கீச்சுகள் தொகுப்பு - 49ரொம்ப ரணப்படுபவர்கள்தான்அரசியல்ல அதெல்லாம் ரொம்ப சாதாரணம்ப்பானு சொல்றாங்க! :)

-

Pre-KGயில் மகளைச் சேர்த்ததற்காக கூடுதலாய் பணம் சம்பாதிக்கும் வழி தேடும் நண்பனுக்கான எளிய ஆலோசனைபள்ளிக்கூடம் ஆரம்பித்து விடு!’

-

சுத்தம் செய்து வைத்திருக்கும் மேசையை, 'குப்பைமேடு' ஆக்காமல் வைத்திருப்பதே அவ்வப்போது ஆகச்சிறந்த சாதனையாகக் கருதப்படுகிறது!

-

பைக்ல ரியர்வியூ மிரர் கிடையாது, இண்டிக்கேட்டர் கிடையாது, ஆனா ஜட்டியை மட்டும் ஜீன்ஸ்க்கு வெளியே போட்டுக்கிட்டு வெறித்தனமா போன வேகத்துல ரைட்ல திரும்பத் தெரியுது. பின்னாடி வந்தபல்சர்சாத்துன சாத்துல முக்குல இருக்கிற குப்பைத் தொட்டில மோதி எழுந்திரிச்சு பேய்முழி முழிச்சிட்டு செதறிக் கெடக்குற போனைத் தேடத் தெரியுது...

செல்லக்குட்டிங்களா.... எங்கிருந்துடா வர்றீங்க நீங்கெல்லாம்!?

-

எலுமிச்சை சோத்துக்கு உருளைக்கிழங்கு வறுவல்தான் ஜோடினு இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்துல எதும் இருக்கா (or) மாத்தினா எதும் தெய்வக்குத்தமா?

-

தந்தையர் தினத்திற்கு மகள்களும், அன்னையர் தினத்திற்கு மகன்களும் அதிகப்படியாய் Profile படம் மாத்துகிறார்கள் :)

-

இப்பெல்லாம் வெள்ளிக்கெழமை சாயந்தரம் புள்ளைங்களவிட பெத்தவங்கதான் ஆர்வமா இருக்காங்க, இந்த சனிக்கெழமையாச்சும் ஸ்கூல் லீவ் உடுவாங்களானு!

-

கோபத்தினால் எழுத்தாளனுக்கு வரும் பதட்டம் எழுத்துப் பிழைகளில் எளிதாய்த் தெரிகிறது!

-

அதே மாதிரியான நாட்களேதான். கொஞ்சம் அமைதி மிகுந்ததாய் மாறியிருக்கிறது. வேறொன்றுமில்லை, கைபேசியில் இணையத்தை துண்டித்திருக்கின்றேன்!

-

ஊரும் உறவும் சுற்றமும் நட்பும் அழுது துடித்தாலும் அவனோ அவளோ அவரோ சிரித்தபடியேதான் இருக்கிறார்கள் அஞ்சலி போஸ்டர்களில்!

-

பேசுவதற்கு வாயும், கேட்பதற்கு காதும் மட்டுமே போதுமானதில்லை உரையாடல் நிகழ, மனதும், சூழலும் கூடுதலாய் வேண்டியிருக்கிறது.

-

நம் நடவடிக்கைகளில்இது கர்வம்என நாமே உணரும் கணத்தில் விழுங்கும் கசப்பிற்கு நிகரேது!

-

 ’வாட்ஸப்கண்டுபிடிப்பதற்கு முன்பும் நண்பர்கள் / தோழிகள் வாழ்ந்துகொண்டுதான் இருந்திருக்கிறார்கள்!

-

டேபிளைக் கண்டுபிடித்த பிறகுடேபிள் மேட்டைக் கண்டுபிடிக்க எத்தனையாயிரம் ஆண்டுகளை வீணடித்துத் தொலைத்திருக்கிறோம் பாருங்கள்! #அடச்சே_மொமண்ட்

-

நான் முட்டாள்னு சொல்லிப்பாருங்க, உலகம் லேசா யோசிச்சுட்டு நீங்க புத்திசாலித்தனமா உண்மை பேசுறதாச்சொல்லும். ”நான் புத்திசாலினு சொல்லிப்பாருங்க, உலகம் உடனே முட்டாப் பய பொய் பேசுறான்னு சொல்லும்.

-

ரியல் ரவுடித்தனம்ங்கிறது கோபம் வரும்போது மத்தவனை அடிப்பதல்ல. கோபத்தில் தன்னையே ரத்தம் வரும் அளவுக்கு அடித்துக்கொல்வதுதான்! :)

-

உலகின் அதிபயங்கர மும்முனை, நான்கு முனை, ஐந்து முனை மோதல்களை கரண்ட் கட்டாகும் கணப்பொழுதில் ரோடு சிக்னல்களில் நேரடியாகக் காணலாம்!

-

ஏழாம் அறிவால் எதையும் சமாளிக்க(!) தலைவர்களும், ஆறாம் அறிவையும்கூட பயன்படுத்தக்கூடாதென தொண்டர்களும் தெளிவாய் இருக்கிறார்கள்!

-

ஏமாந்து தொலைத்தவனிடம், எல்லாரும் மிகுந்தபுத்திசாலித்தனமாகக் கேட்பதுகவனமா இருந்திருக்கலாம்ல!?”

-

திறப்பதற்கும் பூட்டுவதற்கும் ஒரே சாவி என உருவாக்கியவன் எத்தனை திறமைசாலியாய் இருக்க வேண்டும்!

-

பிரச்சனைநம்ம வீட்டு விருந்துக்கு வரணும்னு முடிவு பண்ணிடுச்சுனா, நாம பத்திரிக்கை அடிச்சு வெத்தல பாக்கு வெச்செல்லாம் அழைக்க வேண்டியதில்லை. புகையிலிருந்து வெளிவரும் பூதம் போல் பிரமாண்டமா நம்ம வீட்டு ஹால்ல வந்து நம்மள நெருக்கித்தள்ளி உட்கார்ந்து, நம்ம தட்டுல கை வெச்சுட்டு கெக்கபிக்கனு சிரிக்கும்.

அதுக்கப்புறம்....... தடுக்கிறதும், தப்பிக்கிறதும், தாஜா பண்றதும் நம்ம சாமார்த்தியம்!

-

சில சமயம் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்கிறோம், பல சமயம் நம் தவறுகளிலிருந்துகூட கற்றுக்கொள்ளாத பாடத்தை!

-

5 comments:

Brindhamani BBM said...

கீச்சுக்கள் ஆல்ல இவை,
மனித மூச்சுக்குள் ஒளிந்திருக்கும்
ஆற்றவொனா அமைதி பிளிறல்கள் !
காற்றுக்கு கூட தெரியாது என
மாற்றுநிலைபாடு கொண்டு நாம்
வாழ்கையில், நம்மிடம் நாமே தோற்றுபோகும்
தருணம் , கசப்பானது தான் !!!
ஒவ்வொன்றும் சிந்தனையின் முதிர்வு . வாழ்த்துக்கள் ...

சேக்காளி said...

//பேசுவதற்கு வாயும், கேட்பதற்கு காதும் மட்டுமே போதுமானதில்லை உரையாடல் நிகழ, மனதும், சூழலும் கூடுதலாய் வேண்டியிருக்கிறது//

சே. குமார் said...

எல்லாமே அருமை அண்ணா....

ragavi said...

very fine

lakshmi indiran said...

என்னமா யோசிக்கிறீங்க......