மறுபடியும்

தமிழ், மலையாளம், தெலுங்கு, அஸ்ஸாம் என கதம்பமாய் கோர்த்த மாலைபோல் பலதரப்பட்ட மொழி பேசும் மாணவ, மாணவியர்கள் நிரம்பிய வகுப்பறை அது. மாணவர்கள் ஆறு அணிகளாக பகுக்கப்பட்டு, அவர்களுக்காக ஒரு பணி இடப்படுகிறது. ஒதுக்கப்பட்ட பதினைந்து நிமிடங்களுக்குள், அந்த வகுப்பறை அமைந்துள்ள கட்டிடத்தைச் சுற்றியுள்ள பகுதியில் கிடை(ட)க்கும் பொருட்களை சேகரித்து வரவேண்டும்.

பரபரப்பாக கட்டிடத்தைச் சுற்றியும், மைதானத்திற்குள் இரை தேடும் பறவையாக பறந்தோடினர். குழுவாக செயல்படுவதில் சிரிப்பும், குதூகலமும், கும்மாளமும் கொட்டிக் கிடந்தது. ஒரு வழியாய் நேரம் முடிவதற்குள் அவர்களை ஒன்று திரட்டி, தாங்கள் சேகரித்த பொருள் குறித்து நல்லவிதமாக (Positive) கருத்துகள் பகிரவேண்டும் என்பது நிபந்தனை

உண்மையாய் சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் சேகரித்து வந்ததில் 90% வெறும் குப்பைகள் மட்டுமே. உதாரணத்திற்கு காலி சிகரெட் பெட்டி, தேங்காய் சிரட்டை, தென்னைமரத்திலிருந்து விழுந்த பன்னாடை, தென்னை ஈர்க்குச்சி, பிளாஸ்டிக் டம்ளர், பாட்டில் மூடி, உடைந்த பிளேடு, ரப்பர், நூல்.......... இது போல் பற்பல பொருட்கள். இவையெல்லாம் உபயோகப்படுத்தி அல்லது இயற்கையாய் விழுந்து இனி இது பயனில்லை என நினைத்த குப்பை வகைகளே.

ஒவ்வொரு அணியாய் தாங்கள் சேகரித்த பொருட்களைப் பற்றி நல்லவிதமாக சொல்லவேண்டும் என்ற நிர்பந்தத்தால் ஒவ்வொரு அணியும் போட்டி போட்டுக் கொண்டு, தற்சமயம் இருக்கும் நிலையில் இருந்து, அதை மீண்டும் பயன் படுத்த முடியும் என்பது போல் உதாரணத்திற்கு...

காலி சிகரெட் பெட்டியின் உள் பக்கம் - அவசரத்திற்கு ஏதாவது குறித்து வைத்துக்கொள்ள உதவும்.

காலி தீப்பெட்டி அட்டையை மடித்து லேசாய் ஆடும் மேசைக்கு அடியில் வைக்கலாம்.

பாட்டிலின் காலி மூடியை சுத்தம் செய்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்

தேங்காய் சிரட்டையை தேய்த்து, உடைந்த பிளேடு மூலம் வித்தியாசமான படம் ஒன்றை செதுக்கலாம்.... என்பது போல், வித்தியாசமான சிந்தனைகளோடு தாங்கள் எடுத்து வந்த பொருள் குப்பையே ஆகினும், சற்றும் விட்டுக் கொடுக்காமல் அது குறித்து சிலாகித்து பேசியதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஒரு நிர்பந்தம், போட்டி என்று வந்தால் நாமோ அல்லது பிறரோ உபயோகித்து, குப்பை என்று தூக்கி எறிந்த பொருளைக்கூட கொண்டாட முடிகிறது.

ஒன்றை தூக்கி எறிவதற்கும், ஒரு நிர்பந்தம் வந்தால் கொண்டாடுவதற்கும் அந்த பொருளின் தன்மை மட்டுமே காரணமா? அல்லது நம் மனதும் காரணமா? அந்த நிகழ்வு ஒரு விதையாக, ஒரு நெருப்பு கங்காக மனதில் விழுந்தது.

வாழும் காலம் முழுதும் நாமும் குப்பைகளை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கின்றோம். சில சமயம் பொருட்களில், சில சமயம் மனித உறவுகளில். தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், உறவு மற்றும் நட்பு இதில் ஏதோ ஒன்றை சட்டென எதன் பொருட்டோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்மை விட்டு குப்பை போல் தூக்கி எறிந்திருந்திருப்போம்.

ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!!

நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாதா என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?

தூக்கி எறியும் பொருட்களுக்குப் பதிலாக அதற்கு நிகராகவோ, கூடக் குறையவோ மாற்றுப் பொருளைப் பெற்றுவிட முடிகிறது, ஆனால் மனிதர்களுக்கு மாற்று பெறுவது கடினமாகவே இருக்கிறது. காரணம் மனிதர்கள் கைரேகைகளைப் போலவே, ஒருவரோடு ஒருவர் வித்தியாசப் பட்டே இருக்கின்றனர்.
________________________________________

47 comments:

Anonymous said...

யோசிக்கவைக்கிறது...யோசித்து பார்க்கிறேன் நான் யாரையும் எறியவில்லை...மனசு இலகுவாக இருக்கிறது..

தமிழ் அமுதன் said...

பதிவு அருமை ..! சொல்லியவிதம் பாராட்டுக்குரியது..!
சிறு துரும்பும் பல் குத்த உதவும்...!

//நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாத என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?///

முடியும்...! கண்டிப்பாய் முடியும் ...! நன்றி ...!

Jerry Eshananda said...

மறுபடியும் படிக்க தோணுகிறது கதிர்.நல்லா இருக்கு.

அகல்விளக்கு said...

//மனிதர்களுக்கு மாற்று பெறுவது கடினமாகவே இருக்கிறது. காரணம் மனிதர்கள் கைரேகைகளைப் போலவே, ஒருவரோடு ஒருவர் வித்தியாசப் பட்டே இருக்கின்றனர்.//


நிதர்சனம் அண்ணா...

அருமையான பதிவு...

Jerry Eshananda said...

/ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!//

இதுல தான் நீங்க நிக்கிறீங்க கதிர்.!

அன்புடன் நான் said...

மிக நல்ல சிந்தனை....சிந்திக்கவும் வைக்கிறது, பாராட்டுக்கள்.

பிரபாகர் said...

//நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாத என்ன?//

எல்லாம் சந்தர்ப்ப சூழலைப்பொறுத்தது கதிர்.

Rekha raghavan said...

ஆழ்ந்து யோசிக்க வைத்த பதிவு. பாராட்டுகள்.

ரேகா ராகவன்.

க.பாலாசி said...

என்ன சொல்றதுன்னே தெரியலைங்க... மிக மிக... அருமையான இடுகை...

//தாய், தந்தை, கணவன், மனைவி, பிள்ளைகள், உறவு மற்றும் நட்பு இதில் ஏதோ ஒன்றை சட்டென எதன் பொருட்டோ, ஏதோ ஒரு சூழ்நிலையில் நம்மை விட்டு குப்பை போல் தூக்கி எறிந்திருந்திருப்போம்.//

சில நேரங்களில் உண்டாகும் மனக்கசப்புகளினால் நாம் ஒதுக்கி வைக்கும் உறவுகளை குப்பைகள் என்று சொல்வது உருத்தலாகவேப்படுகிறது.

ஆரூரன் விசுவநாதன் said...

//ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!!//

சிந்தனைக்குரிய பதிவு கதிர்....
வாழ்த்துக்கள்

vasu balaji said...

//நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாத என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?//

முடியும். முடியணும். நல்ல இடுகை!

Baiju said...

சிந்திக்க வைத்த பதிவு

pavithrabalu said...

very nice.. it's different... we should develop this attitude, in our daily life..

பிரேமா மகள் said...

மனுஷங்களோட மனசை தெளிவா படம் புடிச்சிருக்கிங்க... சூப்பர் அங்கிள்..

Venkat M said...

பிரபாகர் said...
//நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாத என்ன?//

எல்லாம் சந்தர்ப்ப சூழலைப்பொறுத்தது கதிர்.//

Kathir - touching lines... but i will go with Prabhakar

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை பாராட்டுகள்.

அண்ணாமலையான் said...

மிக நல்ல பதிவு.

Thamira said...

இன்னொமொரு தரமான பகிர்வு உங்களிடமிருந்து.. தொடர்க.

பழமைபேசி said...

TopTenல இதுவும் ஒன்னுங்கோ!

ராமலக்ஷ்மி said...

சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு.

நிகழ்காலத்தில்... said...

பல சமயங்களில் மனமே காரணமாக இருக்கும்,

மனத்தெளிவே இதற்கு மாற்று..

நல்லதொரு கருத்தை பகிர்ந்ததற்கு நன்றி கதிர்...

வாழ்த்துகள்

Unknown said...

//.. படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா? ..//

நீங்க என்ன சொன்னாலும், சில மனிதர்களிடத்தில் உண்டான பகை உணர்வை துடைத்தெறிய முடியலைங்க (ரத்த பந்தமே ஆனா போதிலும்)..

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதோ
நாவினால் சுட்ட வடு. :-(

ரோகிணிசிவா said...

மன்னிக்கறவன் மனுஷன் ,மறக்கறவன் பெரிய மனுஷன் ,எங்க அக்கா அண்ணா லட்சுமி,விருமாண்டி மச்சான் கிட்ட அன்னைக்கே சொல்லுச்சு !

GOOD JOB KATHIR,KEEP BLOGGING !

*இயற்கை ராஜி* said...

mm... asusual.....

kalakals nnu sonnen

Chitra said...

ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!!


...........அருமையான கருத்து.
"மறுபடியும்" அசத்தி விட்டீர்கள்.

அம்பிகா said...

\\தூக்கி எறியும் பொருட்களுக்குப் பதிலாக அதற்கு நிகராகவோ, கூடக் குறையவோ மாற்றுப் பொருளைப் பெற்றுவிட முடிகிறது, ஆனால் மனிதர்களுக்கு மாற்று பெறுவது கடினமாகவே இருக்கிறது. காரணம் மனிதர்கள் கைரேகைகளைப் போலவே, ஒருவரோடு ஒருவர் வித்தியாசப் பட்டே இருக்கின்றனர்.\\
நிதர்சனம்.
சிந்திக்க வைக்கும் பதிவு.

க ரா said...

நல்ல பதிவு.

கனிமொழி said...

நல்ல இடுகை...

நினைவுகளுடன் -நிகே- said...

சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு.

Romeoboy said...

\\நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாதா என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?//


யோசிக்கவைத்த வரிகள்

RRSLM said...

அருமையான பதிவு...

கலகலப்ரியா said...

appaalikka padichukkaren.. sry.. :(

புலவன் புலிகேசி said...

//ஒரு காலத்தில் நம்மோடு இருந்த
உறவை, கொண்டாடமுடியாதா என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?//

இந்த இடத்தில் மனம்தான் காரணம்..

ஈரோடு கதிர் said...

@@ தமிழரசி
//மனசு இலகுவாக இருக்கிறது..//

வாழ்த்துகள் தமிழ்

@@ ஜீவன்(தமிழ் அமுதன்
//சிறு துரும்பும் பல் குத்த உதவும்...!//

ஆமாங்க ஜீவன்

@@ ஜெரி ஈசானந்தா
//மறுபடியும் படிக்க தோணுகிறது//

மிக்க மகிழ்ச்சி ஜெரி

@@ அகல்விளக்கு
நன்றி ராஜா

@@ சி. கருணாகரசு said...

நன்றி கருணாகரசு

@@ பிரபாகர்
//எல்லாம் சந்தர்ப்ப சூழலைப்பொறுத்தது கதிர்//

ஆமாம் பிரபா

@@ KALYANARAMAN RAGHAVAN
//ஆழ்ந்து யோசிக்க வைத்த பதிவு. பாராட்டுகள்.//

நீண்ட நாட்கள் ஆயிற்று. நல்லா இருக்கீங்களா?

@@ க.பாலாசி
//நாம் ஒதுக்கி வைக்கும் உறவுகளை குப்பைகள் என்று சொல்வது உருத்தலாகவேப்படுகிறது.//

ஏற்றுக்கொள்கிறேன் பாலாஜி

@@ ஆரூரன் விசுவநாதன்
//சிந்தனைக்குரிய பதிவு கதிர்//

தலைவரே... நன்றி

@@ வானம்பாடிகள்
//முடியும். முடியணும்//

முடியுமானால் நல்லதுங்கண்ணா

@@ Baiju
//சிந்திக்க வைத்த பதிவு//

அட...தமிழில் பின்னூட்டம்... நன்றி பைஜு

@@ pavithrabalu
//we should develop this attitude, in our daily life..//

நன்றி பவித்ராபாலு

@@ பிரேமா மகள்
//மனுஷங்களோட மனசை தெளிவா படம் புடிச்சிருக்கிங்க//

நன்றி லாவண்யா


@@ Venki
//Kathir - touching lines... but i will go with Prabhakar//

Accepted

@@ ஸ்ரீ
நன்றி ஸ்ரீ

@@ அண்ணாமலையான்
நன்றி அண்ணாமலையான்

@@ ஆதிமூலகிருஷ்ணன்
//இன்னொமொரு தரமான பகிர்வு உங்களிடமிருந்து.. //

நன்றி ஆதி

@@ பழமைபேசி
//TopTenல இதுவும் ஒன்னுங்கோ!//

நன்றிங்க மாப்பு

@@ ராமலக்ஷ்மி
//சிந்தனையைத் தூண்டும் நல்ல பதிவு.//

மகிழ்ச்சி சகோதரி

@@ நிகழ்காலத்தில்
//மனத்தெளிவே இதற்கு மாற்று..//

மாப்பு அதேதான்

@@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).
//நாவினால் சுட்ட வடு. :-(//

கடினம்தான்... மறுக்கவில்லை...

@@ rohinisiva
//அக்கா அண்ணா லட்சுமி//
என்னா இது... அக்கா அண்ணா..
ஓ அன்னலட்சுமியா....
நன்றி ரோகினி

@@ இய‌ற்கை
thanks Raaji

@@ Chitra
//"மறுபடியும்" அசத்தி விட்டீர்கள்//
ரசித்தேன்.. நன்றி சித்ரா

@@ அம்பிகா
//நிதர்சனம்//
நன்றி அம்பிகா

@@ க.இராமசாமி
//நல்ல பதிவு/

மகிழ்ச்சி

@@ கனிமொழி
//நல்ல இடுகை//
மகிழ்ச்சி

@@ நினைவுகளுடன் -நிகே-
//சிந்தனையைத் தூண்டும்//
நல்லது...

@@ ROMEO
//யோசிக்கவைத்த வரிகள்//
மகிழ்ச்சி ரோமியோ

@@ RR
//அருமையான பதிவு...//
நன்றி RR

@@ கலகலப்ரியா
//appaalikka padichukkaren..//
OK

@@ புலவன் புலிகேசி
//இந்த இடத்தில் மனம்தான் காரணம்..//

ஆமாங்க... நன்றி முருகவேல்

எம்.எம்.அப்துல்லா said...

நிதர்சனம்.

தாராபுரத்தான் said...

நல்ல பதிவு எல்லோருக்கும் உபயோகப்படும்...பெங்களுருலிருந்து அப்பன்.

வால்பையன் said...

நான் கூட ஒரு பேப்பர் பொறுக்கி!

ஆர்வா said...

குப்பை நிறைய பேர் விட்டுல இருக்கோ இல்லையோ, மனசுல கண்டிப்பா இருக்கு. அருமையான பதிவு

Unknown said...

சிந்திக்க வைத்து,தெளிவை கொடுக்கக்கூடிய,அழகான,அழுத்தமான பதிவு.
வாழ்த்துக்கள்.

நாகராஜன் said...

கதிர்,

ரொம்பவுமே யோசிக்க வைக்கிற மாதிரியான ஒரு அருமையான இடுகைங்க... பாராட்டுகள்...

நிலாமதி said...

மனத்தெளிவே இதற்கு மாற்று.

சீமான்கனி said...

//ஒன்றைத் தூக்கி எறியக் காரணமாயிருப்பது அதன் தன்மையாவும் இருக்கும், சில சமயம் நம் மனதாகவும் இருக்கும்!!!//

ஆஹா...அருமையான சிந்தனை அண்ணே...என்னைக்கூட யோசிக்க வைத்து விட்டீர்கள்....

மரா said...

ரொம்ப சிக்கலான விசயத்தை மென்மையாக,ஆழமாக,அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.நன்று.

Thenammai Lakshmanan said...

//ஒன்றை தூக்கி எறிவதற்கும், ஒரு நிர்பந்தம் வந்தால் கொண்டாடுவதற்கும் அந்த பொருளின் தன்மை மட்டுமே காரணமா? அல்லது நம் மனதும் காரணமா? அந்த நிகழ்வு ஒரு விதையாக, ஒரு நெருப்பு கங்காக மனதில் விழுந்தது//

உண்மை யோசிக்க வைத்து விட்டீர்கள் கதிர்

வரதராஜலு .பூ said...

/நிர்பந்தம் வந்தால் தூக்கி எறிந்த ஒரு குப்பையைக் கூடக் கொண்டாடக்கூடிய மனிதனால், இரத்தமும், சதையுமான இன்னொரு உறவை, ஒரு காலத்தில் நம்மோடு இருந்த உறவை, கொண்டாடமுடியாத என்ன? கொண்டாட முடியாவிட்டாலும் கூட, படிந்திருக்கும் பகை உணர்வையாவது சற்றே துடைத்தெறிய முடியாதா?//

அருமை கதிர். ரொம்பவே சிந்திக்க வைச்சிட்டிங்க.

Rajan said...

//பாட்டிலின் காலி மூடியை சுத்தம் செய்து மீண்டும் உபயோகப்படுத்தலாம்
//

பாட்டில் வெச்சு என்ன பண்ண தல ! அதான் நான் பாட்டில எடைக்கு போட்டு மறுபடி குவாட்டர் வாங்கிக்குவேன்

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{ மனிதர்களுக்கு மாற்று பெறுவது கடினமாகவே இருக்கிறது. காரணம் மனிதர்கள் கைரேகைகளைப் போலவே, ஒருவரோடு ஒருவர் வித்தியாசப் பட்டே இருக்கின்றனர் }}}}}}}}}}


மிகவும் ரசிக்கும் வகையில் எழுதி இருக்கிங்க அருமை . வாழ்த்துக்கள் !