Jan 20, 2018

புழுதி



வளைகோடுகள் ஒவ்வொன்றும்
சந்திப்பின் அடையாளங்கள்
நேர்கோடுகள் ஒவ்வொன்றும்
விலகல்களின் மிச்சங்கள்
புள்ளிகள் ஒவ்வொன்றும்
உலரா முத்தங்கள்

பழுப்பேறிய சுவற்றில்
வெண் தீற்றல்களாய்
நம்மை நாமே தீட்டிவரும்
ஓவியத்தின் மீது
காலம் உதிர்க்கும் புழுதிகள்
படியத் தொடங்கியிருக்கின்றன

காலம் உதிர்க்கும் புழுதி
மொத்தமாய் ஓவியத்தை
மூடுவதற்கு முன்பாக
ஓவியத்தை நிறைவு செய்வோம் வா!

பாட்டல் ராதாக்களின் கதை

கடைசி நம்பிக்கையும் கைவிட்டுப்போன தருணம். அந்த சிறிய வீட்டின் கதவினை மூடி தாளிட்டு, ஜன்னல்களை பூட்டுகிறாள் அஞ்சலம். கேஸ் ஸ்டவ்வின் இரண்டு அட...