சினிமாவும் மூச்சுத்திணறலும்

ஒரு சினிமா நடிகை விபச்சாரம் செய்ததாக கைது செய்யப் படுகிறார், அதையொட்டி ஒரு பத்திரிக்கை இன்னும் சில நடிகைகளை குறித்து செய்தி வெளியிடுகிறது... அடுத்த அடுத்த நாட்களில் ஊடகங்கள் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் குதிக்கின்றன. சினிமா நடிகர்களின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது, ஆளாளுக்கு வீர வசனம் பேசுகிறார்கள், பத்திரிக்கைகள் இனி சினிமா குறித்து செய்தி வெளியிட மாட்டோம் என அறிக்கை விடுவார்கள் அல்லது விட்டிருப்பார்கள்.. ஒரு மாதிரி அந்த நாடகங்கள் முடிந்து விட்டன.

சரி இதில் புத்திசாலிகள் யார்...

  • வீராவேசமாக சபதமிடும் சினிமாக்காரர்கள்
  • ஊடகங்கள் (பத்திரிக்கை / தொலைக்காட்சி)
  • அரசியல்வாதிகள் (குறிப்பாக ஆளும் கட்சி)

சரி இதில் முட்டாள்கள் யார்...

  • இந்தக் கருமாந்திரங்களையெல்லாம் விரும்பியும், விரும்பாமலும் பார்த்த, காதுகளில் வாங்கிய, இது குறித்துப் பேசிய அல்லது இது குறித்து சிந்தித்த நீங்களும் நானும்...



தங்களிடம் ஆதாரம் இருப்பதாக கூறி செய்தி வெளியிட்ட ஊடகங்களே உங்கள் மனச் சாட்சியைத் (அப்படி ஒன்று இருந்தால்) தொட்டு சொல்லுங்கள், நீங்கள் எப்போதுமே உண்மையின் பக்கம்தான் நிற்கிறீர்களா. நடிகையின் விம்மிய மார்போ, தொடையோ, இடுப்போ இல்லாத அட்டைப்படத்துடனோ அல்லது அவர்களைப் பற்றிய கிசுகிசுவோ இல்லாமல் பத்திரிக்கையை நடத்தும் தைரியம் உங்களிடம் இருக்கிறதா? நடிகை என்றாலும் அவளும் ஒரு பெண்தானே என்ற பார்வை உங்களிடம் ஒரு நாளேனும் இருந்திருக்கிறதா?

ஏதோ ஒரு காலகட்டத்தில் உழைத்த மக்கள், தங்கள் உழைத்த களைப்பை அகற்றிக் கொள்ளத்தானே பாட்டையும், வசனத்தையும் கூத்து வடிவில் கொண்டு வந்திருப்பார்கள். அது கொஞ்சம் மெருகேறி நாடகமாக, அதன்பின் அறிவியல் வளர்ச்சியில் நாடகம் என்பது ஒன்றினுள் பதிவு செய்யப்பட்டு, வேறொரு இடத்தில் வெளியிடப்பட்டதுதானே திரைப்படமாக இருக்கவேண்டும். அதை இன்னும் சுவை கூட்டத்தானே இசையும், வண்ணமும் என இணைந்திருக்கவேண்டும். காலப்போக்கில் இன்று சினிமா என்பது ஒரு தொழிலாகவே மாறிவிட்டதுதானே. அதில் தவறேதும் இல்லை.

அப்படிப்பட்ட பொழுது போக்கு அம்சமாக பார்க்க வேண்டிய சினிமாவில், திரும்பத் திரும்பப் நல்லவன் போல் வேஷம் போடுபவனை பார்த்து நல்லவன் என்றே நம்பினோம். சரி அவர்கள் அப்படி என்னதான் சாதித்துவிட்டார்கள், சேற்றில் இறங்கி உழவு ஓட்டியது போல், வீதி கூட்டியது போல், மூட்டை தூக்கியது போல், எல்லையில் தேசத்திற்காக சண்டையிட்டது போல், நேர்மையின் அடையாளம் போல், ஊழலை ஒரே நாளில் ஒழித்தது போல், நியாயத்தை நிலை நாட்டியதுபோல் நடித்தார்கள். நடித்தார்கள் அவ்வளவே... ஆனாலும் அதை நிஜம் என்பது போலவே ரசித்தோம், நம்பினோம்...


நம்பியதோடு நில்லாமல் ரசிகர் மன்றம் வைத்தோம், தலைவனாக்கினோம், சிலை வைத்தோம், பச்சை குத்தினோம், பால் அபிஷேகம் செய்தோம், மொட்டை போட்டோம், கோயில் கட்டினோம், ஓட்டு போட்டோம், சொன்னவர்களுக்கு ஓட்டுப் போடச் சென்றோம். எல்லாம் அவர்களுக்காகத்தானே செய்தோம், ஆகவே அவர்களிடம் ஓட்டு வங்கி இருக்கிறது என்று கட்சியில் இணைத்து பொறுப்பு கொடுத்து வளர்த்துவிட்டு, அரசியல்வாதிகள் அவர்களை பூஜிக்கத் துவங்கினார்கள்.


சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம்தானே? பொழுது போகாமல்தானா நீங்களும் நானும் உட்கார்ந்திருக்கிறோம்? அசைக்கமுடியா இடத்தை அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ கொடுத்தோம், விளைவு ஊடகங்கள் சினிமாவை நேசித்து, சுவாசித்து, குடித்து, தின்று கொழுத்து பிரமாண்டமாக உயிர்வாழ்கிறது. சினிமாத் துறை தும்மினால் கூட நலம் விசாரிக்க அரசாங்க இயந்திரம் அவசரமாக ஓடுகிறது.

விளைவு...


சினிமாக்காரார்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன், சதையை மட்டுமே வியாபாரப் பொருளாக்கி அதிகப்படியான ஆபாசப் படங்களில் நடித்த நடிகை உட்பட (பெயர் சொல்லி உங்களை சுவாரஸ்யப் படுத்துவது என் நோக்கமல்ல) அணி திரண்டு வந்து ஒரு மாநிலத்தின் முதல்வரை எளிதாக சந்தித்துவிட முடிகிறது.

ஏதாவது ஒரு சொத்தைக் காரணத்தை வைத்துக் கொண்டு, கலை நிகழ்ச்சி அல்லது விருது வழங்கும் விழா என்று நடத்தி கவர்ச்சியாக நடனமாடி ஊடகங்கள் வழியாக அதை வியாபாரப்படுத்திட முடிகிறது. அதற்கும் தமிழக முதல்வரை அழைத்து வந்து அமர்த்தி வைத்திட முடிகிறது.

ஒரு நடிகனுக்கு ரசிகன் என்று சொல்லி, அந்த நடிகனின் திரைப்படம் வெளியாகும் வரைக் காத்திருந்து, அந்தத் திரைப்படம் வெற்றிபெற பிரார்த்தனை செய்து, வெளியானால் கொண்டாடும் அல்லது விமர்சனம் எழுதும் ரசனை மிகுந்த ரசிகனே...

  • ஒரு மனிதனின் உயிர் வாழ, மிக அத்தியாவசியத் தேவையான உணவைத் தயாரிக்க, இயற்கையை நம்பி, அரசாங்கத்தை நம்பி, தெய்வத்தை நம்பி பயிரிடும் விவசாயி...

  • இரவு முழுதும் கண்விழித்து தினம் தினம் பலநூறு மைல்கள் குண்டும் குழியுமான சாலைகளில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணிகளை பத்திரமாக கொண்டு சேர்க்கும் நெடுந்தொலைவு பேருந்தின் ஓட்டுனர்கள்

  • அரசாங்கமே மது விற்கும் நாட்டில், தென்னை, பனை மரங்களில் கள் இறக்க பல வருடங்களாக போராடும் பனைத் தொழிலாளி...

  • தினமும் திடீர் திடீரென சொல்லாமல் கொள்ளாமல் நடக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டோடு சிறு தொழில் செய்வோர்...

  • இரசாயனம் கலந்து மலடான பொட்டல் காட்டின் மத்தியில், குடிக்க சொட்டுத் தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் சாமானியன்...

  • பனிரெண்டு மணி நேரம் வேலை செய்து, ஆண்டு முழுதும் கடன் அடைக்க முடியாமல் கந்துக்கு வாங்கி தேய்ந்து போய்க் கிடக்கும் தினக்கூலி...

  • சாலைகளின் பிரிவில் திரும்பும், பாரமேற்றிய லாரியில் ஓடிப்போய் தொற்றி, அது சேரும் இடத்தில் முதுகு எலும்பு வலிக்க மூட்டைகளை இறக்கி ஏற்றும் சுமை தூக்குபவன்...

  • தினம் தினம் நாற்றம் பிடித்த நம் வீதிகளில் முகம் சுழிக்காமல் சாக்கடை அள்ளியெடுக்கும் துப்புரவு தொழிலாளி...

இவர்களில் யாரேனும் ஒரு சினிமா நடிகன் போலவோ, அல்லது நடிகை போலவோ தங்கள் குறையைச் சொல்ல முதல்வரை இப்படிச் சந்தித்திட முடியுமா?

நம் காசை, கனவைச் சுரண்டாமல் நமக்காக உழைப்பவன் நன்றாக இருக்கட்டும் என ஒரே ஒரு முறையேனும் மனதார வேண்டிக்கொள்ள முடிகிறதா நம்மால்? அல்லது நாம் தான் இவர்களைக் கொண்டாடுகிறோமா?

ஐம்பது ஆண்டுகளாக காவி ஏறிய கோமணத்தோடு காட்டில் வேலை செய்பவனுக்கு பொன்விழா எடுக்கவோ,

தினம் தினம் சாக்கடை அள்ளுபவனுக்கு சுத்தத்தின் சொந்தக்காரன் என்று விருது கொடுக்கவோ,

எண்பது-தொன்னூறு வயதாகியும் வெறும் எலும்புக் கூடாய் உழைக்கும் கிழவனுக்கொ, கிழவிக்கோ வாழ்நாள் உழைப்பாளி என்று விருது கொடுக்கவோ

இங்கு ஒரு நாதியும் இல்லை.

-------------------------------------------------------------------------
இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

47 comments:

Unknown said...

sariyaana nethuyadu nanbare thankalai polave nanaum sila peridam vaathittu irukiren. namathu karuthai sonaal muttaal endru solkiraarkal unmaiyil rasikar mandram vaithuthan muttaal aagirarkal

vasu balaji said...

இதுக்கு பதில் உங்க வலைப்பூல இருக்கிறத சின்ன மாற்றத்துடன்:

கனவாய் வாழ நிஜத்தை தின்னு!. செரிமானமில்லாட்டி இப்படி புலம்பிக்க வேண்டியதுதான். முத்தான கருத்துக்கள்.

நாடோடி இலக்கியன் said...

நல்ல இடுகை கதிர்.

கலகலப்ரியா said...

//ஐம்பது ஆண்டுகளாக காவி ஏறிய கோமணத்தோடு காட்டில் வேலை செய்பவனுக்கு பொன்விழா எடுக்கவோ,

தினம் தினம் சாக்கடை அள்ளுபவனுக்கு சுத்தத்தின் சொந்தக்காரன் என்று விருது கொடுக்கவோ,

எண்பது-தொன்னூறு வயதாகியும் வெறும் எலும்புக் கூடாய் உழைக்கும் கிழவனுக்கொ, கிழவிக்கோ வாழ்நாள் உழைப்பாளி என்று விருது கொடுக்கவோ

இங்கு ஒரு நாதியும் இல்லை.//

அருமையான பதிவு கதிர்...

(சுத்தத்தை சாக்கடை ஆக்குவதெப்படி.. முடியவில்லையெனில் அவ்வாறு சித்தரிப்பதெப்படி... இவ்வாறு ஆக்கபூர்வமான சிந்தனைகளிலேயே நிறைய நேரம் செலவாகிறபடியால்... இவ்வாறான எலும்புக் கூடுகள் பற்றிச் சிந்திக்க நமக்கு நேரமில்லை...!)

இராகவன் நைஜிரியா said...

அண்ணன் வானம்பாடிகள் சொல்லியதை நானும் வழி மொழிகிறேன்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல இடுகை கதிர்!

நம்ம மட்டும் என்னங்க பண்றோம்? வீட்டுக்கு வந்ததும் ஒன்னு சினிமாப்பாட்டு கேட்கிறோம், சினிமா பார்க்கிறோம், சினிமாவைப் பற்றிப் பேசுகிறோம். சினிமாவை வாசிக்கிறோம். ஆகா ஆள்வோரும் பத்திரிக்கைகளும் "சினிமாவை விரும்பும் மக்களுக்கு" சினிமாவைப் பற்றி எழுதுகிறார்கள், நிகழ்ச்சிகளில் பங்குகொள்கிறார்கள்.

எல்லாம் யாருக்காக? நமக்காக!!


நம்ம விவசாயத்தைப் பற்றி பேசுகிறோமா? சுற்றுச்சூழலைப் பற்றிக் கவலைபடுகிறோமா? இல்லையே!!

"of the people, for the people, by the people" என்பதை

"சினிமாவை நேசிக்கும் மக்களுக்காக சினிமாவால் வந்த மக்கள் சினிமாவைப் போற்றுவது" என்று மாற்றலாம் :)

பின்னோக்கி said...

இப்படி புலம்பி பிரயோஜனம் இல்லை.
உங்களின் ஒரு பதிவுக்கு “நயந்தாராவின் ரகசியம்” என பெயர் வைத்து பாருங்கள். எவ்வளவு ஹிட்ஸ் வரும் என்று. நிஜத்தை விட நிழல் அதுவும் ஒப்பனை செய்த நிழலுக்கு மதிப்பு தரும் இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி பதிவு தேவையான ஒன்று தான்.

butterfly Surya said...

அவசியமான பதிவு..

யாசவி said...

:(

பிரபாகர் said...

கதிர்,

அரசியல் என்பது முழுமையான வியாபாரமாகி நாளாகிவிட்டது. காமராஜ் போல் மக்களின் எதிர்காலத்தை சிந்திப்பவர்கள் மாண்டு விட்டார்கள். சுயநலத்துடன், தன குடும்பம், தனது சேனல் என நினைக்கும் யாரும் எந்தன் ஒரு சினிமா நபரையும் பகைத்துக்கொள்ள முடியாது. அவர்களின் அரசியல் வி...சாரத்திற்கு அவர்கள்தான் மூலதனம். அவர்களின் ஊடகங்களுக்கு அவர்கள்தான் சொத்து.

ஒரு விவசாயியின் பேட்டியை யாராவது பார்ப்பார்களா? அதை விடுத்து செயற்கையாய் வாழும் சினிமாவினரை காண்பித்தால் தான் காசு, பணம். கேவலமாயிருக்கிறது கதிர். மனம் இன்னும் கொதிப்பாகிறது உங்களை படித்தவுடன்....

மனக்குமுறலை கொட்டி, என்னுள்ளும் கிளர்ந்துவிட்டதற்கு நன்றி நண்பரே....

பிரபாகர்.

வால்பையன் said...

//அரசாங்கமே மது விற்கும் நாட்டில், தென்னை, பனை மரங்களில் கள் இறக்க பல வருடங்களாக போராடும் பனைத் தொழிலாளி...//

இங்க தான் நீங்க என் பக்கம் நிக்கிறிங்க!

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

உங்கள் பதிவுகளை வாசிக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. எது கனவு, எது நிஜம் என்கிற தெளிவே இல்லாத அரை மயக்க நிலையில் நம் மக்களை வைத்திருப்பதில் பெரும் வெற்றி அடைந்திருக்கின்றன நம் சினிமாவும், அரசியலும், இன்ன பிறவும். யோசிப்பதற்கு யாரும் தயாராக இல்லை; அல்லது அதற்கான அவகாசம் எவனுக்கும் தரப்படுவதில்லை. இது வெறும் புலம்பல் என்பதாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. என்னைப் போன்ற படித்த வர்க்கம் பேசித்திரிகிற இலக்கியம் கூட, தன் இலக்கை அடைவதை விட்டு, நீர்த்துப்போய் விட்டதோ என்று கூட அடிக்கடி தோன்றுகிறது. முதல்ல சாப்பாட்டுக்கு வழி பண்ணுவோம்; அப்புறமா கலையை வளர்க்கலாம்.

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

சாட்டையடியான பதிவு.

தமிழ் அமுதன் said...

நல்ல பதிவு ..!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ prabakar.l.n
(முட்டாள்கள் இன்னும் பால் அபிஷேகம் பண்ணுதுங்கோ)


நன்றி @@ வானம்பாடிகள்
(கனவாய் வாழ நிஜத்தைத்தான் தின்னுகொண்டிருக்கிறோம்)

நன்றி @@ நாடோடி இலக்கியன்

நன்றி @@ கலகலப்ரியா
(அந்த எலும்புக்கூடுகள் இல்லாவிட்டால் நாறிப்போயிடுவோம் என்பதே பலபேருக்கு தெரியல)

நன்றி @@ இராகவன்

ஈரோடு கதிர் said...

நன்றி @@ செந்தில்
//சினிமாவை நேசிக்கும் மக்களுக்காக சினிமாவால் வந்த மக்கள் சினிமாவைப் போற்றுவது" என்று மாற்றலாம்//

(அப்படித்தானே மாறிப்போச்சு

நன்றி @@ பின்னோக்கி
(நிஜம் சுடுகிறது, நிழல் குளிரவதுபோல் இருக்குமோ)


நன்றி @@ butterfly Surya

நன்றி @@ யாசவி

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரபாகர்
//விவசாயியின் பேட்டியை யாராவது பார்ப்பார்களா?//

(சரிதான் பிரபா, விவசாயி இல்லாமல் சோறு ஏதுங்க, எப்பத்தான் புரியப்போகுதோ)

நன்றி @@ வால்பையன்
(நான் நிக்கிறேன்... நீங்க....ஸ்டெடியா தல்)

நன்றி @@ சேரல்
(மிக அழகாக உள்வாங்கி அலசியிருப்பது குறித்து மகிழ்ச்சி, உங்களை எனக்கும், என்னை உங்களுக்கு அடையாளம் காட்டிய நர்சிம்க்கு நன்றி)

நன்றி @@ ராஜா | KVR

நன்றி @@ ஜீவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

சாட்டையடி.. ஆனால் இங்கே எதுவும் மாறப் போவதில்லை..:-(((((

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா சொன்னீங்க சார்!

தமிழ் நாடன் said...

மனதைச்சுடும் உண்மைகள்!

நொய்யலாற்று பிரச்சினைப்பற்றி ஒவ்வொரு முறை படிக்கும்போதும் மனசு பதறும். ஆனால் இந்த பதறுங்களுக்கு கொஞ்சமாவது பிரஞ்ஞை இருக்குதா சாமி!

க.பாலாசி said...

//சினிமாத் துறை தும்மினால் கூட நலம் விசாரிக்க அரசாங்க இயந்திரம் அவசரமாக ஓடுகிறது.//

நிதர்சனமான உண்மை....

//நம்பியதோடு நில்லாமல் ரசிகர் மன்றம் வைத்தோம், தலைவனாக்கினோம், சிலை வைத்தோம், பச்சை குத்தினோம், பால் அபிஷேகம் செய்தோம், மொட்டை போட்டோம், கோயில் கட்டினோம், ஓட்டு போட்டோம், சொன்னவர்களுக்கு ஓட்டுப் போடச் சென்றோம்//

சோத்துக்கு வழியில்லையென்றாலும் இந்த செயல்கள் கிராமம், நகரம் என்ற பாகுபாடில்லாமல் செவ்வனே நடக்கிறது.

//அணி திரண்டு வந்து ஒரு மாநிலத்தின் முதல்வரை எளிதாக சந்தித்துவிட முடிகிறது.//

இதை ஒரு கேள்வியாக முதல்வரிடமே கேட்டால்....நானும் கலைஞன்தானே என்பார்.

பொதுவாக ஊடகங்கள் எல்லாம் நடிகையின் காலில் உள்ள அழுக்கை மாயக்கண்ணாடி வைத்து பார்க்கின்றதேயொழிய, தாங்கள் குறிப்பிட்டதுபோல் நன்மனித குலங்களை அடையாளம் காட்ட மறுக்கின்றன. எல்லாமே வியாபார நோக்கம்தான். கவர்ச்சியில்லையென்றால் பிழைப்பு இல்லையென்றே எண்ணுகின்றனர். பெரும்பாலான மக்களும் அவவாறான கவர்ச்சிகளையே விரும்புகின்றனர். இதில் தாங்கள் குறிப்பிட்டுள்ள மனிதர்களும் அடங்குவர்.

நல்ல சிந்தனை இடுகை....

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல இடுகை

கண்ணகி said...

சொல்லிகிட்டேதான் இருக்குறிங்க உறைப்பவர்களுக்கு உறைக்க வேண்டுமே. உஉம்.....பெருமூச்சு...... ஒட்டு போட்டுவிட்டேன் உங்களுக்கு

பழமைபேசி said...

நல்ல சிந்தனைங்க மாப்பு!

ஆ.ஞானசேகரன் said...

[[இவர்களில் யாரேனும் ஒரு சினிமா நடிகன் போலவோ, அல்லது நடிகை போலவோ தங்கள் குறையைச் சொல்ல முதல்வரை இப்படிச் சந்தித்திட முடியுமா?]]

கேட்க வேண்டிய கேள்வி?????.... பதில்தான் கிடைக்காது நண்பா..

ஆ.ஞானசேகரன் said...

இப்படிபட்ட இடுக்கைகள் வரவேற்கபடுகின்றன.

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
இப்படிபட்ட இடுக்கைகள் வரவேற்கபடுகின்றன.
//

வலைப்பூக்களில் மட்டுந்தானே ஞானியாரே?

ஹேமா said...

ஆழமாகச் சிந்தித்த பதிவு.
தேவையானதும்கூட.

Anonymous said...

வரவேற்கத் தக்க இடுகை அறியப்படவேண்டிய உண்மைகள்...

Jackiesekar said...

நல்ல பதிவு என்பதை விட அற்புதமான உழைப்பு இந்த பதிவில் தெரிகின்றது... நிறைய கேள்விளுக்கு பதில் இல்லை நண்பரே...

மாதவராஜ் said...

கை கொடுங்க கதிர்!
கோபம் கொப்பளிக்கும் வரிகள்.
அதிலும் கடைசி மூன்று வரிகள்.....
சாட்டைதான்.

Toto said...

ந‌ல்ல‌ ப‌திவு ஸார். வின‌வுக்க‌ப்புற‌ம் நான் பார்த்த க‌ருத்துள்ள இடுகை.

-Toto
http://www.pixmonk.com

Prathap Kumar S. said...

நெத்தியடி பதிவு சார்... வாழ்த்துக்கள்

Prathap Kumar S. said...

நெத்தியடி பதிவு சார்... வாழ்த்துக்கள்

ஜோதிஜி said...

கதிர் ஒரு சின்ன குற்ற உணர்ச்சியுடன் தான் இங்கு இதை எழுதுகிறேன். காரணம் இப்போது தான் கமல் குறித்து நீண்ட நாள் ஆசை ஆதங்கம் குறித்து மாட்டி விட்டு வருகின்றேன். விருப்பம் என்பது இங்கு வெறியாக மாறும் போது தான் திரையும் மதமும் பிரச்சனைக்கு உரிய விசயமாக மாறி விடுகின்றது. வானம்பாடிகள், ராகவன் நைஜீரியா, பிரபாகர், அதிலும் குறிப்பாக பின்னோக்கி சொன்னது முற்றிலும் உண்மை. அனுபவம் பெற்றவன். ரத்தக்கறையை துடைக்க வேறு வழி தெரியவில்லை. ஆனால் என்னுடைய பார்வை என்பது தான் உங்களுக்குத் தெரியுமே? நல்ல கருத்துக்கள் சூரியனே.

காமராஜ் said...

ஆஹா...கைகொடுங்கள் கதிர்.
எல்லோருக்குள்ளும் கிடக்கிற மனச்சாட்சியை பதிவாக்கியிருக்கிறீர்கள்.
வாழ்நாள் சாதனை....மிக உச்சம்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன் (நிஜமாவா)


நன்றி @@ அமிர்தவர்ஷினி அம்மா

நன்றி @@ தமிழ் நாடன்
(நொய்யலாற்றை நம்பி இருந்தவங்களைப் பற்றி யார் தான் கவலைப்பட்டார்கள்)


நன்றி @@ பாலாஜி

(சினிமா என்ற மாயை வடியனும், அதுதான் ஒரே தீர்வு)

நன்றி @@ T.V.R

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வாத்துக்கோழி
(ஒரு நாள் உறைக்கும்)


நன்றி @@ பழமைபேசி
(வாங்க மாப்பு)

நன்னறி @@ ஞானசேகரன்
(எதுக்குத்தான் இங்கே பதில் கிடைக்குது போங்க)

நன்றி @@ பழமைபேசி
//வலைப்பூக்களில் மட்டுந்தானே ஞானியாரே?//

(ஆமாம்...ஆமாம்)

நன்றி @@ ஹேமா

நன்றி @@ தமிழரசி

நன்றி @@ jackiesekar
(பதில் இருக்கிறது, யாரும் சொல்லத் தயாரில்லைங்க)

நன்றி @@ மாதவராஜ்
(தொடர்ந்து கோபப் படுவோம்)

நன்றி @@ Toto


நன்றி @@ நாஞ்சில் பிரதாப்

நன்றி @@ ஜோதிஜி. தேவியர் இல்லம்
(அந்த சிறு குற்ற உணர்வே வெற்றி)


நன்றி @@ காமராஜ்

V.N.Thangamani said...

arputham Kathir. unmayai tholurithu kaatti irukkireergal kathir. Neer vazhga.Ithu polave TV serial thodarnthu palavarudangalukku makkalai sinthikka vidamale athan pokkil iluthu selkirathu.Makkal sinthikkaamal irukka vendum enpatharkke ilavasa TVyum. TV serialum.

ரோஸ்விக் said...

அருமையான பதிவு கதிர்! வாழ்த்துக்கள். இப்பொழுதெல்லாம் பொங்குகின்ற தமிழனின் உணர்ச்சிமிகு பதிவுகளின் எண்ணிக்கைகள் கூடுகிறது. இது மகிழ்வு தரக்கூடிய விஷயம்.

நீங்கள் எனக்கு சொன்ன அதே வார்த்தை "ரெளத்திரம்". :-) உங்களுக்கும் இங்கே தெரிகிறது. இப்போது எனக்கு "சே" சொன்ன ஒன்று தான் நினைவுக்கு வருகிறது....
''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்”

ஆம் நீங்கள் என் தோழன்.

http://thisaikaati.blogspot.com

விஜய் said...

GENETIC OBSESSION

Ashok D said...

Last 8 points அருமை சார்.

ஈ ரா said...

மிக நல்ல பதிவு....

நியாயமான கேள்விகள்...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ THANGAMANI

நன்றி @@ ரோஸ்விக்
(நல்ல விசயங்கள் இடுகைகள் வாயிலாக பிறக்கட்டும்)

நன்றி @@ கவிதை(கள்)

நன்றி @@ D.R.Ashok

நன்றி @@ ஈ ரா

உண்மைத்தமிழன் said...

இப்படி ஒரு பதிவை நான் எழுதாமல் விட்டதற்காக என்னை நினைத்து நானே வெட்கப்படுகிறேன்..!

ஈரோடு கதிர் said...

நன்றி @@ உண்மைத் தமிழன்
(விரைவில் எழுதுங்கள்)

sundaram selvarayar said...

very good artilce, this shows the current tamilnadu state, i even try to tell this to the people known to me, but no body ready to listen to this.