாத்/சாம்பார் சாதம் இங்கெ அளவுக்கு ருசியா நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை
/////இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது.////
..... ஆச்சர்யம் மட்டும் இல்லை - அதிசயமும் கூட. :-)
//வலைப்பக்கத்தில் எழுதுவது வெறுமனே மனதிற்குள் இருக்கும் விசயத்தை இறக்கிவைக்கும் ஒரு இடம் என்ற மனநிலையிருந்தால் அதை சற்றே மீட்டி இன்னும் அழுத்தமாக எதையேனும் பதிந்துவிட்டுப் போவதுதான் வருங்காலத்திற்கு நாம் செய்யும் நல்ல காரியம்//
48 comments:
:))))
(For last one)
1. திரு.சகாயம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
2.ஆச்சரியந்தான். அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
3.யோசிக்க வேண்டிய விசயந்தான்.முயற்சிக்கிறேன்.
4.நீங்க இப்பதான் மொதமுறயா அந்தப்பக்கம் போயிருக்கீங்க போல!
மனிதம் இன்னும் மரித்து விடவில்லை என்பதை உயர்திரு. சகாயம் போன்றோர்கள் உணர்த்திக்கொண்டிருக்கிரார்கள்!
அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்!
இவரு ரொம்ப நல்லவரு. சீப்பா கிடைக்கறத மட்டும் சொல்லுவாரு. ஆட்ட்டோக்காரன் ஆட்டைய போடுற கதைய சொல்லுங்க பாஸ்.
ஆச்சர்யமா இருக்குன்னு சொல்லிட்டு சிற்றுண்டிய பெரிய அளவில் சாப்பிட்டதா சொல்லிக்கிறாங்க:))
இந்த சகாயம் சார் எப்புடி பேருக்கு ஏத்தாமாதிரியே இருக்காரு. பொதுவா நம்மூர்ல திக்குறவனுக்கு பேருதான் திருநாவுக்கரசுன்னு இருக்கும்:))
/வானம்பாடிகள் said...
இவரு ரொம்ப நல்லவரு. சீப்பா கிடைக்கறத மட்டும் சொல்லுவாரு. ஆட்ட்டோக்காரன் ஆட்டைய போடுற கதைய சொல்லுங்க பாஸ்./
ஆஹா...இந்த கதைய முதலில் சொல்லுங்க....எவ்ளோ அழுதீங்க:)))
//திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய நபரை, ஒரு விழாவில் கலந்து கொண்டு விட்டு அந்த வழியே சென்ற நாமக்கல் மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் IAS, தனது காரில் ஏற்றி காப்பாற்ற முயற்சித்த மனித நேயத்திற்கு கோடானுகோடி வணக்கங்கள்//
மனித நேயம் என்பது இயல்பாகவே நம்முள் இருந்து கொண்டிருப்பது ....இதற்கு கோடானுகோடி வணக்கங்கள் வைக்கும் அளவுக்கு நாம் இப்போது சென்று விட்டோம் என்பது நாம் மனிதத்தை விட்டு ரொம்ப தூரம் விலகி வந்து விட்டோம் என்ற உணர்வையே ஏற்படுத்துகிறது.
திரு.சகாயம் அவர்களைப் பற்றி நாள்தோறும் நாளிதழ்களில் படிக்கும் செய்திகள் யாவும் வியப்புடன் கூடிய மகிழ்ச்சியை ஏற்படுத்துவது உண்மைதான் நண்பரே..
//கொடுமை பழைய விசயகாந்த் படத்தில் வரும் மெசின்கன் துப்பாக்கி பொம்மையை வைத்துக்கொண்டு//
:)) இப்போதான் அந்தப் பக்கம் பயணமா?
//இந்த சம்பவத்தின் போது தமிழக அமைச்சர் திரு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வமும் உடன் இருந்தாகவும் செய்தி.//
அடடா... ஆச்சர்யமா இருக்கே...
என்னது ரெண்டு பூரி 7 ரூவ்வ்வ்வ்வாய்யா !!!! ஆத்தாடி....
//வானம்பாடிகள் said...
இவரு ரொம்ப நல்லவரு. சீப்பா கிடைக்கறத மட்டும் சொல்லுவாரு. ஆட்ட்டோக்காரன் ஆட்டைய போடுற கதைய சொல்லுங்க பாஸ்.//
ஆமா... சொல்லுங்க பாஸ்ஸு....
வணக்கம் கதிர்!
நல்ல பகிர்வு. :-)
பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
ஈரோட்டுச் சூரியனார்க்கு வணக்கம்!
//சில படைப்பாளிகள், விடுப்பு விடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.//
பொருட்பிழை! விடுப்பை விடுவது நல்லதுதானே? விடுப்பை எடுப்பதுதான் வாசகர்களுக்கு இழப்பு?!
இஃகிஃகி!!
//சில படைப்பாளிகள், விடுப்பு விடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.//
எதைச் சொன்னாலும், அது பிரச்சினை ஆகும் போது சொல்லாமக் கம்முனு கீரதுதானே நியாயம்?? அதுக்கும் கள்ள மவுனம்னு சொல்வீக?? அடப் போங்கையா...நீங்களும் உங்க நியாயமும்!!
மிக முக்கியமானது உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல். உதாரணத்திற்கு இரண்டு பூரிகள் சேர்ந்து 7 ரூபாய், ஒரு முட்டைத் தோசை 9 ரூபாய், காபி 4.50 ரூபாய், இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது
//
கொடுத்து வச்சவங்க இன்னைக்கு காலைல நான் சாப்பிட்டது ....
ஒரு பொங்கல் - 26 rs ( நாம வீட்டுல தோசைக்கு மாவு எடுப்பாங்களே அந்த அளவுல ஒரு முழு கரண்டி அப்பறம் அப்பறம் அறைக்கால் கரண்டி )
ஒரு வடை - 12 rs
ஒரு காபி - 12 மனசு நிறையலை வயறு நிறையால ஆணா பாக்கெட் மட்டும் காலி :(
இது அசோக் நகர் ஹாட் சிப்ஸ் ல இதே சரவணா பவன் அப்படின பாஸ்ட் பூட் ல இன்னும் 20 rs அதிகம் ஆயிருக்கும் ரெஸ்டாரன்ட் ல 25 rs அதிகம் ஆயிருக்கும் . :( கேட்டா தரம் அப்படிங்கறாங்க குடிக்க தண்ணி கேட்டாலோ கொஞ்சம் சாம்பார் கேட்டாலே அவங்க மூஞ்சி போறதா பாக்கணுமே .வேற வழி இல்லைங்க சீக்கிரமா ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான் அப்படின்னு நினைச்சா நாங்க இப்ப தங்கிருக்க இடத்துக்கு வாடகை 12000 rs 3 பேரு பங்கு போட்டுக்கறோம் கல்யாணம் பண்ணின முழு வடக்கை வேற தரனும் அட போங்க என்ன வாழ்க்கையோ ... இப்படி சலிசுக்கற சமைதில எல்லாம் திரு சகாயம் மாரியான ஆட்கள் வாழ்க்கையை வாழ்த்து காட்டி இன்னுமு இருக்குனு சொல்லிட்டு போறாங்க ஆயாசம இருக்குங்க
//இவரு ரொம்ப நல்லவரு. சீப்பா கிடைக்கறத மட்டும் சொல்லுவாரு. ஆட்ட்டோக்காரன் ஆட்டைய போடுற கதைய சொல்லுங்க பாஸ்//
நம்ம மூளைக்கு எட்டாம போச்சே!
(இனிமே மொட்டையடீச்சவது மண்டையில வெயில் பட வைக்கனும். அப்பதான் மூளை வேலை செய்யும் போல.)
\\விடுப்பு விடுவது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை.\\
உங்களுக்கே அயர்ச்சி வரும்போது அவர்கள் விடுப்பு விடுவது நியாயமே.:))
நல்ல பகிர்வு.
கடைசியில் அந்தச் சிரிப்பு எங்களையும் தொற்றிக் கொண்டது:)!
சகாயம் - மனித மாண்புகள் சகாயமாய் இருப்பதால் தானோ?
(பன்னீர் செல்வம் பயந்து யாராவது 108க்கு அழைப்பாங்களான்னு வேடிக்கை பார்த்திட்டிருந்திருப்பாரு)
உணவு விலை - சகாயம்
பதிவுலகம் - கருத்தொத்து கருத்துகூற விரும்பவில்லை.
சுவர் - ஆமாம் கதிர்! என் ஆசான் வீட்டுக்கு போற வழியில ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு இந்த கண்றாவி சுவர் சித்திரங்களைப் பாத்துகிட்டுதான் போனேன். திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன...?
பிரபாகர்...
//வலையுலகத்தை விட்டு தற்காலிகமாக, நீண்ட காலமாக, குறுகிய காலமாக, ஐந்து மணி நேரத்துக்கு என சில படைப்பாளிகள், விடுப்பு எடுப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை//
யாருங்க அந்த தற்காலிகம்...
பிரபாகர்...
நல்ல பகிர்வு
\\திரு.சகாயம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.\\
பகிர்தல் அருமை..
ஹ்ம்ம்.. இதுக்கு எதிர் பதிவு எழுதறது எப்டின்னு தெரிலியே
ஆச்சர்யம்:
சென்னை அண்ணா பல்கலைக்கழக கேண்டீனில் காலை சிற்றுண்டி சாப்பிடப் போயிருந்தேன். உணவு வகைகள் மிகத் தரமாக இருந்தது. சில நிமிடங்களில் உணவு வகைகள் கிடைத்தது. மிக முக்கியமானது உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல். உதாரணத்திற்கு இரண்டு பூரிகள் சேர்ந்து 7 ரூபாய், ஒரு முட்டைத் தோசை 9 ரூபாய், காபி 4.50 ரூபாய், இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது//
பிஸ்ஸிபெல்லாபாத்/சாம்பார் சாதம் இங்கெ அளவுக்கு ருசியா நான் எங்கேயும் சாப்பிட்டதில்லை
பகிர்தல் நல்லாயிருக்கு
திரு.சகாயம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
ஐாடை மாடையா சொல்லியிருக்கீங்க..புரிந்தவங்க புரிஞ்சுங்க..
ஆழமில்லை...
:(
கதிர் பகிர்தல் நல்லாயிருக்கு
திரு சகாயம் அவர்களுக்கு பாராட்டுக்கள்
நானும் சென்னை அண்ணா பல்கலைகழக கான்டீன் லே சாப்பிட்டிருக்கிறேன்
வியந்திருக்கிறேன்
நீங்க சென்னை வந்ததை சொல்லவேயில்லை
சொல்லியிருந்தால் வந்து பார்த்திருப்போமே
1. திரு.சகாயம் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.
2.ஆச்சரியந்தான். அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
3.முயற்சிக்கிறேன்.
4.நீங்க இப்பதான் மொதமுறயா அந்தப்பக்கம் போயிருக்கீங்க போல!
:)
அப்ப...நீங்க சாப்பிட்டது ரெண்டு பூரி,ஒரு முட்டை தோசை,[கொஞ்சம் ஓவரா இல்ல.?]
Blogger வானம்பாடிகள் said...
// இந்த சகாயம் சார் எப்புடி பேருக்கு ஏத்தாமாதிரியே இருக்காரு. பொதுவா நம்மூர்ல திக்குறவனுக்கு பேருதான் திருநாவுக்கரசுன்னு இருக்கும்:)//
பாலாண்ணா ஆரம்பிச்சிட்டீங்களா.. சிரிச்சு சிரிச்சு தீரல.
கதிர் வணக்கம்.
நல்ல பகிர்தல். நெகிழ்ச்சி.
//திக்குறவனுக்கு பேருதான் திருநாவுக்கரசுன்னு//
இது சூப்பரு வானம்பாடிகள் ஐயா..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்தும் உங்களைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. செல்பேசியில் அழைக்கிறேன்.
1. பாராட்டுகள்
2. பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்.
3. முயற்சி செய்கிறேன்.
4. நான் இதுவரை பார்த்ததில்லை.
நல்ல பகிர்வு.
கதிர்,
நான் அண்ணா'ல படிக்கும் போதே விலை எல்லாம் கம்மி தாங்க. ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிகம்..
கலெக்டர் சகாயம் ... இப்படியே இருக்க வேண்டும்..
சென்னைல எனக்கு பேருந்தில் செல்லும் போது பொழுதுபோக்கே..போஸ்டர வேடிக்கை பார்ப்பது தான் :))
/////இது போல் எல்லாமே ஆச்சரியப் படும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இருந்தது. சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது வயிறு மட்டுமல்ல, மனதும் நிறைவாக இருந்தது.////
..... ஆச்சர்யம் மட்டும் இல்லை - அதிசயமும் கூட. :-)
திரு.சகாயம் நிச்சயம் நெகிழச் செய்து விட்டார். பகிர்விற்கு நன்றி
சென்னை ட்ரிப் அடிச்சிட்டு வந்திருக்கீங்களா...
நல்ல பகிர்தல் கதிர்.
திரு. சகாயம் நீண்ட நாள் வாழ வேண்டும்.
எப்போ சென்னை வந்திட்டு போனீங்க..?
சகாயம் வரலாற்றில் முக்கிய நபராக அறியப்படுவார் என்பது என் நம்பிக்கை!
நல்ல பகிர்வு. :-)
//வலைப்பக்கத்தில் எழுதுவது வெறுமனே மனதிற்குள் இருக்கும் விசயத்தை இறக்கிவைக்கும் ஒரு இடம் என்ற மனநிலையிருந்தால் அதை சற்றே மீட்டி இன்னும் அழுத்தமாக எதையேனும் பதிந்துவிட்டுப் போவதுதான் வருங்காலத்திற்கு நாம் செய்யும் நல்ல காரியம்//
சரியான சாட்டையடி அங்கிள்..
அன்பின் கதிர்
நாமக்கல் ஆட்சியர் திரு சகாயம் அவர்களைப் பற்றிய நல்ல செய்திகள் பலவும் வருகின்றன. நன்று நன்று - நல்லவர்கள் நீடு வாழ நல்வாழ்த்துகள்
பகிர்வினிற்கு நன்றி கதிர்
நட்புடன் சீனா
இந்த சகாயம் சார் எப்புடி பேருக்கு ஏத்தாமாதிரியே இருக்காரு. பொதுவா நம்மூர்ல திக்குறவனுக்கு பேருதான் திருநாவுக்கரசுன்னு இருக்கும்:))
கதிர் ஹாலிவுட் பாலா போல பாலாஜி ஐயாவும் இறுக்கத்தை தளர்த்திவிடுகிறார்.
ஒவ்வொரு முறையும் நீங்கள் சகாயத்தின் சாதக பக்கங்களை எழுதும் போது நம்மாளுங்க எப்படி விட்டு வச்சுருக்காங்கன்னு பயத்தோடு பாத்துக்கிட்டுருககேன்.
அக்கறையின் வெளிபாடு பகிர்தல்.
நல்ல பகிர்வு கதிர்..சகாயம் வாழ்க..
நல்ல தகவல் பகிர்வு..
அண்ணா பல்கலைக்கழக கேன்டீன் சாப்பாடு, நல்லாவே இருக்கும்! :)
நான் கூட அங்கே தரப்படும் மதியச் சாப்பாடு பற்றி, இங்கே சில வரிகள் எழுதியிருக்கிறேன். :) http://oorsutri.blogspot.com/2009/07/14.html
செய்தியை அழகாகத் தொடுத்திருக்கிறீர்கள்
Post a Comment