கிறக்கமாய் கசிய விட்ட காதலும்
மறந்து விட்டுப்போன உன் வாசமும்
வெற்றிலைக் கொடியாய் படர்ந்து
என்னை இறுக்கிச் சுற்றும் பரவசம்...
சொடுக்கெடுக்கும் என் விரல்களின்
நகக்கண்ணில் உறங்கும் துளி அழுக்கை
மெலிதாய் கிளர்ந்து மெதுவாய் சுரண்டி
உன் சுண்டு விரல் நகம் ஊட்டும் சிலிர்ப்பு...
இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
என் தோள் இறுகப்பற்றி நெருங்கி அமர்ந்து
எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...
நகரப் பேருந்தின் சன்னலோரத்திலிருந்து
நளினமாய் சப்தமிட்டதை யார்யாரோ பார்க்க
எனக்காய் ஆட்டிச்சென்ற கைகளிலிருந்து
சொட்டுச் சொட்டாய் சேகரித்த காதல் துளிகள்...
உன் சிரிப்பில் என்னுயிர் புதிதாய் சுரக்கிறது
உரிமையில் என் இதயம் பெரிதாய் நெகிழ்கிறது
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் நாட்களாய்
என் ஒவ்வொரு விடியலும் உனக்காய் புலர்கிறது...
மறந்து விட்டுப்போன உன் வாசமும்
வெற்றிலைக் கொடியாய் படர்ந்து
என்னை இறுக்கிச் சுற்றும் பரவசம்...
சொடுக்கெடுக்கும் என் விரல்களின்
நகக்கண்ணில் உறங்கும் துளி அழுக்கை
மெலிதாய் கிளர்ந்து மெதுவாய் சுரண்டி
உன் சுண்டு விரல் நகம் ஊட்டும் சிலிர்ப்பு...
இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
என் தோள் இறுகப்பற்றி நெருங்கி அமர்ந்து
எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...
நகரப் பேருந்தின் சன்னலோரத்திலிருந்து
நளினமாய் சப்தமிட்டதை யார்யாரோ பார்க்க
எனக்காய் ஆட்டிச்சென்ற கைகளிலிருந்து
சொட்டுச் சொட்டாய் சேகரித்த காதல் துளிகள்...
உன் சிரிப்பில் என்னுயிர் புதிதாய் சுரக்கிறது
உரிமையில் என் இதயம் பெரிதாய் நெகிழ்கிறது
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் நாட்களாய்
என் ஒவ்வொரு விடியலும் உனக்காய் புலர்கிறது...
63 comments:
//இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
என் தோள் இறுகப்பற்றி நெருங்கி அமர்ந்து
எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...//
இந்த வரி எனக்கு பிடிச்ச வரி
இந்த வரியை
வேற யாராவது பிடிச்சதுன்னு சொன்னா நானும் கவிதையெழுதிடுவேன்..ஜாக்கிரதை
பாருங்க அவசரத்துல நைனாக்கு இத பின்னூட்டிட்டேன் சாரி...
///இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
என் தோள் இறுகப்பற்றி நெருங்கி அமர்ந்து
எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...//
இந்த வரி எனக்கு பிடிச்ச வரி
இந்த வரியை
வேற யாராவது பிடிச்சதுன்னு சொன்னா நானும் கவிதையெழுதிடுவேன்..ஜாக்கிரதை
//
எழுதுங்க வசந்த்..கதிர் அருமை
தண்டோரா ...... said...
/எழுதுங்க வசந்த்../
அவ்வ்வ். அண்ணே. தெரியாம ஏத்தி விடாதிங்க. எல்லாரும் பைத்தியமா அலையுறோம். அவமானம்னு தலைப்பு வேற. அதுக்கே சாவலாம் போல இருக்கு. வெறி பிடிச்சி திர்ரான்.
காதல் கவிஞர் கதிர். அருமை.
அழகா இருக்குங்க....!
//நகக்கண்ணில் உறங்கும் துளி அழுக்கை
மெலிதாய் கிளர்ந்து மெதுவாய் சுரண்டி//
//இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...//
//எனக்காய் ஆட்டிச்சென்ற கைகளிலிருந்து
சொட்டுச் சொட்டாய் சேகரித்த காதல் துளிகள்..//
//ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் நாட்களாய்
என் ஒவ்வொரு விடியலும் உனக்காய் புலர்கிறது...//
மேற்சொன்ன வரிகளை திரும்பத்திரும்ப படிக்கிறேன். மிக அழகான காதலை எத்தனைமுறையேனும் சுவாசிக்கலாம், அதுபோல....
ஆமா... இதெல்லாம் வீட்டம்மணிய மனசுல வைச்சுதானே எழுதினீங்க? இல்லன்னா நைட்டு சோறு கிடைக்காது சாமீயோ....
/
பிரியமுடன்...வசந்த் said...
பாருங்க அவசரத்துல நைனாக்கு இத பின்னூட்டிட்டேன் சாரி.../
இது பரவால்ல. அவசரத்துல யாரயாவது பைக்ல ஏத்திட்டு போய்ட்டு சாரின்னா விடமாட்டாங்கடி. பார்த்து=))
//எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...//
ரசித்தேன் இவ்வரிகளை.
பொங்கியதே காதல் வெள்ளம் துள்ளியதே இலக்கியன் உள்ளம்..
க.பாலாசி said...
/ஆமா... இதெல்லாம் வீட்டம்மணிய மனசுல வைச்சுதானே எழுதினீங்க? இல்லன்னா நைட்டு சோறு கிடைக்காது சாமீயோ..../
ஏப்பா. மனுசன் இப்புடி ஏதோ எழுதி சந்தோசப்பட்டுக்கிறதுக்கு விடமாட்டிங்களா?
கவிக்கு வாழ்த்துகள்!
//வானம்பாடிகள் said...
ஏப்பா. மனுசன் இப்புடி ஏதோ எழுதி சந்தோசப்பட்டுக்கிறதுக்கு விடமாட்டிங்களா?//
அதெப்படி விடுறது....காந்தி கண்ட ராமராஜ்யம்தான் எங்களோட கொள்கையே...வெறும் எழுத்தோட இருந்தா பரவாயில்லையே.....
வசந்தும் வானம்பாடியும் கும்மியடிக்கிறதுக்கு முன்னாடி வந்தவங்களுக்கு வணக்கமும், நன்றியும்
@@ பிரியமுடன்...வசந்த்
@@ சந்தனமுல்லை
@@ தண்டோரா
@@ வானம்பாடிகள்
@@ rajan RADHAMANALAN
@@ பாலாசி
@@ நாடோடி இலக்கியன்
@@ பழமைபேசி
//இது பரவால்ல. அவசரத்துல யாரயாவது பைக்ல ஏத்திட்டு போய்ட்டு சாரின்னா விடமாட்டாங்கடி. பார்த்து=)) //
ஆமாதானே சாரின்னா வாங்கித்தந்துட்டு போங்கன்னு சொல்லுவாங்க ஹேய் யார்கிட்ட...
//வானம்பாடிகள் said...
ஏப்பா. மனுசன் இப்புடி ஏதோ எழுதி சந்தோசப்பட்டுக்கிறதுக்கு விடமாட்டிங்களா?//
அதுதான் பாருங்களேன்
சின்ன கொழந்தைக்கு குறும்ப
க.பாலாசி said...
/அதெப்படி விடுறது....காந்தி கண்ட ராமராஜ்யம்தான் எங்களோட கொள்கையே...வெறும் எழுத்தோட இருந்தா பரவாயில்லையே...../
இனியும் இந்த பேச்சு வந்திச்சோ ராமராஜ்ஜியம்னு நைட் ஏற்காடுல வருவேன். பயப்படாதீங்க. ஏன்னு கேக்கதான்.=))
பிரியமுடன்...வசந்த் said...
/ஆமாதானே சாரின்னா வாங்கித்தந்துட்டு போங்கன்னு சொல்லுவாங்க ஹேய் யார்கிட்ட.../
ஏங்கண்ணூ. டெய்லி ஒரு சூடின்னு பிட்ட போட்டு ஒன்னும் தேறலைன்னு சாரின்னு போட்டு பாக்கறியோ.
கதிர் - ஈரோடு said...
/அதுதான் பாருங்களேன்
சின்ன கொழந்தைக்கு குறும்ப/
இது குறும்பில்ல. குசும்பு.
//ஏங்கண்ணூ. டெய்லி ஒரு சூடின்னு பிட்ட போட்டு ஒன்னும் தேறலைன்னு சாரின்னு போட்டு பாக்கறியோ. //
நீ ஒண்ணு செய் மவுண்ட் ரோட்ல எல் ஐ சி ஸ்டாப்ல ஒரு புத்தம் புது வண்டி வாங்கிட்டு போயி யாராயாவாச்சு லிஃப்ட் வர்றீங்களான்னு கேட்டு யாராச்சும் வந்துட்டாங்கன்னா நான் பிலாக் எழுதுறதையே நிறுத்திடுறேன் அம்மாவே உனக்கு பயந்துதான ஆட்டோல போறாங்க ....
//வானம்பாடிகள் said...
சின்ன கொழந்தைக்கு குறும்ப/
இது குறும்பில்ல. குசும்பு.//
ஆகா...ரெண்டு பெரிசுகளும் ஒண்ணு கூடிட்டாங்கப்பா...கூடிட்டாங்கப்பா...
பிரியமுடன்...வசந்த் said...
/நீ ஒண்ணு செய் மவுண்ட் ரோட்ல எல் ஐ சி ஸ்டாப்ல ஒரு புத்தம் புது வண்டி வாங்கிட்டு போயி யாராயாவாச்சு லிஃப்ட் வர்றீங்களான்னு கேட்டு /
அடியே. அதெல்லாம் உன்னிய மாதிரி யூத்து பண்ற வேல. எங்களுக்கெதுக்கு
//க.பாலாசி said...
ஆகா...ரெண்டு பெரிசுகளும் ஒண்ணு கூடிட்டாங்கப்பா...கூடிட்டாங்கப்பா...//
யாரு பாலாஜி... வசந்தும் வானம்பாடியுமா?
வசந்த்... கதிர் பின்னூட்டத்துக்கு முன்னால உங்களுக்கு வணக்கம். உங்கள மறக்கல பாஸ்... பெரிய பத்தியில போட்டுட்டு தனியே எழுதியதை சேர்க்க மறந்துட்டேன்...
//அடியே. அதெல்லாம் உன்னிய மாதிரி யூத்து பண்ற வேல. எங்களுக்கெதுக்கு//
தெர்தில்ல அப்பறமென்ன? வாய்ச்சவடால்...
கதிர் - ஈரோடு said...
/யாரு பாலாஜி... வசந்தும் வானம்பாடியுமா?/
ஆஹா பயந்துட்டீங்களா=))
//யாரு பாலாஜி... வசந்தும் வானம்பாடியுமா?//
கதிரு உங்களுக்கும் சனிதிசை ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைக்கிறேன்...
இருங்கடியேய்...
//
உன் சிரிப்பில் என்னுயிர் புதிதாய் சுரக்கிறது
உரிமையில் என் இதயம் பெரிதாய் நெகிழ்கிறது
ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் நாட்களாய்
என் ஒவ்வொரு விடியலும் உனக்காய் புலர்கிறது...//
உம் கவிதையில் என் மனம் லயிக்கிறது
கவலைகள் யாவும் பறக்கிறது
நினைவுகள் பின்னே செல்கிறது
நெஞ்செலாம் லேசாகி கனக்கிறது....
//பிரபாகர் said...
வசந்த்... கதிர் பின்னூட்டத்துக்கு முன்னால உங்களுக்கு வணக்கம். உங்கள மறக்கல பாஸ்... பெரிய பத்தியில போட்டுட்டு தனியே எழுதியதை சேர்க்க மறந்துட்டேன்...//
வண்க்க்கம்...
நான் ஒண்ணுமே நினைச்சுகிடலியே பிரபா
நானே ஒரு காமெடி பீசு இதுக்கு போயி வருத்தப்பட்டுகிட்டு
//நானே ஒரு காமெடி பீசு இதுக்கு போயி வருத்தப்பட்டுகிட்டு
October 23, 2009 4:42//
தப்பு வசந்த்.... அய்யாதான் பெரிய காமெடி பீசு... வடிவேலுகிட்ட இருந்து சீக்கிரம் அழைப்பு வரும் பாருங்க....
//பிரபாகர் said...
உம் கவிதையில் என் மனம் லயிக்கிறது
கவலைகள் யாவும் பறக்கிறது
நினைவுகள் பின்னே செல்கிறது
நெஞ்செலாம் லேசாகி கனக்கிறது....//
கவிதை பின்னூட்டியே நன்றி
//தப்பு வசந்த்.... அய்யாதான் பெரிய காமெடி பீசு... வடிவேலுகிட்ட இருந்து சீக்கிரம் அழைப்பு வரும் பாருங்க.... //
நீங்க அய்யான்னு சொன்னது வானம்பாடிகள் அய்யாவ தான..
சூப்பர் ஸ்டாருன்னா ரஜினிதான்
டாப்பு டக்கர்னா அய்யாதான்...
வானம்பாடி அய்யாதான்....
//டாப்பு டக்கர்//
நைனாவோட டாப்பத்தான சொன்னீங்க...
கை குடுங்க பிரபா இவ்ளோ நாளா கம்பெனிக்கு ஆள் இல்லாம இருந்தேன் இனி நைனா டார் டார்தான்
தமிழ்மணம் பரிந்துரை : 10/10
அதிசயம் ஆனால் உண்மை... அண்ணே கதிர் அண்ணே எப்படிங்க இது... நம்பவே முடியலை..
// பிரியமுடன்...வசந்த் said...
//இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
என் தோள் இறுகப்பற்றி நெருங்கி அமர்ந்து
எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...//
இந்த வரி எனக்கு பிடிச்ச வரி
இந்த வரியை
வேற யாராவது பிடிச்சதுன்னு சொன்னா நானும் கவிதையெழுதிடுவேன்..ஜாக்கிரதை //
எனக்கு இந்த வரிகள்தாங்க ரொம்ப பிடிச்சு இருக்கு...
வெரி நைஸ் வரிகள்
// சொடுக்கெடுக்கும் என் விரல்களின்
நகக்கண்ணில் உறங்கும் துளி அழுக்கை
மெலிதாய் கிளர்ந்து மெதுவாய் சுரண்டி
உன் சுண்டு விரல் நகம் ஊட்டும் சிலிர்ப்பு... //
முதலில் கைகளில் நகர் இருப்பதற்கு திட்டு விழும் அப்புறம் தான் அதுல இருக்கும் அழுக்கை எடுக்க முடியும்...
கவிதை நல்லாருக்குங்க
அய்ய.. இது நமக்கான ஏரியா இல்ல... இங்கு பின்னூட்ட தணிக்கை இருக்குதுங்க..
கவிதை அழகு. மற்றபடி பாலாஜி சொன்னதை வழிமொழிகிரெந். விட்டு அம்மணியைப பற்றியதாக இருந்தால் பரவாயில்லை.. இல்லை என்றால் நாளை வீங்கிய தலைதான். பூரிக்கட்டைதான். ஜாக்கிரதை.
காதல் தென்றல் கதிரின் பதிவில் சுகமாய்.
கதிரின் இன்னொரு முகம் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளது.
காதலின் வர்ணிப்பாளர் முகம் :)
நன்றி @@ நேசமித்ரன்
நன்றி @@ இராகவன் நைஜிரியா
நன்றி @@ வாத்துக்கோழி
(பூரிக்கட்டை இல்லீங்க வீட்டில்)
நன்றி @@ ஹேமா
(ஆஹா... தென்றலா)
நன்றி @@ செந்தில்
(மேக்அப் போட்ட முகம்ங்க இது)
நகரப் பேருந்தின் சன்னலோரத்திலிருந்து
நளினமாய் சப்தமிட்டதை யார்யாரோ பார்க்க
எனக்காய் ஆட்டிச்சென்ற கைகளிலிருந்து
சொட்டுச் சொட்டாய் சேகரித்த காதல் துளிகள்//
நல்ல கவிதை.பாரட்டுக்கள்.
இப்போதுதான் படித்தேன்.
பொல்லாத கவிதை வெடிக்கிறது.
பொல்லாத மாலை உலுக்குகிறது.
பொல்லாத தனிமை.
சீரியஸ் பதிவுகளை சற்று தளர்த்திவிடும்,
சீரியஸ் நேரங்களைத்தடுமாறவைக்கும்.
கைகொடுங்கள் அன்புத்தோழரே.
அழகு
கவிதையை ரசித்தேன்...பாராடுக்கள்
நன்றி @@ கருணாகரசு
நன்றி @@ காமராஜ்
(கொஞ்சம் தளர்வதற்காகத்தான்)
நன்றி @@ நிலா
எனக்குப் பிடித்த வரிகளையே எல்லோரும் மேற்கோள் காட்டி விட்டதால் இனி நீங்கள்தான் எனக்குப் புதிதாக ஏதாவது வரிகள் எழுத வேண்டும் கதிர்.
கவிதையில் கிளரும் மகிழ்ச்சி.
நன்றாக இருக்கிறது .
நேத்து ஒரு பதிவு மிஸ்ஸாயிருச்சு போல!
அழகான காதல்... சிலிர்ப்பூட்டும் வரிகள்.. அசத்தல்..!
tamilmanam sothappal againnn... :((... appaalikka try panren..
ரசித்தேன் நண்பா...
நன்றாக உள்ளது
கதிர் அருமை
//நகரப் பேருந்தின் சன்னலோரத்திலிருந்து
நளினமாய் சப்தமிட்டதை யார்யாரோ பார்க்க
எனக்காய் ஆட்டிச்சென்ற கைகளிலிருந்து
சொட்டுச் சொட்டாய் சேகரித்த காதல் துளிகள்...//
நான் மிகவும் ரசித்த வரிகள் என்பதை விட ருசித்த வரிகளாய் இருக்கு
நன்றி @@ ஷண்முகப்ரியன்
(புதிதாக வரிகளா... ஹ ஹ
நன்றி @@ ஸ்ரீ
நன்றி @@ வால்பையன்
(ஆஹா... இப்படி வேறயா)
நன்றி @@ கலகலப்ரியா
நன்றி @@ மாதவராஜ்
நன்றி @@ தியாவின் பேனா
நன்றி @@ T.V.Radhakrishnan
நன்றி @@ பா.ராஜாராம்
நன்றி @@ ஞானசேகரன்
///இரு சக்கர வாகனத்தின் பின்னிருக்கையில்
என் தோள் இறுகப்பற்றி நெருங்கி அமர்ந்து
எதிர்காற்றில் நீ உதிர்த்ததில் எஞ்சியிருக்கும்
இரண்டொரு வார்த்தைகள் காது புகும் சுகம்...//
அருமை ...........அருமை .....!
நன்றி @@ ஜீவன்
Supperappu..
கதிரின் இன்னொரு முகம் தெரிய ஆரம்பித்துள்ளது.
done..!
melithai kilarnthu......
karpanai kadhali koduthu vaithaval....
கற்பனை காதலி கொடுத்துவைத்தவள்
உன் சிரிப்பில் என்னுயிர் புதிதாய் சுரக்கிறது
உரிமையில் என் இதயம் பெரிதாய் நெகிழ்கிறது!
-சுவையான வார்த்தைகள்,ஆசை பட்டவர் சொந்தம் ஆகும் போது உலகை ஜெயித்த கர்வம் வரும் !
மெலிதாய் கிளர்ந்து,சுகமாய் இறங்குகிற உணர்வு
Post a Comment