பெங்களூரு மாடுகளும், அழுக்குப் பாலும்

எனக்கு பெரு நகரங்கள் அவ்வளவாக பழக்கமில்லை. பெங்களூரு மட்டும் அடிக்கடி செல்லும் வழக்கம் இருப்பதால் காட்டன் பேட்டை பகுதியில் இருக்கும் நெரிசல் கொஞ்சம் பழகிப்போயிருந்தது...

அன்று காலையிலிருந்தே மழை சிணுங்கிக் கொண்டிருந்தது. அதுவே நம் ஊராக இருந்தால் சிணுங்கும் மழைக்கு ஊரே அடங்கிப் போயிருக்கும், ஆனால் அங்கு இயல்பு வாழ்க்கை சிறிதும் பாதிக்கப்படவில்லை. வேகமாய் மழை துளிர்க்கும் நேரங்களில் மட்டும் மக்கள் நடமாட்டம் சிறிது குறையும், மழை குறைந்தால் மீண்டும் வீதிகளில் நெரிசல் அதிகரிக்கும், இது போல் காலை முதல் மாலை வரை இயல்பாக மனிதர்கள் புழங்கிக் கொண்டிருந்தனர்.

தொழில் நிமித்தமாகப் போன நான், இரவு வரை இருக்க வேண்டிய காரணத்தால் மழையையும், மனிதர்களின் நெரிசலையும் மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தீன். மழையிலும் நெரிசலிலும் நிறைய சுவாரஸ்யங்கள் நடந்து கொண்டேயிருந்தது.

அவ்வளவு நெரிசலிலும் இரண்டு, மூன்று மாடுகள் வீதியில் முன்னும் பின்னும் வந்து போய்கொண்டிருந்தன. அது வட இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி, சிலர் மெதுவாக ஊர்ந்து கொண்டிருக்கும் மாட்டின் பின் பக்கத்தை தொட்டுக் கும்பிடுவதும், அவர்கள் தொடும் போது மாடு வாலால் அடிப்பது சகஜமாக நடந்து கொண்டிருந்தது.

மாலை நான்கு மணியிருக்கும், சுமார் பதினைந்து வயதிருக்கும் ஒரு சிறுவன் பெரிய இரும்பு வாளியோடு வந்தான், நடு வீதியில் ஒரு மாட்டின் காலடியில் உட்கார்ந்தான், மாட்டிக் காம்புகளை லேசாக கசக்கினான். மாடு அசால்டாக நின்றது (எனக்கு சின்ன வயதில் பால் கறக்கும் மாட்டின் காம்புகளைத் தொட்டு உதை வாங்கியது நினைவிற்கு வந்தது)

மழை பெய்து அந்த இடம் சேறும் சகதியுமாக இருந்தது. இரண்டு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் அடுத்தடுத்து வேகமாக வருவதும், போவதுமாக இருந்தன. அடுத்த சில நிமிடங்களில் அந்த சிறுவன், இரும்பு வாளியில் “சர்சர்” என பாலைக் கறக்க ஆரம்பித்தான். கவனிக்க வேண்டிய விசயம் அவன் மாட்டின் காம்புகளை கழுவவேயில்லை. வேகமாக செல்லும் வாகனம் சிதறியடித்த சேற்றுத் துளிகளும் அந்த வாளியில் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது. அதைப் பற்றி அந்தச் சிறுவன் துளியும் கவலைப் படுவதாக தெரியவில்லை. மாடும் நடு வீதியில் பாலைத் தருவதும், பசியில் போஸ்டரைத் தின்பதும், ஓராமாய் கிடக்கும் குப்பையில் மீந்து போன காய்கறிகளைத் தேடுவதும் என “இதெல்லாம் சகஜம் பாஸ்” என்பது போல் சாவகாசமாக நின்று பால் கொடுத்துக் கொண்டிருந்தது.

கிராமத்தில் பச்சைப்புல்லும், வைக்கோலும் தின்று, வாகன ஓசைக்கு மிரளும் தோட்டத்து மாடுகளும், காம்புகளைச் சுத்தமாகக் கழுவி, மிகச் சுத்தமான பாத்திரத்தில் பால் கறக்கும் விவசாயிகளும் மனதிற்குள் கிண்டலாக சிரிப்பதுபோல் ஒரு விநாடி தோன்றியது.



-------------------------------------------------------------------------

இடுகை பற்றிய உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் வாக்கினைப் பதிவு செய்யுங்கள்.

41 comments:

பிரபாகர் said...

இனிமே கறந்த பால போல சுத்தமானவன்னு யாரவது சொன்னாலும் நம்பமாட்டேன், சொல்ல மாட்டேன். நீங்கள் பார்த்த பாலை போலல்லாமல், இது ஓர் தெளிவான பதிவு....

பிரபாகர்.

அக்னி பார்வை said...

இந்த ஊர்ல இது வேறயா?

சந்தனமுல்லை said...

:( அவ்வ்வ்வ்வ்!!

Rekha raghavan said...

ஓட்டலுக்கு போனா காபி மட்டும் சாப்பிட்டுவிட்டு நடையை கட்டிக்கொண்டிருந்தேன். இனி அதிலும் மண்ணா ?

ரேகா ராகவன்.

vasu balaji said...

ம்கும். உங்க பக்கத்தூரு பாலக்காட்டில, மண்புழுவ துணியில கட்டி, பால் கேன்ல பால் பாதி, தண்ணி பாதி கலந்து அதுக்குள்ள போட்டு, அது போக போக மண் புழு மேல சுறக்கிர திரவத்தில பால் கெட்டி படுற ஐடியா பரவலா இருந்திச்சி. ஒருபையன் ஓடி வந்து இடிச்சதில சைக்கிள் விழுந்து பால் கேன் விழுந்து அப்புறம் கண்டு பிடிச்சி, போற வர பால் கேன்லாம் சோதிச்சதில 100 பெர்சண்ட் மண்புழு பால். ஹெ ஹெ. அதுக்கு அழுக்கு பால் மேல் இல்லையா கதிர். பால் கிருமி நாசின்னின்னு நினைச்சிட்டான் போல.

Ashok D said...

அட ராமா...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பிரபா
(ஒரு சேஞ்சுக்கு கறக்காத பால போல சுத்தமானவன்னு சொல்லமா)

நன்றி @@ அக்னி பார்வை
(இதுவும் இஃகிஃகி)


நன்றி @@ சந்தனமுல்லை
(முல்லை நீங்க பெங்களூரு இல்லீங்கல்லோ)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ RAGHAVAN
(இல்லீங்க மண்ணு இல்ல, சேறு மட்டும்தான்)

நன்றி @@ வானம்பாடிகள் said...
(ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... மண்புழு பாலா
அதுல ஏதாவது ரகசியம் இருக்குமோ, நம்மூருக்காரங்களுக்கு கேரளா மேல எப்பவுமே ஒரு கண்ணுங்னா)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ Ashok
(இது ஒரு சேம்பிள் தானுங்க)

பழமைபேசி said...

//தொழில் நிமித்தமாகப் போன நான், இரவு வரை இருக்க வேண்டிய காரணத்தால் மழையையும்,//

மாப்பு, இதுக்கே ஒரு மாலை ஒன்னு உங்களுக்கு சூடணும்!

vasu balaji said...

த்தோ. இந்த கத வேணாம். கேரளாக் காரனுக்குதான் நம்மூரு மாட்டு மேல கண்ணு.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பழமைபேசி
(நன்றிங்க மாப்பு... ஆனா ஏதும் உள்குத்து இருக்கோ.... ச்சீ சீ இருக்காது நம்ம மாப்பு தங்கமான பயபுள்ள)

//வானம்பாடிகள் த்தோ. இந்த கத வேணாம். கேரளாக் காரனுக்குதான் நம்மூரு மாட்டு மேல கண்ணு.//

சரி சரி விடுங்க யாருக்கோ யார் மேலையோ கண்ணு, எப்படியோ பால் மேட்டர மறந்திட்டீங்க தானே

பழமைபேசி said...

//மாலை நான்கு மணியிருக்கும், சுமார் பதினைந்து வயதிருக்கும் ஒரு சிறுவன் பெரிய வாளியோடு வந்தான், நடு வீதியில் ஒரு மாட்டின் காலடியில் உட்கார்ந்தான், மாட்டிக் காம்புகளை லேசாக கசக்கினான். //

மாலை நான்கு மணியிருக்கும், சுமார் பதினைந்து வயதிருக்கும், அங்கு ஒரு வீதி இருக்கும், வீதியில் ஒரு மாடு இருக்கும், மாட்டின் மடியில் நான்கு காம்பு இருக்கும்.... இது என்ன கூற்றேலமா(statement auction)??

மாலை நான்கு மணி வாக்கில் அங்கு வந்த சிறுவனுக்கு வயது பதினைந்து இருக்கும்! கோர்வை, கோர்வை முக்கியம் மாப்பு!

//“சர்சர்”//

சரிசர்னு நீங்கதான் சில்லு வண்டியில பட்சி பாக்க அங்க இங்கயும் அலைஞ்சு திரிவீங்க... சரி, இன்னும் உட்டு வெச்சா வேலைக்காவதுன்னு எங்க ஊட்டு அம்மணிய அனுப்பி வெச்சோம்... பழசெல்லாம் மறக்கப்படாது பாருங்க!

எங்க பொடக்காளீல ‘சர்..சர்’னுதான பால் கறக்கறப்ப சத்தம் வரும்.

பழமைபேசி said...

நிமித்தம், காரணம்! நல்லா கையாண்டு இருக்கீங்க... இதைப் பார்க்குறது மிகவும் அரிது! வாழ்த்துகள்!!

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...
மாலை நான்கு மணி வாக்கில் அங்கு வந்த சிறுவனுக்கு வயது பதினைந்து இருக்கும்! கோர்வை, கோர்வை முக்கியம் மாப்பு!//

(இஃகிஃகி மாட்டுக்கு நாலு காலு இருந்தத சொல்லாமா உட்டுட்டேன்...)

ஆனா நீங்க சொன்னவிதம்தான் சரி.. இனி கவனம் கொள்வேன்

//எங்க டக்காளீல ‘சர்..சர்’னுதான பால் கறக்கறப்ப சத்தம் வரும்.//

ஆமாம்ல... சர்சர்-னு சத்தம் வராது. "சொய்ங்.. சொரைங்" னு தான் வரும்


அண்ணா, பாலாண்ணா இங்க கொஞ்சம் எட்டிபாருங்க.. மாப்பு என்ன வெளுக்கிறாரு... அப்பாடா பாலாண்ண ரொம்பா சந்தோசமா இருப்பாரு

//நிமித்தம், காரணம்! நல்லா கையாண்டு இருக்கீங்க... இதைப் பார்க்குறது மிகவும் அரிது!//

சிறிது காலமாக, பேசும்போது கூட நிமித்தம் போன்ற நிறைய தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தி வருகிறேன். அதற்கு நீங்களும் ஒரு காரணம்.

பின்னோக்கி said...

சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்வேக்கு ஒரு தடவை வந்து பாருங்க. அப்புறம் எதுவுமே குடிக்க மாட்டீங்க. அந்த அளவுக்கு சுகாதாரமான இடத்த்துல பால் கறந்துவிப்பாங்க.

பெங்களூர்ல மழை வித்தியாசமானது. ஒரு 2 தெரு தள்ளி மழை பெய்யும், நாம நிக்குற தெருல வெயில் கொளுத்தும்

ஹேமா said...

வணக்கம் கதிர்.உங்க பக்கங்கள் பார்த்திருக்கேன்.என்றாலும் முதல் பின்னூட்டம்.

சுவாரஸ்யமான அனுபவம்.ஆனா எனக்கொரு சந்தேகம்.உண்மையிலே அந்தப் பையனோடதா அந்த மாடு.
இல்லாட்டி வேற யாரோடதுமா!

vasu balaji said...

பாலாச்சே. வெளுப்பு இருக்கதான் செய்யும்.

ஈரோடு கதிர் said...

நன்றி @@ பின்னோக்கி
(அடக் கொடுமையே,
ராகவன் ஐயா... பின்னோக்கி சொல்றத கொஞ்சம் கவனிங்க... ம்ம்ம் ஏதோ நம்மால முடிஞ்சது)
(பெங்களூரு மழை ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஹேமா
(அடங்கப்பா, ஹேமாக்கு எப்படியெல்லாம் சந்தேகம் வருது பாருங்க. அந்த நெரிசலிலும், மாடு வளர்கிறாங்க ஹேமா... அந்த பையன் மாடு வளக்கிறவங்ககிட்ட வேலை செய்வான் போல இருக்கு)

// வானம்பாடிகள் said...
பாலாச்சே. வெளுப்பு இருக்கதான் செய்யும்.//
பாலாண்ணன் ஆச்சே... 'நச்'னு இருக்குது

Jerry Eshananda said...

எப்பொழுதும் "விழிப்புடன் இருப்பீர்கள் போல",நானும் கற்றுக்கொள்கிறேன்.
தலைப்பில் கொஞ்சம் கவனம் வைத்திருக்கலாம்மே ?

கலகலப்ரியா said...

அது சரி.. நல்ல பதிவு.. இனிமே பால் குடிக்கிறவா கண்ணுக்குக்கு எல்லாம் மண்ணா தெரிய போறது..

ஈரோடு கதிர் said...

நன்றி @@ ஜெரி
(கவனம்!!!???)

நன்றி @@ ப்ரியா
(ஏதோ நம்மாள முடிஞ்சதுங்க பிரியா)

காமராஜ் said...

இடுகை நல்லாவே இருக்கு கதிர்.
கறந்த பால் போல சுத்தம்ணு இனிச் சொல்ல முடியது.

நாகா said...

10/10...

ஈரோடு கதிர் said...

நன்றி @@ காமராஜ்
(ம்ம்ஹூம்....)

நன்றி @@ நாகா
(வயித்தில பாலை வார்த்தீங்க. இஃகிஃகி)

பழமைபேசி said...

//(வயித்தில பாலை வார்த்தீங்க. இஃகிஃகி)//

தம்பி, நல்லதுதான செய்திருக்காரு... அப்புறம் ஏன் பாலை வார்த்தீங்கன்னு? பால் சுத்தமானதா, இல்லையா?? கொழப்பமா இருக்கே??

ஈரோடு கதிர் said...

//பால் சுத்தமானதா, இல்லையா?? கொழப்பமா இருக்கே??//

மாப்பு நாஞ்சொன்னது இப்ப கறந்த தோட்டத்து பாலுங்க...

மாதவராஜ் said...

நமது இந்திய வாக்காளர்கள் போல மாடு நின்று கொண்டு இருந்தது எனச் சொல்லுங்கள்!

ஆ.ஞானசேகரன் said...

//கிராமத்தில் பச்சைப்புல்லும், வைக்கோலும் தின்று, வாகன ஓசைக்கு மிரளும் தோட்டத்து மாடுகளும், காம்புகளைச் சுத்தமாகக் கழுவி, மிகச் சுத்தமான பாத்திரத்தில் பால் கறக்கும் விவசாயிகளும் மனதிற்குள் கிண்டலாக சிரிப்பதுபோல் ஒரு விநாடி தோன்றியது.//

உண்மைதான் அந்த காலங்கள் தற்பொழுது இல்லை என்றே தோன்றுகின்றது.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கதிர். நல்ல கவனிப்பு!!

சென்னை போன்ற நகரங்களில் அதிசயமாக மாடுகளைப் பார்க்க நேரும் பொழுது அவை காகிதங்களைத் திண்பதையும் பார்க்க முடிகிறது.

ம்ம், இன்னும் கொஞ்ச நாட்களில் நம் மாடுகள் இயந்திரங்களுக்கும் தயாராகி விடும்.

ப்ரியமுடன் வசந்த் said...

//வானம்பாடிகள் said...
ம்கும். உங்க பக்கத்தூரு பாலக்காட்டில, மண்புழுவ துணியில கட்டி, பால் கேன்ல பால் பாதி, தண்ணி பாதி கலந்து அதுக்குள்ள போட்டு, அது போக போக மண் புழு மேல சுறக்கிர திரவத்தில பால் கெட்டி படுற ஐடியா பரவலா இருந்திச்சி. ஒருபையன் ஓடி வந்து இடிச்சதில சைக்கிள் விழுந்து பால் கேன் விழுந்து அப்புறம் கண்டு பிடிச்சி, போற வர பால் கேன்லாம் சோதிச்சதில 100 பெர்சண்ட் மண்புழு பால். ஹெ ஹெ. அதுக்கு அழுக்கு பால் மேல் இல்லையா கதிர். பால் கிருமி நாசின்னின்னு நினைச்சிட்டான் போல.
//

கிகிகிகிகி

பாலா சார் வர வர உங்க ரவுசு தாங்கலை...

Anonymous said...

இந்த ஊர்ல எல்லாம் மெசின் தான் பால் கறக்குது. சுத்தமா இல்லியான்னு தெரியலை.

பித்தனின் வாக்கு said...

(எனக்கு சின்ன வயதில் பால் கறக்கும் மாட்டின் காம்புகளைத் தொட்டு உதை வாங்கியது நினைவிற்கு வந்தது)

மாடுகிட்டையுமா? ஆல் ரவுண்டர் போல இருக்கு. பரவாயில்லை இந்த அனுபவம் திருமண வாழ்க்கைகு கை கொடுக்கும்.
இதைப் பார்க்க ஏன் பெங்களூர் எல்லாம், ஒரு நாள் அப்பிடிக பீச்சாண்ட வந்த மாலையில்ல திருவல்லிக்கேனி கோயிலு பக்கத்துல வா நைனா, அப்பால நீ ஜென்மத்துக்கும் பால் குடிக்க மாட்ட. நீங்க சொல்லற போஸ்டர் குப்பை எல்லாம் தின்றது இல்லாம வைக்கோல் குப்பை வேற பால் உள்ள இருக்கும். அது இல்லாம பால் நிறைய சுரக்க அந்த மாடுகளுக்கு எல்லாம் பின்னால ஊசி குத்தி குத்தி அந்த இடம் பூரா புண்ணா இருக்கும். இதுக்கு ஆவின் பெட்டெர் நினைச்சா அதுல கொழுப்பு கூட ஒரு சாக்பீஸ் மாதிரி கெமிக்கல் கலக்குறாங்க. பாவ புண்ணியம் எல்லாம் பணம் தான் பிரதானம் நினைக்கிற உலகத்தில் நம்ம என்ன செய்ய?

ஈரோடு கதிர் said...

நன்றி @@ மாதவராஜ்
(ஆஹா... உண்மையை அப்பட்டமா சொல்றீங்க)

நன்றி @@ ஞானசேகரன்
(ஆமாம்ங்க)

நன்றி @@ செந்தில்
(ம்ம்ம். என்ன செய்ய முடியும் போங்க)


நன்றி @@ வசந்த்
(கொஞ்ச நஞ்ச ரவுசு இல்லீங்க)

ஈரோடு கதிர் said...

நன்றி @@ சின்ன அம்மிணி


நன்றி @@ பித்தனின் வாக்கு
(சில துளிகள் சேறு விழுந்ததுனு சொன்னதுக்கு... டெர்ரர மிரட்றீங்களே)

க.பாலாசி said...

//மாட்டின் பின் பக்கத்தை தொட்டுக் கும்பிடுவதும், அவர்கள் தொடும் போது மாடு வாலால் அடிப்பது சகஜமாக நடந்து கொண்டிருந்தது.//

இந்த பழக்கம் அங்கும் இருக்கிறதா? மகிழ்ச்சியான செய்தி.

//கவனிக்க வேண்டிய விசயம் அவன் மாட்டின் காம்புகளை கழுவவேயில்லை//

அதான் மழைபெய்யுதுல்ல. அதனால விட்டிருக்கலாம்.

//வேகமாக செல்லும் வாகனம் சிதறியடித்த சேற்றுத் துளிகளும் அந்த வாளியில் தொடர்ந்து விழுந்து கொண்டேயிருந்தது//

தவறான செயல்தான்.

இதைபோன்ற காட்சிகள் மழையில்லாமல் சென்னையில் பார்க்கலாம். (நான் பார்த்திருக்கிறேன்.)

//மிகச் சுத்தமான பாத்திரத்தில் பால் கறக்கும் விவசாயிகளும் மனதிற்குள் கிண்டலாக சிரிப்பதுபோல் ஒரு விநாடி தோன்றியது.//

உண்மைதான். நல்ல சிந்தனையுடன் கூடிய இடுகை அன்பரே....

ஜோதிஜி said...

// மாட்டின் பின் பக்கத்தை தொட்டுக் கும்பிடுவதும், அவர்கள் தொடும் போது மாடு வாலால் அடிப்பது சகஜமாக நடந்து கொண்டிருந்தது.//

நல்ல பதிவு.

கலகலப்ரியா said...

iniya piranthanaal vazhththukkal..!

துளசி கோபால் said...

yuck(-:

Unknown said...

வந்த வேலைய பார்த்தோமா....வந்தோமான்னு இல்லாம,இப்படி ஒரு பதிவை போட்டுக்கிட்டு.ஐயோ...நானும் பசும்பால் தான் வாங்குறேன்....சரி வேற வழியில்ல.நல்ல காய்ச்சிக்க வேண்டியது தான்..
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்,மாடே கண்னுல படமாட்டேங்குது,ஆனா தெருவுக்கு 3 கடையில கலர்,கலராக பால்பாக்கெட் கிடைக்குது...அது எப்படீங்க?ஒன்னுமே விளங்கல போங்க