வாழ்த்துகள் - பழமை பேசி


பதிவுலகில் நுழைந்து
495 நாட்களில்
பதிந்த இனிய வலைப்பதிவர்
எழிலாய் பழமை பேச
பழமை பேசி அவர்களுக்கு
என் மனம் கனிந்த நல்வாழ்த்துகள்.


வலையுலகம் எனும் கடலில்
ஏதோ ஒரு தைரியத்தில் நீச்சலடிக்க குதித்து
கொஞ்சம் கொஞ்சமாய் நீச்சலித்துக் கொண்டிருந்தபோது
“மாப்பு நல்லா நீஞ்சறீங்க” னு
கொங்குத் தமிழில் பாசத்தோடு
கை பிடித்து, தட்டிக் கொடுத்து,
அவ்வப்போது நீந்தும் இடம் சரிதானா என வழிகாட்டி,
உடன் நீச்சலடிக்கும் நண்பர்களை
எனக்கு அறிமுகம் செய்து வைத்து,
என்னை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து
தவறு செய்யும் போது தலையில் குட்டி
தொடர்ந்து ஊக்கம் தரும் இனிய
நண்பருக்கு நன்றிகள் பல


... ... ... அறிவோம் நம் பழமை பேசி அவர்களை ... ... ...
புனை பெயர்: பழமைபேசி

இயற்பெயர்: மெளன. மணிவாசகம்

ஊர்: அந்தியூர், உடுமலைப் பேட்டை

இருப்பிடம்: சார்லட், வடக்கு கரோலைனா, ஐக்கிய அமெரிக்க மாகாணங்கள்

படிப்பு: இயந்திரவியல் மற்றும் கணனி அறிவியல்

வேலை: மென்பொருள் கட்டுமான மேலாண்மை

பெருமையாக நினைப்பது: முடிந்த வரை தமிழில் பேசுவதும், எழுதுவதும்

குறையாக நினைப்பது: கடந்த காலத்தில் இருந்த, புத்தகங்கள் வாசிக்காத பழக்கம்

சாதிக்க நினைப்பது: தமிழை மேலும் கற்றுக் கொள்வது, எளிமை பேணுவது

பிடித்த‌ ப‌ழ‌மொழி: எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்! வாழ்க தமிழினம்!!!

அனுப‌வ‌ம்: கிராம‌ங்க‌ளில் ஓடித் திரிந்து, வேளாண்மை செய்த‌து; கிராம‌ப்புற‌ ப‌ள்ளிக்கு தின‌மும் நான்கு மைல் தூர‌ம் விவ‌சாய‌ வ‌ழித் த‌ட‌ங்க‌ளின் ஊடாக‌ ந‌ட‌ந்து சென்று க‌ல்வி க‌ற்ற‌, அந்த‌ இனிமையான‌ நாட்க‌ள்; ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் வீடுக‌ளில் த‌ங்கி இருந்து படித்து, யார்க் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் ப‌ட்ட‌ம் பெற்ற‌து; த‌ற்போது அமெரிக்காவில், சார்ல‌ட் ந‌வ‌ச‌க்தி த‌மிழ் ப‌ண்பாட்டுக் குழுவில் அங்க‌த்தின‌ராக‌ இருந்து த‌மிழ்ப் ப‌ண்பாடு பேணுவ‌தும், அடுத்த‌ த‌லை முறையின‌ருக்கு இய‌ன்ற‌ அள‌வு த‌மிழ் க‌ற்பிப்ப‌தும்.

வாழ்த்துவோம்

தொடர்ந்து வாசிப்போம்

46 comments:

சூர்யா ௧ண்ணன் said...

வாழ்த்துக்கள் பழமை பேசி! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!

வால்பையன் said...

500 பதிவுகள் என்பது அசாதாரண பணி!

நிச்சயமா வாழ்த்தனும்!

பிரபாகர் said...

அருமையான அறிமுகம், பழமைபேசிபற்றி... நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி கதிர்...

சந்தனமுல்லை said...

வாழ்த்துகள் பழமைபேசி!! :-)

க.பாலாசி said...

உண்மையில் போற்றப்படவேண்டிய நபர் அன்பர் பசமை பேசி அவர்கள். மிகக் குறுகிய காலமாக அவரை பின்தொடர்ந்தாலும் அவரிடம் நிறைய தமிழ் வார்த்தைகளை அவரது இடுகை மற்றும் பின்னூட்டங்களின் மூலம் கற்றுக்கொண்டேன். அவரது தமிழ் சார்ந்த இந்த பணி மேலும் சிறக்கு வாழ்த்துவோம்.....வாழ்த்துக்கள்.

//பிடித்த‌ ப‌ழ‌மொழி: எப்பேர்ப்பட்ட வனத்துல போயி மேஞ்சாலும், கடைசியா இனத்துல போயித்தான் அடையனும்! வாழ்க தமிழினம்!!!//

தேவையான மொழிக்கொள்கை. ஒவ்வொருவருமே பின்பற்றவேண்டும் என்பதே எனது எண்ணமும்.

இதற்கான தங்களின் இடுகை நன்று....

Jerry Eshananda said...

வாழ்த்துகள். நல்லதொரு மனிதனை கண்டு கொண்டேன்

vasu balaji said...

பழமைக்குப் பாராட்டும் உங்களுக்கு பாராட்ட வாய்ப்பளித்தமைக்கு நன்றியும். எனக்கு சந்தேகம். நாம இப்பல்லாம் தப்பில்லாம எழுதறமா? இல்ல, மாப்பு தேறாத கேஸ்னு விட்டுட்டாரா?

anujanya said...

495 நாட்களில் 500 இடுகைகளா? பெரிய சாதனை தான். அவருக்கு வாழ்த்துகள்.

அனுஜன்யா

ராமலக்ஷ்மி said...

ஏறத்தாழ தினம் ஒரு பதிவு என்பது பிரமிப்பு. 500-க்கு நல்வாழ்த்துக்கள்!

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள் பழமைபேசி!! :-)

மணிஜி said...

அப்பா..உண்மையில் மலைப்பாகத்தான் இருக்கிறது..வாழ்த்துக்கள் பழமைபேசி..

அன்புடன்
தண்டோரா....

நாடோடி இலக்கியன் said...

பழமைபேசியின் தமிழ் சேவைக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

Ashok D said...

495/500...
படிப்பாளி போலயிருக்கு...

வாழ்த்துகள்

கலையரசன் said...

வாழ்த்துக்கள் தல...
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

கண்ணகி said...

கதிர் தம்பி மூலம்தான் பழஅமைபெசியை தெரிந்து கொண்டேன். அதற்கு ஒரு நன்றி. ஒரே முச்சாக அத்தனயும் படித்தேன். கொங்கு மொழியும் கிண்டலும் அடடா.
பழஅமைபேசி உங்கள் வீட்டுக்காரியை சுற்றிப்போடச் சொல்லவும்

ஆரூரன் விசுவநாதன் said...

நண்பர் பழமை பேசி.....


உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்

கலகலப்ரியா said...

"அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை"

உங்கள் அன்பைப் பெற்ற பழமைபேசி ஐயா பாக்கியம் பெற்றவர்..! உங்களுக்கும் உங்கள் நட்புக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. !

தீப்பெட்டி said...

பழமை பேசிக்கு வாழ்த்துகள்..

Rekha raghavan said...

ஐநூறை அனாயசமா தொட்டுவிட்ட பழமைபேசி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.

ரேகா ராகவன்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பழமையண்ணனுக்கு வாழ்த்துகள். நானும் உடுமலைக்காரன்னு சொல்லிக்கிறதுல பெருமையா இருக்கு :)

கதிர் வாழ்த்துகள் இந்த இடுகைக்கு :)

வெண்ணிற இரவுகள்....! said...

மாப்பு நல்லா நீஞ்சறீங்க

ஈரோடு கதிர் said...

உள்ளம் நிறைந்த
அன்போடு

மாப்பு
பழமைபேசிக்கு

வாழ்த்துகளை பகிர்ந்த....

@@ சூர்யா க௧ண்ணன்
@@ வால்பையன்
@@ பிரபாகர்
@@ சந்தனமுல்லை
@@ பாலாஜி
@@ ஜெரி
@@ வானம்பாடிகள்
@@ அனுஜன்யா
@@ ராமலக்ஷ்மி
@@ ஜீவன்
@@ தண்டோரா
@@ நாடோடி இலக்கியன்
@@ D.R.Ashok
@@ கலையரசன்
@@ வாத்துக்கோழி
@@ ஆரூரன்
@@ கலகலப்ரியா
@@ தீப்பெட்டி
@@ ரேகா ராகவன்
@@ செந்தில்
@@ வெண்ணிற இரவுகள்

ஆகிய நட்பு
உள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்

இராகவன் நைஜிரியா said...

ஐயா பழமைப்பேசி அவர்களுக்கு உள்ளார்ந்த வாழ்த்துகள்.

ஹேமா said...

நிறைவான வாழ்த்துக்கள்.
முயற்சியுடையாருக்கு என்றுமே இகழ்ச்சி இல்லை.பாராட்டும் கூட பழமை பேசி அவர்களுக்கு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

பழமை அண்ணனுக்கு வாழ்த்துகள்.

தங்க முகுந்தன் said...

பழமைபேசி - பிந்திய எமது வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளவும்!

கதிர் - தகவலைத் தந்தமைக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்!

நாகராஜன் said...

வாழ்த்துக்கள் பழமைபேசி...

ப்ரியமுடன் வசந்த் said...

ஹைய்யா...
பழமை பேசி ஐயா எங்கூருக்காரு..

எங்கூருன்னா எங்கம்மாவோட ஊரும் உடுமலைதானுங்கோ..

வாழ்த்துக்கள் மேலும் எங்களை அழகான தமிழில் வழி நடத்திச்செல்ல ஆசுவாசமான தோழன் இருக்கிறான் என்ற நம்பிக்கையில் நானும் நாங்களும்...

Anonymous said...

வாழ்த்தப்பட வேண்டியவர் மணியண்ணன். அவர் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

ஆ.ஞானசேகரன் said...

வாழ்த்துகள் பழம...... மேலும் சிறக்க வாழ்த்துகள்

காமராஜ் said...

congrats sorry morning hurry.

ஈரோடு கதிர் said...

உள்ளம் நிறைந்த
அன்போடு

மாப்பு
பழமைபேசிக்கு

வாழ்த்துகளை பகிர்ந்த....

@@ இராகவன் நைஜிரியா
@@ ஹேமா
@@ ஸ்ரீ
@@ தங்க முகுந்தன்
@@ ராசுக்குட்டி
@@ பிரியமுடன்...வசந்த்
@@ சின்ன அம்மிணி
@@ ஞானசேகரன்
@@ காமராஜ்

ஆகிய நட்பு
உள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்

எம்.எம்.அப்துல்லா said...

500 இடுகைகள் எழுதுவது ஒரு விஷயமே அல்ல. அத்தனை இடுகைகளும் விஷயத்தோடு எழுதுவதுதான் பெரிய விஷயம். அந்தவகையில் அண்ணன் செய்து இருப்பது பெரும் சாதனை. 500 இடுகைகளில் என்னை நாயகனாக வைத்து எழுதிய கதை ஒன்றும் உள்ளதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி :)

தொடரட்டும் பழமையாரின் தமிழ்தொண்டு.

பழமைபேசி said...

அனைவருக்கும் பணிவான வணக்கங்களும் நன்றியும்! மிகவும் மகிழ்வாய் இருக்கிறது, தமிழும் தண்மையும் என்றும் நிலவும் எனும் நம்பிக்கையை மேலும் ஊட்டியமைக்கு!!

மேலும் எவரது மனமும் கோணா வண்ணம், இன்னமும் முன்னெடுத்தச் செல்ல வேண்டும் என உணர்த்தி உள்ளீர்கள். அதற்குள் கட்டுண்டவனாய் இருக்க முயற்சிப்பேன் என்பதையும் தாழ்மையுடன் வெளிப்படுத்திக் கொள்கிறேன்!

--பணிவுடன்,
பழமைபேசி.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் பழமைபேசி..:-))

Jackiesekar said...

வாழ்த்துக்கள் பழமை பேசி... தொடரட்டும் உங்கள் எழுத்த பணி...

அகல்விளக்கு said...

500 என்பது அசாதாரணம்.

மாப்புக்கு ஏதய்யா மூப்பு.

வாழ்த்துக்கள் பழமைபேசி...

தேவன் மாயம் said...

அசராமல் அடித்து ஆடும் பழைமையாருக்கு வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

உள்ளம் நிறைந்த
அன்போடு

மாப்பு
பழமைபேசிக்கு

வாழ்த்துகளை பகிர்ந்த....

நன்றி @@ அப்துல்லா
நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்
நன்றி @@ jackiesekar
நன்றி @@ அகல் விளக்கு
நன்றி @@ தேவன் மாயம்

ஆகிய நட்பு
உள்ளங்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றிகள்

நிகழ்காலத்தில்... said...

500 இடுகைகள் என்பது நமது பங்காளிக்கு சாதரணம் :))

வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்

யாரோ ஒருவர் said...

வாழ்த்துக்கள்... பழமை

அன்புடன் நான் said...

வாழ்த்துக்கள். தொடர்க...தமிழ்த் தொண்டு!

cheena (சீனா) said...

அன்பின் கதிர்

தகவல் - அறிமுகம் - பகிர்ந்தமைக்கு நன்றி

பழமைபேசி - தினம் ஒரு இடுகையா - பிரமிப்பாய் இருக்கிறது. நல்வாழ்த்துகள் - தொடர்க பணியினை

நல்வாழ்த்துகள் கதிர்

Unknown said...

கொங்கு ......தமிழ்.....பேசி.
தென்றல்.....காற்றின்......வாசி.
எழுத்தில் .....நீ ..சாருகேசி..
2010....ம்...புலி கேசி
வாழ்த்து .பெரும்...மாதம்.மாசி
என் றும் .....அண்ணாந்து.யோசி
பண்பான .... பழமை....பேசி .
கலக்கிடு ....அந்தியூர்....வாசி
..
என் ஆசி ...........சித்ரம்..//

vasan said...

ப‌ழைமைபேசி ப‌ழைமைதான் பேசுகிறார்.
புதுமையெல்லாம் பெய்மையாய் இருப்ப‌த‌ல்.
நெஞ்சிற்கு ச‌ரியேன‌ ப‌டுவ‌தை ப‌ட்டென‌
ப‌திவிடுத‌ளில் பாஸ்ப‌ர‌ம் தான் த‌ம்பி.
500/495 + த‌மிழ் மாநாடு சிற‌ப்புற‌ வாழ்த்துக்கள்.

ஜோதிஜி said...

; ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ளின் வீடுக‌ளில் த‌ங்கி இருந்து படித்து, யார்க் ப‌ல்க‌லைக் க‌ழ‌க‌த்தில் ப‌ட்ட‌ம் பெற்ற‌து;





ஈழம் தொடர் எழுதத் தொடங்கிய போது என்னுடன் பேசும் போது இவரைப் பற்றி சொன்னது நினைவில் இருக்கிறதா கதிர்?

உள்ளும் புறமும் ஒரே மாதிரியாக இருப்பது மனிதர்களின் ஆபூர்வமானது.

அதில் மணி என்பவர் மணியானவர் தான்?

தாமத வருகை. மன்னிக்கவும்.