ஓரிரு தவறுகளைச் சரி செய்ய, ஓராயிரம் ’சரி’கள் கூட போதுமானதாக இருப்பதில்லை!
-
தண்ணீர் தேங்குகிறது, பெருவெள்ளம் பாய்கிறது என்பதன் பின்னால் நாம் சாகடித்த ஏரி குளங்கள் விடுத்த சாபங்கள் அவை என்பதை வசதியாக மறந்துவிட்டோம்
-
உச்சி என்பதும் ஒரு இடம் தான்!
-
”பேய் மழை” என்றபடி ஒதுங்குகிறவர்களுக்கு, ”இல்லை இதுதான் சாமீ” என ஏன் புரிய வைக்கவேண்டும்!?
-
சட்டென்று விடைபெற்று விடுவோம் என்பதுதான் வாழ்வின் ஆகச்சிறந்த சுவாரஸ்யமே!
-
புல்லாங்குழல் விற்பவனுக்கு எல்லா ராகங்களும் தெரிய வேண்டியதில்லை!
-
எதோ ஒரு காரணத்திற்காக காலைப் பொழுதில் யாருக்கேனும் வாழ்த்துச் சொல்வது, அந்த நாளை முழுமையாக்கிவிட்டது போல் மகிழ்ச்சியளிக்கிறது.
-
ஒரு காலத்தில் போன் கான்டாக்ட்ஸ்லயே நூறு பேர்தான் இருந்தாங்க. இப்ப எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் வாட்சப்லயே 88 குரூப்ல இருக்கார்.
-
வாழ்க்கை மீதும், எவர் மீதும் குறையோ, புகாரோ எதுவுமில்லையென நினைக்கும் தருணங்கள் யாவும் நல்ல நேரமே!
-
நிழலின் அருமை நிழலிலும் தெரியும் :)
-
"என்னவாகவோ இருந்தது" பற்றி ”இப்போது என்ன!?”
-
எந்த ஓவியனும் குழைத்திடாத நம்பிக்கை மை இந்த அதிகாலைக் கீழ்வானம்!
-
சக மனிதர்களிடம் நடிப்பது... சில நேரங்களில் பிழைப்பு, பல நேரங்களில் ’பிழை’, அரிதாகவே ’கலை’.
-
கணினி வழியே, கைபேசி வழியே அதிக நேரம் இணையம் பயன்படுத்தினாலும், அதில் தமிழில் எழுதத் தெரியாத தமிழர்கள் ஏராளம்!
-
இணைய இணைப்பு மந்தமாக இருந்தால், அந்த தினமே சோம்பலான நாளாக இருக்குமளவிற்கு நாம் வளர்ந்திருப்பதை(!) நினைத்தால் ரொம்ப பெருமையா இருக்கு
-
விருட்சங்கள் யாவும் அளவெடுத்து, நாள் குறித்து, குழிதோண்டி, விதையூன்றி, நீர் வார்த்ததில் முளைத்தெழுந்தவைகளல்ல.
-
சித்திரை மாதத்து கத்திரி வெயில் ஆவணி மாதத்திலும் அடிக்கிற புண்ணியமும் கூட இந்தத் தலைமுறைக்குத்தான் சேரும்!
-
2 comments:
எல்லா விருட்சங்களும் விரும்பிய படி தோன்றுவதில்லை.தோன்றியதெல்லாம் நம் விருப்பத்தில் வந்ததும் இல்லை.திடீரென்று நாகலிங்க மரத்தையும் பூவரசம் பூவையும் தேடிக் கொண்டிருந்தேன் அன்னையிடம் வந்த பிறகு .இதெல்லாம் எப்போதுமே அங்க தானே இருக்கும் .யாரோ எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காம வச்சது இல்ல தானாக வந்ததா இருக்கும்.அந்த பூவை தேடி பறிச்சு ஒருநாள் வாழ வக்கிற வேலையை செய்து இப்ப ஓ இது மரமல்லிகை மரம்.பூ கீழ விழுந்திருந்தா கூட அதன் பயனை அது அடையுதுன்னு போறோம்.மிகப்பெரிய சிந்தனைகள் கூட விதையில்லாமல் தான் முளைக்கின்றன போல.
அனைத்தும் அருமை அண்ணா...
Post a Comment