Jun 5, 2014

யாசகமிடும் காலம்

பசித்த மௌனமொன்று
யாசகம் கேட்டு
உறங்கும் சொற்கள் 
நிரம்பித் தளும்பும்
அறையின் கதவை
நெடுநேரமாய்த்
தட்டியபடி

கதவு தட்டும் சப்தம்
பேரொலியாய் இருப்பது
சொற்களுக்கு மட்டுமல்ல
மௌனத்திற்கும் முரணாய்

யாசித்திருக்கும்
மௌனத்திடம்
எந்தச்சொல்லை
யாசகமிடுவதென
மௌனமாய் யோசித்தபடி
காலம்!

4 comments:

Unknown said...

என்ன சொற்களை இட்டு பின்னோட்டம் இடுவது என்று நானும் நெடுநேரம் யோசித்தப்படியே .. அருமை .

Unknown said...

பாவம்....மெளனத்த ரொம்ப படுத்துறீங்க....பேசிட வேண்டியது தானே.....ஆனா மெளனத்தை இட்டு சொற்களால் இட்டு நிரப்பிய கவிதை அழகு

Unknown said...

silence is a signed blank cheque...everyone can write,what they like....

Pandiaraj Jebarathinam said...

சிறப்பான வரிகள்...

பசிக்கும் மௌனத்திற்கு
சொற்கள் தேடிய போது
கிடைத்ததை ரசிக்க
மனம் பழகிவிடுமோ..

முதியதோர் உலகு

அவர் அதுவரை என் பார்வையில் பட்டதில்லை. ஒருவேளை பட்டிருக்கலாம், நான் அவரை அடையாளப்படுத்தி மனதில் பதிந்துகொள்ளவில்லை. நடைபயிற்சியில் திரும்பி ...