உலர்ந்துதிரும் சொற்கள்

கவித்துவமான
நவீனமான
புரியாததுமான
சொற்களால்
உங்களை
அலங்கரித்துக்கொள்ளும் முன்
 
உண்மையின் வாசனையோடு
இயல்பின் நிறத்தோடு
இருப்பீர்களே
ஒவ்வொருமுறையும்
அதனைத்
தேடித்தான்
வருகிறேனென்பதை
நான் வெளியேறிய பின்
உலர்ந்துபோய்
மெல்ல மெல்ல
உதிரும் சொற்கள்
ஒருமுறை கூட
உங்களிடம்
சொல்வதேயில்லையா!?

-

4 comments:

lakshmi prabha said...

ம்ம்.. அருமை :))

shanmuga vadivu said...

சொல்கின்றன தான்...ஆனால், அலங்காரம் பழகியவரிடம்... சொல்லிப் பயனென்ன?

lakshmi indiran said...

சூப்பர்....

sathiyananthan subramaniyan said...

அண்ணா அருமைங்க !