உங்களுக்கு கோபம் வருமா....?
உங்களின் முதல் கோபம் நினைவிருக்கிறதா?
அப்போது 10 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டிற்கு உறவினர்கள் வந்திருந்த சமயம், அம்மா என்னிடம் ஏதோ வேலை சொல்ல, முதன் முதலாய் சுள்ளென்று கோபத்தை காட்டினேன்.
வந்திருந்தவர்கள் என் கோபத்தை அறுவெறுப்பாக பார்க்கவில்லை, துரதிருஷ்டவசமாக ஆச்சரியமாக பார்த்தார்கள். "ஆஹா இந்த வயசில எப்பிடி கோபம் வருது பாருங்க" என்ற வார்த்தைகள் நச்சு விதையாய் விழுந்தது. என் கெட்ட நேரம் அது கோபத்திற்கு கிடைத்த வெகுமதியாய் அப்போது தோன்றியது....
நான் வளர, வளர கோபமும் வேகமாய் வளர்ந்தது. பள்ளிகளில், கல்லூரியில், பணி புரிந்த இடத்தில், தொழிலில்... கோபம் வித விதமாய் நடனமாடியது. கோபம் நடனமாடிய பல மேடைகளில் அழுகிய முட்டையில் அடி வாங்கியதை கோபப்படாமல் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.
பொதுவாகவே பெரும்பாலான மனிதர்களை அடையாளப் படுத்தும் போது அவர் மிகப் பெரிய கோபக்காரர் என்று பெருமையாக (!!!???) சுட்டிக் காட்டப்படுகிறார்கள். “அவருக்கு மட்டும் கோபம் வந்திச்சினா அவ்வளவுதான்” என்ற பெருமையும் கூடுதலாக....
ஒரு கசப்பான உண்மை (ஏன் உண்மை மட்டும் எப்போதும் கசப்பாகவே இருக்கிறது) கோபத்தை நாம் எல்லாரிடத்திலும் காட்ட முடிவதில்லை. கோபத்தை யார் எல்லாம் சகித்து கொள்கிறார்களோ, அவர்களிடம் மட்டும் தான் காட்ட முடிகிறது. அது பெற்றவர்களாக இருக்கலாம், மனைவியாக இருக்கலாம், குழந்தையாக இருக்கலாம், கீழே பணி புரிபவர்களாக இருக்கலாம்.
கோபத்திற்கான எல்லைகள் வியப்பானவை. நாம் யார் மேல் கோபப் படுகிறோமோ, அவர் அதை அவர் எவ்வளவு தூரம் சகித்துக் கொள்கிறாரோ அது வரைக்கும் நம் கோபத்தின் எல்லைக்கோடு நீளும்.
பெரிதும் கோபம் இயலாமையின் வெளிப்பாடாகவே வருவதை கோபம் கொள்ளும் வீரர்கள்(!!!) அனைவருமே அறிவோம், ஆனாலும் கோபம் என்பது வீரமான குணமாக பனிப்புகையாய் மனதிற்குள் படர்ந்திருக்கும். வாழ்க்கையில் நிகழ்ந்த பல தவறுகளின் பின்னால் கோபம் ஒரு நிழல் போல் படர்ந்திருக்கும்.
கோபத்தை காட்டும் பொழுது அதற்காக வெட்கப்பட மறந்து போகிறோம். கோபம் தீயின் நாக்கு போல் அவர்களை தீண்டும் பொழுது சிறிதும் கூச்சப்படாமல் இருக்க முடிகிறது.
முதல் கோபத்திற்கு தவறுதலாய் குதூகலப்பட்ட மனது, கடைசியாய் கோபப் பட்டபோது கூச்சப்படவில்லை.
ரௌத்திரத்திற்கும் கோபத்திற்கும் வெகுதூரம் என்பது நமக்கு தெரிவதில்லை.
புலிகளிடம் நேரிடையாக கோபப்பட முடிவதில்லை... வீட்டில் தயிர்சாதம் தின்று எலி பிடிக்கும் பூனையிடம் மிக எளிதாக கோபத்தைக் காட்டமுடிகிறது.
________________________________________
பொறுப்பி: மீள் இடுகை
30 comments:
உங்களுக்கு கோபமெல்லாம் வருமா!?
/ரௌத்திரத்திற்கும் கோபத்திற்கும் வெகுதூரம் என்பது நமக்கு தெரிவதில்லை./
yessssssssssssssssss.
/கோபத்திற்கான எல்லைகள் வியப்பானவை. நாம் யார் மேல் கோபப் படுகிறோமோ, அவர் அதை அவர் எவ்வளவு தூரம் சகித்துக் கொள்கிறாரோ அது வரைக்கும் நம் கோபத்தின் எல்லைக்கோடு நீளும்./
அந்த ஓரத்துக்கு போனதும் ஒரே போட்டில நம்மள தூக்கி கெடாசிடுவாங்க பாருங்க கண்ணுல ஸ்டார் பறக்கும்.
/புலிகளிடம் நேரிடையாக கோபப்பட முடிவதில்லை... வீட்டில் தயிர்சாதம் தின்று எலி பிடிக்கும் பூனையிடம் மிக எளிதாக கோபத்தைக் காட்டமுடிகிறது./
ம்கும். இதுல எதுனா உள்குத்து இருக்கும். எதுக்கு வம்பு. அதையும் பூனைட்ட காட்டாம சாட மாடயா எலிட்ட காட்ற புலிங்கதான் அதிகம்னு சொல்லிக்கிறேன்.
இடுகைன்னா இப்புடி உருப்படியா போட்டா உண்டு. நாமெல்லாம் வேஸ்ட் ஃபெல்லோ.
என்ன செய்வது கதிர்..?? நியாயமான கேள்வி தான்.
மீள் பதிவிற்கு நன்றி..
உண்மைதான். கோபத்தை எல்லாரிடமும் காட்ட முடியவில்லை.. ரொம்ப கோபமும் கூடாது. அளவோட இருக்கனும் எதுவும்.
அன்பு,வெறுப்பு,கோபம்,சாந்தம்,வன்மம்,காமம் என்ற அனைத்து உணர்வுகளுமே உங்கள் உயிராற்றலின் வெளிப் பாடுகளே.
இதில் எது தவறு,எது சரி என்பதெல்லாம் அந்த ஆற்றலை எதற்காகப் பயன் படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான்,கதிர்.
இது நான் கண்ட உளவியல்.
//கோபம் நடனமாடிய பல மேடைகளில் அழுகிய முட்டையில் அடி வாங்கியதை கோபப்படாமல் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.//
எல்லா கோபத்திற்கும் இதேபோன்றதொரு வெகுமதி தக்க சமயத்தில் கிடைத்துவிடுகிறது.
//கோபத்திற்கான எல்லைகள் வியப்பானவை. நாம் யார் மேல் கோபப் படுகிறோமோ, அவர் அதை அவர் எவ்வளவு தூரம் சகித்துக் கொள்கிறாரோ அது வரைக்கும் நம் கோபத்தின் எல்லைக்கோடு நீளும்.//
அதற்குமேல் அவரின் கோபம் தொடங்கிவிடும். இரண்டும் சேர்ந்து வன்முறைக்கு வழிவகுக்கும்.
//புலிகளிடம் நேரிடையாக கோபப்பட முடிவதில்லை... வீட்டில் தயிர்சாதம் தின்று எலி பிடிக்கும் பூனையிடம் மிக எளிதாக கோபத்தைக் காட்டமுடிகிறது//
சரிதான்.
இந்த விசயத்தில் என்னிடம் கோபம் என்பது வெளிப்படுவதும், வெளிப்படுத்துவதும் மிக மிக குறைவு. இதற்காக என்னை பலர் வெட்கமில்லாதன் என்றுகூட சொல்லுவார்கள். அதற்காககூட நான் கோபப்பட்டதில்லை.
நல்ல இடுகை...மீள்இடுகையாயினும்...
கடைசி வரியில் வச்சீங்க பாருங்க பாஸ் வெடி அது அது உங்க பன்ச் !!
டெம்பிளேட்டை மாத்துங்க பாஸ்.......எழுத்தெல்லாம் சரியா தெரிய மாட்டேங்குது
பேஜ் லோட் ஆக ரொம்ப டைம் ஆகுது.அதான்னு நினைக்கிறேன்
எனக்கு சரியான கோபம் வருகிறது, உங்களின் மீள் இடுகையினால்... ஹி... ஹி... முன்னாலேயே படிச்சதால..
சரிதான் கதிர். உண்மை கசக்க காரணம், அது மருந்து போல. கசந்தாலும் நலத்தையே பயக்கும்.
பத்து பொய்ய சொல்லி பராளரதவிட ஒரு உண்மைய சொல்லி ஓட்டாண்டியா வாழலாம்...
இப்படி ஒரு பழமொழி இருக்கு? எதோ ஒரு ஃ ப்ளோல சொல்லிட்டேன். தமிழ் தெரிஞ்சவங்க விளக்குங்களேன்....
பிரபாகர்.
மறு பிரதியா அழகு கதிர்.
கோபம் ரௌத்ரம் நல்ல அறிமுகம்.
சண்டியர்- வீரன் மதிரி.
''புலிகளிடம்..'' நல்ல நடைமுறை அவதானிப்பு.
இதை சமயோசிதம் என்கிற வார்த்தைகொண்டு மறைப்பார்கள்.
அவசியமான பதிவு....... மிக அருமை
வாழ்த்துக்கள்
கதிர் ஏற்கனவே கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். ஈரோடு திருப்பூர் என்றால் இப்படித் தான் யோசிக்கத் தோன்றுமா? ஆனால் சண்முகப்பிரியன் கூறியது தான் சரியாக இருந்தாலும் கடந்த ஐந்து மாதங்களாக எந்த கோபமும் என்னை தாக்குவதில்லை. உண்மை. தீக்கட்டை தண்ணீரை தொடும்போது? என்ற கதை தெரியும் அல்லவா? முயற்சித்து பாருங்கள் கதிர்?
விவாதத்திற்கிடையே குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும்
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....
தமிழ்செய்திகளை வாசிக்க
(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்
(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய
தமிழ்செய்திகளை இணைக்க
ஆங்கில செய்திகளை வாசிக்க
வலைப்பூ தரவரிசை
சினிமா புக்மார்க்குகள்
சினிமா புகைப்படங்கள்
எனது கோபத்தை, என் பேச்சை கேட்பவர்கள் மீதுதான் பிரயோகிக்கிறேன் என்று தெரிந்தபின் நான் கோபத்தை வெகுவாக குறைத்துக்கொண்டேன்(கேனயனாட்ட சிரிச்சுட்டே இருக்கான் என்ற பட்டம் கிடைத்தும், இப்போது அவ்ளோவாக கோவப்படரதில்லை..)
//.. புலிகளிடம் நேரிடையாக கோபப்பட முடிவதில்லை... வீட்டில் தயிர்சாதம் தின்று எலி பிடிக்கும் பூனையிடம் மிக எளிதாக கோபத்தைக் காட்டமுடிகிறது..//
உண்மைதான்.. :-(
சபாஷ்...! இதில வேற கோபம் இருக்கிற இடத்திலதான் குணம் இருக்கும்னு வேற சொல்லி வச்சுட்டானுவ..! எனக்கு வர்ற கோபத்துக்கு.. =))... இருங்க எலி ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கறேன்..
எனக்கும் ...
இப்போ நிறைய முறை மூக்குக்கு மேல முன் கோபம் வருது
ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு யோசிச்சு பாத்தா எனக்கே என்மேல கேவலமான எண்ணம் வருது ஏன் இவ்ளோ கோவப்பட்டோம்ன்னு அந்த அஞ்சு நிமிசத்தை கோவத்துக்கு முன்னாடி நினைச்சு பார்க்கப்பழகிட்டு இருக்கென்...
இதைப் பற்றி நானும் உங்களைப் போன்றே யோசித்திருக்கிறேன் கதிர்.
இயலாமையின் உச்சம் கோபத்தில் முடியும் என்பது உண்மைதானெனினும் கோபம் வருவதெல்லாம் இயலாமையின் உச்சத்தில் என்பது கிடையாது.
(ஆஹா தத்துவம்...!)
அதைத்தான் பெரிதும் என்று குறிப்பிட்டிருக்கின்றேனே என்கிறீர்களா.எதாவது சொல்லனும்ல அதான். :)
kopam aarokkiyamatra manathin velippaadu. Namathu devaigalil,kadamaigalil nammaal ethuvum seiyamudiyum entra nilaikku manathin thanmayai uyarthikkondal oru bothum kopam nammai theenduvathillai. Nantri Kathir. ivan-VN.Thangamani
நல்ல சிந்தனை!
வெகுளாமை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர்..,புலி,பூனை விஷயத்தை 'செல்லிடத்து காப்பான்....வல்லிடத்து காக்கின் என் காவாக்கால் என்' என்று சொல்லியிருக்கிறார்!
'ராசா..முடிஞ்சா அங்க போய் பேசிப்பாரு..!' என்பது போன்ற நையாண்டி!
ஆழமான சிந்தனைகள்! இது எனக்கு பெரிய பாடம்!
.நீங்கள் சொல்வது உண்மை கதிர். நம் கோபம் செல்லுமிடத்தில்தான் காட்டுகிறோம். அதேசமயம் கொபப்படவேண்டிய நேரத்தில் மவுனமாக இருந்தால் அது நம் வாழ்கையோடு விளையாடிவிடும். கோபம் என்ற ஒன்று இருப்பதால்தான் நாம் சுயமரியாதையை காப்பர்றிகொள்கிறோம். கோபம் என்பது தேவையான ஒன்றுதான்.பாரதியாரே சொல்லி இருக்கிறார் .........ரொவுத்ரம் பழகு என்று. .....கவிதைககோபமும் அழ்குதான் கவிஞ்ர் கதிர் அவர்களே
நன்றி @@ வால்பையன்
(ஓ... இப்படியெல்லாம் சந்தேகமா)
நன்றி @@ வானம்பாடிகள்
(நிறைய தடவை கண்ணுல ஸ்டார் பறந்திருக்குங்க
//இடுகைன்னா இப்புடி உருப்படியா போட்டா உண்டு. நாமெல்லாம் வேஸ்ட் ஃபெல்லோ.//
ஆஹா... இப்படி வேற ஆப்பு வைக்கனுமாண்ணே)
நன்றி @@ butterfly Surya
(நானும் உங்களை மாதிரிதான்)
நன்றி @@ பின்னோக்கி
(ஆமாங்க)
நன்றி @@ ஷண்முகப்ரியன்
(மிகச் சரியான உளவியல்)
நன்றி @@ பாலாசி
(அருமையான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி தோழா)
நன்றி @@ நேசமித்ரன்
(இஃகிஃகி, மகிழ்ச்சி)
நன்றி @@ அத்திரி
(அப்படியா, கவனிக்கிறேன்)
நன்றி @@ பிரபாகர்
(நீங்க மாப்புகிட்டதான் கேக்கனும்)
நன்றி @@ காமராஜ் said...
(பல இடத்துல சண்டியர்தான் வீரன் மாதிரி காட்டிக்கிறான்)
நன்றி @@ஆரூரன் விசுவநாதன்
நன்றி @@ ஜோதிஜி. தேவியர் இல்லம்.
(கண்டிப்பாக முயற்சிக்கிறேன்)
நன்றி @@ mix
(தமிழர்ஸ் இணையத்தில் இணைத்து விட்டேன்)
நன்றி @@ பட்டிக்காட்டான்
//நான் கோபத்தை வெகுவாக குறைத்துக்கொண்டேன்(கேனயனாட்ட சிரிச்சுட்டே இருக்கான்//
(இது பெரிய விசயம்ங்க)
நன்றி @@ கலகலப்ரியா
(எதுக்கு எலி தேடறீங்க)
நன்றி @@ வசந்த்
(நல்லது நண்பா)
நன்றி @@ நாடோடி இலக்கியன்
(ஆஹா அருமையான் தத்துவம்...!)
நன்றி @@ VN.THANGAMANI
நன்றி @@ velji
(வள்ளுவர் எதைத்தான் சொல்லாம இருக்காரு, நாமாதான் மனப்பாடப் பகுதியா வச்சதால படிக்காம விட்டுட்டோம்)
நன்றி @@ தமிழ் நாடன்
நன்றி @@ வாத்துக்கோழி
(அக்கா, பாரதியார் சொன்ன ரௌத்திரமும், நாம் தினமும் காட்டும் கோபமும் வேறு வேறுங்க)
அன்பு கதிர்,
ரொம்ப நல்லாயிருந்தது உங்கள் பதிவு. முதன் முதலாய் உங்கள் பதிவுலகில் வாசிக்க ஆரம்பிக்கிறேன். இனி தொடர்வேன்.
வாழ்த்துக்கள்!
அன்புடன்
ராகவன்
வித்தியாசமான சிந்தனை.. நல்லா இருக்கு நண்பா
//கோபத்தை யார் எல்லாம் சகித்து கொள்கிறார்களோ, அவர்களிடம் மட்டும் தான் காட்ட முடிகிறது. //
உணமைதான்.... வீரத்திற்கும் கோபத்திற்கும் தூரம் அதிகம்..
நன்றி @@ ராகவன்
நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி @@ ஈ ரா
Good one
Thanks @@ Pradeep
ம்ம்.......யார் சகித்துக்கொள்வார்களோ அவர்களிடம் மட்டுமே காட்டப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை....இதில் பெருமை வேறு........
இவ்ளோ கோபம் வருமா? உங்களுக்கு அதுவும் ஒரு அழகான பதிவாகிவிட்டது....
Post a Comment