பட்டியலில் ஒரு வரியாக


இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற போது நண்பரின் தந்தை அடிபட்டு அவசரப் பிரிவில் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக தகவல். அது நகரத்தின் மையத்தில் இருக்கும் பிரபல மருத்துவமனை. நண்பரும், அவரைச் சார்ந்தவர்களும் கவலை தோய்ந்த முகத்தோடு சோர்ந்து போய் அமர்ந்திருக்கின்றனர்.



மருத்துவமனை பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட இடைவெளிகளில் உயிரை அறுக்கும் ஓசையோடு ஆம்புலன்ஸ் வண்டிகள் வந்து கொண்டேயிருக்கின்றன. பெரும்பாலும் விபத்தில் அடிபட்டவர்கள்தான் கொண்டு வரப்படுகின்றனர். விபத்தில் சிக்கி வருபவர்களில் பெரும்பாலும் தலையில் அடிபட்டுத்தான் வருகின்றனர். அவர்கள் வரும்போது உடன் வரும் நண்பர்களின் பதறும் முகமும், உறவினர்களின் கண்களில் தெரியும் கலக்கமும் நமக்கும் தொற்றிக் கொள்கிறது.


விபத்துகளில் அதிகமாய் சிக்குபவர்கள் இரண்டு சக்கர வாகன ஓட்டிகளாகத்தான் இருக்கின்றனர். இரண்டு சக்கர வாகனத்தில் செல்வோர் பெரிதும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். விபத்தில் சிக்கியவர் குடும்பத்தின் முக்கிய நபராக இருக்கும் பட்சத்தில், அவசரப் பிரிவின் முன்பக்கம் அவர்கள் குடும்பத்தினர் தவிக்கும் தவிப்பையும், எதிர்காலத்தை எப்படி சந்திக்கப் போகிறோம் என்னும் வெளுத்த முகத்தையும் பார்க்கும் போது, வார்த்தைகளில் வடிக்க முடியாத ஒரு சோகம் நம் மனதைக் கவ்விக்கொள்ளும். அந்த சோகத்தை தாங்கி நிற்கும் மனிதர்களிடம் என்ன சொல்லி ஆறுதல் கூறுவது என்பது இன்னும் கடினமான ஒன்று.

எந்தச் சமாதானமும், ஆறுதலும் அவர்களைத் தேற்றாது எனத் தெரிந்தாலும், எதையாவது பகிர்ந்து கொண்டு ஒரு அடர் மௌனத்தோடு புழங்குவது வேதனையான ஒரு நிகழ்வுதான். ஒவ்வொரு முறையும் விபத்து நிகழ்ந்த பின் அது குறித்து, யாராவது ஒருவர் சிலாகித்து, அது எப்படி நடந்தது அல்லது நடந்திருக்கும் என்று விவரித்துக் கொண்டிருப்பது சகிக்க முடியாத கொடூரம்.

பெரும்பாலும் விபத்து வேகத்தினாலோ, கவனக் குறைவினாலோ அல்லது மது போதையினாலோதான் நடக்கிறது. இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் போது அதுவும் தலையில் அடிபடும்போது, அது மரணத்தை நோக்கி எளிதாக நகர்த்திச் செல்கிறது.

மற்றவர்களுக்கு நடக்கும் விபத்துகள் முதலில் ஒரு அதிர்ச்சியான சம்பவமாக தொடங்கி, பின் கடினமான சூழலாக மாறி, கடைசியாக பட்டியலில் ஒரு வரியாக படிந்து விடுகிறது. ஆனால் அந்தக் குடும்பத்திற்கு... வாழ்நாள் முழுதும் ஆற்ற முடியாத வலியாக, மறக்க முடியாத வடுவாக வாழ்ந்து கொண்டேயிருக்கிறது.

பொறுமையும், கவனமும் உயிர்காக்கும் அதைவிட பல இடங்களில் நாம் விரும்பாத ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் கட்டாயம் உயிர்காக்கும்.


பொறுப்பி:
வெறும் இரண்டு மைல் தொலைவு தான் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் என்று என்னிடம் இருக்கும் தலைக்கவசத்தை அணிவதில்லை. ஆனால் இரண்டு வருடங்களுக்கு முன் விழுந்து உதட்டில் பலத்த அடி வாங்கினேன். ஆனாலும் திரும்பவும் அணிவதில்லை. நகரத்தை விட்டு தாண்டி இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிகிறேன்.


-------------------------------------------------------------------------


இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

29 comments:

நாடோடி இலக்கியன் said...

சமீபத்தில் எனது நண்பன் திருமணம் ஆகி 6 மாத்திலேயே விபத்தில் சிக்கி பலியாகிவிட்டான்.அவனுக்கு எமனாக இருந்தது ஸ்பீட் பிரேக்கர் எந்த எச்சரிக்கை பலகையும் இல்லாத ஸ்பீட் பிரேக் அது. உடம்பில் வேறெங்கும் அடியில்லை தூக்கி வீசியதில் அருகில் இருந்த மரத்தில் தலையின் பின்பக்கம் மோதியதில் பலியாகிவிட்டான்.அன்று அவன் ஹெல்மெட் அணிந்திருந்தால் நிச்சயம் உயிர் தப்பியிருப்பான்.

vasu balaji said...

நல்ல பொறுப்பான இடுகை. எத்தன படிச்சாலும் நம்மாளுங்க பண்ணாத விசயம் ரெண்டு. ஹெல்மட், ரோட்/ரெயில்வே லைன் க்ராஸ் பண்ணும்போதும் கைபேசில பேசுறது.

பொறுப்பில்லாம பண்றத சொல்லி போட்டு பொறுப்பின்னு குசும்ப பாரு.

நிகழ்காலத்தில்... said...

ஹெல்மெட் போட்டாத்தான் நம்ம வண்டி ஸ்டார்ட் ஆகும் :))

வாகனங்களின் புகையில் கலந்துள்ள எண்ணெய் முகத்தில் படியாமல் இருக்கும்,

காற்று வீசினால் முகத்தில் தூசு குப்பை விழாது,

மழை பெய்தால் தலை நனையாது

இப்படி பல நன்மை உண்டு :))

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நல்ல இடுகை கதிர். தலைக்கவசத்தின் தேவையை உணர்த்தும் பதிவு.

ஊரில், நான் இரண்டு சக்கர வாகனங்களை தலைக்கவசம் போடாமல் எடுப்பது கிடையாது.

வால்பையன் said...

தலைக்கவசம்=உயிர்க்கவசம்

தமிழ் அமுதன் said...

வெறும் ஒரு மைல் தொலைவு தான் அலுவலகத்திற்கும், வீட்டிற்கும் என்று என்னிடம் இருக்கும் தலைக்கவசத்தை அணிவதில்லை.


கொஞ்சம் அதிக தொலைவு செல்ல வேண்டி இருந்தால் ஹெல்மெட்டை எடுத்து செல்கிறேன் அவசியப்பட்டால் மட்டும் அணிகிறேன்.

நிலாமதி said...

இப்படியெல்லாம் பதிவு போடுட்டு ....தலைக் க்கவ்சம் அணியாமல் போகலாமா? விபத்து எந்நேரத்திலும் எந்த ரூப த்திலும் வரலாம். முன் யோசனை நன்று நண்பா.......

ப்ரியமுடன் வசந்த் said...

தலைக்கவசம் அணிவது மிக அவசியம்

விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடுகை,,,,,

Rekha raghavan said...

தலைக் கவசம் அணிந்திருந்து சிக்னலில் நின்றுகொண்டிருந்த என் மகனையும் பில்லியனில் உட்கார்த்திருந்த என் மகளையும் பின்னல் வந்த லாரி மோதி தூக்கி எரியப்பட்டத்தில் இருவரும் அடிபட்டு பிழைத்து வந்தது பூர்வ ஜென்ம பலன். நான்கு சக்கர வாகன ஓட்டிகளின் பொறுப்பற்ற செயல்களால் உங்கள் பதிவில் குறிப்பிட்டுள்ளது போன்ற விபத்துகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. வண்டி ஓட்டும் ஒவ்வொருவரும் தனக்கும் தன் முன்பாக சென்றுகொண்டிருக்கும் வாகனத்தை ஒட்டுபவருக்கும் ஒரு குடும்பம் உண்டு அப்பா அம்மா மனைவி குழந்தைகள் உண்டு என்று புரிந்து கொண்டு வாகனத்தை ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம். நல்ல பதிவு.

ரேகா ராகவன்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல இடுகை கதிர்.

கலகலப்ரியா said...

//நகரத்தை விட்டு தாண்டி இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிகிறேன்//

ஆமாம் பின்னே.. தாண்டுறப்போ ஸ்டண்ட் மாஸ்டரா இருந்தாலும் ஹெல்மெட் போட்டுத்தான் ஆவணும்..!

நீங்களே சிந்திக்க வேண்டிய பதிவுன்னு சொல்லுங்க.. (நம்ம ஊர்ல பார்கிங் ஏரியா உள்ளார ஊர்ந்துக்கிட்டே போறதுன்னாலும் ஹெல்மெட் தேவைங்கோ.. ரெண்டு கிலோமீட்டர் எல்லாம் ரொம்ப ஜாஸ்திங்கோ.. பார்த்துக்குங்கோ..)

கலகலப்ரியா said...

tamil manam romba naalaa kaluththarukkala.. ippo again started.. appalikka vanthu vote podurenungnaa.. mannichidung..

கலகலப்ரியா said...

ஆஆங்... நான் அனுப்பிச்ச பிறந்தநாள் வாழ்த்துக்கள் காணோம்.. எதுக்கும் இன்னொரு வாட்டி வாழ்த்துக்கள்..

அவிய்ங்க ராசா said...

மிகவும் சரியான மற்றும் இந்த காலத்திற்கு தேவையான இடுகை கதிர்..

பிரபாகர் said...

கதிர்,

என் மாமாவின் மைத்துனர்கள் இருவருக்கும் விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஒருவர் தீவிர போராட்டத்துக்கு பின் இறந்து விட, அடுத்த வருடம் இன்னொருவருக்கும். அவர் நான்கு மாதம் கோமாவில் இருந்து மீண்டு வந்தார். அச்சமயம் KG கோயம்புத்தூரில் ஒருமாதம் விபத்து பிரிவில் இருந்தபோது, அனுபவித்த நரகம் இருக்கிறதே.... நான் கட்டாயம் அணிகிறேன், அணிய வற்புறுத்துகிறேன்...

மிகத்தேவையான ஓர் பதிவு. நன்றி கதிர்..

பிரபாகர்.

ஆ.ஞானசேகரன் said...

தேவையான பதிவு நண்பா. இன்னும் சிலர் வீதிகளில் வண்டியோட்டும்பொழுது கூட ஒருகையால் ஓட்டிக்கொண்டு செல்பேசியில் பேசிக்கொண்டு செல்கின்றனர். அவர்களை கல்லால் அடிக்க வேண்டும் போல தோன்றும்..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நாடோடி இலக்கியன்
(நிறைய மரணங்கள் தலைக்கவசம் இருந்திருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கும்)

நன்றி @@ வானம்பாடிகள்
(அண்ணா.... பொறுப்பிலினு வேணா படிச்சுக்குங்க இஃகிஃகி)

நன்றி @@ சக்தி
(ரொம்ப உசாருதானுங்க, எல்லோருக்குமே இது ஒரு உதாரணம்தான்)

நன்றி @@ செந்தில்

நன்றி @@ வால்பையன்

நன்றி @@ ஜீவன்
(அட... என்னைப்போல் ஒருவன்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ நிலா
(அன்பிற்கு நன்றி)

நன்றி @@ வசந்த்

நன்றி @@ RAGHAVAN
//வண்டி ஓட்டும் ஒவ்வொருவரும் தனக்கும் தன் முன்பாக சென்றுகொண்டிருக்கும் வாகனத்தை ஒட்டுபவருக்கும் ஒரு குடும்பம் உண்டு அப்பா அம்மா மனைவி குழந்தைகள் உண்டு என்று புரிந்து கொண்டு வாகனத்தை ஓட்டினால் விபத்துக்களை தவிர்க்கலாம். //

(மிகச்சரியாக சொல்கிறீர்கள்)

நன்றி @@ ஸ்ரீ

நன்றி @@ ப்ரியா
//ஆமாம் பின்னே.. தாண்டுறப்போ ஸ்டண்ட் மாஸ்டரா இருந்தாலும் ஹெல்மெட் போட்டுத்தான் ஆவணும்..! //

(இது...இது.... பிரியா ஸ்டைல்)

//appalikka vanthu vote podurenungnaa.. mannichidung..//
(சரிங்க)

//எதுக்கும் இன்னொரு வாட்டி வாழ்த்துக்கள்..//

(நன்றிங்க பிரியா)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ராசா

நன்றி @@ பிரபா
(இது நம் எல்லோரின் உறவினர் அல்லது நட்பு வட்டத்தில் நடந்திருக்கும் தான், ஆனாலும் அலட்சிய தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன)

கார்த்திகைப் பாண்டியன் said...

இன்றைய சூழலுக்கு அவசியமான இடுகை நண்பா..

கண்ணகி said...

அந்த வலியையும், வேதனைகளையும் நானும் பார்த்துஇருக்கிறேன். நம் மக்கள் சட்டத்துக்குப்பயந்த்து கொஞ்சநாள் அணிந்தார்கள். . அந்தச் சட்டத்துக்கும் சில நல்ல மனிதர்கள் தடை போட்டார்கள். சட்டம் பணிந்து விட்டது. அதனுடைய விளைவுகள்தான் இவையெல்லாம். மக்கள் நலன் கருதி சிலவற்றை அரசுஎன்ன தடை வந்தாலும் பின்வாங்காமல் கடுமையாக அமுல்படுத்தவேண்டும்., இரும்புபென்மணி இந்திராகாந்த்தியைப்போல். உங்கள் சமுக அக்கரைக்கு வாழ்த்துக்கள். நம் மக்கள் பிரம்புக்குத்தான் பணிவார்கள். கதிர். (நிகழ்வுகள்,தகவல்கள்.அரட்டை,மொக்கை புத்தகங்கள்) என்ற வலைப்பதிவில் மாங்குடி வாத்தியார் என்ற பதிவை கட்டாயம் பாருங்கள். கருத்துக்களைச் சொல்லுங்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

அவசியமான பதிவு..கதிர்....
இதுகுறித்த ஒரு தொடர் பதிவை இன்று எழுதுகிறேன்.

அன்புடன்
ஆரூரன்

பழமைபேசி said...

//தொடர் பதிவை //

தொடர் இடுகை?

கலகலப்ரியா said...

uff appadaa.. vote poattachingo.. tata

க.பாலாசி said...

//அது எப்படி நடந்தது அல்லது நடந்திருக்கும் என்று விவரித்துக் கொண்டிருப்பது சகிக்க முடியாத கொடூரம்.//

இதுபோன்ற தருணங்களில் அது பாதிக்கப்பட்டவரின் மனதை புண்படுத்தும் விதத்திலும் அமைந்துவிடும்.

//விபத்தில் சிக்கி வருபவர்களில் பெரும்பாலும் தலையில் அடிபட்டுத்தான் வருகின்றனர்.//

உண்மைதான். உடலின் மிக முக்கியமான பகுதி தலை. அதற்கான கவசத்தை அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது உயிரை அடமானம் வைக்கும் செயல்.

//வாழ்நாள் முழுதும் ஆற்ற முடியாத வலியாக, மறக்க முடியாத வடுவாக வாழ்ந்து கொண்டேயிருக்கிறது.//

தேவையான சிந்தனை இடுகை அன்பரே...

Ashok D said...

விழும்போது ஜாக்கிசான் ஸ்டெய்லில் விழவேண்டும் ஒரு பந்தைபோல உருண்டு எந்திரிக்க தெரியவேண்டும்.

முதலில் வண்டியை நல்லா ஓட்டி பழகவேண்டும். அப்புறம் முக்காவாசி பேர் கேனத்தனமாதான் ஒட்டுவான் அவங்ககிட்ட மட்டும் உசாரா இருக்கனும்.

அப்புறம் ஸ்பாண்டிலேட்டிஸ் உள்ளவங்க ஹெல்மட் போடக்கூடாது.

அப்புறம் ஹெல்மெட் போட்டா நல்லா கழுத்த திருப்பி சைட் அடிக்கமுடியாது.

பதிவு சிரியஸா நல்ல இருந்தது கதிர் சார்.

CHANDRA said...

நல்ல அறிவுரை. வாழ்க வளமுடன், வண்டி ஓட்டுக என்றும் தலைக்கவசத்துடன்.

பின்னோக்கி said...

அடப்போங்க...கார் ஓட்டும் போது, என் காரின் முன்னால் 2 சக்கர ஓட்டிகள் (பெரும்பாலும் இளைஞர்கள்) செய்யும் சாகசத்தால் நான் அடிக்கும் சடன் பிரேக்குகளின் கணக்கு சொல்லி மாளாது.

ஆக்ஸிலேட்டரை அழுத்தி அவர்களை ஒரு தூக்கு தூக்கிவிடலாம் என கோபம் வரும். அவர்கள் வீட்டிலும் காத்திருப்பார்களே ?? என்ன செய்ய ??

DHANS said...

matrumoru suggestion: medical insurance vaangi vaithukkondaal vipatthu ethum nigalnthaal nithi nilamaiyai samaalikka mudiyum