நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை


போனசு புத்தாடை
பட்டாசு மத்தாப்பு பலகாரம்
அரைப்பவுனு தோடு அடுத்த நாள்
ஆட்டுக்கறி, கோழிக்கறி

போட்டி போட்டுக்கொண்டு
ஒளிபரப்பாகும் புதுப் படங்கள்
தின்பதையெல்லாம் சீரணிக்க
இன்னும் ரெண்டு நாள் விடுமுறை

தீபாவளியைக் கொண்டாட
எத்தனையோ காரணம் இங்கே
நரகாசுரனைக் கொன்றதாய் பொய் சொல்லி
நாடு முழுதும் பட்டாசு வெடிக்கிறோம்

ழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை


ன்ன நியாயம் இருக்கு
என்ன தேவை இருக்கு
இரத்தம் காயுமுன்னே
இங்கு தீபாவளி கொண்டாட

காடிழந்து வீடிழந்து கற்பிழந்து
கம்பிவேலி தாண்ட முடியாமல்
காய்ந்து போன பச்சிளம் குழந்தையை
கண்ணீர் கோடுகளோடு கையில் ஏந்தி

நாம் வெடிக்கும் பட்டாசு நவுத்துப் போகட்டும்
உடுத்தும் புத்தாடைகள் கிழிந்து போகட்டும்
தின்னும் பலகாரம் கசந்து போகட்டுமென”
வயிறெரிந்து சபிக்கமாட்டாளா வாழ்விழந்தவள்

வள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்
ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்

28 comments:

க.பாலாசி said...

//ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை//

எல்லா உயிர்களை பறிக்க உரிமைக்கொடுத்து, நம் பெண்களின் கற்பினை நாசமாக்கச் சொல்லி...இதையும் சேர்த்துக்குங்க...

எத்தனை முறை எழுதப்பட்டாலும், சொல்லப்பட்டாலும் தீராத வலிகள் இவை...

//“நாம் வெடிக்கும் பட்டாசு நவுத்துப் போகட்டும்
உடுத்தும் புத்தாடைகள் கிழிந்து போகட்டும்
தின்னும் பலகாரம் கசந்து போகட்டுமென”
வயிறெரிந்து சபிக்கமாட்டாளா வாழ்விழந்தவள்//

உண்மைதான். இந்த அவலங்களை நினைத்துப்பார்க்கையில் நமக்கெல்லாம் இந்த மகிழ்ச்சி கொண்டாட்டங்கள் தேவையா என்றே தோன்றுகிறது. சில சமயம் வெட்கப்படவும் வேண்டியுள்ளது.

நல்ல சிந்தனை இடுகை....

சந்தனமுல்லை said...

/ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை/

நச்!!

/
அவள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்
ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்/

மிகச்சரி!!

கலகலப்ரியா said...

//தீபாவளியைக் கொண்டாட
எத்தனையோ காரணம் இங்கே
நரகாசுரனைக் கொன்றதாய் பொய் சொல்லி
நாடு முழுதும் பட்டாசு வெடிக்கிறோம்//

சபாஷ்.. !

(ராமனைக் கொன்றதாக நரகாசுரர்கள் கொளுத்திக் கொண்டிருக்கும் பட்டாசுகள் நிறைய..)

//ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்//

:(.. கலங்கடிக்கும் வரி..!

vasu balaji said...

/என்ன நியாயம் இருக்கு
என்ன தேவை இருக்கு
இரத்தம் காயுமுன்னே
இங்கு தீபாவளி கொண்டாட/

தனக்கு வந்தாத்தான் தலைவலி

/வயிறெரிந்து சபிக்கமாட்டாளா வாழ்விழந்தவள்

அவள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்/

கொஞ்ச நஞ்சமா சகிச்சிருக்காங்க. சத்தியமான வார்த்தை.

/ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்/

ஆகக் கூடியது இது ஒன்னுதான். எவனையும் கேக்க வேணாம். நீ செய்தா நானும் பண்ணுறேன்னு சொல்ல வேணாம். செய்வோம்.

கண்ணகி said...

மனம் வலிக்கிறது கதிர். உலகம் அழிஉம் நாள் நெருங்கி விட்டது, உண்மை சுடுகிறது. நானும் தொடருகிறேன்

ஆரூரன் விசுவநாதன் said...

நல்ல பதிவு

வாழ்த்துக்கள்

ஷண்முகப்ரியன் said...

தீபாவளியே அஹிம்சையைப் போதிக்க வில்லை,கதிர்.
அதர்மத்துக்கு எதிரான, முறையான வன்முறையின் வெற்றியைத்தான் பறை சாற்றுகிறது.

வென்றவர்கள் கொண்டாட வேண்டிய விழாவினைத் தோற்றவர்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதுதான் வேதனை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர்...

இன்னொரு அருமையான இடுகை. இதைப் படிக்கும் அனைவருக்கும் மனசு வலிக்கும். நன்றி.

காமராஜ் said...

இப்படிப்பட்ட அநேக நரகாசுரனர்களின் காலில் நசுங்கிக்கிடக்கிறது ஒளியிழந்த மக்களின் வாழ்க்கை

//ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை//

வெண்ணிற இரவுகள்....! said...

//ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை

//
நல்ல பதிவு நமக்கு தீபாவளி என் தோழனுக்கு வலி

நர்சிம் said...

கதிர். என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல சிந்தனைகள்...

ஹேமா said...

//ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை//

கதிர்,உங்கள் உணர்வுக்கும் எங்களோடு கை கோர்த்தலுக்கும் நன்றி.நாங்கள் தீபாவளி கொண்டாடா விட்டால் என்ன.சிங்களவன் எங்களுக்கும் சேர்த்தே கொண்டாடுகிறான்!

ஆ.ஞானசேகரன் said...

//அவள் ஈழத்துத் தாய் ஆகவே சபிக்கமாட்டாள்
ஆனாலும் இந்தத் தீபாவளியில்
இனிப்புகளை ஒதுக்கி புத்தாடை துறந்து
ஈழத்தை நெஞ்சில் சுமப்போம்//

உண்மைதான்.. தோழரே..

Unknown said...

<<<
ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம் கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம் நரகாசுரனை
>>>

நல்ல வரிகள். படிக்க படிக்க வலியா இருக்கு. :(

பிரபாகர் said...

//காடிழந்து வீடிழந்து கற்பிழந்து
கம்பிவேலி தாண்ட முடியாமல்
காய்ந்து போன பச்சிளம் குழந்தையை//

வலியின் மேல் வலியாய் உணர்கிறேன். நாடாளும் நாய்களுக்கு இது புரிந்தால் சரி...

அன்புடன் நான் said...

வலி, வேதனை நிறைந்த கவிதை... நமக்கு இந்த தீபாவளி வேண்டாம்.

vasu balaji said...

100க்கு வாழ்த்துகள். அட பின் தொடர்வோர்தான்.

மணிஜி said...

வேதனையாகத்தான் இருக்கு கதிர்..ஆனால் இனி ?

Jerry Eshananda said...

கதிர், "வாடிய பயிரை, கண்டபோதெல்லாம் வாடினேன்" என்ற வள்ளலாருக்கும்,உங்களுக்கும் வித்தியாசம் ஒன்றும் அதிகமில்லை. ஒவ்வொரு நாளும் உங்களோடு பயணிப்பது நான் பிறந்து தொலைந்த இந்த தமிழினத்திற்கு நான் செய்யும் கடமையும் கூட. தொடர்கிறேன் கதிர்.

வால்பையன் said...

வழிமொழிகிறேன்!

கோமதி அரசு said...

//ஈழத்தமிழனின் உதிரம் தோய்ந்த
நீளமான சிவப்புத் துண்டோடு..
அள்ளிக் கொடுத்து ஆயுதம்கொடுத்து
நல்லாத்தானே வச்சிருக்கோம்
நரகாசுரனை//

சிவப்புத் துண்டு அனிந்த நரகாசுரனை
அழிக்க கண்ணன் எப்போது வருவான்?

சீக்கிரம் வந்து ஈழத்தமிழனின் துயரம்
போக்க அந்த கண்ணனை பிராத்த்னை
செய்வோம்.

ஈரோடு கதிர் said...

ஈழம் குறித்த எந்தப் பகிர்வும்
என்னால் எதுவுமே செய்ய இயலவில்லையே என்ற வலியோடு
பகிர்ந்து கொள்வதுதான்...

இந்த வலிகளை

@@ பாலாஜி
@@ சந்தனமுல்லை
@@ கலகலப்ரியா
@@ வானம்பாடிகள்
@@ வாத்துக்கோழி
@@ ஷண்முகப்ரியன்
@@ செந்தில்
@@ காமராஜ்
@@ வெண்ணிற இரவுகள்
@@ நர்சிம்
@@ வசந்த்
@@ ஹேமா
@@ ஞானசேகரன்
@@ Mãstän
@@ பிரபாகர்
@@ கருணாகரசு
@@ தண்டோரா
@@ ஜெரி ஈசானந்தா
@@ வால்பையன்
@@ கோமதி அரசு

நீங்களும் பகிர்ந்து கொள்வது ஒருவகையான ஆறுதலே...

இருந்தாலும் நாம் ஏதாவது நம் துன்பத்தில் வாடும் அவர்களுக்கு காலம் கடந்தேனும் செய்திட வேண்டும்.

நாகராஜன் said...

முடிந்த வரையில் இந்த தீபாவளியை கொண்டாடாமல் இருந்து அவர்கள் வலி நீங்க ஒரு வழி பிறக்க இறைவனை வேண்டுவோம்...

ஈரோடு கதிர் said...

@@ ராசுக்குட்டி
கண்டிப்பாக செய்வோம்

நேசமித்ரன் said...

நச்!!

கண்ணகி said...

கவிஞ்ர் கதிர் அவர்களுக்கு எழ்த்தமிழஅர்களின் நினைவோடு தீபாவளியை கடக்கிறேன்.

Unknown said...

சில பதிவுகளுக்கு பதில் சொல்லமுடிவதில்லை...இதுவும் அந்த மாதிரி ஒரு பதிவு தான்...அங்கு கஷ்டப்படும் மக்களுக்கு நம்மால் எதுவும் செய்யமுடியாத ஆதங்கம் உங்க கவிதையில்....மெளனமே பதிலாக சொல்லமுடியாகிறது......