கீச்சுகள் தொகுப்பு - 52



சொற்கள் தேவைப்படாத சிநேகத் தருணங்கள் ஒருவித அழகு!

-

சடசடவெனப் பெய்யும் மழையில் நனைஞ்சிட்டே பைக்கில் போகும் கணவன் மனைவியை நிறுத்திரெய்ன் கோட்டு விக்கிறதுதான்காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

-

எத்தனைதான் பேண்ட் எடுத்தாலும் நோம்பியன்னிக்கு வேட்டி கட்டிக்கிறதுதான் சுகமே!

-

வாட்ஸப், வைபர்னு மக்கள் கரை ஒதுங்கியாச்சு. நெட்வொர்க்காரன் தீபாவளி SMSக்கு காசுனு ஜோக்கடிக்கிறான். #அடேய் ஆள் இல்லாத கடையில் டீ ஆத்துறவனே!

-


பிடிக்காததை ஒரு கணமேனும் ஒதுக்கியோ, விலக்கியோ இந்த வாழ்க்கை எத்தனை அதி அழகானது என்பதை ரசித்து வாழ்ந்துவிடவும் வேண்டும்!

-

மழையை நிறுத்த தமிழர்கள் 2 யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஒன்று ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள். மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள் .

-

பிடித்தலையும், பிடிக்காமையையும் ஏதோ ஒரு காரணத்தை தனக்குள்ளே வைத்துக்கொண்டு முடிவெடுக்கும் மனம் மிக நுணுக்கமானது.

-

சில தருணங்களில்உண்மைமிகக் கொடூரமானது!

-

எதற்கோ செய்கிறோமென்பதைவிட, எதற்காகச் செய்கிறோமென கொஞ்சமே கொஞ்சம் புரிந்துகொண்டால் போதும்.

-

செல்போன் நனைஞ்சுபோய்டுதேனு மழையை சபிக்கிறவங்க இருக்கிற வரைக்கும்... அப்படித்தான்யா அடைமழை பெய்யும்!

-

வாழ்வோர் எழுநூறு கோடியெனில் வாழ்ந்து மடிந்தோர் எத்தனை நூறு கோடி!?

-

காற்றும், வெயிலும், குளிரும் தந்திடாத ரகசிய நினைவொன்றை நனைத்துப் போர்த்த மழைக்கு சாத்தியப்படுகிறது.

-

அன்பும் பிரியமும் தழுவும்போது, முன்பு போட்ட சண்டையின் உக்கிரத்தை நினைத்துப் பாருங்கள். உலகின் அதி அபத்தம் எதுவெனக் குழம்பித் தெளிவோம்!

-

என்னிடம் ஒரு பதில்தான் இருக்கிறது. உங்கள் கேள்விக்கான விடையல்ல என்கிறீர்கள். இருவரும் அலுத்துக்கொள்கிறோம். கேள்வியை மாற்றிக்கொள்ளுங்களேன்!

-

செவ்வாய் கிரகத்துக்கே ராக்கெட் விட்டுட்டாலும், மழை பெய்தால் கரண்ட் புடுங்கி விடுற பழக்கத்தை நாம கைவிடவேயில்ல....

-

படிக்கும் காலத்தில் தாத்தாவாக இருந்து, பெரியவர்களாகும்போது தந்தையாக மாற காந்தியால் மட்டுமே முடிகிறது! # காந்தி தாத்தா to தேசத் தந்தை

-

புரியவைத்து சரி செய்வதைவிட, பயமுறுத்தி சரி செய்வது எளிதெனப் பழகிவிட்டோம்!

-

கனவுகளைவிட அழகானது வாழ்க்கை #pranayam

-

குடும்ப சங்கதிகளில் ஒரு முடிவெடுக்க வேண்டிய சூழலில் அம்மாவோ, மனைவியோ முன்கூட்டியே, “நீ என்ன முடிவெடுத்தாலும் சம்மதிக்கிறோம்எனச் சொல்லிவிட்டால், அவர்கள் ஏற்கனவே முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள், அதை எப்படியாகினும் செயல்படுத்தி விடுவார்களெனவும் அறிக!

-

எப்படியிருக்கீங்க!?” எனும் நலம் விசாரித்தல், நலம் அறியும் நேரடிக் கேள்வி மட்டுமேயல்ல. சில வேளைகளில் வெற்றுச் சம்பிரதாயமாகவோ, உரையாடலின் துவக்கமாகவோ இருந்தாலும்கூட, பெரும்பான்மையாக நேரங்களில் நாம் கேட்பவர் நலமாய் இருக்க வேண்டுமெனும் விருப்பத்தை உணர்த்துவதே!

-

இந்த இருள் வானத்தில் நிலவின் புன்னகையை ரசிக்க வெறும் கண்கள் மட்டுமே இருந்தென்ன பயன்!?

-

நெஞ்சு நிமிர்த்துவதற்கும், தொப்பைக்கும் இடையே உடலளவிலும் எதோ ஒரு நேரடித் தொடர்பு இருக்கின்றது!

-

அள்ளியள்ளி கசப்பைத் தந்துபோனவனிடம் இதுவரை இருந்ததும் இன்னும் கொஞ்சம் கைகளில் ஒட்டியிருப்பதும் வேறொன்றுமில்லை ....... அதே கசப்புதான்!

-

'லேஸ் கம்பெனி'க்காரன் காற்றை பாக்கெட் பண்ணி விக்கிகிறதுக்கு முன்பே... 'பூரி'யில் காற்றை நிரப்பி வித்தவங்க நாம!

-

எதிரியின் எதிரி நண்பனாக வேண்டுமென்பது நம்பிக்கைதான்... விதியோ சட்டமோ அல்ல!

-

வாழ்க்கையில் எல்லாக் கிறுக்குத்தனங்களுக்கும் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது. சில நேரங்களில் கந்து வட்டிக்கு கடன் வாங்கி விலை கொடுக்கிறோம்!

-

கேமாரால டைம் செட் பண்ணி ஓடிப்போய் நின்னு எடுத்ததெல்லாம் செல்ஃபில வராதாம். கையை நீட்டி கோணித்துக்கொண்டு எடுப்பதுதான் செல்ஃபியாம்!

-

'நாக்குல மச்சம் இருக்கிறவங்க பொய் சொல்வாங்க' என்பது நாக்கில் மச்சம் இல்லாதோர் சொல்லும் பொய்.

-

சில வீடுகளில் நாய் தான் மனிதர்களை வாக்கிங் கூட்டிட்டு போகுது!

-

கொசுவலைக்கு முன் மாதிரி சிலந்தி வலையாகவும் இருக்கலாம். ங்கொய்யாலே... ஒட்டடைல எவ்ளோ கொசு சிக்கியிருக்கு!

-

உலகம் சுருங்கி உள்ளங்கையில் இருக்கிறதென்றாலும், தேடும் மனிதர்கள் சில அடி தொலைவிலிருந்தாலும், பிரித்துவைத்து கண்ணாம்மூச்சியாடுது வாழ்க்கை!

-

இந்தஆண்கள் தினம்’ ’மகளிர் தினம்’ etc பெரும்பாலும் வீட்டிலிருப்போரை வாழ்த்துவதைவிட வெளியில் இருப்போரை வாழ்த்தும்டிசைன்கொண்டது!

-

சந்தனமிழைத்த கன்னமும் ஒளி சிதறும் விழிகளும் நறுமண மூச்சுக்காற்றும் தேன் வழியும் இதழ்களும் பிடித்தவர்களிடம் மட்டுமே எளிதில் காணக்கிடைக்கும்

-

விபத்து ஒருபோதும் வசதி வாய்ப்புகளை, காதலை, அந்தஸ்தை, கதாநாயகத்தனத்தை, மிஞ்சியிருக்கும் கடமையை என எதையுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

-

அன்பும் ஒரு வதைதான். யாரிடமாவது திணித்து, யாரிடமாவது கறந்துகொண்டே இருக்கின்றோம். ஒருபோதும் சும்மா இருக்கமுடிவதில்லை! #மீள்

-

புரிந்துகொள்ள மறுத்துவிட்டு, அன்பு செலுத்துகிறேன் என்பதுதான் ஆகச்சிறந்த பொய்!

-

சீலீங் ஃபேன்க்கு மேலே ட்யூப் லைட் மாட்டி வச்சிருக்காங்க. ஃபேன் ஓடும்போது அறை முழுக்க வெளிச்சம் பரவனும்னு எலட்ரீசியன் நினைச்சிருக்கலாம்.

-

ஒருசேர கடலையும் மேகத்தையும் தொட்டிட கனவில் அனுமதியுண்டு. உடல், மனசு, உயிரை உலுக்கிட, உறைய வைத்திட வாழ்வின் நிஜமான ஒரு பொழுதில்தான் இயலும்!

-

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

ரசிக்கவைத்த தொகுப்பு.பாராட்டுக்கள்.

Unknown said...

royal salute...class..