இலவசம்


திருடன் ஒரு வீட்டில் திருடுவதற்காக வருகிறான், வீட்டில் யாரும் இல்லை, நாய் மட்டுமே இருக்கிறது. நாய் திருடனையும், திருடன் நாயையும் மாறிமாறிப் பார்க்கிறார்கள். திருடன் யோசிக்கிறான் “குரைக்கிற நாய் கடிக்காது, முறைக்கிற நாய் கடிக்காமல் இருக்காது”. நாய் குரைக்காமல் முறைக்கிறது, தான் மறைத்து வைத்திருந்த வருத்த கோழிக் கறித் துண்டை போடுகிறான்.

நாய் கோழிக்கறித் துண்டை முகர்ந்து பார்த்துவிட்டு, அவன் மேல் பாய்ந்தது. இருவரும் கட்டிப்பிடித்து உருண்டபோது...

“நாயே... நானும் பார்த்தேன், நீயும் பார்த்தே அதோட நிறுத்தியிருக்கலாம். நீ எங்கே விழுந்து கடிச்சிருவியோன்னு கோழிக்கறித்துண்டை போட்டேன். மோந்து பார்த்தே தின்றிருக்கலாம் அல்லது திங்காம இருந்திருக்கலாம் அது உன் இஷ்டம், ஆனால் மோந்து பார்த்துட்டு மேல விழுந்து கடிக்கிறியே...... இது நியாயமா?” என்று திருடன் கேட்கிறான்.

அப்போது “எனக்கு லஞ்சமாக, எனக்கு இலவசமாக ஒரு கோழிக்கறித் துண்டை தருகிற வரையில் நீ மனிதனா திருடனா என என்னால் தீர்மானிக்க முடியவில்லை. எப்போது நீ லஞ்சமாக, இலவசமாக ஒரு கோழிக் கறித்துண்டு போட்டாயோ அப்போது தீர்மானித்துவிட்டேன் நீ திருடன். இனியும் உன்னை விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து கடிக்கிறேன்” என்று நாய் சொல்கிறது.

நூறு வருடங்களுக்கு முன் மாமேதை லியோ டால்ஸ்டாய் குழந்தைகளுக்காக எழுதிய கதை. (பாரதிகிருஷ்ணகுமார் அவர்களின் உரையில் கேட்ட கதை)


அதன் பின்...
திருடன்(ர்கள்) ஒரு போதும் மாறவேயில்லை.

நாய்கள் மாறிவிட்டன...

நாய்கள் மட்டுமா........!!!???



----------------------------------------------------------------

54 comments:

vasu balaji said...

//“மோந்து பார்த்தே தின்றிருக்கலாம் அல்லது திங்காம இருந்திருக்கலாம் அது உன் இஷ்டம், ஆனால் மோந்து பார்த்துட்டு மேல விழுந்து கடிக்கிறியே...... இது நியாயமா?”//

நியாயமே இல்லை. டீலு டீலா இருக்க வேணாமா? அதென்ன சின்ன நாக்குட்டித்தனமா கத்துறது?

/நாய்கள் மாறிவிட்டன.../

அத ஏன் கேக்குறீங்க. இப்பல்லாம் நாய்ங்க நீ சும்மா போறியோ திருடப் போறியோ. எனக்கு கோழித்துண்டு எங்கன்னு கடிக்குதுங்களாம்.

அருமை.:))

தமயந்தி said...

அர‌சாங்க‌ அலுவ‌ல‌க‌ங்க‌ள்ல‌ பொறிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ க‌தை...

க.பாலாசி said...

//நியாயமே இல்லை. டீலு டீலா இருக்க வேணாமா? அதென்ன சின்ன நாக்குட்டித்தனமா கத்துறது?//

அதானே.

அப்ப நூறு வருசத்துக்கு முன்னாடி நாய்கள் கூட லஞ்சம் வாங்காம இருந்திருக்கும் போல. நம்ப முடியலயே. எது எப்படியோ சொல்ல வந்த மேட்டர் நச்சுன்னு நங்கூரம் பாச்சின மாதிரி இருக்கு. நாய்களுக்குத்தான் புத்தி இல்லியே...என்ன பண்றது. புத்தியுள்ள நாமளாவது திருடாம இருந்தா நல்லாருக்கும்.

நல்ல இடுகை.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஒரு சின்ன கதை. ஆனால் எவ்வளவு அர்த்தம் நிறைந்துள்ளது. நன்றி கதிர்.

S.A. நவாஸுதீன் said...

எல்லா அரசு அலுவலகங்களிலும் கட்டாயம் இதன் பிரதி ஒட்டப்படவேண்டும்.

பிரபாகர் said...

கதிர்கிட்ட இருந்து ரொம்ப சாதாரணமா ஒரு பதிவா என்று அலட்சியாமாய் படித்துவிட்டு, மீண்டும் படிக்க.... ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தது, பக்கத்து வீட்டுல டி.வி. ன்னு என்னன்னவோ ஞாபகத்துக்கு வருது. அதான் கதிர்.

பிரபாகர்.

thiyaa said...

பொருத்தமான படம்

Admin said...

நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்

நர்சிம் said...

அர்த்தம் பொதிந்த கதைகளை எல்லாம் பொந்துக்குள் புதைத்துவிடுகிறோம்.மீட்டியதற்கு நன்றி கதிர்.

கண்ணகி said...

இந்தக்குத்து உள்குத்துதான். ஆட்டோ வந்திரப்போவுது

V.N.Thangamani said...

லஞ்சம் வாங்குபவர்களுக்கு சரியான சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள் கதிர்.
வாழ்க வளமுடன். (ஆப்பக்கூடல்) வி.என்.தங்கமணி

Prathap Kumar S. said...

//திருடன்(ர்கள்) ஒரு போதும் மாறவேயில்லை. நாய்கள் மாறிவிட்டன...நாய்கள் மட்டுமா........!!!???//

நெத்தியடி. சின்னகதைல எவ்வளவு பெரிய விஷயம்.
நச்சுன்னு இருந்துச்சு. பகிர்வுக்கு நன்றி கதிர்

அகல்விளக்கு said...

இப்பல்லாம் திருடன்ட "கிச்சன் போனினா அங்க இருந்து லெக்பீஸ் கொண்டு வான்னு" நாய்ங்க கேட்குது.

அன்புடன் நான் said...

நல்ல பகிர்வு...வாழ்த்துக்கள்

தமிழ் நாடன் said...

உள்குத்து குத்தவேண்டியவங்களுக்கு குத்தனா சரி!

ஹேமா said...

வாவ் அருமை நீதிக்கதை.

பின்னோக்கி said...

நல்ல கருத்துள்ள கதை.

பழமைபேசி said...

சுவாரசியம்!

//வருத்த//

???

வருத்தமான கோழியா? வறுக்கப்பட்ட கோழியா??

அது சேவலாகவும் இருந்திருக்கலா, இல்லையா?? இஃகிஃகி!

Rajan said...

திருடன் அப்பிடீங்கற வார்த்தைக்கு அர்த்தம்லாம் கலைஞர் தான் சொல்வாரு!

உள்குத்து இல்ல ஊமைக் குத்து

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்
(ஆனாலும் திருடர்கள் சுகமாகவே)

நன்றி @@ தமயந்தி
நன்றி @@ S.A. நவாஸுதீன்
(அதுக்கு எதுனா இலவசமா கொடுக்கனுமே)

நன்றி @@ பாலாசி
(நாய்கள் ஒருவேளை நம்மளைப் பார்த்துதான் கத்துகிட்டதோ என்னவோ)


நன்றி @@ செந்தில்
(அந்த அர்த்தம் வலிமையானதுங்க செந்தில்)

நன்றி @@ பிரபாகர்
(இந்த உள்குத்துக்கு பிரபாகரே பொறுப்பு, இஃகிஃகி)

நன்றி @@ தியாவின் பேனா
(இன்னும் பொருத்தமான படம் தேடினேன் கிடைக்கலைங்க, நன்றி)

நன்றி @@ சந்ரு

நன்றி @@ நர்சிம்
(ஆமாங்க நர்சிம்)

நன்றி @@ வாத்துக்கோழி
(அக்கா, ஏன்....ஏன்... இந்த உள்குத்து)

நன்றி @@ தங்கமணி
(அப்போ கொடுக்குறவங்களை என்ன பண்றது)

நன்றி @@ நாஞ்சில் பிரதாப்
(கடைசி 3 வரி மட்டும் நம்ம சரக்குங்க)

நன்றி @@ அகல் விளக்கு
(ஹ ஹ ஹ... நல்லாச் சொன்னீங்க தம்பி)

நன்றி @@ கருணாகரசு

நன்றி @@ தமிழ் நாடன்
(ஆஹா.... ஆனா குத்தாதே)

நன்றி @@ ஹேமா

நன்றி @@ பின்னோக்கி

நன்றி @@ பழமைபேசி
(சரியா வறுக்காம விட்டுட்டேன். தப்புதான்.

செரிங்க மாப்பு, தை மாசம் கறி நாளுக்கு சேவக்கறி போடுறோம் சொல்லி எங்கள கூப்பிடுங்க போதும்)

நன்றி @@ rajan RADHAMANALAN
(அப்படியா!!!)

தமிழ் அமுதன் said...

//அர‌சாங்க‌ அலுவ‌ல‌க‌ங்க‌ள்ல‌ பொறிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ க‌தை...///

repeettu

Jerry Eshananda said...

எனக்கும் பிடிக்கும் பாரதி கிருஷ்ண குமாரின் உரைவீச்சுகள்.

ரோஸ்விக் said...

அண்ணேன்! ஒரு அசைவக் கதையில ஒரு "அசைவ" ஏற்படுத்திட்டிங்க மனசுல.... அருமை....

முனைவர் இரா.குணசீலன் said...

அட!!
கதை நன்றாகவுள்ளது நண்பரே...

வால்பையன் said...

திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடி கொண்டே இருக்குது!
(சில நேரத்தில் அரசியல்வாதி வேடம் போட்டு)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

//திருடன் என்பதற்கு வேறு வார்த்தைகளிலும் அர்த்தம் கொண்டால், அந்த உள்குத்துக்கு நான் பொறுப்பாக முடியாது.//

அப்படி ஒரு கதையைச் சொல்லிவிட்டு, இப்படியும் சொன்னால் எப்படி? நாங்க அப்படித்தான் யோசிப்போம் ;)

-ப்ரியமுடன்
சேரல்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஜெரி
(இது 4 வருடங்களுக்கு முன் புத்தகத் திருவிழாவில் பேசிய பேச்சு)

நன்றி @@ ரோஸ்விக்
(ஆஹா... நல்லா யோசிக்கிறீங்க)

நன்றி @@ முனைவர்.இரா.குணசீலன்

நன்றி @@ வால்பையன்
(அரசியல்வாதி மட்டும் அல்ல, எங்கெல்லாம் இலவசம் என்று ஒன்று இருக்கோ அங்கேயும் இது பொருந்தும் தானே)


நன்றி @@ சந்தனமுல்லை

நன்றி @@ சேரல்
(சரி...சரி பார்த்து யோசிங்க)

நேசமித்ரன் said...

//நியாயமே இல்லை. டீலு டீலா இருக்க வேணாமா? அதென்ன சின்ன நாக்குட்டித்தனமா கத்துறது?//

அதானே.

reapeattu

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை.

தீப்பெட்டி said...

:)

அத்திரி said...

நெத்தியடி கதை.அருமை.

ISR Selvakumar said...

மற்றவருக்கு தேவையிருக்கும் போது தந்தால் அது இலவசம்.
நமக்கு தேவையிருக்கும்போது தந்தால் அது இலஞ்சம்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நேசமித்ரன்

நன்றி @@ T.V.Radhakrishnan

நன்றி @@ தீப்பெட்டி

நன்றி @@ அத்திரி

நன்றி @@ r.selvakkumar
(நல்ல விளக்கம்)

கலகலப்ரியா said...

இது வித்யாசமா இருக்கே...! :-?? கொஞ்சம் டைம் எடுத்து யோசிச்சு தெளிஞ்சுக்கிறோம்..

Thamira said...

தமயந்தி said...
அர‌சாங்க‌ அலுவ‌ல‌க‌ங்க‌ள்ல‌ பொறிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ க‌தை..//

ரிப்பீட்டு.!

Unknown said...

கதிர்...சூப்பர்!

சீமான்கனி said...

இலவசமா வேண்டவே வேண்டம் ....
அருமையான கதை அண்ணே...வாழ்த்துகள்....

தாராபுரத்தான் said...

சாியான ேநரத்தில் சாியான ேபாடு......

அவிய்ங்க ராசா said...

simply superb.........

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கலகலப்ரியா
(நிறையவே எடுத்துக்குங்க... ஆனா...!!)

நன்றி @@ ஆதிமூலகிருஷ்ணன்

நன்றி @@ anto

நன்றி @@ seemangani
(நீங்க தமிழ்நாட்ல இல்லையா சீமான்கனி)

நன்றி @@ அப்பன்

நன்றி @@ அவிய்ங்க ராசா
(வாங்கண்ணே)

ப்ரியமுடன் வசந்த் said...

:)

suberb...kathir

பித்தனின் வாக்கு said...

எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மறக்கமுடியா நீதிக்கதை இது. இப்படி எல்லாம் சொன்னாலும் யாரும் திருந்தமாட்டாங்க என்பதுதான் வேதனை.

ஊடகன் said...

லியோ டால்ஸ்டாய் கதையை பகிர்ந்த்மைக்கு நன்றி...........

நாஞ்சில் நாதம் said...

:))

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கதை, நல்ல பகிர்வு கதிர்....

புலவன் புலிகேசி said...

//எப்போது நீ லஞ்சமாக, இலவசமாக ஒரு கோழிக் கறித்துண்டு போட்டாயோ அப்போது தீர்மானித்துவிட்டேன் நீ திருடன்//

இந்த மாதிரி நம்ம தமிழ்நாடு போலீசும் யோசிக்கணும்.....

இரும்புத்திரை said...

லஞ்சம் என்று வார்த்தையே கிடையாது அது அன்பளிப்பு நன்கொடை என்று மாறி விட்டது

வெண்ணிற இரவுகள்....! said...

அதன் பின்...
திருடன்(ர்கள்) ஒரு போதும் மாறவேயில்லை.

நாய்கள் மாறிவிட்டன...

நாய்கள் மட்டுமா........!!!???//
அற்புதம் நண்பரே

தேவன் மாயம் said...

எப்போது நீ லஞ்சமாக, இலவசமாக ஒரு கோழிக் கறித்துண்டு போட்டாயோ அப்போது தீர்மானித்துவிட்டேன் நீ திருடன். இனியும் உன்னை விட்டுவிடக்கூடாது என்று முடிவு செய்து கடிக்கிறேன்” என்று நாய் சொல்கிறது.///


நாய்கள்தான் இனி லஞ்சத்தை ஒழிக்க வேண்டும்!!! ஹி ஹி

வெண்ணிற இரவுகள்....! said...

லஞ்சம் வாங்கினேன் பிடித்தார்கள்
கொடுத்தேன் விட்டார்கள் ...........
எங்கேயோ படித்தது

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வசந்த்

நன்றி @@ பித்தனின் வாக்கு

நன்றி @@ ஊடகன்

நன்றி @@ நாஞ்சில் நாதம்

நன்றி @@ ஆ.ஞானசேகரன்

நன்றி @@ புலவன் புலிகேசி

நன்றி @@ இரும்புத்திரை அரவிந்த்

நன்றி @@ வெண்ணிற இரவுகள்

நன்றி @@ தேவன் மாயம்

குருத்து said...

பகிர்ந்து கொள்ள வேண்டிய நல்ல கதை.

நெத்தியடி முஹம்மத் said...

டால்ஸ்டாயின் கதையை போலவே உங்களின் கடைசி வரிகள் நச். அதில், மேலும் சிந்திக்க வேண்டிய விஷயம்: இப்போது திருடர்களும் மாறிவிட்டனர், என்பதுதான். கோழிகறி எல்லாம் கொண்டுவருவதில்லை. துப்பாக்கி கொண்டு வருகிறார்கள். அதைப்பார்த்த மாத்திரத்திலேயே நாய் வாலை சுருட்டி பம்மி வழிவிட வேண்டும். இல்லையேல் துர்மரணம். கறித்துண்டுகளுக்கு அலையும் நாய்களை விட, உயிருக்காகவும் உடமைக்காகவும் பயந்து குறைக்காத நாய்களே இங்கு அதிகம். உடனடி தேவை இப்போது நாய்களுக்கும் துப்பாக்கி லைசன்ஸ்.

Muhammad Ismail .H, PHD, said...

அன்பின் கதிர்,

இதை கீழே உள்ள சுட்டியிலும் Ctl-C and Ctl-V செய்துள்ளேன். யாருக்காவது புரிந்தால் நல்லது நடக்குமில்லையா? பார்ப்போம் !!!


http://thatstamil.oneindia.in/news/2009/12/09/parties-woo-cadres-with-biriyani.html



with care & love,

Muhammad Ismail .H, PHD,