வாழ்கிறோம்

திகாரிகளுக்கு அள்ளிக்கொடுத்தாயிற்று
தீபாவளிக்கு சல்யூட் செய்யும் கூர்க்காவுக்கும்,
சாக்கடை அள்ளுபவனுக்கும் மட்டும்
வீட்டில் இல்லைனு சொல்லிடு...

தொடர் வண்டி பயணத்தில்
கொட்டாங்குச்சியோடு கரகரக்கும்
குருட்டுப் பிச்சைக்காரானின் ஒற்றைக் குரல்
காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது...

39 comments:

vasu balaji said...

/கூர்க்காவுக்கும்,
சாக்கடை அள்ளுபவனுக்கும் மட்டும்
வீட்டில் இல்லைனு சொல்லிடு.../

அது அது.
/தொடர் வண்டி பயணத்தில்
கொட்டாங்குச்சியோடு கரகரக்கும்
குருட்டுப் பிச்சைக்காரானின் ஒற்றைக் குரல்
காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது/

அட! நான் தினமும் பார்க்கும் அவலம் கதிர்.

சின்னச் சின்னதாய் இரண்டு மணிகள்.

என்னா சிந்தனை! said...

என்னா சிந்தனை!

பழமைபேசி said...

எதோ வழுறோம்!

நர்சிம் said...

ப்ச்.. என்ன செய்ய?

S.A. நவாஸுதீன் said...

நிதர்சனம் கதிர்.

பின்னோக்கி said...

சிக்னலோரத்தில் சிறு குழந்தையேந்தி பிச்சை கேட்கும் போது மனதை பிழியும், இருந்தாலும் அவர்களுக்கு பிச்சையிட மாட்டேன். காரணம், அது அவர்கள் குழந்தையில்லை.

அதட்டிக் கேட்பவனிடம் கொடுக்கப் பழகிவிட்டோம் என்ன செய்ய

கார்த்திகைப் பாண்டியன் said...

ப்ச்..:-(((

அப்பாவி முரு said...

இதயம் இனிக்கிறது....
கண்கள் பனிக்கிறது...

*இயற்கை ராஜி* said...

unmai:-(

ஹேமா said...

என்றாலும் வாழ்கிறோம்.
அப்படிப் பழகிவிட்டோம்.

க.பாலாசி said...

//சாக்கடை அள்ளுபவனுக்கும் மட்டும்
வீட்டில் இல்லைனு சொல்லிடு..//

எங்க முதலாளியும் இதைதான் செய்கிறார்....

//தொடர் வண்டி பயணத்தில்
கொட்டாங்குச்சியோடு கரகரக்கும்
குருட்டுப் பிச்சைக்காரானின் ஒற்றைக் குரல் காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது...//

சரிதான்...அவன் கை நீட்டுவதை கண்டும் காணாமல் நம் பயணமும் தொடர்கிறது மனிதாபிமானத்தை நசுக்கிவிட்டு....

நல்ல சிந்தனை....

Jerry Eshananda said...

நன்று

தமிழ் அமுதன் said...

///காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது///

;;((

பிரபாகர் said...

//காசுக்கு கை நீட்டாத வரை இனிக்கிறது...
//

எப்படி..

இதை படித்துவிட்டு தீபாவளிக்காவது கவனிப்பார்களா?

அருமை கதிர்...

பிரபாகர்.

பா.ராஜாராம் said...

என்ன அருமையான பார்வை கதிர்.போற போக்கில் சொல்லும் அழகு-வலிக்குது...வலிச்சுக்கிட்டேவும் இருக்கு.

மாதவராஜ் said...

நல்லாயிருக்கு. மனசாட்சியை அறையும் கேள்விகள் கொண்டிருக்கும் வரிகள்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வானம்பாடிகள்
(தினமும் நடப்பதுதானே)

நன்றி @@ என்னா சிந்தனை!

நன்றி @@ பழமைபேசி
(வாங்க மாப்பு)

நிலாமதி said...

உள்ளத்தை தொட்ட இரு வரிகள்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நர்சிம்

நன்றி @@ நவாஸுதீன்

நன்றி @@ பின்னோக்கி
(அதட்டிக் கேட்பவனிடம் கொடுப்பது வசதி)

நன்றி @@ கார்த்திகைப் பாண்டியன்

நன்றி @@ அப்பாவி முரு
(இதயம் இனிக்கிறதா)

காமராஜ் said...

அருமை என வெறுமனே வாழ்த்தக் கூசுகிறது
ஆழியுணர்த்தும் சிறுதுளி.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ இய‌ற்கை

நன்றி @@ ஹேமா
(ஆமாங்க)

நன்றி @@ பாலாஜி
(மிகச் சரியான பகிர்வு)

நன்றி @@ ஜெரி

மணிஜி said...

கண் விழித்து
காவல் செய்யும்
கூர்க்காவிற்கு
ரெடிமேடு பதில்
“கல் ஆவோ”

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஜீவன்

நன்றி @@ பிரபாகர்
(தீபாவளிக்குக்கு கொடுத்தால் நன்றுதான்)

நன்றி @@ ராஜாராம்
(போகிறபோக்கில் நடக்கும் சம்பவம்தானே)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ மாதவராஜ்

நன்றி @@ T.V.R

நன்றி @@ நிலா

நன்றி @@ காமராஜ்
(ஆழியுணர்த்தும் சிறுதுளி, ஆஹா... என்ன அற்புதமான வார்த்தைகள்)

நன்றி @@ தண்டோரா
//கண் விழித்து
காவல் செய்யும்
கூர்க்காவிற்கு
ரெடிமேடு பதில்
“கல் ஆவோ”//
(இது அருமையோ அருமை)

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அருமை கதிர்.

அன்றாடம் பார்க்கும் அவலங்களை இதை விட எளிமையாக சொல்ல முடியுமா? தொடருங்கள்!!

நாகராஜன் said...

கதிர்,

படித்ததும் மனசுக்குள்ள ஒரு வலி வருதுங்க... அது உங்க எழுத்தின் வெற்றி.. சமூக அவலத்தை சொல்லி அடிக்கும் மற்றுமொரு சாட்டையடி போன்ற இடுகை உங்களிடமிருந்து.. தொடரட்டும் உங்கள் பணி... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

விஜய் said...

நல்லா இருக்குங்க கதிர்

ப்ரியமுடன் வசந்த் said...

ப்ச்.

கையறு நிலை...

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல கவிதைக்கும் எதிர் ஒட்டு போடுறாய்ங்களே இப்பிடி ஏனுங்க சாமீகளா? பொறாமையா? .....காப்பா?
புடிக்கலைன்னா பொத்திட்டு போகலாம்...களவாணிப்பயலுகளா...இல்லாட்டி ஏன் பிடிக்கலைன்னாவது சொல்லிட்டு எதிர் ஓட்டு போடுங்கடி மாப்ளைகளா...

வாழு இல்ல வாழவிடு

நல்லா எழுதுறவய்ங்கள ஊக்கப்படுத்தாட்டினாலும் இப்பிடி மானங்கெட்டத்தனமா நடந்துகிடாதீங்கடி...மாப்ளைகளா...

கலகலப்ரியா said...

short & smart..!

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு நண்பா... நம்மை நாமே கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று

நாகா said...

என்னஙக இது அஞ்சு நெகடிவ் ஓட்டு?

ஈரோடு கதிர் said...

நன்றி @@ செந்தில்
(தவிர்க்க முடிந்தாலும், நாம் தவிர்க்க விரும்பாதவைகள்தானே இவை)

நன்றி @@ ராசுக்குட்டி
(இந்த உணர்வு வந்துவிட்டால் வலி மறைந்து போகும்)

நன்றி @@ கவிதை

நன்றி @@ வசந்த்
(கையறு நிலை இல்லை நண்பா, மனம் வராத நிலை அவ்வளவே)


நன்றி @@ ப்ரியா

நன்றி @@ ஞானசேகரன்
(விடையும் நம்மிடமே இருக்கிறது)

நன்றி @@ நாகா
(இஃகிஃகி)

கண்ணகி said...

அருமை. ஆனால் நான் அப்படி இல்லை. நின்று கொடுத்துவிட்டுதான் செல்வேன். . தராதவர்களுக்கு வலிக்கட்டும். உங்கள் சாட்டையடி

கிறுக்கல்கள்/Scribbles said...

சிந்தனை மிக நன்று. வாழ்க

ஈரோடு கதிர் said...

நன்றி @@ வாத்துக்கோழி
(பாராட்டுகள்)

நன்றி @@ கிறுக்கல்கள்

நன்றி @@ Ashok

குருத்து said...

நல்லாயிருக்கு!

"அதிகாரிகளுக்கு அள்ளிக்கொடுத்தாயிற்று"

கேட்கும் பொழுதும்,
கொடுக்கும் பொழுதும்,
அதிகாரிகளின் முகங்களை
வர்ணியுங்களேன்.

ஷண்முகப்ரியன் said...

வானம்பாடிகள் said...

சின்னச் சின்னதாய் இரண்டு மணிகள்.//

கவிதைகளைப் பற்றி நான் சொல்ல நினைத்த அதே மணியான வார்த்தைகள்,கதிர்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகான கவிதை என்று சொன்னால் இந்தக் கவிதைகளின் அழுத்தம் கெட்டுப்போய்விடும். வேறென்ன சொல்ல?

-ப்ரியமுடன்
சேரல்